-
"அப்பா" "என்னம்மா...?" "அப்பா..ஆ..." "என்னம்மா...?" "ம்ம்.. வந்து.. உங்க பாஸ...
Posted:Mon, 28 Jul 2014 09:13:01 +0100
"அப்பா"
"என்னம்மா...?"
"அப்பா..ஆ..."
"என்னம்மா...?"
"ம்ம்.. வந்து.. உங்க பாஸ்வேர்டு என்னப்பா..."
"அதெல்லாம் சொல்லக்கூடாதும்மா..."
"ஏம்ப்பா...?"
"பாஸ்வேர்டுன்னா ரகசியமா இருக்கணும். யார் கேட்டாலும் சொல்லக் கூடாது."
"சரிப்பா, நான் யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன்... சொல்லுங்க..."
# கலர் கலரா இருக்குது பார் பல்பு # ;-)
- Shan Karuppusamy.
குசும்பு... 3 -
'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு க...
Posted:Mon, 28 Jul 2014 08:50:01 +0100
'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'
'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
நன்றி-Balachandar Nagarajan
-
:)
Posted:Mon, 28 Jul 2014 08:30:00 +0100
:)
-
சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்...
Posted:Mon, 28 Jul 2014 08:15:00 +0100
சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
பக்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்
"அப்படியா...!!!??"
"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" ....
- Saravanan Jayan. -
இதை இன்னும் மறக்காதவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted:Mon, 28 Jul 2014 08:00:01 +0100
இதை இன்னும் மறக்காதவர்கள் லைக் பண்ணுங்க... (y)
-
தலைக்கு மேல் பளு தூக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்த தன்மானத் தமிழனே..! இதுவே கிர...
Posted:Mon, 28 Jul 2014 07:45:16 +0100
தலைக்கு மேல் பளு தூக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்த தன்மானத் தமிழனே..! இதுவே கிரிக்கெட்டாக இருந்தால் நாடு உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்..!
வணங்குகிறோம் தங்கம் வென்ற தமிழனை.. (y) காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று தந்த தமிழக வீரர் #சதீஷ்சிவலிங்கம்
-
(y)
Posted:Mon, 28 Jul 2014 07:30:00 +0100
(y)
-
தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வச...
Posted:Mon, 28 Jul 2014 07:15:00 +0100
தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள்:
உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.
மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை. -
அம்மா என்றால் அன்பு <3
Posted:Mon, 28 Jul 2014 07:00:00 +0100
அம்மா என்றால் அன்பு ♥
-
கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார் உன் அப்பா...... மகாலட்சுமி உன்னை வீட்டில் வைத்...
Posted:Mon, 28 Jul 2014 06:45:00 +0100
கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார் உன் அப்பா......
மகாலட்சுமி உன்னை வீட்டில் வைத்து கொண்டு.....
தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் ♥
-
:)
Posted:Mon, 28 Jul 2014 06:30:00 +0100
:)
-
ஆண்- ஐ லவ் யூ பெண் - ஹாஹாஹா ஆண் - நீ இல்லாம நான் இருக்க முடியாது பெண் - ஹா...
Posted:Mon, 28 Jul 2014 06:10:00 +0100
ஆண்- ஐ லவ் யூ
பெண் - ஹாஹாஹா
ஆண் - நீ இல்லாம நான் இருக்க முடியாது
பெண் - ஹாஹாஹா
ஆண் - உனக்காக நான் சாகக் கூடத் தயார்
பெண் - ஹாஹாஹா
ஆண்- உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கித் தரட்டுமா?
பெண் - வாவ்... நிஜமாவா..? ;*
ஆண்-ஹாஹாஹாஹாஹாஹாஹா..
:P :P -
பிரியாணி சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க சார்.. நெஞ்சு வலி வந்துரும்! க...
Posted:Mon, 28 Jul 2014 05:50:00 +0100
பிரியாணி சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க சார்..
நெஞ்சு வலி வந்துரும்!
குளிர்ந்த நீர் குடிக்காதீர்: ஆம், குளிர்ந்த நீரை மடக், மடக்கென்று உள்ளே தள்ளுதல் மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். அதுவும் சாப்பிட்டபின்னர் குளிர்ந்த நீர் குடித்தல் உயிருக்கே உலை வைக்கும் ஒன்றாகும்.
சூடான தேநீர் நல்லது: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மெதுவாகும் செரிமானம்: சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும்.
குடலை கெடுக்கும் கொழுப்பு: இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்தான் நல்லது.
தூக்கதிலேயே மாரடைப்பு: சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீர் குடித்துவிட்டு படுத்தால் செரிமானம் சரியாக நடைபெறாமல் நெஞ்சடைத்து தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குமட்டலும் மாரடைப்பின் அறிகுறிதான்: மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே எமன்: உறக்கத்திலேயே இறந்துவிடுவார்கள். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஆதலால், குளிர்ந்த நீரைக் குடிக்காமல் சாப்பிட்டவுடன் சூடான நீரைக் குடித்து வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Oneindia Tamil
-
:)
Posted:Mon, 28 Jul 2014 05:30:00 +0100
:)
-
”இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்” என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந...
Posted:Mon, 28 Jul 2014 05:10:00 +0100
”இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்” என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந்த ஒரு இசுலாமிய மத அடிப்படைவாத குழுவோ அல்லது ’அல்கொய்தாவோ’ பாலஸ்தீன மக்களை காக்க லட்சக்கணக்கில் இசுலாமியரை திரட்டவில்லை, போராடவில்லை.
‘இந்து தர்மம் காப்போம், இந்து தேசம் அமைப்போம், இந்துவினை காப்போம்’ என்கிற ஆர் எஸ்.எஸ்-பாஜகவோ ஈழ (இந்து) தமிழர்கள் பல லட்சம் கொலை செய்யப்பட்டபொழுது ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை .
தமது மதத்தினை நம்புகிறவர்களைக் கூட கைவிடுபவர்களே இந்த மத அடிப்படைவாதிகள். பாலஸ்தீனமும், ஈழமும் தேசிய இனங்களாகவே போராடுகின்றன. மதங்களாக அல்ல.
யூத மத-இனவெறிக்கு இந்துத்துவ அடிப்படைவாதமும், கிருத்துவ மத அடிப்படைவாதமும் துணை போகின்றன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காக்கிறார்கள்.
பெளத்த சிங்கள் இனவெறிக்கு, இந்துத்துவவாதிகள் துணை போகிறார்கள்.இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காத்தார்கள்.
கொலை செய்யப்படும் மக்களுக்காக , மத-இன வெறியை-அடிப்படைவாதத்தினை மறுத்த பொதுமக்களே இன்று பல்வேறு தேசங்களில் போராடுகிறார்கள்.
மதம் மக்களை ஒருபொழுதும் காக்காது.
சக மக்களே தம்மை காக்க குரல்கொடுப்பார்கள் என்று அம்மக்களுக்கு தெரியும். இன்று இவர்களுக்கு நாம் குரல் கொடுத்தால் நாளை நமக்கென்று குரல் கொடுக்க சிலர் மிச்சம் இருப்பார்கள் என்கிற சுயநலம் தவறு கிடையாது. (y)
- Thirumugan Gandhi.
-
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்ப...
Posted:Mon, 28 Jul 2014 04:50:00 +0100
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!
தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.
-
(y)
Posted:Mon, 28 Jul 2014 04:30:00 +0100
(y)
-
இனிய காலை வணக்கம் நண்பர்களே... :)
Posted:Mon, 28 Jul 2014 04:00:00 +0100
இனிய காலை வணக்கம் நண்பர்களே... :)
-
குட்நைட் செல்லம்ஸ் <3
Posted:Sun, 27 Jul 2014 19:00:00 +0100
குட்நைட் செல்லம்ஸ் ♥
-
சுகமான பயணம் <3
Posted:Sun, 27 Jul 2014 18:50:01 +0100
சுகமான பயணம் ♥
-
சிறந்த தமிழன் (y)
Posted:Sun, 27 Jul 2014 18:40:00 +0100
சிறந்த தமிழன் (y)
-
:)
Posted:Sun, 27 Jul 2014 18:30:00 +0100
:)
-
250 வருட பழமையான போன்சாய் மரம்
Posted:Sun, 27 Jul 2014 18:19:01 +0100
250 வருட பழமையான போன்சாய் மரம்
சும்மா... சும்மா... 4 -
ஒரு பார்வை இழந்த பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான்....
Posted:Sun, 27 Jul 2014 18:10:00 +0100
ஒரு பார்வை இழந்த பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான். அவன் சிறந்த புத்திசாலி ஆனால் அதை பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவன் மனதில் உண்டு. பசி மயக்கத்துடன் ஓரிடதில் அமர்ந்தான்.
அவன் மீது இரக்கம் கொண்ட ஒரு தேவதை அவன் முன்னால் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது.
மகிழ்ச்சியோடு அவன் வாய் திறந்தபோது தேவதை சொன்னது. பொறு ! பொறு !. உனக்கு ஒரே ஒரு வரம் தான் தருவேன் அதையும் நீஒரு வாக்கியத்தில் தான் கேட்க வேண்டும்.
அவன் பதறவில்லை தடுமாறவில்லை. தேவதை பிரமித்து போகும்படி அந்த வரத்தை கேட்டான் …. !!
”என் வீட்டு மூன்றாவது மாடியிலிருந்து தோட்டத்தில் என் குழந்தை விளையாடுவதை பார்க்கும் வரம் வேண்டும்”
நீதி : புத்திசாலிகள் எந்த சூழ்நிலையிலும் சிறப்பையே அடைவார்கள். -
அய்யோ அய்யோ சென்னை அமிர்தாவுல படிக்கும் போதே மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் ஆச்சே...
Posted:Sun, 27 Jul 2014 18:00:01 +0100
அய்யோ அய்யோ சென்னை அமிர்தாவுல படிக்கும் போதே மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் ஆச்சே, கப்பல்ல வேல, உலகமெல்லாம் சுத்தி பாக்கலாம், ஒரே வருசத்துல வீடு வாங்கிடலாம் ..
# கவுண்டர் வாய்ஸ் #
-
குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு நாட்டின் அபார வளர்ச்சி.... உலகத்தில் உள்ள அனைத்து...
Posted:Sun, 27 Jul 2014 17:50:01 +0100
குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு நாட்டின் அபார வளர்ச்சி.... உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் உள்ள நம் நாடு இன்னும் வளராமல் இருக்கின்றது..
-
இத்தாலி நாட்டில் உள்ள ஒரு சாலை
Posted:Sun, 27 Jul 2014 17:40:00 +0100
இத்தாலி நாட்டில் உள்ள ஒரு சாலை
-
உண்மை
Posted:Sun, 27 Jul 2014 17:30:00 +0100
உண்மை
-
குட்டிக்கதை: காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் ஒரு ஞானியை அணுகிய...
Posted:Sun, 27 Jul 2014 17:15:00 +0100
குட்டிக்கதை:
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"
Relaxplzz -
உற்சாகமாக இருக்கத் தொடங்குவது தான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முத...
Posted:Sun, 27 Jul 2014 16:58:04 +0100
உற்சாகமாக இருக்கத் தொடங்குவது தான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. (y)
"யதார்த்தங்கள் - தத்துவங்கள்"

0 comments:
Post a Comment