-
2050ல் உலகம் எப்டி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை: பையன்:அம்மா இவன்தான் உன் பேரன்...
Posted:Sun, 27 Jul 2014 03:28:59 +0100
2050ல் உலகம் எப்டி இருக்கும்?
ஒரு சின்ன கற்பனை:
பையன்:அம்மா இவன்தான் உன்
பேரன்.
அம்மா:கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள
கூப்டல!!!
பலசரக்கு கடை: அண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம்
குடுங்க.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்அடுத்த படத்தில்
ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
பேஸ்புக்கின் நிர்வாக பொறுப்பை, திரு.மார்க்(FB owner) அவரது இளைய மகனிடம் ஒப்படைத்தார்.
இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையை கட்டத்தவறிய
உலக வங்கி மேல் ஜனாதிபதி தளபதி kumuda superstar விஜய் வழக்கு.
35வருடங்களுக்குபிறகு திடீரென கரண்ட் கட் ஆனதால்,
உலகம்அழிந்துவிட்டது என மக்கள் பீதி.
35வருடங்களுக்குமுன் காணமல் போன மலேசிய விமானத்தை திரு.விஜயகாந்த் கண்டுபிடித்தார்.
இலங்கை தமிழர்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அதிமுக போர்க்கொடி.
பெட்டிகடை: அண்ணா, 1லட்ச ரூபாக்கி சில்லர இருக்குமா!
இன்று மாலை சரியாக
5மணிக்கு சென்னை அனைத்து பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு அம்மா இலவச கார் வழங்குகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரரிவாளன், முருகன்
ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன்
உபயோகித்த Nokia1100 47கோடிக்கு ஏலம் போனது.
தமிழக அரசு வழங்கிய இலவச Iphone 10s செல்போனில்
ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள்
வெளிநடப்பு.
தன் வீட்டில் வைத்திருந்த 180கோடி ரொக்கப்பணம்
மற்றும் 1110சவரன் நகை திருட்டு போன சோகத்தில்
ஏழை விவசாயி தற்கொலை.
36ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில்
தங்கம் வென்றது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள
முதல் நாடு என சீனாவின்
சாதனையை இந்தியா முறியடித்தது -
காரைக்குடியில் நடிகர் விஷால் தன்னை புகைப்படம் எடுத்தவரை தாக்கி தகாத வார்த்தைகளைப...
Posted:Sat, 26 Jul 2014 18:28:40 +0100
காரைக்குடியில் நடிகர் விஷால் தன்னை புகைப்படம் எடுத்தவரை தாக்கி தகாத வார்த்தைகளைப் பேசி கைபேசியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்
காரைக்குடியில் 7.7.14 அன்று மாலை நடிகர் விஷால் அவர்கள் சூட்டிங் முடித்து விட்டு கல்லூரி சாலையில் சைக்களில் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட சில பள்ளி மாணவர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயர்ச்சித்துள்ளனர்.
அதர்க்கு விஷால் மாணவர்களின் செல்போன்களை பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் செல்போன்களை வாங்குவதற்கு மாணவர்கள் விஷாலிடம் கெஞ்சியபடி பின் தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதிக்குச் சென்றுவுடன் தன்னுடன் வந்த பாதுகாவலர்கள் முன்னிலையில் மாணவர் ஒருவரை பிடறியில் தாக்கி அவரின் செல் போனை உடைத்துள்ளார். மேலும் விஷால் அவர்கள் மாணவர்களிடம் தன் திமிரைக் காட்டி தகாத வார்த்தையிலும் பேசியுள்ளார்.
இதனை சில மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
பப்ளிசிட்டி தேட முயர்ச்சிக்கும் விஷாலின் இந்த அனாகரீகமான செயலால் அந்த மாணவர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.
Cridit : I Love Karaikudi
-
சதுரங்க வேட்டை நல்ல படம் என்று பெருவாரியான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது....
Posted:Sun, 20 Jul 2014 03:55:54 +0100
சதுரங்க வேட்டை நல்ல படம் என்று பெருவாரியான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.... ஆனால் இந்த வாரமும், அடுத்த வாரமும், பெரிய படங்கள் கீயு கட்டி நிற்பதால்... நீங்கள பொறுமையாக இந்த படத்தை பார்க்கலாம் என்று தியேட்டருக்கு போனால் தியேட்டரில் இருந்து தூக்கியிருக்க கூடிய ஆபாயம் சதுரங்க வேட்டைக்கு இருக்கிறது.... அதனால் சதுரங்க வேட்டை படத்தை பார்த்து விரும்பிய நண்பர்கள், சற்று அழுத்தமாக ப்ரோமஷனில் இறங்கவும், உங்களுக்கு தெரிந்த சினிமா விரும்பிகளை கட்டாயம் படத்தை பார்க்க வற்புறுத்துங்கள், அதுவும் இது குடும்பத்துடன் ரசிக்க கூடிய படம் என்பதையும் எடுத்து சொல்லுங்கள், ஏனென்றால் பேஸ்புக், இண்டர்நெட்டில் வரும் postive report மக்களுக்கு போய் சேராது....இது பல நல்ல படங்களுக்கு நேர்ந்த கொடுமை.... Word of Mouth மற்றும் பத்திரிக்கைகளில் வருவதே, பொது மக்களுக்கு சென்றடைகிறது,... அதனால் படம் பிடித்திருந்தால் இன்னும் இருவரையாவது எப்படியாவது படத்து அனுப்பி விடுங்கள்... ஏனென்றால் இந்த படம் ஒடுவது, அடுத்து அடுத்து இது மாதிரியான நல்ல முயற்ச்சிகளுக்கு வழிவகுக்கும்... ஒரு ஸ்டார் நடிகரை மட்டும் வைத்து ஒப்பேத்தாமல், நல்ல திரைகதை, வித்தியசமான கதைகளம், அநாகரிமற்ற காமெடிகளை தவிர்த்து, மிகவும் முக்கியமாக(சமூக பொறுப்புள்ள!!!!!) படங்கள் வருவது சாத்தியமாகும்....
அதுவும் தமிழ்நாட்டில் எல்லாரும் கண்டிப்பாக பாக்க வேண்டிய படம் சதுரங்க வேட்டை... ஏனென்றால், அதியசத்தை நம்பி ஏமாறுவது தமிழ்நாட்டின் பாரம்பரியம்(லாட்டரி டிக்கெட்டில் இந்தியாவில் அதிக விற்பனை தமிழ்நாட்டில் தான் நடந்தது)... அதே போல இந்த படத்தில் வரும் அணைத்து நிகழ்வுகளுமே தமிழ் நாட்டில் நடந்தேறியதே....எப்படி எல்லாம் மக்கள் எமாந்திருக்கிறார்கள், இப்படி எல்லாம் இனியும் ஏமாறலாம் என்று ஒரு தடவை பார்த்து வைத்து கொள்வது நல்லது.... ஆக எல்லா சினிமா ரசிகர்களும், தள்ளி போடமல் படத்தை பாருங்கள்
-
Posted:Sun, 20 Jul 2014 03:54:09 +0100
-
Pesama poriya illa Vaila kaththiya vittu suththava
Posted:Sun, 22 Jun 2014 20:14:27 +0100
-
Posted:Sun, 22 Jun 2014 16:56:08 +0100
-
Posted:Fri, 20 Jun 2014 19:01:46 +0100
-
குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள் 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழ...
Posted:Thu, 19 Jun 2014 19:29:59 +0100
குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.
3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்
-
புத்த மத வெறியர்களுக்கு எதிராக புகார் அனுப்புங்கள்....!!! மனித உரிமை ஆணையத்திற...
Posted:Tue, 17 Jun 2014 01:36:30 +0100
புத்த மத வெறியர்களுக்கு எதிராக புகார் அனுப்புங்கள்....!!!
மனித உரிமை ஆணையத்திற்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து புகார் அனுப்புங்கள்.
http://chn.ge/1kXE984
இந்த லிங்கில் உள்ளே சென்றால் புகைப்படத்தில் உள்ளது போல வரும்.
அதில் உள்ள வாசகத்தை Copy செய்து கொள்ளுங்கள்.பிறகு sign this petitioஐ கிளிக் செய்து,
உங்களுடைய விபரத்தை(பெயர்,மெயில் ஐடி) பதிவு செய்து, add a reason for signingஐ Click செய்து அதில் Copy செய்ததை Paste செய்து sign now கொடுங்கள்.
இது எந்த அளவுக்கு மனித உரிமை ஆணையத்தை அனுகும் என்று எமக்கு தெரியவில்லை,ஆனால் இங்கையில்
நடக்கும் அநியாயத்தை உலகம் அறியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
#பகிருங்கள்
சிங்களர்களின் அழிவு விரைவில். . .
-
கற்பழிப்புக்கு தண்டனை :- 1.UAE -ஏழு நாள்களில்தூக்கு தண்டனை 2.ஈரான் -கல்லால் அடி...
Posted:Mon, 16 Jun 2014 11:59:51 +0100
கற்பழிப்புக்கு தண்டனை :-
1.UAE -ஏழு நாள்களில்தூக்கு தண்டனை
2.ஈரான் -கல்லால் அடித்து கொலை /24
மணி நேரத்தில் தூக்கு தண்டனை..
3.ஆப்கானிஸ்தான் -நாலு நாளில்துப்பாக்க
ியால் சுட்டு மரணம்..
4.சீனா -மருத்தவ சோதனையில்நிரூபண
மாகி விட்டால் உடன் மரணம்
5.மலேசியா -மரணதண்டனை
6.மங்கோலியா -கற்பழிக்கப்பட்டபெண்ணின்
வீட்டார்களால் தண்டனை
7.ஈராக் -கல்லால் அடித்து கொலை
8.தாலிபான் -உடலை வெட்டி எடுத்து மரணம்
9.போலந்து -
கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும்
10.இந்தியா -அவசர அவசரமா கைது பண்ணுவாங்க
விசாரணை என்கிற பெயரில் கொஞ்ச
நாளைக்கு அவனை அரசு வாகனத்தில் ஊர்
சுற்றி காட்டுவார்கள்..
.அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான
நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்க
ு ஆதரவாகஇருக்கும்..காலபோக்கில் மக்களும்
மறந்து போய் அடுத்து நடந்த
கற்பழிப்பு செய்திக்காக
வருந்தி கொண்டு இருப்பார்கள்
மைனர்குஞ்சுகள்மறுபடியும் தன்
ஆட்டத்தைத்துவங்குவார்கள்.....
மக்களே இந்த தவறு செய்த
எவனாவது சிக்குனா...சட்டத்தின் முன்
பிடித்து கொடுக்கும் முன் கம்பத்தில்
கட்டி வச்சி கதற கதற கொடுக்குற அடி...அப்புறம்
அவன் அவசரத்துக்கு கூட வெளிய எடுக்க
பயப்படனும்....
என்ன கிடைத்தால் அடி பிரிப்பீப்களா???
-
இலவசமாக வழங்க வேண்டிய குடிநீர் எதற்கு அரசாங்கத்தாலயே விற்கப்படுகிறது ? ரூ.3 க்க...
Posted:Fri, 13 Jun 2014 15:30:00 +0100
இலவசமாக வழங்க வேண்டிய குடிநீர் எதற்கு அரசாங்கத்தாலயே விற்கப்படுகிறது ?
ரூ.3 க்கு 2 சப்பாத்தி ஆனால் குடிநீர் மட்டும் ரூ.10 ஏன் ?
உலக வங்கி விதிகளின் படி குடிநீர் மேலாண்மை திட்டங்களுக்கு கடன் பெற வேண்டுமானால் குடிநீரை இலவசமாக வழங்கக்கூடாது. அதனை வர்த்தக பொருளாக கருத வேண்டும் என்ற விதி.
அதன் படி இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் நீர் வளக் கொள்கையில் குடிநீரை வர்த்தக பொருளாக, தங்கம் போல் பங்குச் சந்தையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அந்த கொள்கை வரைவு நிலையிலேயே உள்லது.
அந்த கொள்கையின் படி விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரும் , வவிசாயி பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
அந்த மசோதா வரைவு நிலையிலேயெ உள்ளதால் இன்று வரை ஆபத்து ஏதும் வரவில்லை.
ஆனால் மறைமுகமாக அதனை அரசாங்கம் செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் ஒரு எடுத்துக்காட்டு - அம்மா குடிநீர். குடிநீர் அரசாங்கத்தால் வர்த்தக பொருளாக விற்கப்படுவதின் அடையாளமே அம்மா குடிநீர்.
வீடுகளுக்கு கேன் குடிநீர் திட்டமும் இதே காரணம் தான். விரைவில் குடிநீர் குழாய் காட்சி பொருளாக மாறும் நிலை வந்து கொண்டியுக்கின்றது.
-
நவம்பர் 14 ஆம் தேதி நேரு பிறந்த நாள் அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருக...
Posted:Fri, 13 Jun 2014 14:54:13 +0100
நவம்பர் 14 ஆம் தேதி நேரு பிறந்த நாள் அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதர்குறிய அரசாணைகள் , காரணங்கள் உள்ளிட்டவைகை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு " நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று பதிலளித்துள்ளது"
-
Enna dhaan IPod, Mp3, Laptop nu Vanthaalum FM la Song Ketkura Feel eh Thani. In...
Posted:Mon, 02 Jun 2014 12:44:55 +0100
Enna dhaan IPod, Mp3, Laptop nu Vanthaalum FM la Song Ketkura Feel eh Thani.
Innaikkum Ivar Songs illainna Tamil Naattula Endha Radio Station'kkum Vela illa.
Happy Birthdayy, Raja Saar. -
ஒரே கல்லுல. . . . . . . . ரெண்டு மாங்கா. . . . . .
Posted:Mon, 02 Jun 2014 05:40:50 +0100
-
கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள் யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள...
Posted:Sat, 31 May 2014 09:48:38 +0100
கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்
யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா?
உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.
வழிகாட்டும் ஒளி
ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது.
நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும்.
பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும்.
வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்கலாம்.
நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண், இருவேறு கோணங்களில் பார்க்கும்போது இருவேறு வண்ணங்களில் தெரியும் வகை யில் விசேஷ மை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
நோட்டைக் கிடை மட்டத்தில் வைத்துக்கொண்டால் இந்த எண் பச்சை நிறத்திலும் சாய்த்தால், நீல நிறத்திலும் இருக்கும். நோட்டின் கீழ்ப்புறத் திலும் வலது ஓரத்திலும் இருக்கும் எண் கட்டங்களின் மீது வெளிச்சத் தைப் பாய்ச்சினால் அது ஒளிரும்.
நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் பாரத் (இந்தி), ஆர்.பி.ஐ. என்ற எழுத்துகளும் ரூபாய் நோட்டின் எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டைச் சாய்க்கும்போது நூலின் நிறமும் பச்சையிலிருந்து நீலமாக மாறும். வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கும்போது நூல் அறுபடாமல் முழுதாகத் தெரியும்.
நல்ல நோட்டுகளில் பின்புற முள்ள பூ வேலைப்பாடும் ஊடு ருவிப் பார்க்கும் வகையில் இருக் கும். முதல் பக்கமுள்ள பூ வேலைப் பாட்டுடன் அது பொருந்தும். வெளிச்சத்துக்கு நேராக நோட்டை வைத்துப்பார்க்கும்போது ரூபாய் நோட்டின் எண், கண்ணாடிக்கு நேராகக் காட்டினால் தெரிவதைப் போன்ற பிம்பத்தில் இருக்கும்.
புடைப்பான மை :
நல்ல நோட்டுகளில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்களும் கைகளால் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலேயும் ரூபாய் நோட்டின் மதிப்பு நடுவில் இந்தியிலும் மகாத்மா காந்தியின் உருவமும் இப்படி இன்டாக்ளியோ முறையில் புடைப்பாக இடம்பெற்றிருக்கும்.
மகாத்மா காந்தியின் படத்துக்கு வலதுபுறத்தில் ஆர்.பி.ஐ. என்ற எழுத்தும் ரூபாய் எண்களும் சிறிய வடிவிலான எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியுடன் இவற்றைப் பார்க்கலாம்.
இடதுபுறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும்.
வெவ்வேறு வகையிலான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இது மாறும். பார்வையற்றவர்கள் இதைத் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறிவார்கள்.
ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. பழைய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறைவு என்பதால்தான் அவற்றைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஆர்.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.
சோதித்துப் பாருங்கள்
1,000 ரூபாய் நோட்டில் மட்டுமே ரூபாய் நோட்டின் எண், பாதுகாப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் எண், நிறம் மாறும் மையில் அச்சிடப்படவில்லை. எனவே இவற்றைச் சாய்த்துப் பார்த்தாலும் எண்ணின் நிறம் அப்படியே இருக்கும்.
10 ரூபாய் நோட்டில், பார்வையாளர்கள் தடவிப் பார்த்து அறியும் வகையி லான மையில் எண் அச்சிடப்பட வில்லை. செங்குத்தான கோட்டில் மறைக்கப்பட்ட படமும் இல்லை.
கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகு அவற்றைக் கொண்டு எதையும் வாங்க முயற்சிக்காதீர்கள். (நீண்ட நாள் கடனையும் அடைத்துவிடா தீர்கள்!).
தெரிந்தோ தெரியா மலோ நீங்கள் கள்ளநோட்டைக் கொடுத்தால், அதை வைத்திருந் ததற்காகவே உங்களைக் கைது செய்யலாம். எங்கிருந்து உங்கள் கைக்கு வந்தது, யார் கொடுத்தார்கள் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்.
இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது, விவரங்கள் தேவை என்று கருதினால் பின்வரும் இணையதள முகவரி யைத் தொடர்பு கொள்ளவும்:
www.paisabolthai.rbi.org.in
Nandri : The Hindu
-
ச்சோள முத்தா. . . வுர்ர்ர்ரா வுர்ர்ர்ரா. . .
Posted:Fri, 30 May 2014 19:51:31 +0100
-
Posted:Fri, 30 May 2014 13:31:48 +0100
-
பொதுவா போஸ்டர்கள்ல ஒன்னு இரண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் சகஜம்தான். ஆனா இதுரொம்ப அ...
Posted:Fri, 30 May 2014 10:00:30 +0100
-
Nanbaen daa. . . . . ,
Posted:Thu, 29 May 2014 18:06:14 +0100
-
பல(ழ)ம் முக்கியம் அமைச்சரே. . .
Posted:Thu, 29 May 2014 13:21:35 +0100
-
Csk da Dhoni da.
Posted:Thu, 29 May 2014 11:32:40 +0100
-
ஆத்தீ. . . .
Posted:Wed, 28 May 2014 19:24:50 +0100
-
அட ங்கொப்ப மவைங்களா ஒழுங்கா போடுங்க டா. பிக்காலி பாய்ஸ்
Posted:Wed, 28 May 2014 16:08:06 +0100
-
Posted:Wed, 28 May 2014 13:10:45 +0100
-
தலைவர் மாஸ் டா
Posted:Fri, 23 May 2014 08:19:06 +0100
-
இதுக்குப் பேருதான் காங்கிரஸ் 'காரிய'க் கமிட்டியா?
Posted:Fri, 23 May 2014 04:32:33 +0100
-
எங்க வூட்டு எல்.சீ.டி டீவிங்க
Posted:Thu, 22 May 2014 16:56:59 +0100

0 comments:
Post a Comment