-
Posted:Mon, 28 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #களவியல். அதிகாரம்: #காதற்சிறப்புரைத்தல்.
மு.வ உரை:
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
#Translation:
Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.
#Explanation:
The love between me and this damsel is like the union of body and soul.
#TRADUIT DU #TAMOUL
L’humeur secrétéé par les glandes placées, sous la gencive (de cette jeune fille) aux paroles tenders, a la saveur exquise du lait et du miel.
@ Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
Posted:Sat, 26 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
#பொருட்பால் - #படையில் - #படைமாட்சி
மு.வ உரை:
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
#Translation:
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.
#Explanation:
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).
@ Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
Posted:Fri, 25 Jul 2014 13:45:00 +0100
சோழனிடம் சிங்களம் மண்டியிட்ட வரலாறு...!
கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் என்று வலுவான வரலாற்று ஆதாரங்களுடன் தொடங்குகிறது பண்டைய தமிழகத்தின் வரலாறு. தமிழக வரலாற்றில் கடைகாலம் என்றாலும் சரி இடைக்காலம் என்றாலும் சரி தஞ்சையை ஆண்ட சோழர்களின் காலம் பொற்காலம் என்றால் அது மிகையில்லை. கடைகாலத்தில் கல்லணை எழுப்பி காட்டாறாக விளங்கிய காவிரியை தடுத்து, பாசன மேலாண்மைக்கு முன்னோடியாக விளங்கியவன் பெருவளத்தான் எனப் புகழப்படும் கரிகால் சோழன். இடைக்காலத் தமிழகத்தில், உலகம் போற்றும் சோழர் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பிரகதீசுவரர் கோவிலை கட்டி சாதனைப் படைத்தவன் மாமன்னன் ராஜராஜன்.
அதேபோல தங்களை எதிர்த்த எதிரிகளை ராஜராஜனும் அவர் மகன் ராஜேந்திர சோழனும் மண்டியிட வைத்த வீரவரலாறு தமிழர்களுடையது. தந்தை அனுப்பிய தனயன் இவர்கள் இலங்கைத் தீவை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாற்றினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான். எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன்னன் ராஜராஜன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார். இலங்கையை சென்றடைந்த ராஜேந்திர சோழனின் போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது.
அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. துள்ளிய மகிந்தன் கிள்ளிய சோழர்கள் சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.
இதுபற்றி சோழ மன்னன் ராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராஜேந்திரனின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றினான். தஞ்சையில் மகிந்தன் போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, ‘சூளவம்சம்’ என்ற சிங்களர்களின் வரலாற்று நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. காசிபனும் கீர்த்தியும் அழிந்த கதை ராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான். இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன் மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
பாண்டியர்களும் விட்டு வைக்கவில்லை பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். கி.பி. 1255ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களத்தை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன . பிற்காலத்தில், மைசூரை தலைநகராக் கொண்டு ஆட்சிசெய்த விஜயநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள்ளனர்.
-
Posted:Fri, 25 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #கொல்லாமை.
#உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
#Translation:
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.
#Explanation:
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
- Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
என்னய்யா #பெட்ரோல் விலையையும் ஏத்திட்டங்க ? னு கேட்டா. பழக்க தோசத்துல ஒருத்தன்...
Posted:Thu, 24 Jul 2014 17:50:00 +0100
என்னய்யா #பெட்ரோல் விலையையும்
ஏத்திட்டங்க ? னு கேட்டா.
பழக்க தோசத்துல ஒருத்தன்
#மோடி வரணும் சார் அப்டிங்குரான்.????
#டேய் -
ஆஸ்திரேலியா தமிழ் சங்க அறிக்கை . தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள்...
Posted:Thu, 24 Jul 2014 13:45:01 +0100
ஆஸ்திரேலியா தமிழ் சங்க அறிக்கை .
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் வரலாற்றில் இந்த வருடம் சிறப்பானது. பெருமைக்குரியது. ஆம். 2014ம் ஆண்டு இராசேந்திரசோழன் மாமன்னனாக அரியணை ஏறி ஆயிரமாம் ஆண்டு. மாவீரன் இராசேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை ஆட்சிபீடமாக கொண்டு 1012 முதல் 1044ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்து வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும் குணதிசை கடாரமும் கொண்ட அகண்ட சோழப்பேரரசை நிறுவி தமிழுக்கும் அறிவியல் உலகிற்கும் மாபெரும் தொண்டாற்றிய பெரும் தமிழன்.
மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த தினம் எதிர்வரும் ஆடி திருவாதிரை (July 25 வெள்ளிக்கழமை) என திருவாரூர் கல்வெட்டு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலும் அதற்கு முந்திய தினத்திலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்நன்னாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை ஆய்வறிஞர்களும், பெரியார்களும் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் உலகெங்கும் உள்ள தமிழர் ஓன்று கூடி இப்பெருநாளை கொண்டாட வேண்டியது அவசியமானது. எங்கள் அடுத்த தலைமுறைக்கு எம்முன்னோரின் பெருமைகளை தமிழராய் நாம் சாதித்த சாதனைகளை எடுத்து கூற இது போன்ற சிறப்பான நாள் வேறில்லை. உங்கள் சூழலிலுள்ள தமிழ் அமைப்புகளை, ஆலயங்களை அணுகி அன்றைய நாளில் ஆயிரம் விளக்கேற்றி, விசேட பூஜை நிகழ்த்தி, இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உரையாற்றுவதன் முலம் தமிழுக்கும் எம்முன்னோருக்கும் பெருமை சேர்ப்போம்.
அவுஸ்திரேலியா பேர்த் மாநகரில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாம் வாழும் காலப்பகுதியில் வரும் இந்த நன்னாளை உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவோம். தயவுசெய்து உங்கள் நண்பர்கள் அனைவருடனும் இச்செய்தியை பகிர்ந்து செயலாற்றுங்கள்.
வாழ்க தமிழ் மொழி; வாழ்க தமிழ் மொழி; வாழிய வாழியவே.
-
"நாம் நிச்சயம் ஒரு நாள் மறைந்துவிடுவோம், ஆனால் நம் ஊரில் இருக்கும் இந்த சிலைகளும...
Posted:Thu, 24 Jul 2014 13:00:01 +0100
"நாம் நிச்சயம் ஒரு நாள் மறைந்துவிடுவோம், ஆனால் நம் ஊரில் இருக்கும் இந்த சிலைகளும், செப்புப் பட்டயமும் இன்று நாளையோடு முடிந்துவிடக்கூடிய விஷயமல்ல, இவைகள் காப்பாற்றப் பட வேண்டியவை, பல நூறு வருடங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டியவை, இது நம் மண்ணின் சொத்து, நாளை வரப்போகும் படை எடுப்பைப் போன்று எத்தனை படை எடுப்புகள் வந்தாலும், இவை தவறானவர்களின் கைகளில் சிக்கி விடக்கூடாது, யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இவைகளை பாதுகாக்க வேண்டும், என்றேனும் ஒரு நாள் இவை அனைத்தும் நல்லவர்கள் கைகளுக்கு சென்று சேரும், அப்போது நாம் இன்று செய்துகொண்டிருப்பதைப் போன்று, அவர்களும் இவற்றிற்கு தொடர்ந்து பூஜைகள் செய்வார்கள், இந்த மண்ணில் இந்த பாரம்பரியம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்" என்று கருதிய "எசாலம்" கிராம மக்கள் முகலாய படை எடுப்பின் போது மிகப் பாதுகாப்பான ஒரு இடத்தை கோயில் வளாகத்திற்குள் தேர்வு செய்து, ஒரு குழி வெட்டி எங்கிருந்தோ கொண்டு வந்த ஆற்றுமணலை அதற்குள் அழகாக பரப்பி, அதற்கு மேல் அளவு வாரியாக சிலைகளை அடுக்கி, கற்பலகை கொண்டு மூடி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
படை எடுப்பிற்கு பின் அந்த ஊர் மக்கள் யாரும் உயிர் பிழைக்க வில்லையா என்பது தெரியவில்லை, புதைத்தது புதைத்தபடி பல நூறு வருடங்களாக அதே இடத்திலேயே இருந்தது. அவை அனைத்தும் வெளியில் மீண்டும் வருவதற்கான நாள் குறித்தார் அந்த ஊர் இறைவன் "ராமநாதீஸ்வரர்" ஆகஸ்ட் 11, 1987, கோயிலை பழுதுபார்க்கும் பணியில் எசாலம் கிராம மக்கள் ஈடுபட்டிருந்த போது, தற்செயலாக ஒருவர் கற்பலகை ஒன்றை நீக்குகிறார், உலோக தடி போன்ற ஒன்று தட்டுபடுகின்றது, வெளியே எடுத்தால் வெண்கல சூலம், ஆர்வத்தில் மேலும் தேடுகிறார், மிக அழகான மணிகள், சிலைகள், பூஜை சாமான்கள் போன்ற ஏராளமான பொருட்கள் வந்துகொண்டே இருந்தது, அனைத்திற்கும் கீழாக கடைசியாக ஒரு பொருள் தட்டுப்படுகின்றது அதை வெளியில் எடுக்கிறார் அது ஒரு செப்புப்பட்டயம், புத்தகம் போன்று இருந்த அந்த செப்புப் பட்டயத்தை ஒரு வளையம் தாங்கி பிடித்துக் கொண்டிருந்தது, அந்த வளையத்தின் நடுவே கம்பீரமான சோழமன்னரின் முத்திரை! செய்தி கேட்டு திரு.நாகசாமி அய்யா ஓடிவருகிறார், பட்டயத்தைப் படித்துப் பார்கிறார், அந்த ஊரைக் குறித்தும், ராமநாதீஸ்வரர் கோயில் குறித்தும் ஏராளமான விஷயத்தை வாரி வழங்கியது அந்த செப்புப்பட்டயம், பத்தோடு பதினொன்றாக அது வரை சாதாரணமாக பார்க்கப்பட்டு வந்த அந்த கோயிலுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கின்றது. காரணம் சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற மன்னனான ராஜேந்திர சோழனின் இராஜகுரு "சர்வ சிவ பண்டிதர்" அவர்கள் கட்டிய கோயில் அது, இந்த ஊரை சுற்றி இருக்கும் பிரம்மதேசம், எண்ணாயிரம் போன்ற ஊர்கள் அன்று செழிப்பாக இருந்ததுள்ளதையும் குறிக்கின்றது, அந்த பகுதியில் வேதக் கல்லூரி ஒன்றும் இயங்கி வந்துள்ளது, இது தன்னுடைய இராஜகுரு கட்டும் கோயில், ராஜேந்திரனின் நேரடி ஆணையில் உருவான கோயில், அப்படியானால் இந்த கோயிலில் வேலை செய்ய எப்படிப்பட்ட சிற்பிகள் பணியமர்த்தபட்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகின்றது, உச்சி முதல் பாதம் வரை முழு கற்றளி, விமானத்தில் இருக்கும் வீணாதரர், நடராஜர் அழகை எழுத தமிழ் ஒன்று போதாது. அந்த கோயிலுக்கு சென்றால் எத்தனை அருமையான சிலைகளை காணமுடிகின்றது! காஞ்சிபுரத்தில் இருக்கும் அரண்மனையில் ராஜேந்திர சோழன் குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த கோயிலுக்கான தானத்தை வழங்கினார் என்பதையும் அந்த செப்புப் பட்டயம் பதிவு செய்திருக்கின்றது!. கோயிலின் தானத்திற்கும், இன்னபிற செயல்பாடுகளுக்காகவும் ராஜேந்திரனால் வழங்கப்பட்ட செப்புப்பட்டயம் அது! மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னன் ராஜேந்திரனின் குரு கட்டிய கோயில் என்றால் வரலாற்றில் எத்தனை முக்கியத்தும் வாய்ந்த கோயில் இது.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் கூழமந்தல் என்ற ஊரில் இதே போன்ற ஒரு அற்புதம் ஒளிந்திருக்கின்றது, "உடையார் ராஜராஜதேவர் குருக்கள் ஈசான பண்டிதர்" என்று மிக உயர்வாக தஞ்சை கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராஜ ராஜனின் குரு ஈசான பண்டிதர், ராஜ ராஜன் இறந்த பின் ராஜேந்திரனுக்கும் சில வருடங்கள் குருவாக இருந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு ராஜேந்திரனுக்காக ஒரு கோயில் ஒன்றை எழுப்பி இருக்கிறார், கோயிலின் பெயர் "கங்கை கொண்ட சோழீஸ்வரர்", ராஜேந்திரனின் கங்கை வெற்றியை பெருமை படுத்த அவரின் குரு அவருக்காக எழுப்பியகோயில் அது, மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான முழு கற்றளி.
ராஜேந்திரன் தன் காதலை வெளிப்படுத்த கற்றளியாக்கிய கோயில் திருவாரூர், தன் வெற்றியை வெளிப்படுத்த கட்டிய கோயில் கங்கை கொண்ட சோழீஸ்வரம், தன் சிற்றன்னையின் பிரிவை வெளிப்படுத்த கட்டிய கோயில் பஞ்சவன்மாதேசுரம், தன் குருவின் மீது பக்தியை வெளிப்படுத்த தானங்கள் அளித்த கோயில் ராமநாதீஸ்வரர், இவை அனைத்தையும் நான் சென்று பார்த்திருக்கிறேன், அதே வரிசையில் அந்த மனிதன் வாழ்ந்த மாளிகையும் காணலாம் என்று சென்றிருந்தேன், ஒரு மண் மேடைக் காட்டினார்கள். பாசத்தையும், காதலையும், பக்தியையும், வெற்றியையும், கல்லில் கட்டிய அந்த மனிதன், தன் வீட்டை செங்கல்லில் தான் கட்டி இருக்கிறார், அது அழிந்து போகும் என்பது அவருக்கு தெரியும், மாளிகை அழிந்தால் என்ன! மாமன்னன் என்ற பெயர் அழியவில்லை தானே!.
- சசி தரன்
-
மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா சோழப் பேரரசர் ராசராச ச...
Posted:Thu, 24 Jul 2014 10:46:27 +0100
மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா
சோழப் பேரரசர் ராசராச சோழனின் மகனும், அவருக்கு பின்னால் சோழப் பேரரசை தென்கிழக்கு ஆசியா வரை விரிவாக்கம் செய்தவருமான மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழா வருகிற 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவ்விழா நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கருத்தரங்கத்துடன் தொடங்கும் இந்த விழாவின் முதல் நாளில் நூல்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விழா கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள குருகைகாவலப்பர் கோயிலில் நடைபெறுகிறது. மாலையில் இசை, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, காலை 8 மணிக்கு தஞ்சையில் இருந்து தொடங்கும் தொடர் தீபச்சுடர் ஓட்டத்தில், எழுத்தாளர் பாலகுமாரன் தீபத்தை ஏற்றி வைக்கிறார். மேலும் மாலையில் நடைபெறும் வரலாற்று உரை நிகழ்ச்சியிலும் அவர் பேசுகிறார். விழாவில் ராசேந்திர சோழன் குறும்படம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவை வெளியிடப்படுகின்றன. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட மாளிகை மேட்டிலும், மாமன்னன் ராசேந்திர சோழன் அரங்கத்திலும் நடைபெறுகின்றன.
-
கம்பெனியில் 3 phase ல் ஒரு phase வேலை செய்யவில்லை என்று புகார் கொடுத்தேன் நேற்று...
Posted:Thu, 24 Jul 2014 10:35:23 +0100
கம்பெனியில் 3 phase ல் ஒரு phase வேலை செய்யவில்லை என்று புகார் கொடுத்தேன் நேற்று மின்வாரிய தாமஸ் ஆல்வா எடிசன்கள் வந்து பார்த்து (electricity board ன்) மீட்டர் எரிந்துவிட்டது என்று சொல்லி மீட்டரை மாற்ற மின்வாரிய அலுவலகத்தில் வந்து கடிதம் எழுதி (நம்மை முதல்வர் என்று நினைசிட்டானுங்க) கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிட்டு போயிட்டானுங்க ! சரி என்று மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கடிதமொன்றை எழுதி கொடுத்துவிட்டு மீட்டரை மாற்ற எவ்ளவு பணம் என்று கேட்டேன் ! எட்டாயிரத்தி ஐநூறு ஓவாய் என்று சொன்னார்கள் தமிழக தாமஸ் ஆல்வா எடிஸன் AE சரி சனியன் பிடிச்சது வேறு வழி இல்லை வேலை இருக்கே என்று காசை கட்டிய பின்னர் ஒரு temporary யா ஒரு மீட்டரை பொருத்திவிட்டு போகும் போது சொன்னானுங்க மீட்டர் அடுத்தவாரம் தான் கிடைக்கும் அப்போது தான் பில்லும் கிடைக்கும் என்று ! சரி என்று தலையை ஆட்டினேன்! இல்லை பில்லில் மூவாயிரத்தி அறநூறு ஒவாதான் இருக்கும் என்று போகிற போக்கில் சொன்னானுங்க!
தனியார் மயமாக்கணும் சொல்லும் போது ஏன் மின்வாரிய சங்கம் மூலமாக கத்துகிறார்கள் என்று இப்போது தான் புரியுது!
@Guru Manutd -
#சப்பாத்தி_சுடவா? ன்னு கேட்டாங்க....’ம்’ என்றேன்...பூரி கட்டையை கையில எடுத்து மு...
Posted:Wed, 23 Jul 2014 15:15:00 +0100
#சப்பாத்தி_சுடவா? ன்னு கேட்டாங்க....’ம்’ என்றேன்...பூரி கட்டையை கையில எடுத்து முறைச்சு பார்க்கும் போது தான் புரிஞ்சுது,#சப்பாத்தி_சுட_வா! என்று கூப்பிட்டாங்கன்னு.
கேட்டாங்களா...கூப்பிட்டாங்களா...ஒரே கொழப்பமா இருக்கே...
- Ilayaraja Dentist -
#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #படையில் . அதிகாரம்: #படைமாட்ச...
Posted:Wed, 23 Jul 2014 02:50:01 +0100
#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #படையில் . அதிகாரம்: #படைமாட்சி .
#உரை:
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
#Translation:
A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.
#Explanation:
The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
@ Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
யாழ்ப்பாணம், காரைநகர் கசூரினா கடற்கரை!
Posted:Tue, 22 Jul 2014 17:45:01 +0100
யாழ்ப்பாணம், காரைநகர் கசூரினா கடற்கரை!
-
சர்வருக்கு , கதவை திறந்துவிடும் ஆளுக்கு, வண்டியை ஒழுங்குப்படுத்தும் ஆளுக்கு டிப்...
Posted:Mon, 21 Jul 2014 16:30:01 +0100
சர்வருக்கு , கதவை திறந்துவிடும் ஆளுக்கு, வண்டியை ஒழுங்குப்படுத்தும் ஆளுக்கு டிப்ஸ் கொடுக்காவிட்டால் நாம் இரக்கமே இல்லாதவர் என்பதுபோல் ஒரு பார்வை பரிசாகக்கிடைக்கிறது ஹோட்டல்களில்.
சரி ஹோட்டலில் வேலை பார்க்கிறவர்கள் தான் இப்படி என்றால் கூடவே வரும் நண்பர்கள் கூட இப்படி எண்ணுவது தான் காமெடி.
உடனே ஒரு வியாக்கியான அட்வைஸ் வரும்.
"உங்களுக்கு எல்லாம் விளிம்பு நிலை மனிதர்கள் கிட்ட தான் கணக்குப்பார்க்க வரும்...அம்பானி , டாட்டா எல்லாம் கொள்ளையடிக்கிறான் ...அவன் கிட்ட எதுவும் கேக்க மாட்டீங்க..." என்று மைக்ரோனொடியில் ராபின் ஹூட்டாக மாறுவார்கள் நம் ஆட்கள்.
டிப்ஸ் கொடுப்பது தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம்.என்னை மாதிரி பர்சே காரித்துப்பும் பாடாவதி கேஸ்களிடம் பத்து ரூபாய் என்பது 1000ரூபாய்க்கு ஒப்பு என்று எண்ணம் இருக்கும். அப்புறம் எப்படி டிப்ஸ் என்ற பெயரில் 30ரூபாய் எல்லாம் கொடுக்கமுடியும் என்று தெரியவில்லை.அதுவும் ஹோட்டலில் ஒரு paid employee க்கு.
நம்மிடம் அம்பானிய கேட்டியா, டாட்டாவ கேட்டியா என கேட்கும் லூசுகள் ஹோட்டல் மேனேஜரிடம் " இன்கம் டேக்ஸ் எல்லாம் கட்டாம ஏமாத்த முடியுது ..ஹோட்டல்ல வேலைப்பாக்குற ஆளுங்களுக்கு ஒழுங்கா படியளக்க வக்கு இல்லையா ??" என்று கேட்பதில்லை..
டிப்ஸ் கொடுப்பதன் மூலம் தான் எதோ மிகப்பெரிய சேவை செய்யும் ஒரு தான வள்ளல் என்று நினைப்புடன் அலையும் ஆட்களுக்குத் தான் இந்த டிப்ஸ் சமாச்சாரம் பெரிய விஷயமாய் தெரியும்.
தங்களுடைய ego வை satisfy செய்ய மூன்று ரூபாய் டிப்ஸ் கொடுக்கும் காமெடி பாய்ஸ் எல்லாம் அறம், தானம், ஈகை பத்தி கிளாஸ் எடுக்கும்போது சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதிய படத்தை 4000 வாட்டி பார்த்த effect வருவதை தடுக்கமுடியவில்லை.
- UmamaheshVaran -
மூடநம்பிக்கை என்பது ஆறே வாரங்களில் சிவப்பழகு கிடைகும் என நம்பி ஃபேர் & லவ்லி வாங...
Posted:Mon, 21 Jul 2014 11:55:00 +0100
மூடநம்பிக்கை என்பது ஆறே வாரங்களில் சிவப்பழகு கிடைகும் என நம்பி ஃபேர் & லவ்லி வாங்குவது ...
(ஆறு வருஷம் ஆனாலும் சிவப்பழகு கிடைக்காது என்பது வேறு விசயம் )
@களவாணி பய -
அப்பாடா! வேலை கிடைத்து சொந்த காலில் நிற்க ஆரம்பிச்சாச்சு,இனி அப்பா அம்மாவுக்கு #...
Posted:Mon, 21 Jul 2014 09:50:00 +0100
அப்பாடா! வேலை கிடைத்து சொந்த காலில் நிற்க ஆரம்பிச்சாச்சு,இனி அப்பா அம்மாவுக்கு #பயப்பட தேவை இல்லை என்று நினைக்கும் பொழுது தான்,திருமணம் செய்து வைத்து அந்த #பயத்தை கடைசி வரை நீட்டித்து விடுகிறார்கள்.
ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும்,அப்புறம்....அதுவே பழகிடும்.
- Ilayaraja Dentist -
#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #தீ_நட்பு...
Posted:Mon, 21 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #தீ_நட்பு .
#உரை:
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
#Translation:
A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.
#Explanation:
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
- Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
"அலைகடல் நடுவே கலம் பல செலுத்தி.." மாமன்னன் மெய்கீத்தி வரிகாளில்., ஆதாரங்கள் இதோ...
Posted:Sun, 20 Jul 2014 14:10:00 +0100
"அலைகடல் நடுவே கலம் பல செலுத்தி.."
மாமன்னன் மெய்கீத்தி வரிகாளில்., ஆதாரங்கள் இதோ!
Boats used 1000 years back by Rajendra Cholan navy to capture kedah in Malaysia ..kept in Pujang valley in Malaysia
-
அக்கா பையன் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டோன சாப்பிட்ட தட்டை தூக்கி போட்டு மொட்ட மாடிக...
Posted:Sun, 20 Jul 2014 12:55:00 +0100
அக்கா பையன் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டோன சாப்பிட்ட தட்டை தூக்கி போட்டு மொட்ட மாடிக்கு ஓடுறான்...
பின்னாளில் பெரிய அதிமுக அமைச்சரா வந்தாலும் வருவான்....
- பூபதி முருகேஷ் -
#திருக்குறள் #பொருட்பால் - #அரசியல் - #காலமறிதல் மு.வ உரை: காக்கை தன்னைவிட வலிய...
Posted:Sun, 20 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
#பொருட்பால் - #அரசியல் - #காலமறிதல்
மு.வ உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
#Translation:
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.
#Explanation:
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
#TRADUIT DU #TAMOUL
Le corbeau triomphe du hibou pendant qu’il fait jour, ainsi il faut un temps opportun au Roi qui désire vaincre ses ennemis.
- Puducherry * புதுச்சேரி * Pondichéry
-
தமிழீழ காவல் துறை பற்றி தேசியத்தலைவர் சிறீலங்காவிலும் இந்தியாவிலும் இருக்கின்ற...
Posted:Sat, 19 Jul 2014 17:40:01 +0100
தமிழீழ காவல் துறை பற்றி தேசியத்தலைவர்
சிறீலங்காவிலும் இந்தியாவிலும் இருக்கின்ற காக்கி நிற சீருடைகள் நமது காவல் துறைக்கு வேண்டா. காக்கி நிறம் என்பது அடக்குமுறை சின்னமாக மக்களின் மனத்தில் பதிந்து விட்டது. தமிழீழக் காவல் துறை மக்களின்-மக்களுக்கான காவல் துறையாக இருக்க வேண்டும். மக்களின் மனத்தில் இதுவும் அடக்குமுறை செய்கின்ற காவல் துறை என்கின்ற எண்ணமே எழக்கூடாது. அதற்கு மாறாகவே தமிழீழக் காவல் துறைக்கு "கருநீல வெளிர்நிறச்" சீருடை வழங்கப்பட்டது.
தமிழீழக் காவல் துறையைப் பொருத்தவரை குற்றங்கள் முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப் பிடித்து கூண்டில் நிறுத்துவது நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் நோக்கமாகும்.
தமிழீழக் காவல் துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூக நீதிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாக கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள்.
நன்றி - உதயகுமார்
-
அன்று ஆந்திராவில் எரிந்தது,இன்று திருவாரூரில் எரிந்தது, இனி வரும் காலங்களில் ஒட்...
Posted:Sat, 19 Jul 2014 17:30:01 +0100
அன்று ஆந்திராவில் எரிந்தது,இன்று திருவாரூரில் எரிந்தது, இனி வரும் காலங்களில் ஒட்டுமொத்த டெல்டாவும் எரியும்.
ONGC, GAIL, GEECL... போன்ற நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களை விட்டு உடனே வெளியேற வேண்டும்.
நம்மை பாதுகாத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி...!!
- சபரிநிவாஸ் இளங்கோவன்
-
மாமன்னன் இராசேந்திரன் ஆட்சியேற்ற ஆயிரமாண்டு விழாவில் எங்களோடு இணைந்து கொள்ளுகள்....
Posted:Sat, 19 Jul 2014 14:05:01 +0100
மாமன்னன் இராசேந்திரன் ஆட்சியேற்ற ஆயிரமாண்டு விழாவில்
எங்களோடு இணைந்து கொள்ளுகள்.
Name of the account: Gangaikondacholapuram Development Council Trust.
Bank: INDIAN BANK.
Place: MEENSURUTTY,
Account number : 6228519661
IFC code : IDIB000M136
(OR)
INDIAN OVERSEAS BANK.
Gangaikondacholapuram.
A/C no: 099802000000322
IFSC code :IOBA0000998
விழா சிறக்க வாருங்கள், வழங்குங்கள்.
-
Posted:Sat, 19 Jul 2014 13:50:28 +0100
http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p100x100/10505476_707484115983346_8130131670817756795_n.jpg?oh=c17c681c4b1999d5d7b7c030110b3725&oe=543869CB&__gda__=1412950421_708ac6e0cc920d88d873df09c9b3c674
Nakkeeran Balasubramanyam
தொண்டு என்ற பெயரில் கிருஷ்ணன் அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்!!!சமூக ஊடகங்களில் சிஎன்என் ஹீரோ (CNN Heroes) போட்டிக்கு நமது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார், அவருக்கு ஆதரவளியுங்கள் என்று கடந்த 2010ம் ஆண்டு ஒரு விளம்பரம் வெளிவந்தது.அந்த நபரின் பெயர் நாராயணன் கிருஷ்ணன்.ஐந்து நட்சத்திர விடுதிகளில் சமையலராகப் பணியாற்றியவர். ஆதரவற்றோர் பலர் உண்ண உணவின்றி தவிப்பதையும், ஒரு பெரியவர் தன் கழிவையே உண்ண முயற்சித்ததையும் கண்டு இந்தப் பணியைத் தொடங்கினார்.தேடித் தேடி உணவற்றோருக்கு உணவிடுவதைத் தொண்டாகச் செய்கிறோம் என்று காணொளியில் பேசினார். ஆதரவற்றோர் காலில் விழுந்து கும்பிடுவதையும் அவர்களை அணைத்து குளிப்பாட்டுவது முதல் சேவை செய்வதையும் காணொளியில் காட்டியதும் சிந்திய கண்ணீரோடு ஓட்டுக்குத்தி அவரை சிஎன்என் ஹீரோவாக்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள்.இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது. அந்த நாராயணன் கிருஷ்ணன் இப்போது கிருஷ்ணன் அய்யர்.அன்று சிஎன்என் ஹீரோ விருது வாங்கி உலகப் புகழ் பெற்ற அக்சயா நிறுவனமும், கிருஷ்ண அய்யரும் இன்று வில்லன் படத்தின் கிட்னி திருடும் வில்லன் போல குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்கின்றனர்.சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண். உடுத்த உடை கொடுத்து, சாப்பாடு கொடுத்து கிராம நல அலுவலரின் உதவியுடன் அருகில் வேலை செய்த கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.அக்சயா ஆசிரமத்தில் சேவையோ தொண்டோ நடைபெறவில்லை. அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறார்கள். சுயமாகச் சிந்திக்க விடாமல் தினமும் மூன்று முறை போதை ஊசி போடுகிறார்கள்.பாதி சாமத்தில் பெண்கள் அலறும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் அடுத்த அறையில் ஆபாசப் படம் காணொளி எடுப்பதையோ நிர்வாணமா ஆடவைத்துப் படம் எடுப்பதையோ பார்க்கலாம். ஆடைகளைக் கலைய மறுக்கும் பெண்களை அடிப்பார்கள். வாரம் ஒருமுறை யாராவது வெளிநாட்டுக்காரர்களைக் கூட்டிவந்து எங்களை வரிசையா நிக்க வச்சுப் பார்ப்பார்கள்.அடுத்த 2 நாளில் அவங்க காட்டுனவங்க பிணமாகிடுவாங்க. சாகிறவங்க எல்லோரும் நைட்லதான் சாவாங்க. அதுவும் மயக்க மருந்துகூட கொடுக்காமல் உறுப்புகளை அறுத்தெடுக்கும் கொலை. ராத்திரியோட ராத்திரியா எரிச்சுடுவாங்க அல்லது புதைச்சிடுவாங்க. யூன் 4ம் திகதி வந்த வெள்ளைக்காரன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனதிலிருந்து எனக்குப் பயம் வந்திடுச்சு.கூட இருந்த பொண்ணுங்க ஆயிஷா, உனக்கு அய்ந்தாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லி அழுதாங்க. குளிக்கிறதாச் சொல்லிட்டு யூனிபார்மைக் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்து இவர்களிடம் அடைக்கலம் புகுந்தேன் என்று கூறியுள்ளார்.ஆயிஷா சொன்ன தகவல்கள் குறித்து, கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, அக்சயா ஆசிரமத்தில் நிறைய தப்புகள் நடப்பது உண்மை. மதுரை பெரியாஸ்பத்திரியில்கூட இவ்வளவு பேர் சாவதில்லை. மாதத்துக்கு 20, 25 பிணங்களை நாகமலை சுடுகாட்டுல எரிக்கவோ புதைக்கவோ செய்றாங்க என்று கூறியுள்ளார்.மேலும், ஆயிஷாவுக்கு ஆடை கொடுத்து உதவிய பெண் கூறும்போது, அந்த ஆசிரமத்தில பொண்ணுங்க அலறுகிற சத்தம் நல்லா கேட்கும். நாம யாரும் அதுக்குள்ள போக முடியாது.இப்பக்கூட பொலிஸ் அதிகாரிகளைக்கூட உள்ள விடமாட்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே என்று கூறியுள்ளனர்.பழைய வி.ஏ.ஓ.வும் உதவியாளரும்கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50_க்கும் அதிகமான சாவுகள் நடந்திருக்கின்றன என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியம் கூறியுள்ளார்.உடற்கூறு பரிசோதனை இன்றி, ஊர் அலுவலருக்குத் தகவலும் இன்றி எரிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும், உடலுறுப்புகள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரித்து அறிக்கை தரவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஊடகங்கள் உருவாக்கும் ஹீரோக்களின் மீதான பிம்பமும் நிஜத்திலும் உடையும் காலமிது! கிருஷ்ணன் அய்யர் மீது உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து கோரமுகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.நியூ இந்தியா நியூஸ் -
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் – உக்ரைனில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக...
Posted:Sat, 19 Jul 2014 13:25:38 +0100
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் – உக்ரைனில்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம்
தமிழீழத்தின் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில்,
எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத கொடூரமான
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை
கொன்றபோதும்
.
கொத்து குண்டுகளை போட்டு கொத்துக் கொத்தாய்
தமிழர்களை கொன்றபோதும்
.
கண்ணால் பார்க்க மறுத்து,
.
காதால் கேட்க மறுத்து,
.
வாய்மூடி மவுனம் காத்த சர்வதேசம்
.
தற்பொழுது, ...
.
298 பேருக்காக குமுறுகிறது ...
.
---- அமுதா அமுதா
-
இந்த நான்குவழி சாலை திட்டத்தை நாங்க தான் கொண்டு வந்தோம்,இல்ல இல்ல நாங்க தான் கொண...
Posted:Sat, 19 Jul 2014 13:09:52 +0100
இந்த நான்குவழி சாலை திட்டத்தை நாங்க தான் கொண்டு வந்தோம்,இல்ல இல்ல நாங்க தான் கொண்டுவந்தோம் என்று காங்கிரசும்,பாஜவும் நாடாளுமன்றத்துல சண்டை போட்டுக்குறாய்ங்க ...
இங்க எவனோ ஒரு தனியார் முதலாளி "அவிங்க ரெண்டு பேருமே ரோடு போடல ரோடு போட்டது நானு...எனக்கு வரி கட்டு"ன்னு டோல்கேட்ல காசு வாங்கிட்டு இருக்கான்.. சூப்பர்ல...
- பூபதி முருகேஷ் -
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த...
Posted:Sat, 19 Jul 2014 12:00:01 +0100
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும், ஐம்பது வீடுகளும் கொண்ட "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற சிறிய கிராமத்தின் பெயர் பலகை நம் கண்ணில் தென்படும், நான் ஒவ்வொரு முறை அந்த ஊரை கடந்து செல்லும் போதெல்லாம் அந்த நகரின் அன்றைய கட்டமைப்பை கண்டு வியந்திருக்கிறேன், சோழர்கள் ஆட்சியில் அதிக வருடங்கள் தலைநகராக இருந்த ஊர் அது. அந்த ஊரை தலைநகராய் கொண்டு சுமார் 254 வருடங்கள் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், பல தேசங்களை தனக்கு கீழாக கொண்ட தலைநகர் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை அரண்மனைகள்? எத்தனை தெருக்கள்? எத்தனை அங்காடிகள்? எத்தனை படை வீரர்கள்? எத்தனை யானைகள்? எத்தனை குதிரைகள்? கண்களை மூடிக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் அந்த சோழத் தலைநகரின் நிலையை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், பிரம்மிப்பு!.
அகழ்வாய்வு செய்யும் போது அங்கு கிடைத்த கல்வெட்டைக் குறித்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நகரில் ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், சோழ கேரளாந்தகன் திருவாயில், ராஜ ராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, கூடைஆழ்வன்யன் போன பெருவழி, வேம்புக்குடி வாசல், குலோத்துங்க சோழன் திருமதில், குலோத்துங்க சோழன் பெருவழி போன்ற எண்ணற்ற பெயர்களை தாங்கிய வீதிகளும், வாயில்களும், அரண்மனைகளும் நிறைந்த அற்புதமான தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது இந்த கிராமம்!, ஒரு சிறிய விஷயத்தை மனதில் நிலை நிறுத்துக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள், நடனமும், நாட்டியமும், இசையும், கணிதமும், மருத்துவமும், விவசாயமும், வணிகமும் உச்சத்தை தொட்டிருந்த நேரம் அது, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அதே சோழர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் இது, ஒரு கோயிலையே இத்தனை பிரம்மாண்டமாய் அமைத்தவர்கள், தாங்கள் புதியதாக குடியேரப்போகும் நகரை எப்படி வடிவமைத்திருப்பார்கள், நகரின் நடுவே கோயில் இருக்க வேண்டும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த பிரம்மாண்ட விமானம் தெரிய வேண்டும், யாருக்கு வீடு எங்கே ஒதுக்க வேண்டும்? தெருக்கள் எப்படி அமைய வேண்டும், போர் வீர்கள் எங்கே இருக்க வேண்டும்? அரண்மனை எந்த திசையில் இருக்க வேண்டும்? திடீரென படை எடுப்பு வந்தால் அதை சமாளிக்க படைகளை அந்த நகரில் எப்படி நிலைநிறுத்தி இருக்க வேண்டும்,யோசிக்க, யோசிக்க ஆவல் அதிகமாகின்றது.
நேஷனல் ஜியோகிராபிக் சானலில் "Mega Cities" நிகழ்ச்சியை காணும் போது ஏற்படும் அதே பிரம்மிப்பு!. அப்படி அமைக்கப்பட்ட அவர்களின் நகரில் திசைக்கு ஒன்றாக நகரின் எல்லையில் காவல் தெய்வங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அந்த தெய்வங்கள் அனைத்தும் சோழர்கள் கங்கை வரை போருக்கு சென்ற போது வழியில் கடந்து சென்ற ஊர்களில் இருந்து எல்லாம் கொண்டுவரப்பட்ட தெய்வங்கள் அனைத்தையும் ஒவ்வொரு திசையிலும் பிரத்திட்டை செய்திருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் சென்று இந்த தெய்வங்களை காணுங்கள், இவை அனைத்தும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெற்றிச் சின்னங்களாக சோழர்களால் அன்றைக்கு கொண்டுவரப்பட்டவை.
கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கே "சளுப்பை" என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊரில் (அன்று சாளுக்கிய குலநாசினி மண்டலம்) வட எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கே வானதாராயண் குப்பத்தில்; வீர ரெட்டித் தெருவில், தென் திசை எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே செங்கல் மேடு என்ற இடத்தில் கிழக்கு திசை எல்லை தெய்வமாக கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.
பாலகுமாரன் அய்யாவோடு, திரு.கோமகன் தயவில் நான் அந்த சோழத் தலை நகரை வீதி வீதியாக சுற்றி வந்து வியந்திருக்கிறேன், இந்த வெற்றிச் சின்னங்களை தொட்டுத் தடவி பரவசமடைந்திருக்கிறேன், ஆங்காங்கே காணப்படும் இடிந்த சுவர்களும், அரண்மனை மண் மேடுகளும், இந்த வெற்றிச் சிலைகளையும் காணும் போது, அந்த அற்புதமான நாகரிகத்தின் அழிவைக் கண்டு கலங்காமல் இருக்க முடியவில்லை, இன்றைக்கு புற்கள் நிறைந்திருக்கும் அந்த கிராமம், அன்று புலிகள் நிறைந்த பெரிய நகரம்! அந்த நகருக்கு சொந்தக்காரன் ராஜேந்திரன்! அவன் தான் அந்த புலிகளுக்குத் தலைவன்!.
- சசி தரன்
-
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் அரிய...
Posted:Sat, 19 Jul 2014 11:55:01 +0100
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி இந்த வருடத்தோடு ஆயிரம் ஆண்டுகள்(1014-2014) ஆவதை ஒட்டி அவரின் பிறந்த நாளான வரும் ஜீலை 24 மற்றும் 25 ஆம் தேதி(ஆடித் திருவாதிரை) அன்று விழா நடத்த அரியலூர் மாவட்டதின் 7 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். பேஸ் புக்கில் பேசிக்கொண்டிருந்தது போதும், அலை அலையாக சென்று அவரின் பிறந்த நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடுவோம் வாருங்கள், கடல் கடந்து நம் புகழை பரப்பிய நம் மன்னனை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது?
இராசேந்திரசோழன் அரியணையேறிய 1000 -மாவது ஆண்டு விழா தகவல் தொடர்பிற்கு:
திரு.வ.மகாதேவன்,
பாரதி ஆங்கிலபள்ளி,
கங்கைகொண்டசோழபுரம்.
04331-247206 (9 am - 6pm)
9443849692
யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள பவுத்தமார்க்கத்தை கடைப்பிடித்த தமிழர்களால் ந...
Posted:Fri, 18 Jul 2014 17:45:01 +0100
யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள பவுத்தமார்க்கத்தை கடைப்பிடித்த தமிழர்களால் நிறுவப்பட்ட புராதன விகாரைத் தொகுதி...


ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல... 1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த க...
Posted:Fri, 18 Jul 2014 12:00:01 +0100
ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல...
1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.
2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.
3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.
4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.
5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.
6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.
7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.
8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.
9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது
10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.
11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.
12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாம கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.
-ஆதிரா.
@கனா காண்கிறேன்
1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.
2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.
3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.
4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.
5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.
6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.
7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.
8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.
9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது
10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.
11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.
12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாம கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.
-ஆதிரா.
@கனா காண்கிறேன்
0 comments:
Post a Comment