Sunday, 21 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அப்பாவின் வலிகள்...! அப்பாவின் வலி அப்பா ஆகும்போதே புரியும்... ஒரு அப்பா குடும...

Posted: 21 Jun 2015 08:45 AM PDT

அப்பாவின் வலிகள்...!

அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...

ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்...

ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்...

ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்...

ஒரு அப்பா பண்டிக்கைகல் முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...

ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்...

ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து பசியோடு வீடு வருகிறார்...

பாவம் அப்பாக்கள்.

அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...!!!!

#தந்தையர்_தினம்

Relaxplzz


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 08:20 AM PDT

#தந்தையர்_தினம்


#அப்பா என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தை...

Posted: 21 Jun 2015 07:45 AM PDT

#அப்பா

என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை

நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து

உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை

நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை

மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா!

பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
ஒன்று கடவுள் இல்லையென்பது
இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...

#தந்தையர்_தினம்

Relaxplzz


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 07:20 AM PDT

#தந்தையர்_தினம்


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 06:20 AM PDT

#தந்தையர்_தினம்


பிள்ளைகளின் வெற்றியில், சந்தோஷத்தை வெளிக்காட்டாது, உள்ளேயே மகிழ்வுறும் தந்தையின்...

Posted: 21 Jun 2015 05:45 AM PDT

பிள்ளைகளின் வெற்றியில், சந்தோஷத்தை வெளிக்காட்டாது, உள்ளேயே மகிழ்வுறும் தந்தையின் மென்சிரிப்பு அழகு... ♥

#தந்தையர்_தினம்

- Janu Shath


:) Relaxplzz

Posted: 21 Jun 2015 05:20 AM PDT

#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 04:20 AM PDT

#தந்தையர்_தினம்


திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு...

Posted: 21 Jun 2015 03:45 AM PDT

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :

வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே!

அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..

1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என் அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.

2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.

3.சிறு சிறு வாக்குவாதங்கள்,கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் "," எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை.நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.

சுருக்கமாக கூற வேண்டுமானால்.... *அப்பா புராணம் பாடாதே. *அப்பாவோடு ஒப்பிடாதே . *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது . *அப்பாக்கு கொடுத்த க்ரீடத்தை அவருக்கும் கொடு.

22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனிமேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.

நீடுடி வாழ வாழ்த்துகள்....!

-அன்புடன் அப்பா.

#தந்தையர்_தினம்

- Sathya Priya.


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 03:20 AM PDT

#தந்தையர்_தினம்


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 02:20 AM PDT

#தந்தையர்_தினம்


பிறந்ததும் தாயை இழந்த குழந்தை!! தன் குழந்தையை தோளில் சுமக்க வேண்டிய தந்தை ஒரு...

Posted: 21 Jun 2015 01:45 AM PDT

பிறந்ததும் தாயை இழந்த குழந்தை!!

தன் குழந்தையை தோளில் சுமக்க வேண்டிய தந்தை ஒரு தாயாக கையில் சுமந்து உண்மையான உழைப்பில் வாழ்கிறார்....

கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் பணக்கார தந்தைகள் ஒரு பக்கம் இருக்கையில்,

பிள்ளைகள் கேட்கிறார்கள் என்தற்காக கடன் வாங்கி பூர்த்தி செய்யும் நடுத்தர
தந்தைகள்.,

மனைவி பிரிந்தால் மறுமணம் செய்யும்
தந்தைகள்.,

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு "தந்தை"யா?

தாயை பிரிந்த குழந்தையை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.,

அந்த குழந்தைக்கு தாயாகவும் இருந்து வளர்க்கும் தந்தை நினைத்தால் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது ..

மனைவியை இழந்ததும், உடம்பு சுகத்திற்காக பல பெண்களைத் தேடிச் செல்லும் கணவர்கள்
மத்தியில் உழைத்து வாழ்ந்து குழந்தையை வளர்பது பெரியது

வாழ்க தந்தையே (y)

#தந்தையர்_தினம்

Relaxplzz


#தந்தையர்_தினம்

Posted: 21 Jun 2015 01:20 AM PDT

#தந்தையர்_தினம்


ஒன்றுக்கும் உதவாதவன், உருப்பிடாதவன், தண்டச்சோறு, தடிமாடு என்று நம் முன்னால் அதிக...

Posted: 21 Jun 2015 12:45 AM PDT

ஒன்றுக்கும் உதவாதவன், உருப்பிடாதவன், தண்டச்சோறு, தடிமாடு என்று நம் முன்னால் அதிகம் திட்டினாலும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு, அயர்ந்து தூங்கும் பொழுது நமக்கே தெரியாமல் நம் கால்களை நீவிவிட்டு

நமக்காக சில துளி கண்ணீர் விடுவார் நமக்கு பின்னால். 'தந்தை'

#தந்தையர்_தினம்


Relaxplzz

Posted: 21 Jun 2015 12:30 AM PDT

:) Relaxplzz

Posted: 21 Jun 2015 12:20 AM PDT

ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு நடந்து போச்சாம். அவரோட கை சுருக்கங்களைப் ப...

Posted: 21 Jun 2015 12:10 AM PDT

ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு நடந்து போச்சாம். அவரோட கை சுருக்கங்களைப் பார்த்துட்டு..

"தாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?"
அப்டின்னுச்சு.

"ஆமா"

தன்னோட கைய தொட்டு பாத்துட்டு
"என்னுதையுமா?" அப்டின்னுச்சு.

"ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு"

அது பொறுமையா சொன்னது..
"இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய கத்துக்கிட்டாரு இல்ல?"

# ஓப்பீடு

via Mohammed Siraj .

Relaxplzz

வயதான தந்தை ஒரு குருவியை பார்த்து என்னவென்று தெரியாமல் மகனிடம் கேட்டார், "அது என...

Posted: 20 Jun 2015 11:45 PM PDT

வயதான
தந்தை ஒரு குருவியை பார்த்து என்னவென்று தெரியாமல்
மகனிடம் கேட்டார்,
"அது என்ன பா?"

மகன் சொன்னான்,
"அது குருவி அப்பா"
சிறிது நேரத்தில் மறந்தவராய்,
மீண்டும் கேட்டார்,
மீண்டும் அது குருவியென
மகன்மறு மொழி கூறினான்...

கொஞ்ச நேரத்தில்
மூன்றாவது முறை கேட்ட
தந்தையை கண்டு எரிச்சலுற்ற அவன்,
"இதோட
மூன்றாவது முறை கேட்குறீங்க!!! நான் தான்
சொன்னேனே அது குருவி என்று"
என்று சீறினான்...

தந்தை மெல்லியதாக புன்னகை செய்தார்,
பிறகு சொன்னார்...
"நான்
மூன்று முறை கேட்டதற்கு என்னை வெறுக்கிறாய்,
நீ குழந்தையாக இருக்கும் போது,
இதையே 100 முறைக்கும் மேல்
கேட்டிருப்பாய், ஆனால் நான்
ஒரு முறைக் கூட எரிச்சல் கொள்ளவில்லை"
மகன் மௌனமானான்!!!

#தந்தையர்_தினம்

Relaxplzz


Relaxplzz

Posted: 20 Jun 2015 11:30 PM PDT

#தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 11:20 PM PDT

#தந்தையர்_தினம்


உண்மையிலேயே இளமையா இருக்க வேண்டும் என்றால் .. 1. தன் நம்பிக்கை...தன்னை நேசித்தல...

Posted: 20 Jun 2015 11:10 PM PDT

உண்மையிலேயே இளமையா இருக்க வேண்டும் என்றால் ..

1. தன் நம்பிக்கை...தன்னை நேசித்தல்...சுயம் இழக்காமல் இருத்தல்

2. கடவுள், இறைவன் ,அல்லது ஒரு பிரபஞ்ச சக்தி ஏதோ ஒண்ணு அது மேல ஒரு அசைக்க முடியா நம்பிக்கை

3. நம்மை பார்த்து நாமே சிரித்து கொள்ளுதல் ..ரசித்து கொள்ளுதல்

4. நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டே புழுங்காமல் இருக்கும் தன்மை...

5. கேட்டவுடன்/நினைத்தவுடன் கிடைக்காட்டி நடக்காட்டி கொஞ்ச நேரம் அழுதுட்டு மறந்து விடும் தன்மை..

6. நிகழ் காலத்தில் வாழ்தல்...எதிர் பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுதல், நடப்பவைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்..

7. அழகான உலகம் அன்றாடம் இயற்கை நடத்தும் அற்புதங்களை ரசிக்கும் திறன்..

8. யாரையும் சந்தேகிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் யதார்த்தம்..

9. தனிமையில் பைத்தியமாக இருக்க தெரிதல்..

10. இன்னொருவரிடம் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே பொருமாமல் இருத்தல்..

11. கொஞ்சம் இசை கொஞ்சம் தியானம்..

இதெல்லாம் நான் கடை பிடிக்கிறேன்...என்னை பார்த்து காலேஜ் படிக்குற பொண்ணாட்டம் இருக்கீங்கன்னு சொன்னா எப்டி..?

நான் இன்னும் ஐந்து வயது குழந்தைத் தன்மையைக் கடக்கவேயில்லையே !!

- Chelli Sreenivasan

Relaxplzz

ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும் இன்னும் ஆவணப்படுத்தப்படடாமலேயேயுள்ளது தாயன்பிற்...

Posted: 20 Jun 2015 10:45 PM PDT

ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும்
இன்னும்
ஆவணப்படுத்தப்படடாமலேயேயுள்ளது
தாயன்பிற்குநிகரான
தந்தையர்தம் பாசம். ♥

#தந்தையர்_தினம்

- ஃபீனிக்ஸ் பாலா


Relaxplzz

Posted: 20 Jun 2015 10:30 PM PDT

#தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 10:20 PM PDT

#தந்தையர்_தினம்


என்ன கொடுமை கடவுளே ! ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள...

Posted: 20 Jun 2015 10:10 PM PDT

என்ன கொடுமை கடவுளே !

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று கேட்டார்கள்.

நான் ''தேவலோகத்திலிருந்து வருகிறேன்'' என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

''உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?'' என்று கேட்க ''கடவுள்தான் அனுப்பி வைத்தார்.'' என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும் அவன் சிரித்தான்.

''என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!''

''எப்படி எல்லாம் நடக்கும் என்று?'' என் ஊரார்கள் கேட்க

''உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?''

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

''சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

''நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.'' என்றான்

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

''நீ ஏன் சிரிக்கிறாய்?'' ன்னு கேட்டான்

''நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!''

''எது பொய் என்கிறாய்?''

''கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!''

''அது எப்படி உனக்குத் தெரியும்?''

''நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!''

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ''நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தேன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.''

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ''நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!'' என்றான்.
அவர் 'பளார்' என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ''அவனை ஏன் அறைந்தீர்கள்?''

''அவன் ஒரு பைத்தியக்காரன்!''

''அப்படியா?''

''ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!''

நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Relaxplzz

#தந்தையர்_தினம் 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவே...

Posted: 20 Jun 2015 09:45 PM PDT

#தந்தையர்_தினம்

1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.

6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி
தியாகம் செய்த தாயுமானவன்
என் தந்தை!

-ஆதிரா

Relaxplzz


Relaxplzz

Posted: 20 Jun 2015 09:30 PM PDT

#தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 09:20 PM PDT

#தந்தையர்_தினம்


தன்னிடம் சுண்டல் வாங்கிவிட்டு மீதி 25 பைசாவிற்கு சண்டையிட்ட இளைஞன், தன் காதலியோட...

Posted: 20 Jun 2015 09:10 PM PDT

தன்னிடம் சுண்டல் வாங்கிவிட்டு மீதி 25 பைசாவிற்கு
சண்டையிட்ட இளைஞன், தன் காதலியோடு ஜோடியாக
வருவதை கண்ட சுண்டல் விற்கும் சிறுவன் அந்த
இளைஞனை பார்த்து சொன்னான்...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
" அண்ணே.. நேத்து, உங்க கூட வந்த அக்கா
இன்னும் அழகா இருந்தாங்க...!"

க்கும்...!! ஆருகிட்ட....!!!
:P :P

Relaxplzz

பெண்களுக்கு காதலனாய் இருப்பதை விட தந்தையாய் இருக்கும் பாக்கியம் கிடைத்தால் தான்...

Posted: 20 Jun 2015 08:45 PM PDT

பெண்களுக்கு காதலனாய்
இருப்பதை விட தந்தையாய் இருக்கும்
பாக்கியம் கிடைத்தால் தான் பெண்களின்
முழுமையான அன்பு புரியும்..! ♥

- திவ்யா சாவித்ரி.


0 comments:

Post a Comment