Saturday, 20 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை...

Posted: 20 Jun 2015 08:10 AM PDT

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. "நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும்,
மகள் கேட்டாள், "அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?".

அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,
கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை".

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

உறவுகளில் தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட அன்பாக எடுத்துச் சொன்னால் அன்பு பலப்படும்.. ♥

Relaxplzz

8 முறை MP ஆக இருந்த திரு கரியா முன்டாவின் மகள் ஊரில் மாம்பழம் விற்று பிழைக்கிறார...

Posted: 20 Jun 2015 06:30 AM PDT

8 முறை MP ஆக இருந்த திரு கரியா முன்டாவின் மகள் ஊரில் மாம்பழம் விற்று பிழைக்கிறார்.

நம்ம ஊரு அரசியல்வாதிங்க ஊரையே விற்று பிழைக்கிறாங்க அவ்வளவு தான் வித்தியாசம் (y) (Y)


:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 06:15 AM PDT

:) #தந்தையர்_தினம்


1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2. உடலின் மிக வலிமையான ச...

Posted: 20 Jun 2015 06:00 AM PDT

1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல்
(111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...

Relaxplzz

:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 05:45 AM PDT

:) #தந்தையர்_தினம்


காற்றில் மிதக்கும் கம்பீர குரல் டி.எம்.எஸ். என்கிற அந்த வெண்கலக்குரலுக்குச் சொந்...

Posted: 20 Jun 2015 05:30 AM PDT

காற்றில் மிதக்கும் கம்பீர குரல் டி.எம்.எஸ். என்கிற அந்த வெண்கலக்குரலுக்குச் சொந்தக்காரர்

அருணா பிலிம்ஸ் தயாரித்த 'தூக்குத்தூக்கி' படத்துக்கு சிவாஜிக்கு பாட டி.எம்.சௌந்தரராஜன் அழைக்கப்பட்டார். ஆனால் புதிய பாடகர் தமக்குப் பாடுவது சிவாஜிக்கு பிடிக்கவில்லை. புதிய பாடகர் வேண்டாம். 'பராசக்தி' படத்தில் தமக்குப் பாடிய சிதம்பரம் ஜெயராமனையே இந்தப் படத்திலும் பாட வையுங்கள் என்றார் சிவாஜிகணேசன். இருந்தாலும் சௌந்தரராஜனை பாடச் சொல்லிக்கேட்ட சிவாஜிக்கு அந்த கணீரென்ற குரல் பிடித்துப் போய் விட்டது அதிலிருந்து தமிழ்த் திரையுலகில் சிவாஜி - டி. எம். சௌந்தரராஜன் இணை கொடிகட்டிப்பறந்தது. 'மலைக்கள்ளன்' படத்தில்தான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடினார் டி.எம்.எஸ். அதன்பிறகு எம்.ஜி.ஆருக்காகத் தொடர்ந்து பல படங்களில் பாடத் தொடங்கினார்.

அப்போது இரு பெரும் துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் பல ஆண்டுகள் தொடர்ந்து பாடினார் டி.எம்.எஸ். ஒரு காலக்கட்டத்தில் குரலை மாற்றி எம்.ஜி.ஆருக்கு ஒருவிதமாகவும், சிவாஜிக்கு ஒருவிதமாகவும் பாடினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சொந்தமாகப் பாடுவது போலவே அமைந்தது. எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் அசைக்க முடியாத குரல்வளச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
எம்.ஜி.ஆர் முதல்வரானார். சிவாஜி தந்தை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதன்பின்னர் டி.எம். எஸ்ஸுக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கின.

ஒரு கட்டத்தில் நீண்ட இடைவெளி விழுந்தது. அப்போது திரையுலகுக்குப் புதியவரான டி.ராஜேந்தர், தன் இயக்கத்தில் வெளிவந்த 'ஒரு தலை ராகம்' படத்தில் பாட டி.எம்.எஸ்ஸை அழைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாட வந்தார் டி.எம்.எஸ். முதல்நாள் பாடல் பதிவு நடந்தது. ''நானொரு ராசியில்லா ராஜா...'' என்ற பாடல் அவருக்கு தரப்பட்டது. ''நீண்ட இடைவெளிவிட்டு வந்திருக்கிறேன். இப்படி பாட்டு வந்தால் கிண்டல் செய்ய மாட்டார்களா?'' என்று கேட்டார் டி.எம்.எஸ். அதெல்லாம் ஒன்றுமில்லை...இந்த பாட்டு பெரும் ஹிட் ஆகும் என்று நம்பிக்கையூட்டினார் டி.ஆர்.

சரி என்று கூறிவிட்டு அந்தப் பாடலைப் பாடி முடித்தார். மறுநாளும் ஒரு பாடல் பதிவு இருந்தது. அன்றைக்கு பாட வேண்டிய பாடல் ''என் கதை முடியும் நேரமிது''... என்ற பாடல் ''என்னப்பா ஒரு முடிவோடுதான் இருக்கே போல...''என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலையும் பாடி முடித்தார் டி.எம்.எஸ். இந்த இரு பாடல்களும் அப்போது பெரும் வெற்றியை அடைந்தன.

கண்ணதாசனுக்கும் டி.எம்.எஸ் குரல் கொடுத்திருக்கிறார். ''பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?'' மற்றும் ''கோப்பையிலே என் குடியிருப்பு'' என்ற தனது பாடல்களை டி.எம்.எஸ் குரலில் கண்ணதாசன் பாடுவதாக அமைந்தது சுவையான முரண்.

திரையிசையில் மட்டுமல்ல கர்நாடக இசையிலும் ஜொலித்தார் டி.எம்.எஸ். திருவிளையாடல் படத்தில் ''பாட்டும் நானே... பாவமும் நானே...''என்ற பாடல் இன்றைக்கும் மிகவும் ரசிக்கப்படுகிறது. பாட்டுக்கச்சேரிகளில் பாடகர்கள் பாடத்தயங்கும் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலுக்கு எப்போதும் முதல் இடம் உண்டு. காதல், சோகம், வீரம் என்று தன் குரலால் அதனைப் பிரதிபலிக்க வைத்தவர் டி.எம்.எஸ். பக்திப்பாடல்களிலும் அவர் முத்திரை பதித்தார்.

நெஞ்சுருகி அவர் பாடிய முருகர் பாடல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல நூற்றாண்டுகள் டி.எம். சௌந்தர ராஜனின் பாடல்கள் தமிழர்களின் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
டி.எம்.எஸ். அவர்களின் இளமைக்கால குரல் காதலுக்கும், வீரத்துக்கும், தத்துவத்துக்கும், இனிமைக்கும் பொருந்திப்போனது. முதுமைக்காலக் குரல், பக்தி உணர்வுக்குப் பொருந்திப்போனது.
''மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!''
என்கிற இந்த வரிகளுக்குச் சொந்தக்காரரர் கண்ணதாசன்.

இந்த வரிகளால் மட்டுமல்ல இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான வரிகளை ஒலித்து தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் டி.எம்.எஸ். கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் நிறைந்து கருத்தைக் கொள்ளை கொண்ட டி.எம்.எஸ். என்கிற இசைமேதை இன்றைக்கு இல்லை. அதனால் என்ன? அவர் இல்லாத காற்று இல்லையே!

Relaxplzz


:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 05:15 AM PDT

:) #தந்தையர்_தினம்


தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையு...

Posted: 20 Jun 2015 05:00 AM PDT

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!

1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine.

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.

5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.

6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.

7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee

8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.

9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.

11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.

12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine.

13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.

14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.

15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.

16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.

17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine

சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும்.
மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

Relaxplzz

:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 04:45 AM PDT

:) #தந்தையர்_தினம்


நண்பர்களே அதிகமாக சேர் செய்யவும் உண்மையானது ====================================...

Posted: 20 Jun 2015 04:30 AM PDT

நண்பர்களே அதிகமாக சேர் செய்யவும் உண்மையானது
=================================================

உஷாரய்யா உஷாரு...

அதிகாலையிலே எழுந்து, சமையல் வேலைகளை எல்லாம் பார்த்து, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, நாளிதழை பிரித்து அவள் படிக்கத் தொடங்கியபோது செல்போன் சினுங்கியது.

பார்த்தால் அறிமுகமற்ற எண். 9111 என்று தொடங்கி, 100–ல் முடிவடைந்திருந்தது. மொத்தம் 12 எண்கள். 'யாராக இருக்கும்?' என்ற கேள்வியோடு அவள் போனை 'ஆன்' செய்தாள்.

பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசியவன் அறிமுகப்படுத்திக்கொண்டு, 'நீங்கள் எத்தனை வருடமாக இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான்.

இந்த பெண், 'ஐந்து வருடங்களாக..' என்றாள்.
'ஐந்து வருடங்களாக நிரந்தரமாக ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பத்து பேரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குகிறோம். அதில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு 2 தங்க நாணயங்கள், 15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன் போன்றவைகளை தபாலில் அனுப்பிவைப்போம். விலாசத்தை கூறுங்கள்' என்றாள்.

இந்த பெண்ணும் வீட்டு விலாசத்தை சொன்னாள். 'நாங்கள் உங்களுக்கு அனுப்பும் பரிசின் மதிப்பு 30 ஆயிரம். நீங்கள் பரிசு பொட்டலத்தை 2,500 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று எதிர்முனையில் பேசியவன் சொன்னதும், '2,500 ரூபாய் கட்டணுமா? அப்படின்னா என் கணவர்கிட்டே கேட்டுதான் முடிவு பண்ணணும்' என்றாள்.

'இந்த சின்ன தொகைக்குகூட கணவர்கிட்டே அனுமதி கேட்கப்போறீங்களா? பரவாயில்லை.. நானே உங்கள் கணவரிடம் பேசி, விவரத்தை சொல்கிறேன். அவரது செல்போன் எண்ணை கூறுங்கள்..' என்றான். அவளும் கொடுத்துவிட, அடுத்த சில நிமிடங்களில் அவரது எண்ணுக்கு அழைத்தான்.

(மனைவிக்கு 100–ல் முடிந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்ததல்லவா! கணவருக்கு வந்த அழைப்பில் எண் 150–ல் முடிந்திருந்தது)

கணவர் போனில் பேச, அவரிடமும் மேலே சொன்ன அதே 'பரிசு' தகவலை சொல்லிவிட்டு, 'தபால் அலுவலகத்தில் பரிசு பொட்டலத்தை பெறும்போது 2,500 ரூபாய் கட்டுங்கள்' என்றதும் அவர் உஷாராகி, 'எனக்கு அந்த பரிசு வேண்டாம்ங்க.. வேற யாருக்காவது கொடுத்திடுங்க..' என்றார். உடனே எதிர்முனையில் போன் கட்டாகிவிட்டது.

அரை மணி நேரம் கழித்து, 200–ல் முடியும் எண்ணில் இருந்து அவருக்கு மீண்டும் போன் வந்தது. அவர் 'ஹலோ' என்று சொல்வதற்குள் எதிர்முனையில் இருந்து கெட்டவார்த்தைகளில் அர்ச்சனை விழுந்தது. இவர் அதிர்ந்து போய் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வியர்த்து வழிய, அதற்குள் அவன் ஒரு ரவுண்ட் இருக்கிற எல்லா கெட்டவார்த்தைகளையும் பயன் படுத்தி திட்டிவிட்டு, 'தமிழ்நாட்டில் உள்ள நீங்களெல்லாம் திருந்திட்டீங்களாடா.. ஒரு பயகூட இப்போ ஏமாறமாட்டேங்கிறான்..' என்ற ஆதங்கத்தோடு நிறுத்தியிருக்கிறான்.

மேலே நாம் குறிப்பிட்ட செல்போன் எண்களை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். டெல்லியில் இருந்து சுத்தமான தமிழில் பேசி இப்படி ஏமாற்ற முயற்சிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தங்க நாணய ஆசையில் கையில் இருக்கும் பணத்தை இழந்திடாதீங்க..!

அன்புடன்... பத்மநாபன்...

Relaxplzz


:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 04:15 AM PDT

:) #தந்தையர்_தினம்


இது ஒரு உண்மை சம்பவம் !!!! பிரியா என்ற காலேஜ் பெண் சிறிது நாட்கள் முன் ஒரு லாரி...

Posted: 20 Jun 2015 04:00 AM PDT

இது ஒரு உண்மை சம்பவம் !!!!

பிரியா என்ற காலேஜ் பெண்
சிறிது நாட்கள் முன்
ஒரு லாரி இடித்து இறந்தார்.
அவர் ஒரு call சென்டரில்
வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு raj என்கிற Boyfriend
இருந்தார்.
அவர்கள் இருவரும் காதலர்கள்.
எப்பொழுதும் மொபைல்போன்இல்
பேசிகொண்டே இருப்பார்கள்
அவளை நீங்கள் மொபைல்போன்
இல்லாமல் பார்கவே முடியாது.அவள் தன்
கனெக்ஷனை airtel
இருந்து Vodafone க்கு மாற்றிகொண்டாள்.
இருவர் network same ஆக இருந்தால் cost
save ஆகும் என்று.
ஒரு நாளில் பாதி நாள் rajடன்
பேசுவதிலயே கழித்தாள். rajஅவள்
familykkum மிகவும் தெரிந்தவன்.
அவள் எப்பொழுதும்தன் friends
கிட்டே நான் இறந்தால்கூட என் mobile
என்னுடன் எடுத்து செல்வேன் என்ன
கூறுவாள். ஒரு நாள் அவள் suddenly
accidentல் இறந்து விடுகிறாள்.
அவளை burry பண்ண தூக்கினால் அவள்
body யை யாராலும் நகர்த்த
முடியவில்லை. எல்லோருக்கும்
புரியவில்லை.பின் அவள் நண்பர்கள்
அவளுடைய கடைசி ஆசையை கூறியவுடன்
mobile phone உடன் அடக்கம் செய்தனர்.
நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்
ப்ரியா parents அவள்
இறந்ததை பற்றி raj தெரிவிக்கவில்லை
என்று!!
இரண்டு vaarangal கழித்து raj phone
செய்து `aunty, நான்
இன்று வீட்டுக்கு வரேன்,
எதாவது சாப்பிட பண்ணி வையுங்கள்`
என்றான்.
Priya க்கு சொல்லதீர்கள் surprise ஆக
இருக்கட்டும் என்றான்.
பிரியா அம்மாவும் நீ
வீட்டுக்கு வா உன்னுடன்
பேசவேண்டும் என்று கூறி அவன்
வந்தவுடன் பிரியா இறந்த
விஷயத்தை கூறினார். அவன்
அதை கேட்டு சிறிது விட்டு,aunty என்ன
விளையாடுகிறீர்கள் , நான் அவளுடன்
தினமும் phone
பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.
அவர்கள் கடைசியில் death certificate
காண்பித்தவுடன் அவனுக்கு வியர்க்க
ஆரம்பித்தது.
அவன் உடனே ப்ரியாக்கு phone
செய்து ஸ்பீக்கர் modeல்
எல்லோருக்கும் போட்டு பேசினான்.
ஒரிஜினல் Priya
குரல்,ஒரு தங்கு ,தடை இல்லாமல்
ஒலித்தது. எல்லோருக்கும் ஆச்சர்யம்.
உடனே ஆத்மா உடன் பேசும்
ஒருவரை அழைத்து என்ன
என்று கண்டு பிடிக்க
சொன்னார்கள்.அவர் தன் குருவுடன்
உட்கார்ந்து 5 மணிநேரம்
tryசெய்து கண்டுபிடித்தது எல்லோரையும்
ஆச்சர்யப்பட வைத்தது.
அவர்கள் சொன்னது என்னதெரியுமா...
*
*
*
*
*
*
*
8
8
*
.........
Vodafone has the Best Coverage,
"wherever you go, our network follows"...

:P :P

Relaxplzz

:) #தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 03:45 AM PDT

:) #தந்தையர்_தினம்


குடும்பமே மண்டையை நுழைச்ச்க்கலாம்ல.... :P

Posted: 20 Jun 2015 03:30 AM PDT

குடும்பமே மண்டையை நுழைச்ச்க்கலாம்ல.... :P


#தந்தையர்_தினம்

Posted: 20 Jun 2015 03:15 AM PDT

#தந்தையர்_தினம்


:) Relaxplzz

Posted: 20 Jun 2015 03:00 AM PDT

. பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான். . பால் பாக்கெட்டின் மீது அது ப...

Posted: 20 Jun 2015 02:50 AM PDT

.
பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான்.
.
பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும். பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும் அந்தப் பாலை வாங்கலாம்.
.
அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்!
என்று சொல்லிவிடுங்கள் ...
.
எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக
மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.
.
இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த
தாய் அன்பு.
.
அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு
மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும்
ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு
.
பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன
அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல..
.
அதன் ரத்தமும் சேர்ந்துதான்!
.
இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது
விட்டமினோ, கால்சியமோ அல்ல..
.
தீவிரமான வாதநோய்தான்!
.
---அமுதா அமுதா

Relaxplzz


"விழிப்புணர்வு"

:) Relaxplzz

Posted: 20 Jun 2015 02:41 AM PDT

கருப்பு பணத்தை எப்ப மீட்டு இந்தியா கொண்டு வருவீங்க - பொதுமக்கள் கேள்வி. யோகா செ...

Posted: 20 Jun 2015 02:32 AM PDT

கருப்பு பணத்தை எப்ப மீட்டு இந்தியா கொண்டு வருவீங்க - பொதுமக்கள் கேள்வி.

யோகா செய்ங்கடா உடம்புக்கு நல்லது - மத்திய அரசு பதில்.

- Boopathy Murugesh @ Relaxplzz

திருடி பிழைக்கும் தீயவர்களின் செவிட்டில் அடிக்கும் படம்... ஊனம் உடலில் தான், உள...

Posted: 20 Jun 2015 02:15 AM PDT

திருடி பிழைக்கும் தீயவர்களின் செவிட்டில் அடிக்கும் படம்...

ஊனம் உடலில் தான், உள்ளத்தில் இல்லை.பிச்சை
எடுக்காமல் கூலி வேலைக்கு போகும் பீகார்
தொழிலாளி....

இப்படம் தன்னம்பிக்கையை உணர்த்தும்..


நான் பைக்க வித்துட்டு சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன், ஏன்னா,.... No லைசன்ஸ் No...

Posted: 20 Jun 2015 02:00 AM PDT

நான் பைக்க வித்துட்டு சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன்,

ஏன்னா,....
No லைசன்ஸ்
No இன்சூரன்ஸ்
No புகை பரிசோதனை
No பெட்ரோல்
No ஹெல்மெட்
No சுகர்.....

- மிஸ்டர் சேஷா @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 20 Jun 2015 01:46 AM PDT

:) Relaxplzz

Posted: 20 Jun 2015 01:41 AM PDT

Posted: 20 Jun 2015 01:39 AM PDT


(y) Relaxplzz

Posted: 20 Jun 2015 01:30 AM PDT

அன்று வானொலியில் பாடல் கேட்ட ஆனந்த சுகம்...இப்போதுள்ள பல நூறு சேனல்களில் ஏனோ கிட...

Posted: 20 Jun 2015 01:21 AM PDT

அன்று வானொலியில் பாடல் கேட்ட ஆனந்த சுகம்...இப்போதுள்ள பல நூறு சேனல்களில் ஏனோ கிடைப்பதில்லை.

- Suresh Adithya @ Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர...

Posted: 20 Jun 2015 12:59 AM PDT

அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !!

பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!

தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!

நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!

என் மகள் நீ என்று சொல்லாமல் உன் தந்தை நான் என்று சொல்ல கர்வம் கொள்கிறேன் சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!

வருந்தினேன் மகளே உன்னை என் வயிற்றில் சுமக்காமல் ஒரு ஆணாய் பிறந்ததை எண்ணி அவ்வலியை போக்கி தாய் ஸ்தானம் அடைந்தேன் அப்பா என்றழைத்து என் மார்பில் நீ துங்கும் தருணம்!!!!!

இல்லை என்னும் சொல்லை நீ அறியாமல் வழிநடத்த விரும்பினேன் மகளே , உன் வாழ்கையை ஒரு நல்ல தகப்பனாய்!!!

#அப்பா ♥

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

:) Relaxplzz

Posted: 20 Jun 2015 12:36 AM PDT

:) Relaxplzz

Posted: 20 Jun 2015 12:22 AM PDT

0 comments:

Post a Comment