Saturday, 20 June 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம் தரமாண ரோடு எப்ப போடுவ...

Posted: 20 Jun 2015 08:45 AM PDT

#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம்

தரமாண ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்...


வீழ்வேன் என்று நினைத்தாயோ ----------------------------------------------- தேடி ச...

Posted: 20 Jun 2015 05:36 AM PDT

வீழ்வேன் என்று நினைத்தாயோ
-----------------------------------------------
தேடி சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகவுழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
மகாகவி சுப்பிரமணிய பாரதி


இறை தூதரின் இனிய தோழர்கள்..! உலகில் எத்தனையோ ஆன்மிகத் தலைவர்களும், வழிகாட்டிகளு...

Posted: 20 Jun 2015 12:50 AM PDT

இறை தூதரின் இனிய தோழர்கள்..!

உலகில் எத்தனையோ ஆன்மிகத் தலைவர்களும், வழிகாட்டிகளும் தோன்றியுள்ளனர். அவர்களைப் பின்பற்றியவர்கள் சீடர்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய மக்களை, வரலாறு "சீடர்கள்'' என்று குறிப்பிடவில்லை. மாறாக "தோழர்கள்'' என்றே குறிக்கிறது. திருக்குர்ஆனும்கூட நபிகளாரைக் குறித்து மக்காவாசிகளிடம் பேசும்போது "உங்கள் தோழர்'' என்றே குறிப்பிடுகிறது. உலகில் வேறு எந்த ஆன்மிகத் தலைவர்களுக்கும் கிட்டாத பெரும்பேறு நபிகளாருக்குக் கிடைத்தது.

ஆம், சஹாபாக்கள் என்று அரபியில் குறிப்பிடப்படும் நபித்தோழர்கள்தாம் இறைத்தூதருக்குக் கிடைத்த பெரும் பேறு. இவர்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காகவும் இறை மார்க்கத்திற்காகவும் எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார்கள். நபிகளாருக்கு இறைவனிடமிருந்து திருச்செய்தி (வேத வெளிப்பாடு வஹி) அருளப்பட்டுக் கொண்டிருக்கையில் நபிகளாருடன் இருந்தவர்கள் இந்தத் தோழர்கள்தாம். முதன் முதலாக இறை மார்க்கத்தை ஏற்பதற்காக இறைவன் இந்த மக்களையே தேர்ந்தெடுத்தான்.

ஆகவே அவர்கள் இறை நம்பிக் கைக்கும், பொறுமைக்கும், தியாகத்திற்கும், அர்ப்பணிக்கும் உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். இந்தத் தோழர்கள் நபிகளாரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்கள். நபிகளார் என்ன செய்கிறாரோ அதை அப்படியே கிஞ்சிற்றும் பிசகாமல் பின் பற்றுவதில் பேரார்வம் கொண்டிருந்தவர்கள். நபிகளாரைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்கள். நபிகளார் மீது தோழர்கள் கொண்டிருந்த பாசத்தை விவரிக்கத் தொடங்கினால் பெரும் நூலாக விரியும்.

உயர்ந்த லட்சியங்களின் அடிப்படையிலும் உயிரை விட இறை நம்பிக்கையே மேலானது என்னும் உணர்வுடனும் இவர்கள் வாழ்ந்தனர். நபித்தோழர் களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்றாலும் அவர்களில் பலர் நபிகளாருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்கள். அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத், அப்துல்லாஹ் இப்னு உமர், பிலால், சல்மான் பார்சி, கப்பாப் பின் அறத், ஹம்ஸா, குபைப், முஸ்அப் பின் உமைர், உமைர் பின் வஹ்ப், அம்ரு பின் அல் ஜுமஹி, ஜாபர் பின் அபீதாலிப், ஸஅத் பின் அபீவக்காஸ்... என்று இந்தப் பட்டியல் தொடரும்.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஏராளமான நூல்களும் தகவல்களும் உள்ளன. ஆண்தோழர்கள் மட்டுமல்ல பெண் தோழியரும் (சஹாபியாத்) இருந்தனர். ஆண்களுக்கு இணையாக அந்தப் பெண்களும் அரும்பெரும் தியாகங்களைச் செய்தனர். சுமைய்யா, கதீஜா, ஜைனப், உம்மு சலமா போன்ற தோழிய ரின் வாழ்க்கை வரலாறுகள் வைரங்களாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. தம்முடைய தோழர்களைக் குறித்து நபிகளாரே பலமுறை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். அபூபக்கரைக் குறித்துச் சொல்லும்போது, "மக்காவில் யாருமே என்னை ஏற்றுக்கொள்ளாதபோது என்னை நம்பி ஏற்று என்னுடைய எல்லாப் பணிகளுக்கும் உற்ற தோழராக இருந்தவர்'' என்று பாராட்டியுள்ளார்.

ஆண்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரும் அபூபக்கர்தாம். "உமர் நடந்து செல்லும் பாதையில் ஷைத்தான் வரமாட்டான்" என்று நபிகளார் கூறினார் கள். அந்த அளவுக்குத் துணிச்சலும் நேர்மையும் பயபக்தியும் கொண்டவர் உமர் அவர்கள். இப்படி ஒவ்வொரு தோழரின் சிறப்புகளையும் நபிகளாரே வியந்து பாராட்டியுள்ளார். "நபித்தோழர்களின் சீரிய வரலாறு" எனும் நூலின் ஆசிரியர் தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார்: "நபித்தோழர்கள் ஆற்றிய இஸ்லாமியச் சேவைகளின் அருமை பெருமைகள், அறப்போரில் இவர்கள் காட்டிய வீரம், ஈட்டிய வெற்றி, வணக்க வழிபாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் பேணுவதில் இவர்களுக்கு இருந்த பேரார்வம் ஆகியவற்றை எண்ணிப் பார்க்கும்போது எந்த மனிதனாலும் இவர்களின் தூய வாழ்வைக் கடைப் பிடிக்காமல் இருக்க முடியாது.''

நபித்தோழர்கள் எந்த அளவுக்கு உன்னதமானவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள அவர்களைப் பற்றி குர்ஆன் கூறும் இந்த ஒரு வசனம் போதுமானது. "இறைவன் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள்.''(98:8) நபித்தோழர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் பொழியட்டுமாக.

Via Dinakaran


0 comments:

Post a Comment