Relax Please: FB page daily Posts |
- ஏன்.. ஏன்... ஏன்ப்பா இப்படி... 1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப்...
- "குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமி...
- உழை, உழைத்துக் கொண்டேயிரு. இதுதான் வாழ்வின் இறுதிவரை நம்மைக் காப்பாற்றும் மருத்த...
- அறிந்துகொள்வோம் : பொது அறிவு தகவல்கள் * மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி...
- அந்த ஆறாவது தோசையிலேயே வயிறு நிறைந்து " போதும்மா " என்றதும் " கொஞ்சம் இரு "...
- பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!! 1. நன்றாக யோசித்த...
- அன்பே நீ வட, நான் தான் சட்னி தொட, அன்பே நீ பஜ்ஜி, பண்ணவா நான் எச்சி, அன்பே நீ...
- ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார். அங்கிருந்து மாறுதலாகி ச...
- என் வாழ்வின் நெருக்கங்களில் நான் துவழும்போது ஆறுதலாய் ஒரு தென்றல் என் மீது தவழ்க...
- ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க. அதுல எல்லா பறவைகளும் கல...
- ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் : " ஒருவருக்கு மிகச் சிறந்த மர...
- ஒரு இடி,மின்னல், மழை நாளில் "ஐயோ நம் பையன் மின்னலுக்கு பயப்படுவானே" என்று எண்ணி...
Posted: 11 Jun 2015 08:10 AM PDT ஏன்.. ஏன்... ஏன்ப்பா இப்படி... 1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும். 2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்.... 3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது... 4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும். 5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....? 6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது. 7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா.... 8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது.... 9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்..... 10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது.... 11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது... 12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும். 13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது. 14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை. 15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.. ;-) ;-) Relaxplzz |
Posted: 11 Jun 2015 07:10 AM PDT "குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. "வருத்தப்படாதே, என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு. "என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். "அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை. இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது. இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான். இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான். ஆனால் ஆச்சர்யம்! பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார். இதே போல் இன்னொரு சம்பவம். அதிலும் டாக்ஸி ஓட்டுனர், பொறுமை இழக்கவில்லை. ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார். இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு. இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார். "எப்படி இவ்வளவு பொறுமையாய், யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?" அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர், "என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது. வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது." இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது. ஆமாம், நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.. Relaxplzz |
Posted: 11 Jun 2015 06:50 AM PDT |
Posted: 11 Jun 2015 06:10 AM PDT அறிந்துகொள்வோம் : பொது அறிவு தகவல்கள் * மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது. * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும். * ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை! * மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்! * ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும். * திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும். * கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு! * 126936598-நம்மில் பலர் இந்த வாக்கியத்தின் முதலில் உள்ள எண்களை முழுமையாகப் படிக்காமல் மற்ற வார்த்தைகளையே படிப்போம்! * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது. * இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம். * நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும். * பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர். * இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும். * நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் * காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான். * உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். * ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. Relaxplzz |
Posted: 11 Jun 2015 04:10 AM PDT அந்த ஆறாவது தோசையிலேயே வயிறு நிறைந்து " போதும்மா " என்றதும் " கொஞ்சம் இரு " என்றபடி மடமடவென வெங்காயம் நறுக்கிப்போட்டு ஏழாவது தோசையை வெங்காய தோசையாகப் பரிமாறிய அம்மா., " முன்னைக்கு வந்ததை விட இப்ப லொடக்குனு போயிட்டியே கண்ணு " என்று வெங்காயத்துக்குக் கண் எரிவதாகச் சொல்லித் துடைத்துக்கொண்டே எட்டாவது தோசையின் மேல் முட்டையை ஊற்றிக்கொண்டிருந்தாள் ! #அம்மா ♥ ♥ Relaxplzz |
Posted: 11 Jun 2015 02:00 AM PDT பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!! 1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும். 2. உங்கள் மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா? 3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள். 4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்! 5. வாழ்க்கையைப் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள். 6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள். 7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும். 8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும். 9. குடும்பத்தைப் பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும் . 10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள். 11. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள். 12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். 13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள். 14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் ! Relaxplzz |
Posted: 11 Jun 2015 12:10 AM PDT அன்பே நீ வட, நான் தான் சட்னி தொட, அன்பே நீ பஜ்ஜி, பண்ணவா நான் எச்சி, அன்பே நீ முறுக்கு, எனக்கு உன் மேல கிறுக்கு. அன்பே நீ போண்டா, ஆகாத காண்டா. அன்பே நீ மசால் டீ, எப்போ என் பொண்டாட்டி? அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்பே நீ தோசை, இது அடங்காத ஆசை, அன்பே நீ ஆப்பம், ஒன்னா வாழ்ந்து பாப்போம், அன்பே நீ பரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா? அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி, மொத்தத்தில் நீ கையேந்தி பவன், நான் உனக்காக கையேந்துபவன்...! ;-) (பூபதியின் 'காதல் பசி' என்னும் கவிதை தொகுப்பிலிருந்து) - Boopathy Murugesh Relaxplzz |
Posted: 11 Jun 2015 12:10 AM PDT ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்." ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர். அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து பார்த்தார். அதில், "முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது" என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள். இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் ஓர் பெரிய பிரச்சனையை கிளப்பினார்கள். இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது. உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில், "உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்'' என்று எழுதப்பட்டிருந்தது. #கொஞ்சமாவது_சுயபுத்தி_வேணும் Relaxplzz |
Posted: 10 Jun 2015 09:30 PM PDT |
Posted: 10 Jun 2015 09:10 PM PDT ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க. அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு. காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப "கல்யாணத்தை நிறுத்துங்க"ன்னு ஒரு குரல். போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா? ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே.. அதான். நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம். Relaxplzz |
Posted: 10 Jun 2015 09:10 PM PDT ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் : " ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்து அவர் மீது பிறர் வைக்கும் அன்பும், நேசமும்தான்." அப்போது ஒருவர் கூறினார் "அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றால் ? அந்த மருத்துவர் மிக அழகாக பதில் கூறினார். " மருந்தின் அளவை அதிகப்ப படுத்துங்கள் !! ♥ ♥ Relaxplzz |
Posted: 10 Jun 2015 07:10 PM PDT ஒரு இடி,மின்னல், மழை நாளில் "ஐயோ நம் பையன் மின்னலுக்கு பயப்படுவானே" என்று எண்ணி ஒரு தாய் தன் மகனை பள்ளியிலிருந்துஅழைத்துச் செல்ல விரைந்தார். ஆனால் அவனோ ஒவ்வொரு முறை மின்னும்போதும் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவள் கேட்டாள் : "ஏம்பா மின்னலைப் பார்த்து சிரிக்கிறாய்? அதற்கு மகன் "அம்மா கடவுள் என்னைப் புகைப்படம் எடுக்கும் போது சிரித்து அழகாக இருக்க வேண்டாமா? வாழ்க்கை மிக எளிமையானது ! நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்கிறோம்... :) :) Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment