ilovemynative: Facebook page wall posts in Tamil |
- இந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு முன்னும் பின்னும் நடக்காத வரலாற்றுச் சம்பவ...
- சம்பளம் 3 ஆயிரம் வாங்கும்போது வெக்கப்பட்டு சொல்ல மாட்றானுங்க... அப்பறம் 30 ஆயிர...
Posted: 23 Jun 2015 09:02 AM PDT |
Posted: 23 Jun 2015 06:29 AM PDT இந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு முன்னும் பின்னும் நடக்காத வரலாற்றுச் சம்பவங்கள் சில உண்டு. இந்திய மன்னர்கள் இந்தியாவுக்குள் மட்டும்தான் போரிட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒரு மன்னன் அவனுக்கு சில நூறு மைல் தூரத்தில் இருக்கும் இன்னொரு மன்னனுடன் போரிடுவான். வெல்வான்.. தோற்பான். ராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்று நடந்தது. அவன் கடாரம் கொண்டான், சுமத்ராவை வென்றான். இலங்கை, மலேயா, வியட்நாம், கம்போடியா தொட்டு, சீனத்தின் தென் கிழக்கு எல்லையைத் தொட்டான். இது இந்திய மன்னன் ஒருவரிடத்திலும் காணமுடியாத ஒப்பற்ற சாதனை. நாம் செய்தது எல்லாம் என்ன? சோழமண்டலம் என்பதை கோரமண்டல் என்று கோரப்படுத்தியது மட்டும்தான். அசோகர் ஆண்டார், பாபர் ஆண்டார், அக்பர் ஆண்டார், சத்ரபதி சிவாஜி ஆண்டார் என்று வடக்கில் ஆண்ட அத்தனை அரசர்களையும் தெரிந்து வைத்திருக்கிறோம். மேற்படி அரசர்கள் ஆண்டதைப் போல இரண்டு மடங்கு தேசங்களை ஆண்ட ராஜேந்திர சோழனை டெல்லியும் ஒரிஸாவிலும் மராட்டியத்திலும் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு வரலாற்று வினோதம்தான். இந்த இருட்டடிப்பைத் தோலுரித்திருக்கிறார் வெ.நீலகண்டன். ராஜேந்திர சோழனிடம் காணப்பட்ட ஆச்சர்யமூட்டும் சிறப்பு, அவன் கலம் கட்டி, தம் படையுடன் கடல் கடந்து சென்று இத்தனை நாடுகளையும் வென்றிருப்பதுதான். நீலகண்டன் குறிப்பிடுவது போல, வங்கக் கடல் ராஜேந்திர சோழன் குதித்து விளையாடும் குளமாக இருந்தது. கடல் அவனுக்கு 'தண்ணிப்பட்ட பாடு'. நாவல் போல நகர்கின்றன சில இடங்கள். ராஜேந்திர சோழன் ஆலோசனை நடத்தும் இடம், சூழல் போன்றவை அப்படியான நாவல் சித்திரப்புகளுக்கு உதாரணம். ஆனால், கதை அளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஏராளமான வரலாற்று சான்றுகள் புத்தகம் முழுக்க விவரிக்கப்பட்டுள்ளன. விஜயாலய சோழன் நடக்க முடியாத நிலையிலும் போரிட்டு வென்று சோழ சாம்ராஜ்ஜியத்தை வென்றதாகட்டும் ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜராஜ சோழனிடம் ஆணை பெற்று புறப்படுகிற காட்சி ஆகட்டும் நாவலின் அத்தியாயங்கள்தான். அத்தனை சுவாரஸ்யம். அதைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது நீலகண்டன் தரும் வரலாற்றுக் குறிப்புகள். நிலத்தில் நெடுந்தூரம் பயணப்படாமல் கடல் கடந்து செல்வதில் ராஜேந்திரன் ஏன் அத்தனை ஆர்வம் காட்டினான் என்பதுதான் இந்த நூல் நெடுக்க நமக்கு ஏற்படும் கேள்வி. மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கிய ஆதாரங்கள் என பரபரப்பூட்டும் நடையில் வெ.நீலகண்டன் சொல்லிச் செல்வது சோழர்களை விரும்ப வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. சோழர்கள் பற்றி ஆராய்ந்த பலரைப் பற்றியும் இந்த நூலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் சீதாபதி என்பவர் ராஜேந்திர சோழனின் இறுதிக்காலம் பற்றித்தரும் குறிப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தக் கூடியது. தெற்கு ஆசியாவையே வளைத்துப் போட்ட அந்த மாவீரனின் கடைசி காலம் செய்யாறுக்கு அருகே உள்ள நாட்டேரி என்ற சிறிய கிராமத்தில் குவிந்ததை அவர் இப்படி விவரிக்கிறார். ''தனது 82-வது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள நாட்டேரி என்ற இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான் ராஜேந்திரன். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வெளியேறிய பிறகு காஞ்சியில் தங்கியிருந்தபடி அக் கோயில் கட்டுமானப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். அக் கோயிலைக் கட்டிய கைவினைக் கலைஞர்கள் அனைவருக்கும் கோயிலையொட்டி ஏராளமான நிலங்களைத் தானமாக அளித்தான். பிறகு அப் பகுதிக்கு பிரம்மதேயம் என்று பெயரிட்டான். அது இப்போது பிரம்மதேசமாக மாறிவிட்டது. அக் கோயிலின் ஈசான மூலையில் ஒரு சிறிய மண்டபத்தைக் கட்டிய ராஜேந்திரன், அதில் வடக்கிருந்து இறந்தான்' என்கிறார் அவர். உலகை ஆண்ட மன்னன் வாழ்வு, ஏனே நம்மை உலுக்குகிறது. சோழர்கள் என்ற தலைப்பில் நீலகண்ட சாஸ்திரி எழுதிய இரு பெரும் தொகுதிகளை, இராஜராஜேச்சரம் என குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய பெரும் நூலும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் சோழர்களின் பெருமையைச் சொல்லும் ஆகச் சிறந்த நூல்கள். இது, அவற்றை எல்லாம் தேடிச் சென்று வாசிக்க வைக்கும் தூண்டல் நூல் எனச் சொல்வேன். -வெ.நீலகண்டன் விலை ரூ.150/- சூரியன் பதிப்பகம் 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை- 4. http://thamizhstudio.com/Koodu/mag_3_bookreview.php நன்றி- தமிழ்மகன் ![]() |
Posted: 23 Jun 2015 02:58 AM PDT சம்பளம் 3 ஆயிரம் வாங்கும்போது வெக்கப்பட்டு சொல்ல மாட்றானுங்க... அப்பறம் 30 ஆயிரம் சம்பாதிக்கும் போது,"நான்லாம் 3 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்தவன்டா"ன்னு பெருமையா சொல்லுறானுங்க... @Boopathy Murugesh |
Posted: 23 Jun 2015 02:38 AM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment