Saturday, 30 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஒரு மரண ஊர்வலம்.. ஒரு வயது முதிர்ந்த ஒருவரின் தளர்ச்சி.. ஒரு நோயாளியின் துயர்.....

Posted: 30 May 2015 04:07 AM PDT

ஒரு மரண ஊர்வலம்.. ஒரு வயது முதிர்ந்த ஒருவரின் தளர்ச்சி.. ஒரு நோயாளியின் துயர்.. இவைகள் தான் போகத்தில் இருந்த ஒரு சித்தார்த்தனை புத்தன் ஆக்கியது...

இதுதான் கடவுள் என்று எதைக்காட்டினாலும் கும்பிட்ட காலத்தில் இது எப்படி கடவுளாக முடியும்..கடவுள் உண்டா..? கண்டவர் யார்... என்ற சிந்தனைகள் தான் நரேந்திரனை விவேகாந்தன் ஆக்கியது.

பாதிப் பயணத்தில் மாட்டு வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டு அதன் காரணம் தான் பிறந்த ஜாதி தான் என்று தெரிந்ததும் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள் உயர வேண்டாமா என்ற சிந்தனைதான் அம்பேத்கரை அண்ணலாக்கி சட்ட மேதை ஆக்கியது...

மூட நம்பிக்கைகள் மற்றும் பெண்ணடிமை.. கள்ளுண்ணுதல் மற்றும் உயர் ஜாதி மக்களால் ஏன் தமிழன் அடிமையாக கிடக்கிறான் என்ற சிந்தனை தான் ராசாமி நாயக்கரை தந்தை பெரியாராக்கியது...

எனவே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் உண்மை என்ன என்ற சிந்தனையுடன் கூடிய தேடலும் நம்மை மனிதன் என்ற நிலையில் இருந்து நிச்சயமாக உயர்த்தும் என்பதில் ஐயமில்லை...

நன்றி : தமிழ் உணர்வாளன்

பா விவேக்

0 comments:

Post a Comment