Relax Please: FB page daily Posts |
- பாடகி ஜானகி அவர்கள் பெற்ற விருதுகள்: -------------------------------------------...
- மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலக...
- இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? இன்னும் கொஞ்ச நேரம் என்னைத் த...
- இந்த மாதிரி கல் எறிந்து மாங்காய் , கொய்யா பறித்து உண்ட அனுபவம் உள்ளவங்க லைக் பண்...
- குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய 14 வயது வீரச்சிறுவன் (y)...
- (y) Relaxplzz
- குழந்தைகள் காட்டும் அன்பில் எந்த எதிர்ப்பார்ப்பும் இருப்பதில்லை ! <3 - மன்னை மு...
- உழைப்பவரே உயர்ந்தவர்.... அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துகள்
- " எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும். அதுதா...
- நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஆயிரம் விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுத்தாலும் கூட...
- இனிய காலை வணக்கம் நண்பர்களே.. :)
Posted: 30 Apr 2015 10:32 PM PDT பாடகி ஜானகி அவர்கள் பெற்ற விருதுகள்: ------------------------------------------------------------------- 1986 இல் தமிழ்நாடு அரசின் கலை மாமணி விருது 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது 14 முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது 7 தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது 10 ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது தேசிய விருதுகள்: ----------------------------- நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. 1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல் 1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல் 1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல் 1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல் Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 30 Apr 2015 08:00 PM PDT மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து "அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு" என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர். நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ''சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்'' கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது. இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். Relaxplzz ![]() |
Posted: 30 Apr 2015 07:10 PM PDT இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? இன்னும் கொஞ்ச நேரம் என்னைத் தூங்கவிடேன், கெஞ்சும் இமைகளை அலச்சியப்படுத்தி எழுந்து, இன்று ஒரு நாள் மட்டும் குளிக்காமல்விடேன், கேட்கும் மனசை புறந்தள்ளி குளித்துவிட்டு, இன்னும் இரண்டு இட்லி தின்னால் என்ன குறைந்துவிடப் போகிறாய்? எச்சில் சுரக்கும் நாவை உதாசீனப் படுத்தி கைகழுவி, ரஜினி பாட்டானாலும் அன்றைய முக்கிய செய்திகளை மட்டும் டிவியில் கேட்டே புறப்பட்டு, ஒரு வாரம் முழுதும் பாடங்களில் ஐயிக்கியமானாலும் சனிக் கிழமை விடுமுறைக்கு தவமிருக்கிறது மனசு... ஆனால் வெள்ளிக்கிழமை, வரத்திற்கு பதிலாய் சாபம்தான் கிடைக்கிறது!!! நாளை பனிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் சிறப்பு வகுப்பு. Relaxplzz |
Posted: 30 Apr 2015 07:00 PM PDT |
Posted: 30 Apr 2015 06:45 PM PDT குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய 14 வயது வீரச்சிறுவன் (y) (y) மும்பையில் மலபார் ஹில் பகுதியில் குளத்தில் விழுந்த 10 வயது சிறுமியை 14 வயது வீரச்சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்டான். அங்குள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியான கிருஷ்ணா திடீரென குளத்துக்குள் தவறி விழுந்தாள். நீச்சல் தெரியாத கிருஷ்ணா தண்ணீரில் விழுந்தவுடன் அவளுடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுமி கதறி அழுதவாறு அப்பகுதியில் இருந்தவர்களிடம் முறையிட்டாள். குளத்தில் 25 அடி தண்ணீர் இருந்த நிலையில், சிறுமியை காப்பாற்ற 20க்கும் மேற்பட்டோர் குளத்துக்குள் பாய்ந்தனர். எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 14 வயது வீரச்சிறுவனான மோஹித் தால்வியும் குளத்துக்குள் பாய்ந்தான். இரண்டு முறை தண்ணீருக்குள் மூழ்கி தேடிய போதும் கிருஷ்ணா அகப்படவில்லை. இதற்குள் பத்து நிமிடங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் சென்ற மோஹித் 25 அடி ஆழத்தில் கிருஷ்ணாவின் கையை கண்டான். உடனடியாக கையை பிடித்து இழுத்து கிருஷ்ணாவை மேலே இழுத்து வந்தான். பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணாவின் உயிரை தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் காப்பாற்றினார்கள். தனது மகள் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் பேசிய தந்தை அனில் பாஷ்ட்யே கூறுகையில், 'எனது மகளை உயிருடன் மீட்டுத்தந்த மோஹித்துக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றார். இன்னும் ஒரு நிமிடம் தண்ணீருக்குள் இருந்திருந்தால் எனது மகள் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அனில் அச்சத்துடன் கூறினார். தன் உயிரை துச்சமென எண்ணி கிருஷ்ணாவை காப்பாற்றிய வீரச்சிறுவன் மோஹித்தை பலரும் பாராட்டியதுடன், மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவனுக்கு வெகுமதி வழங்கி சிறப்பு செய்தனர். https://twitter.com/RelaxplzzTamil Relaxplzz ![]() |
Posted: 30 Apr 2015 06:30 PM PDT |
Posted: 30 Apr 2015 06:20 PM PDT |
Posted: 30 Apr 2015 06:10 PM PDT |
Posted: 30 Apr 2015 06:00 PM PDT " எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஃபார்முலா " என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் . "புரியவில்லையே " என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர். கடவுள் புன்னகைத்தார் . " நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ." "ஆமாம் ". " உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ". " ஆமாம், ஆமாம் " என்ற நாரதர், " சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? " கடவுள் பதில் சொன்னார் . " இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ". " நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ? " கடவுள் கலகலவென சிரித்தார் . " அதற்காகத்தான் இந்தியாவுக்கு அரசியல்வாதிகளைக் கொடுத்தேன் " :P :P Relaxplzz |
Posted: 30 Apr 2015 05:45 PM PDT |
Posted: 30 Apr 2015 05:30 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment