Thursday, 30 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலங்கள் தமிழர்களுடையது, அதை ஏமாற்றி சல்லிசாக வாங்க...

Posted: 30 Apr 2015 12:43 PM PDT

சென்னை மற்றும் புறநகர்
பகுதி நிலங்கள்
தமிழர்களுடையது,
அதை ஏமாற்றி சல்லிசாக
வாங்கி அதில்
அப்பார்ட்மெண்ட் கட்டி
தமிழர்களிடமே 50 லட்சம்
60 லட்சம் என பெரும்
லாபத்தில் விற்கிறார்கள்,
அதை வாங்கிப்போட்ட
தமிழர்கள் காலம் பூரா
ஈ.எம்.ஐ கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நிலம்
தமிழனுடையது, வீட்டில்
வாழ்பவனும் தமிழன்,
ஆனால் இடையில்
ஆட்டைய போட்டது?

@சுரேஷ்

நமது வாழ்க்கையில் நம்மை முன்னேற்றுவதில் விரோதிகளின் பகையை விட துரோகிகளின் துரோகம...

Posted: 30 Apr 2015 09:36 AM PDT

நமது வாழ்க்கையில்
நம்மை
முன்னேற்றுவதில்
விரோதிகளின்
பகையை விட
துரோகிகளின்
துரோகம் தான் அதிகம்
பங்கு வகிக்கிறது .

@லதா பிரபு

அதீத நேர்மையான ஆண்கள் பெண்களிடம் தங்கள் காதலின் நேர்மையை விளக்கி சொல்ல தெரியாமல்...

Posted: 30 Apr 2015 09:31 AM PDT

அதீத நேர்மையான
ஆண்கள் பெண்களிடம்
தங்கள் காதலின்
நேர்மையை விளக்கி
சொல்ல தெரியாமல்
தவிக்கிறார்கள். பிராடுகளோ அழகாக
பேசி மயக்கி
விடுகிறார்கள்...

@லதா பிரபு

சொந்த ஊரில் தன் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன் விருப்பு வெற...

Posted: 30 Apr 2015 08:11 AM PDT

சொந்த ஊரில் தன்
குடும்பம் சந்தோஷமாக
இருக்க வேண்டும்
என்பதற்காக, தன்
விருப்பு
வெறுப்புகளை
ஓரங்கட்டிவிட்டு
வெளிநாட்டில்
வியர்வை சிந்தி
உழைக்கும்
ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர்
தின நல் வாழ்த்துகள்.

@ரஹீம் கஸாலி

மேகதாது அணை கட்டுவதை தடுக்கும் விவகாரம் குறித்து டெல்லியில் மோடியினை சந்தித்துவி...

Posted: 30 Apr 2015 07:53 AM PDT

மேகதாது அணை
கட்டுவதை தடுக்கும்
விவகாரம் குறித்து
டெல்லியில்
மோடியினை
சந்தித்துவிட்டு
பத்திரிக்கையாளர்களை
அனைத்து கட்சியினரும்
சந்தித்தனர். தற்சமயம் அந்த
நிகழ்வு முடிந்தவுடன்
நம் அனைவரது
ஸ்டேடஸ் களிலும்
விஜயகாந்த் திட்டியதும்
, ராமதாஸ் வராததும்
தான் பெரிய செய்தியாக
சுற்றி வருகிறது.
மேகதாது
அணைக்கட்டு விவகாரம்
அடிப்பட்டு
போய்விடுகிறது. subject
matter யை விட்டு விலகி
வேறு எது எதற்கோ
நாம் முக்கியத்துவம்
கொடுப்பதால் தான்
தமிழனின் வேகம் எல்லா
விஷயங்களிலும் நீர்த்து
போய்விடுகிறது.க
ாரியமும் கைக்கூட
மறுக்கிறது.

தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள் - ஹரியானா விவசாயத்துறை அமைச்சர். அதானே வீரன...

Posted: 30 Apr 2015 04:20 AM PDT

தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள் - ஹரியானா விவசாயத்துறை அமைச்சர்.

அதானே வீரன்னா இந்த நிலைக்கு ஆளாக்குன விவசாயத்துறை அமைச்சர போட்டுத்தள்ளிருக்கனும்...

- பூபதி முருகேஷ்

Big Bazzar - சதுரங்க வேட்டை: நேற்று சென்னையில் உள்ள Express Avenue Mall -ல் உள...

Posted: 30 Apr 2015 01:57 AM PDT

Big Bazzar - சதுரங்க வேட்டை:

நேற்று சென்னையில் உள்ள Express Avenue Mall -ல் உள்ள Big Bazzar-ல் எனது குடும்பத்தினருடன் பொருட்களை செய்துகொண்டிருந்தேன். அங்குள்ள ஒருவர் ஏதோ கோடைகால குலுக்கல் போட்டிக்காக எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறித்துகொண்டார். இன்று காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிய நபர் தனது பெயர் தேவா என்றும் எனது பெயர் Lucky Draw போட்டியில் தேர்வு செய்யபட்டுள்ளதாகவும் கூறினார். சற்று உணர்ச்சிவசப்பட்ட நான் அவரிடம் அதை பற்றி நன்கு விசாரித்தேன். அவர் கூறியது இந்த ஆண்டு 25 குடும்பத்தினரை மட்டும் தேர்வு செய்துள்ளதாகவும் அதில் எனது குடும்பமும் அடங்கும் என்றும் கூறினார். மேலும் பரிசாக 5 இரவுகள் 6 நாட்கள் அடங்கிய Holiday Package இன்று மாலைக்குள் சென்னையில் உள்ள Spencer Plaza வில் உள்ள Wins Club அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எனது மனைவியுடன் வந்து பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர் மீது சந்தேகம் கொண்ட நான் Big Bazzar கடைக்கு போன் செய்து விசாரித்தேன். அவர்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

அவர்களை நம்பிய நான் அவசரமாக ஒரு ஓட்டுனரை ஏற்பாடு செய்து எனது குடும்பத்தினருடன் எனது காரில் சென்றேன். செல்லும் வழியிலேயே தேவா என்பவர் மறுபடியும் போன் செய்து விழா முடிவடைய இருபதாகவும் இன்னும் 15 நிமிடங்களுக்குள் வருமாறு அறிவுறுத்தினார். அவசர அவசரமாக அங்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள வட்ட மேசையில் எங்களை அமரவைத்து மூன்று பேர் Wins கிளப் நிறுவனத்தை பற்றியும் அவர்களிடம் உள்ள Holiday Package-களை பெற்றுகொள்ளுமாரும் எங்களை ஒரு மணி நேரம் மிக அழகாக மூளை சலவை செய்தனர். அவர்கள் எங்களிடம் கேட்ட தொகை ருபாய் 55,000. சற்றே சுதாரித்துகொண்ட நான் எனக்கு அதில் விருப்பமில்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். அவர்கள் இறுதியாக 2 நிமிடம் காத்திருந்து பரிசை பெற்றுசெல்லுமாறு கூறினர். காத்திருந்த எங்களுக்கு கிடைத்த பரிசு 150 ரூபாய் மதிப்புள்ள ஒரு Bowl Set மற்றும் ஏழு நாட்கள் தங்க கூடிய ஒரு Gift Coupon. அந்த Gift Coupon-ஐ உபயோகிக்க நான் அவர்களுக்கு ரூபாய் 8000 செலுத்த வேண்டுமாம்.

சென்னையில் உள்ள பிரபலமான கடைகளில் நடக்கும் இது போன்ற சதுரங்க வேட்டைகளில் மாட்டிக்கொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நன்றி!

@Amar Annamalai


நண்பர்களோடு சாப்பிட கடலூரில் பிரபலமான அசைவ ஹோட்டலுக்கு சென்று இருந்தோம். அருகில்...

Posted: 30 Apr 2015 12:30 AM PDT

நண்பர்களோடு சாப்பிட கடலூரில் பிரபலமான அசைவ ஹோட்டலுக்கு சென்று இருந்தோம். அருகில் ஒரு பெரிய குடும்பம் வந்து அமர்ந்தார்கள். அதில் ஒரு முதியவர் மட்டும் ஜோடி இல்லாமல் தனியாக அமர்ந்து இருந்தார். சாப்பாடு ஆர்டர் கேட்க்கும் போது அவர் மட்டும் சைடிஷ் எதுவும் வேண்டாம் சாப்பாடு மட்டும் போதும் என்று சொன்னார். மற்ற அனைவரும் விருப்பப்பட்ட சைடிஸ் அயிட்டங்களை ஆர்டர் செய்தார்கள். சாப்பிடும் போது அந்த முதியவர் மற்றவர்கள் இலையில் இருந்த சைட் டிஸ் அயிட்டங்களை பார்த்து கொண்டே இருந்தார்.

இந்த முதியவர் மட்டும் துணை இல்லாமல் இருந்தார். அவரின் மனைவி இறந்திருக்கலாம். மற்ற அனைவரும் முதியவரின் மகன் மகள் மருமகன்கள் பேரப்பசங்களாய் இருக்கலாம். அதில் ஒருவர் கூட இரண்டாவது முறை எதுவும் சைட் டிஷ் வாங்கிக்கோங்க என்று சொல்லவில்லை. பேரன்கள் மருமகன்கள் முன்னாடி ஒரு வீம்புக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றது தான். திரும்ப கேட்க அவருக்கு கூச்சமாக இருக்கலாம். வீட்டில் நிறைய முறை கவனித்து இருக்கன் அப்பா கண்ணால் ஒரு பொருள் வேண்டும் என்று சொல்வதும் அம்மா குறிப்பறிந்து பரிமாறுவதும். வீராப்பு, கவுரவம் எல்லாம் ஒரு ஆணுக்கு மனைவி இருக்கும் வரை தான். முதுமையில் தனிமை கொடிது. அந்த முதியவர் ஒருவேளை எங்க அப்பாவா இருந்தால் என்று யோசித்து பார்த்தன் கண்ணுல தண்ணி வந்துடிச்சி. அம்மா மாதிரி எல்லாம் அப்பாவை பிள்ளைகளால் ஒருபோதும் பார்த்துக்கொள்ள முடியாது.

@சக்தி சரவணன்


அழகு தமிழ்நாடு! கோயம்புத்தூர் அருகே!

Posted: 30 Apr 2015 12:18 AM PDT

அழகு தமிழ்நாடு!
கோயம்புத்தூர் அருகே!


மாட்டுக்கறி சாப்பிட்டால் பூமித்தாய்க்கு கோபம் வரும் ... அர்ஜுன் சம்பத் #உங்களுக...

Posted: 29 Apr 2015 09:58 PM PDT

மாட்டுக்கறி
சாப்பிட்டால்
பூமித்தாய்க்கு கோபம்
வரும் ... அர்ஜுன் சம்பத்

#உங்களுக்கெல்லாம் எப்ப
பாஸ் அறிவு
வரும்......??????

@ராஜா அறந்தாங்கி

0 comments:

Post a Comment