Thursday, 7 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!...

Posted: 07 May 2015 09:36 PM PDT

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.

கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தாரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:

1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161

2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்

3. சௌந்தர்யா 1141 - சு.ஆடுதுறை

இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.

பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகள்:

முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.

2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.

3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்

ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது.

-ர.ரஞ்சிதா


கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாந...

Posted: 07 May 2015 09:35 AM PDT

கல்வியில்
பின்தங்கியிருந்த
பெரம்பலூர் மாவட்டம்,
பிளஸ் 2 தேர்ச்சி
விகிதத்தில் மாநில
அளவில் இரண்டாவது(97.25%)
இடத்தையும், அரசு
பள்ளிகளில் தேர்ச்சி
விகிதத்தில் 94.34%
பெற்று மாநிலத்தில்
முதலிடத்தை பிடித்தும்
சாதனை படைத்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் முதல் 14 இடங்களில் வட தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாவட்டங்களும் இல்லை.


தண்ணீர் குடுவையில் திருக்குறள்! இங்கு இல்லை சிங்கப்பூரில்!

Posted: 07 May 2015 09:14 AM PDT

தண்ணீர் குடுவையில்
திருக்குறள்!

இங்கு இல்லை சிங்கப்பூரில்!


தமிழக காவல்துறையில் தமிழ் இல்லை. கொடுத்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத த...

Posted: 07 May 2015 04:39 AM PDT

தமிழக காவல்துறையில் தமிழ் இல்லை. கொடுத்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு !!

தமிழக காவல்துறையில் தமிழின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதை நாம் கவனிக்க இயலும். சென்னை காவல்துறை வாகனங்களில் 'காவல்' என்று கூட தமிழில் எழுதப்படவில்லை. நூற்றுக்கணக்கான சிறிய காவல் மையங்களில் காவல்துறை மின்னணு தகவல் பலகைகளை அமைத்துள்ளது. இவற்றிலும் 'Police' என்று ஆங்கிலத்தில் தான் அறிவிப்பு வெளியிடுகிறது காவல்துறை. மேலும் இந்த மின்னணு தவகல் பலகையின் மூலமாக பல செய்திகளை, முக்கிய அறிவிப்புகளை மக்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது சென்னை காவல்துறை. சென்னை காவல்துறை தமிழர்களுக்காக செயல்படுகிறதா அல்லது ஆங்கிலேயர்களுக்காக செயல்படுகிறதா என்று எண்ணும் அளவிற்கு ஆங்கிலத்தை பயன்படுத்துகிறது தமிழக காவல் துறை.
இது குறித்து நாம் தமிழக தலைமை காவல்துறை இயக்குனரிடம் நேரடியாக சென்று புகார் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. பின்னர் நேரடியாக தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். தமிழக அரசோ, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்து மனுவை கிடப்பில் போட்டுவிட்டது. அடுத்த கட்டமாக தமிழக ஆளுநரிடம் தான் நாம் மனு கொடுக்க வேண்டும் . அதையும் விரைவில் செய்ய உள்ளோம்.
ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழும் அழிந்து தமிழனும் அழிந்தான் என்பது மட்டும் மெய்யாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழக அரசு நிறுவனங்களில் தமிழை நாம் தேட வேண்டிய நிலை விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை.

தமிழையும் தமிழர்களையும் வாழவைக்க முடியாத திராவிட அரசுகள் பதவி விலகட்டும். உணர்வுள்ள தமிழர்களே தமிழகத்தை ஆளட்டும்.

- இராச்குமார் பழனிசாமி


கொலை வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த நடிகருக்கு சப்போர்ட் பண்றிங்க, ஊழல் வ...

Posted: 07 May 2015 04:28 AM PDT

கொலை வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த நடிகருக்கு சப்போர்ட் பண்றிங்க,

ஊழல் வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த அரசியல்வாதிக்கு சப்போர்ட் பண்றிங்க,

பாலியல் வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த சாமியாருக்கு சப்போர்ட் பண்றிங்க,

சூதாட்ட வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த கிரிக்கெட் வீரருக்கு சப்போர்ட் பண்றிங்க,

ஒரே ஒரு தடவை பரிட்சைல பெயில் ஆன உங்க வீட்டு குழந்தைகளை திட்டாம சப்போர்ட் பண்ணுங்களேன்
.
அவங்க மீண்டு வந்துருவாங்க.

- பூபதி முருகேஷ்

எக்சாம்ல பெயிலான ஸ்டூடண்ட்டுங்க யாராவது தற்கொலை பண்ணிக்க முடிவு எடுக்காதீங்க. ....

Posted: 07 May 2015 03:59 AM PDT

எக்சாம்ல பெயிலான
ஸ்டூடண்ட்டுங்க
யாராவது தற்கொலை
பண்ணிக்க முடிவு
எடுக்காதீங்க. . .

அம்மா விடுதலைக்காக
தற்கொலை பண்ணிட்டதா
அறிவிச்சிடுவாங்க.

@சிவ சிவா

படிக்கலேன்னு வாத்தியார் அடிச்சாரு, பாஸ் பண்ணலேன்னு அப்பா அடிச்சாரு, குழந்தைக்கு...

Posted: 07 May 2015 12:31 AM PDT

படிக்கலேன்னு
வாத்தியார் அடிச்சாரு,
பாஸ் பண்ணலேன்னு
அப்பா அடிச்சாரு,
குழந்தைக்கு ஒரு
ஹோம் ஒர்க் சொல்லி
குடுக்க கூட
தெரியலேன்னு இப்போ
பொண்டாட்டி
அடிக்குறா ,

ஆக மொத்தம் நமக்கு
கடைசி வரைக்கும்
படிப்புதான் வில்லன்
போல...

@செல் முருகன்

20 வருசமா ப்ளஸ்டூ ரிசல்ட்டப்ப டாக்டராகி மக்களுக்கு இலவச சேவை செய்வேன்னு சொன்னதுக...

Posted: 06 May 2015 11:15 PM PDT

20 வருசமா
ப்ளஸ்டூ ரிசல்ட்டப்ப
டாக்டராகி மக்களுக்கு
இலவச சேவை
செய்வேன்னு
சொன்னதுக லிஸ்ட்ட
பூரா எடுத்து என்ன
பண்ணுதுகன்னு
பாக்கனும்...

@களவாணி பய

நல்லவேளை நாமெல்லாம் பாசா பெயிலானு மட்டும் கேக்கற காலத்திலேயே படிச்சு முடிச்சுட்ட...

Posted: 06 May 2015 10:50 PM PDT

நல்லவேளை
நாமெல்லாம் பாசா
பெயிலானு மட்டும்
கேக்கற காலத்திலேயே
படிச்சு
முடிச்சுட்டோம்...

@டிமிட்ரி

குழந்தை சிவப்பா பொறக்கனுமா அமிர்தா காலேஜ்ல சேர்ந்து படிங்கனு மட்டும் தான்டா நீங்...

Posted: 06 May 2015 10:34 PM PDT

குழந்தை சிவப்பா
பொறக்கனுமா
அமிர்தா காலேஜ்ல
சேர்ந்து படிங்கனு
மட்டும் தான்டா நீங்க
இன்னும் சொல்லல...

@கந்தா தங்கராஜ்

தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு சற்றும் குறைவில்லாதது +2 ரிசல்ட் வந்தவுடன் டாக்டர்...

Posted: 06 May 2015 10:28 PM PDT

தேர்தல் நேர
வாக்குறுதிகளுக்கு
சற்றும்
குறைவில்லாதது +2
ரிசல்ட் வந்தவுடன் டாக்டர்
ஆகி மக்களுக்கு சேவை
செய்வேன் என்னும்
வாக்குறுதி.,

@கந்தா தங்கராஜ்

+2 பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்று (97.46%) விருதுந...

Posted: 06 May 2015 10:08 PM PDT

+2 பொதுத் தேர்வில்
மாநில அளவில் அதிக
தேர்ச்சி விழுக்காடு
பெற்று (97.46%)
விருதுநகர் மாவட்டம் முதலிடம்...


வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொ...

Posted: 06 May 2015 09:57 PM PDT

வேட்டிங்கிறது ஏழை
விவசாயிங்க உடுத்துற
உடை. மிஞ்சிப்போனா,
அதை அவனால 100
ரூபாய் கொடுத்து
வாங்க முடியும். நீங்க
எனக்கே வேட்டி
விளம்பரத்துலே நடிக்க
ரெண்டு கோடி சம்பளம்
கொடுத்தீங்கன்னா, அந்தக்
காசையும் அவன்கிட்ட
இருந்துதானே
வசூலிப்பீங்க. அதான்
நடிக்க மாட்டேன்'னு
சொன்னேன். பதில்
சொல்லாமப்
போயிட்டாங்க.

- ராஜ்கிரண்

பிளஸ்-2 தேர்வு முடிவு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் முதலிடம், முதலிடம் பி...

Posted: 06 May 2015 09:55 PM PDT

பிளஸ்-2 தேர்வு
முடிவு, திருப்பூர்
மற்றும் கோவை
மாவட்டங்கள் முதலிடம்,
முதலிடம் பிடித்த
மாணவிகள் பவித்ரா-1192
(திருப்பூர்),
நிவேதா-1192(கோவை)

மதிப்பெண் ஒருவரின் அறிவை எந்தவிதத்திலும் எடை போட உதவாது என்பதை வேலைக்கு சென்றபின...

Posted: 06 May 2015 09:38 PM PDT

மதிப்பெண் ஒருவரின்
அறிவை
எந்தவிதத்திலும் எடை
போட உதவாது என்பதை
வேலைக்கு
சென்றபின்
அனைவரும் புரிந்து
கொள்வார்கள்!

@காளிமுத்து

0 comments:

Post a Comment