இந்த வார்த்தையை கேட்டாலே மண்டை காயிது, அது என்னய்யா "ஏகாதிபத்தியம்" அப்படினா என்னாய்யா? என்பவர்களுக்காக சுருக்கமாக...
16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியை "நவீனத்துவம் (modern)" என புரிந்து கொள்ளாலாம், இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் பொருள் உற்பத்தி கண்ணா பின்னாவென்று அதிகரித்தது. இதனால் ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தைகளை தேட ஆரம்பித்தார்கள். ஆபிரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற சந்தைகளை எல்லாம் கண்டுபிடித்து கொள்கிறார்கள்.
வந்த இடங்களில் பொருளுற்பத்தியில் பின்தங்கியிருந்த மக்களை அடிமையாக்கி தங்கள் பொருட்களை விற்கவும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடிக்கவும் செய்தார்கள். நவீன பொருட்களை உற்பத்தி செய்து நல்ல லாபத்திற்கு விற்பனை செய்ததால் ஐரோப்பிய மன்னர்களை விட இந்த முதலாளிகள் செல்வாக்கு மிக்கவர்களாக உயர்ந்தார்கள்... இதத்தான் "முதலாளித்துவம்" னு சொல்றானுங்க,
மன்னர்களிடம் இருந்து அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு சாதாரண உழைக்கும் மக்களை FREE பண்ணிவிட்டு அவர்களுக்கு சில உரிமைகளை வழங்கி ஐரோப்பாவில் "முதலாளித்துவ ஜனநாயக நாடுகள்" ஏற்படுத்தப்பட்டது. அதேசமயம் ஏனைய கண்டங்களை அடிமை படுத்தி காலனி நாடுகளாக்கி யாவாரமும் பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் தங்கள் யாவாரத்துக்கு காலனி நாடுகளை அடிமைப்படுத்துவதில் நடந்த சண்டைதான் முதல், இரண்டாம் உலக யுத்தங்கள், இதிலும் அடிமை காலனி நாட்டு மக்கள் இவர்களுக்காக சண்டையிட்டு லட்சக்கணக்கில் செத்தது தனிக்கதை.
காலனி நாடுகளிலும் முரண்பாடுகள் முற்றி அடிமை மக்களும் ஜனநாயகம் கேட்க ஆரம்பித்த பிறகு தாங்கள் சிந்திய எலும்பு துண்டுகளை கவ்வி வளர்ந்த உள்ளூர் முதலாளிகளை வைத்து ஒரு போலியான ஜனநாயக நாடுகள் உருவாக்கி வைத்தார்கள்,
தாங்கள் சென்ற பிறகும் இந்த புதிய ஜனநாயக நாடுகளின் பொருளாதாரம், ராணுவம், நீதி துறை இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்காக உருவாக்க பட்டதுதான் IMF(உலக வங்கி), NATO, ஐநா போன்றவை.
இப்ப விஷயத்துக்கு வருவோம்..
இந்த நாடுகள் பிரிப்பது கிட்டத்தட்ட முழுமையாக முடிந்த பிறகு, இந்த நாடுகளின் வளங்களை தங்கள் பொருள் உற்பத்திக்காக கொள்ளையடிக்க, வளர்ந்த வல்லரசு நாடுகள்(ஐரோப்பிய, அமெரிக்க) போட்டியிட்டு கொள்வதுதான் ஏகாதிபத்திய போட்டி,
இந்த வல்லரசு முதலாளிகள் மத்திய கிழக்கு நாடுகளான சௌதி அரேபியா. ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சிரியா போன்ற நாடுகளில் இருந்து பெட்ரோல் எடுத்து கொள்வார்கள், காங்கோ, நைஜீரியா, ருவாண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான கனிம வளங்களை எடுத்து கொள்வார்கள், அமேசான் காடுகள் உள்ள பிரேசில், சிலி, பனாமா, ஈகுவடார் நாடுகளில் இருந்து எண்ணெய் வளங்களை எடுத்து கொள்வார்கள், இன்னும் உலகில் எங்கெல்லாம் வளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்து தங்கள் சந்தைக்கான பொருள் உற்பத்திக்கு தேவையான மூல வளங்களை கொள்ளையடித்து கொள்வார்கள்,
பின்ன ஏரோ பிளேன் முதல் ரீபோக் ஷூ வரைக்கும் இவனுங்க உற்பத்தி செய்வதற்கு செவ்வாய் கிரகத்துக்கு போயா ரா மெடீரியல் வாங்குறானுங்க, ஏழை நாடுகளில் இருக்கும் எல்லா இயற்க்கை வளங்களையும் இவனுங்க எடுத்துகொள்வதற்கு வசதியாக உள்ளூரிலேயே சில பொருக்கி தின்னிங்கள வளத்து
வச்சிருப்பானுங்க, அமைதி, தீவிரவாதத்திற்கு எதிரான போர், வளர்ச்சி இதெல்லாம் இவனுங்க கொள்ளையடிக்க யூஸ் பண்ற டெக்னிக்.
@அன்பே செல்வா

0 comments:
Post a Comment