ஆறாம் விரலுடைந்த நண்பனுக்காக...
உள்ளதை சொல்ல வேண்டும் உண்மையை சொல்ல வேண்டும் எனும் ஆசையில் பிரபஞ்சம் பிச்செரிய பேனா எடுத்தேன்,
உள்ளதும் நல்லதும் இவ்வளவு கசக்குமா,
நெற்றிப்பொட்டில் Colt M1911 மரண பயத்தை நான் கண்டிருக்கிறேன்
சகாவின் உயிரை துளைத்த தோட்டா என் காலடியில் விழ நான் கண்டிருக்கிறேன்
துப்பாக்கி முனையிலும் பேனா முனை வலியது என கூறியவனை காட்டுங்கள் பேனாவை கையில் கொடுத்து நான்
கூட்டிபோகிறேன்
என் உணர்வை மை எழுத்தாக்கிய பல தடவை என் தம்பியின் அழைபேசி நள்ளிரவில் நடுங்கியிருக்கிறது
என் இடப்புறுவம் மேலிருக்கும் தலும்பும் இடப்புற கையிலிருக்கும் வெட்டும் நேர்மைக்கு சாட்சியிருக்கும் Pulitzer Prize ஒன்றும் தேவையில்லை
அநீதி நீதியளிக்க நீதி நாதியின்றி கிடக்கிறது
ஒரு கட்டத்தில், நான் ஒன்று எழுத என் பேனா ஒன்று எழுதும் போது தான் பேனாவும் வீனா விலை போனது புரிந்தது
கடைசியில் வயித்து பொழப்புக்கு கதை எழுதினேன் அதிலும் புரட்சி வாசம் மையில் வீசுகிறதென்று கதைகள் குப்பை தொட்டியை வாசகனாக பெற்றன
ஒன்று மட்டும் தான் புரியவில்லை புலோகமே போதாது என்றவனுக்கு கடைசியில் புடவைக்கடை கல்லா பெட்டியை கவனிக்கும் உத்தியோகம் எப்படி போதுமானது?
via ஷகீக் அஹ்மத்

0 comments:
Post a Comment