Monday, 11 May 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நீ தீ தேவை ???? யாரோ சொன்னான் நீதி தேவதை கற்பளிக்க பட்டாளாம், வழக்காடு மன்றில்...

Posted: 11 May 2015 07:27 AM PDT

நீ தீ தேவை ????

யாரோ சொன்னான்
நீதி தேவதை கற்பளிக்க பட்டாளாம்,

வழக்காடு மன்றில்
சாட்சியில்லையாம்,
வைத்திய அறிக்கையில் வாய்ப்பில்லையாம்,
அவள் தேவதையாம்
மனித மதனம்
முடியாதாம்.

தடயம் இருக்கிறதாம்,
ஆனால் அவளில்லையாம்,
அவள் தீ யானவளாம்,
அக்கினியில்
அழித்திடுவாளாம்,
தேவதை தீண்டும்
தேகம் இவனுக்கில்லையாம்,

தீர்ப்பில் ,இராவணன்
இராமனானானாம்.

பார்த்திருந்த
பாமரன் சொல்கிறான்

தேவதைக்கு
கறுப்பங்கி பார்த்துப் பார்த்து
பார்வை சரியில்லையாம்
சட்டம் ஒரு இருட்டறை வேறு,
அதனால்
கறுப்புப்பணமும்
சட்டப் பணம் தானாம்,
இருட்டில் எப்படி விழங்கும்?
அவளுக்கு

அவள் கண் துணி
தளர்ந்து விட்டதாம்,
துகிலுரிப்பில்
தளர்ந்து விட்டாளோ?
பாவம் பாண்டவர்
பூமியில் ......
எத்தனை முறைதான்????
தேவதையும் ஒரு தாய் தானே,

ஐயகோ
அவள்
கைத் தராசுக்கு என்ன வாயிற்று???
அதற்கும்
கறள் படிந்துவிட்டதாம்,
அதிகாரியே ஏன்
கவனிக்க வில்லை
எல்லோர் தராசுக்கும்
தரநிர்ணயம் உண்டு,
தேவதை தராசை யார்
முத்திரை இடுவது?

அவள் கை வாள்
கற்பளிக்கையில்
காப்பாற்ற வேண்டாமா??
அது அன்று நேர் வாள்
இன்று நாளாக நாளாக
வாள் வளைந்து விட்டதாம்,
வாள் நேராக
வெட்ட முடியவில்லையாம்,
அவள் நீதி போல,

பாமரனே இறுதியாக
என்ன சொல்கிறாய்?
ஏழை சொல் அம்பலமேற
என்றாலும் சொல்கிறேன்,

அவள் ஆடையை
சரி செய்யுங்கள்,
பார்வையால் அவளும்
பரிதவிக்கிறாள்,
கண் சீலையை
தரமாக முடியுங்கள்
பணத்திலும்,பவிசிலும்
பார்வை படாமல்,
கைவாளை வீசுங்கள்
AK47 வழங்கி நவீனமாக்குங்கள்,

இவ்ளவுதானா பாமரா
இல்லை
அவள் காலடியில்
சட்டபுத்தகம் ஏறி மிதிக்கயில
பல சாலி முயன்று வாய்ப்பான
பக்கம் பெறுகிறான்
பலவீனனனோ
முடியாமல் வீழ்கிறான்
தேவதை முன் என்றான்,

நானோ
மாற்றுவோம் என்றேன்
அப்போ கொந்துறாத்தை
எனக்கு தா என்றான்
பார்த்தேன் அவனை,உன்னையும்
கவனிக்கிறேன் என்றான்
கண்ணகியாய் பார்த்தேன்,
தராவிட்டால்
ஹைகோடு போவேன் என்றான்,
பதறி விட்டேன்.

via Marham

0 comments:

Post a Comment