Wednesday, 8 April 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நேருவும் நேர்மையும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் என்ன நான் சொல்றது சரித...

Posted: 08 Apr 2015 08:35 AM PDT

நேருவும் நேர்மையும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம்

என்ன நான் சொல்றது சரிதானே

பா விவேக்


Posted: 08 Apr 2015 05:01 AM PDT


அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள். கம்போடியாவின் அங்கோர் வாட் யுனெ...

Posted: 07 Apr 2015 09:48 PM PDT

அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்.

கம்போடியாவின் அங்கோர் வாட் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. நீங்கள் இதை பார்த்த பின்னர் இதன் கலைபாடுகளை உங்கள் வாழ்கை இறுதி வரை மறக்கமாட்டீர்கள்.
இதோ இங்கே அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்.
தகவல் # 1
அங்கோர் வாட்டை காண சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக 50% கம்போடியா வருகை தருகிறார்கள். கம்போடியர்களும் தங்களது பண்டைய நினைவுச்சின்னத்தை பெருமை படுத்தும் விதமாக 1850 ல் கம்போடிய கொடியில் அங்கோர் வாட் பதித்தனர்.
தகவல் # 2
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (1113-1150 இடையே) அங்கோர் வாட் உலகின் மிக பெரிய மத நினைவுச்சின்னமாக விளங்குகிறது.
தகவல் # 3
முதலில் ஹிந்து கோவிலாக இருந்த அங்கோர் வாட் பின்னர் 13ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாறியது. இதை கோவிலின் அமைப்பும் கட்டிட கலையும் உறுதி செய்கிறது.
தகவல்# 4
இதை கட்ட துவங்கியவர் சூர்யவர்மன் II. கட்டிமுடித்தவர் ஜெயவர்மன் VII அங்கோர் வாட் முதலில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தகவல் # 5
வியட்நாம் போரின் போது ஜாக்குலின் கென்னடி தன் வாழ்நாள் கனவான அங்கோர் வாட் உள்ளே சென்று வியந்தார்.
தகவல் # 6
அங்கோர் வாட் என்ற வார்த்தையை 'கோவில்களின் நகரம்' அல்லது 'கோயில் நகரம்' என்று மொழிபெயர்க்கலாம்.
தகவல் # 7
அங்கோர் வாட், 1992யில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது; பல பண்டைய சிலைகள் திருடப்பட்டுவிட்டன.
தகவல் # 8
அங்கோர் கோயில்களில் ஆராய மூன்று நாள் பாஸ்க்கு $ 40 செலவாகும். ஒற்றை நாள் பாஸ்ஸை $ 20க்கு வாங்க முடியும், $ 60க்கு ஒரு வாரம் நீண்ட பாஸ் கிடைக்கும்.
தகவல் # 9
முன் காலத்தில் அங்கோர் வாட்டின் அசல் வெளிப்புற சுவர் முறை 203 ஏக்கர் அல்லது 820,000 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. வெளிப்புற சுவற்றின் உள்ளே கோவில், நகரம், மற்றும் அரண்மனை உள்ளடங்கி இருக்கும். இன்று அந்த சுவர் எதுவும் காணப்படவில்லை.
தகவல் # 10
இன்று உலகில் இது போன்ற ஒரு கோவிலை கட்டி முடிப்பது சிரமமான விஷயமாக உள்ளது, ஆனால் 12ஆம் நூற்றாண்டில் எப்படி கட்டப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் வியந்து இருக்கிறார்கள்.

பா விவேக்


0 comments:

Post a Comment