Wednesday, 8 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று கட்டுக்கதை விடும் மனிதர்களே . உண்மை அது...

Posted: 08 Apr 2015 08:21 AM PDT

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று கட்டுக்கதை விடும் மனிதர்களே .

உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்

இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை

இது தான் நிதர்சனமான உண்மை
எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்

நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்

அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து
எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்
கட்டி தொங்க விட்டோம்

என்ன ஆச்சரியம் 20 வீட்டில்
18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது
இதை அதிகம் பகிறுங்கள்

நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள்
உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்

உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..

@சசி குமார்


மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,ம...

Posted: 08 Apr 2015 04:38 AM PDT

மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,மரத்தை வெட்டிய தமிழர்களை, பார்த்த இடத்திலே சுட்டு தள்ளி இருக்காங்க..

- இளையராஜா டென்டிஸ்ட்


பார்க்கிற கல்லூரி எல்லாத்துலயும் 100% placementனு போர்டு இருக்கு அப்ப தமிழ்நாட்ல...

Posted: 08 Apr 2015 02:34 AM PDT

பார்க்கிற கல்லூரி
எல்லாத்துலயும் 100%
placementனு போர்டு
இருக்கு அப்ப தமிழ்நாட்ல
வேலை இல்லாம
இருக்கவங்கெல்லாம்
ஐரோப்பால
படிச்சவங்களா
இருக்குமோ??

@யாரோ

அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்! படம் : கலாநிதி

Posted: 08 Apr 2015 02:02 AM PDT

அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்!

படம் : கலாநிதி


"அம்பானி…அதானி… டாட்டா…பிர்லா….எல்லாம் இருக்கானுக நல்லா..... வயுத்துப்பாட்டுக்கா...

Posted: 08 Apr 2015 01:50 AM PDT

"அம்பானி…அதானி…
டாட்டா…பிர்லா….எல்லாம்
இருக்கானுக நல்லா.....
வயுத்துப்பாட்டுக்காக
மரம் வெட்டப் போனவன்
மட்டும் அநியாயமாய்
சுடுபட்டுச் சாகிறான்.
பணக்காரப் பயலுகளக்
கண்டா வாலை
ஆட்டுறதும்….
ஏழைகளக் கண்டா ஏறி
மிதிக்கறதும்தான்
போலீஸ் நியதி.
அது சரி…. மரம்
"திருடுனாலே"
சுடுவீங்களாப்பா….?
அப்ப…. பேங்க்குல
பல்லாயிரம் கோடி
வாங்கீட்டு ஏப்பம்
விட்டவனை….
கோடிக்கணக்குல வரிய
ஏய்ச்சுகிட்டுத்
திரியறவனை……
எல்லாம் எப்படா சுடப்
போறீங்க…..?

அந்த 20பேரோட மொதலாளிய எப்ப சுடுவீங்க போலிஸ்கார்????

Posted: 08 Apr 2015 01:45 AM PDT

அந்த 20பேரோட
மொதலாளிய எப்ப
சுடுவீங்க
போலிஸ்கார்????

செம்மரங்களை வெட்டுவது அரசாங்கத்திற்கு பண இழப்பு என்கிறார்கள் அதனால் தேசத்திற்கு...

Posted: 08 Apr 2015 01:32 AM PDT

செம்மரங்களை
வெட்டுவது
அரசாங்கத்திற்கு பண
இழப்பு என்கிறார்கள்
அதனால் தேசத்திற்கு
பண இழப்பு ஏற்படுத்திய
அவர்களை
சுட்டுகொன்றது சரி
என்று அடித்து
சொல்கிறது ஒரு
தரப்பு!!
அப்ப...! கோடிகணக்கில்
பண இழப்பு ஏற்படுத்தும்
ஊழல்
அரசியல்வாதிகளை
மட்டும் கைது செய்து
விசாரிப்பது ஏன்?

இதுவே வேற இனத்தானுக்கு நடந்திருந்தால் இந்நேரம் இந்தியாவே சம்பித்து போயிருக்கும்....

Posted: 08 Apr 2015 12:26 AM PDT

இதுவே வேற
இனத்தானுக்கு
நடந்திருந்தால் இந்நேரம்
இந்தியாவே சம்பித்து
போயிருக்கும்..

தமிழ்நாட்டில்
தெலுங்கனுக்கு இப்படி
நடந்தால் திராவிட
கட்சிகள் துள்ளி
குதுச்சு தமிழனுக்கு
''இன வெறியன்' 'சாதி
வெறியன்'
'காட்டுமிராண்டி' என
இலவச பட்டங்கள் அள்ளி
கொடுத்திருக்கும்..

தமிழனோ.. அரசியல்
அநாதை... கேட்க நாதி
இல்லாத இனம்... அதுக்கும்
மேல மாற்றானை
ஆளவிட்டு வாழும்
அடிமை கூட்டம்...

தெருநாய்களைக் சுட்டுக்கொன்றால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் மேனகா காந்தி....

Posted: 07 Apr 2015 11:52 PM PDT

தெருநாய்களைக்
சுட்டுக்கொன்றால்
கடும் நடவடிக்கை
எடுப்போம் என்கிறார்
மேனகா காந்தி. ஆனால்,
20 தமிழர்கள் ஆந்திர
வனத்துறையால்
சுட்டுப்படுகொலை
செய்யப்படும்போதும்
கேட்க இங்கு
நாதியில்லை. காரணம்,
இங்கு நாயின்
உயிரைவிட
இழிவானது
தமிழர்களின் உயிர்!!

@கார்த்திக்

சுட்டு கொன்றால் உடம்பில் உள்ள தீக்காயம் எப்படிடா வந்தது??

Posted: 07 Apr 2015 11:38 PM PDT

சுட்டு கொன்றால்
உடம்பில் உள்ள தீக்காயம்
எப்படிடா வந்தது??


இந்திய ஜனநாயகத்தில் தீவிரவாதிகளை கூட இவ்வளவு எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக ஒரே இடத...

Posted: 07 Apr 2015 11:17 PM PDT

இந்திய ஜனநாயகத்தில்
தீவிரவாதிகளை கூட
இவ்வளவு
எண்ணிக்கையில்
ஒட்டுமொத்தமாக ஒரே
இடத்தில் கொன்று
குவிக்க வில்லை.
சாதாரண வன
குற்றத்திற்கு பல
ரவுண்ட்களில்
துப்பாக்கி பழகி
இருக்கிறார்கள். செம்மர
துப்பாக்கி சூட்டை
தமிழர்கள், தெலுங்கர்கள்
என்ற இன பாகுபாட்டில்
கோர்க்க
விரும்பவில்லை
என்றாலும், கடத்தலில்
ஒரு உள்ளூர்வாசிகள்
கூடவா ஈடுபட்டு
இருக்க மாட்டார்கள்
என்று புத்தி
யோசிக்கவே
செய்கிறது.
இந்த மரவெட்டிகளா
செம்மரத்தை கடத்தி
சீனா, ஜப்பான்,
சிங்கப்பூர், மலேசியா
வரை சேர்ப்பார்கள்?

0 comments:

Post a Comment