மலையே இல்லாத காஞ்சிபுரத்துக்குள்ள இருக்குற கோயிலுக்காக, ஐம்பது, அறுபது கிலோமீட்ட... Posted: 02 Apr 2015 12:51 AM PDT மலையே இல்லாத காஞ்சிபுரத்துக்குள்ள இருக்குற கோயிலுக்காக, ஐம்பது, அறுபது கிலோமீட்டர் தாண்டி மலை இருக்குற ஊர்ல இருந்து, வெறும் சுத்தியலையும் உளியையும் மட்டுமே வெச்சிகிட்டு... பல மாத போராட்டத்துக்கு பெறவு பெரிய பெரிய பாறைகள ஒடச்சி எடுத்து ஒடச்ச அந்த பாறைகள யானைய வெச்சி பல மைல் இழுத்து வந்து..இழுத்து வந்த யானைகளுக்கு தீனி போட காசு கொடுத்து..யானையோடு வந்த ஆளுகளுக்கு காசு கொடுத்து..கல்லு ஒடச்சவங்களுக்கு காசு கொடுத்து..கல்லு வந்து காஞ்சிபுரம் சேந்த பெறவு ஏடா கூடமா இருக்குற கல்ல சரி பண்ணுர ஆளுகளுக்கு காசு கொடுத்து..கல்லு சரியான பெறவு அதுல வேல பாக்க சிற்பிகளுக்கு காசு கொடுத்து..எல்லா வேலையும் முடிஞ்ச பெறவு எந்த ஒரு எடத்துலையும் சின்ன கீறல் கூட விழுந்துடாம திரும்பவும் யானைகள கூட்டி வந்து வேல செஞ்ச தூண சரியான இடம் பார்த்து நிறுத்தி..இப்படி பல மாசம் வேல பாத்து ஒரு மண்டபத்த எழுப்பி.. அத பாதுகாக்க அதுக்கு தனியா நிலம் ஒதுக்கி..ஒதுக்குன நிலத்துல இருந்து ஒழுங்கா பங்கு வந்து சேருதான்னு பாக்க அதுக்கு ஒரு ஆள போட்டு..அவனுக்கு தனியா கூலி கொடுத்து பல வருஷமா காப்பாத்தி வந்தா......அதுல சிமெண்ட பூசி, பெயிண்ட் அடிச்சி...இரும்பு வளையம் அடிச்சி..சிற்பங்கள சேதப்படுத்தி..அத ஐஸ்கிரீம் கடைக்கு வாடைக்கு விட்டு..அட போங்கய்யா... - Sasi Dharan  |
0 comments:
Post a Comment