Monday, 13 April 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கணவனை இழந்த கிராமத்து ஏழைப் பெண், தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி விடுவதை வி...

Posted: 13 Apr 2015 07:32 AM PDT

கணவனை இழந்த கிராமத்து ஏழைப் பெண், தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி விடுவதை விடவா, இங்கே வேறு சாதனைப் பெண்மணிகள் இருக்கப் போகிறார்கள்..

நன்றி : ப்ரணிதா செல்வி

பா விவேக்


கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா...

Posted: 13 Apr 2015 04:58 AM PDT

கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''
அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.
நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார்.
அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.
ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...! | பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...!

நன்றி : ஜெய்

பா விவேக்

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் ஏன் காசைக் கரி ஆக்குறேன்னு சொல்றவங்களுக்கு தெர...

Posted: 13 Apr 2015 04:32 AM PDT

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால்
ஏன் காசைக் கரி ஆக்குறேன்னு சொல்றவங்களுக்கு
தெரியாது இந்த காசுக்காதான்
சிலர் கரிக்கட்டை ஆகிறார்கள் என்று...

நன்றி : ப்ரணிதா செல்வி

பா விவேக்


பெற்றோர்கள் கவனத்திற்கு-: இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளு...

Posted: 12 Apr 2015 10:59 PM PDT

பெற்றோர்கள் கவனத்திற்கு-:
இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்

பகிர்ந்தவர்: ஆரோக்ய ராஜ் அரியலூர்.
நன்றி : இளையதலைமுறை

பா விவேக்


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா.. நன்றி : ப்ரணிதா செல்வி பா விவேக்

Posted: 12 Apr 2015 09:32 PM PDT

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா..

நன்றி : ப்ரணிதா செல்வி

பா விவேக்


என்றும் தமிழனின் பெருமையை பறைசாற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம்.இரண்டாம் நரசி...

Posted: 12 Apr 2015 07:21 PM PDT

என்றும் தமிழனின் பெருமையை பறைசாற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம்.இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் 7ம் நூற்றாண்டில் கட்டியது.....

நன்றி : மணி

பா விவேக்


0 comments:

Post a Comment