Monday, 13 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்... 1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகி...

Posted: 13 Apr 2015 08:04 AM PDT

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்...
1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது.


பார்க்கிற நமக்கே இப்படி இருந்தால் பயணித்த இவங்களோட பரிதாப நிலையை பாருங்க Two Gir...

Posted: 13 Apr 2015 05:22 AM PDT

பார்க்கிற நமக்கே இப்படி இருந்தால் பயணித்த இவங்களோட பரிதாப நிலையை பாருங்க
Two Girls Freak Out On Slingshot Ride



காதலில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கு இளைஞர் கூறும் சில அறிவுரைகள்...

Posted: 13 Apr 2015 05:04 AM PDT

காதலில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கு இளைஞர் கூறும் சில அறிவுரைகள்...



செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்! செல்போனைப் பயன்படுத்தும்போது க...

Posted: 13 Apr 2015 04:04 AM PDT

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!

செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.

தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.

மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.

அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.

செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.

போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.


பட்டி மன்ற ராஜா சொல்வதில் என்ன பிழை உண்டு சிரிப்புதான் ஆனால் சிந்திக்க தூண்டுகிறது

Posted: 13 Apr 2015 03:22 AM PDT

பட்டி மன்ற ராஜா சொல்வதில் என்ன பிழை உண்டு
சிரிப்புதான் ஆனால் சிந்திக்க தூண்டுகிறது



பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு...

Posted: 13 Apr 2015 02:38 AM PDT

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :
பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும்
போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.

வங்கி :
கையின் பூஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம்
குறைகிறது .மார்பக புற்று நோய்
வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல்
வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.முக்கியமான
ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும்
போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில
புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள்
தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள்குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக
முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க
பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம்
தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை
பலப்படுத்தும் .செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால்
சுரப்பை அதிகப்படுத்தும் .


எவ்வாறு மாரடைப்பு ஏற்படுகிறது என்று அறிய அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங...

Posted: 13 Apr 2015 02:11 AM PDT

எவ்வாறு மாரடைப்பு ஏற்படுகிறது என்று அறிய அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்


எவ்வாறு மாரடைப்பு ஏற்படுகிறது என்று அறிய அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்
www.indiasian.com
new 3D Medical Animation - What is a Heart Attack

ஒவ்வெரு மனிதனும் கண்டிப்பாக பாருங்கள் பகிருங்கள்!

Posted: 13 Apr 2015 02:08 AM PDT

ஒவ்வெரு மனிதனும் கண்டிப்பாக பாருங்கள் பகிருங்கள்!



Posted: 13 Apr 2015 01:53 AM PDT


ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து மனைவி மட்டுமே...!!!

Posted: 13 Apr 2015 01:45 AM PDT

ஒரு ஆண் முதுமையில் இழக்க
கூடாத சொத்து மனைவி மட்டுமே...!!!


இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க

Posted: 13 Apr 2015 01:44 AM PDT

இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க


நண்பர்கள் தயவுசெய்து படித்துவிட்டு பகிரவும் : புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம்...

Posted: 13 Apr 2015 01:41 AM PDT

நண்பர்கள் தயவுசெய்து படித்துவிட்டு பகிரவும் :

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற
விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.
தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார்.
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக
வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர்
நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, ளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்
சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. 'பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ''கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.
நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும்
இச்செய்தியை வெளியிடவில்லை .. ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப்
படுத்தி இருப்பார்கள் ....
#படித்ததில் துடித்தது ...
— feeling என் தந்தை விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்


ஆம்பளையா இருந்தா வாடா!

Posted: 13 Apr 2015 01:34 AM PDT

ஆம்பளையா இருந்தா வாடா!



உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்! உங்க வீட்டுல A/C இ...

Posted: 13 Apr 2015 12:04 AM PDT

உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்!

உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்!

நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன் இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும். மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்... ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.

'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம் இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை வைக்கும் சாதனமாக மாறுமா?

இந்தக் கேள்விக்கு... ஏ.சி. மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...

''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு போனது ஸ்பிலிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிலிட் ஏ.சி. கோளாறு காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான் முதல் தடவை. ஸ்பிலிட் ஏ.சி-யில்மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா... ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர், ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.
உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.
ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்


வெற்றிலை நோயின்றி காக்கும் கற்பக மூலிகை! நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை...

Posted: 12 Apr 2015 08:04 PM PDT

வெற்றிலை நோயின்றி காக்கும் கற்பக மூலிகை!

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும், நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் வெற்றிலை. கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில், வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை தொன்றுதொட்டு, நாம் உபயோகித்து வரும், மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம், வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:
வெற்றிலை பயன்படுத்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்து, 3.1% புரதச் சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், மலச்சிக்கல் நீங்கும்; நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால், இதனை நாக இலை என்றும்
அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட: வெற்றிலைச்சாறு, 5 மி.லி.யுடன், இஞ்சிச் சாறு, 5 மி.லி., கலந்து, தினமும் காலை வேளையில், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது. வெற்றிலை இரண்டு எடுத்து, நன்றாக கழுவி, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து, நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு: 100 மி.லி., தேங்காய் எண்ணெய், 5 வெற்றிலையை போட்டு, சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க: வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி, கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற: தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
பிற உபயோகங்கள்: வெற்றிலையை எண்ணெயில் நனைத்து, விளக்கில் வாட்டி மார்பின் மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். வெற்றிலைச் சாறுடன், சுண்ணாம்பு கலந்து, தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறு அருந்தலாம், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில், வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.


என்னை பெத்த ஆத்தா! உம் பிரிவை தாங்க முடியல்ல.... அம்மாவில் பாசமா..? கட்டாயம் மறக...

Posted: 12 Apr 2015 04:16 PM PDT

என்னை பெத்த ஆத்தா! உம் பிரிவை தாங்க முடியல்ல.... அம்மாவில் பாசமா..? கட்டாயம் மறக்காமல் பாருங்கள்



எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்! எளிய இயற்கை வைத்தியம் - 50 மரு...

Posted: 12 Apr 2015 04:04 PM PDT

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்!

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்
.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்
ஆரோக்கியமாக வாழ்வோம்


:)

Posted: 12 Apr 2015 03:26 PM PDT

:)


இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க. :)

Posted: 12 Apr 2015 01:29 PM PDT

இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க. :)


யாருக்கிட்ட இருக்கு பக்தி... தன் பேச்சால் அதிரவைத்த இளைஞன்

Posted: 12 Apr 2015 12:55 PM PDT

யாருக்கிட்ட இருக்கு பக்தி... தன் பேச்சால் அதிரவைத்த இளைஞன்



LIKE 100000

Posted: 12 Apr 2015 10:22 AM PDT

LIKE 100000


பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும் அடித்து வளர்க்காத குழந்தையும்,...

Posted: 12 Apr 2015 10:21 AM PDT

பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும்
அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது' என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.
பெற்றோர்களின் மனநிலை
குழந்தைகள் விளையாட்டுத்தனமானவர்கள். துறு துறு என்று எதையாவது செய்து அனைவரையும் கவர முயற்சி செய்வார்கள். அவர்களின் செயலை கண்டு மகிழ்ச்சியடையும் பெற்றோர் அதே குழந்தை சாதரணமாக செய்யும் செயலைக்கூட அங்கீகரிக்காமல் அடித்து துவைத்து விடுகின்றனர். எனவே குழந்தைகள் விளையாட்டுத்தனமாக செய்வதை ஏற்றுக்கொள்வது பெற்றோரின் மனநிலையைப் பொறுத்த விசயம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான சைக்காலஜி உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பெற்றேர்களின் வேலைப்பளு, அவர்களின் நேரமின்மை ஆகியவற்றிர்க்கு இடைய ஒவ்வொரு குழந்தையும் சிக்கித் தவிக்கின்றன.
விருட்சமாகும் விதைகள்
ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா. குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.
கண்டிப்பா? தண்டிப்பா?
குழந்தைகளின் செயலை கண்டிப்பது வேறு, அதே சமயத்தில் அவர்களை தண்டிப்பது வேறு. தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.
கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.
எதிர்கால சமுதாயம்
மாறாக குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.
குழந்தை உரிமை மீறல்
குழந்தைகளை அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. குழந்தைகளுக்கு பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் நம்மை அடிப்பான்.
எண்ணங்களை திணிக்காதீர்கள்
குழந்தை வளர்ப்பு பற்றி கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறியுள்ளதை இறுதியாக இங்கே நினைவு கூறலாம்
குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்கிறார் கலீல் ஜிப்ரான்.
குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது என்ற உண்மையை பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.


வீரப்பன் யார் தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்... !! ஐயா காந்தராஜ் அவர்கள் வீர...

Posted: 12 Apr 2015 10:15 AM PDT

வீரப்பன் யார் தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்... !!
ஐயா காந்தராஜ் அவர்கள் வீரப்பன் வாழ்ந்த காட்டில் நடந்த சில சுவாரஸ்ய விடயங்களை இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்... வீரப்பனை போன்ற ஒருவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இருந்திருந்தால் இன்று எமது மக்களுக்கு இந்த அவல நிலை வந்திருக்குமா ?



10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ

Posted: 12 Apr 2015 09:36 AM PDT

10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ


10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
tamilnadu private school teacher

0 comments:

Post a Comment