Wednesday, 8 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


Devar Magan dialogue: (Admin.) சிவாஜி : என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!...

Posted: 08 Apr 2015 09:10 AM PDT

Devar Magan dialogue:

(Admin.) சிவாஜி :
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?

(Memb.) கமல் :
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...

(Admn.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல ...!!!!??

(Mem.) கமல் :
மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...!
தாங்க முடியல...

(Admn.) சிவாஜி :
அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???

(Mem.) கமல் :
இல்லிங்கய்யா...
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!

(Admn ) சிவாஜி :
ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...

( Mem.) கமல் :
ஐயா...
போட்ட நியுசையே...
திரும்ப திரும்ப போடுறாங்க...

( Admn. ) சிவாஜி :
அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
நீ புதுசா போடு அப்பு...!!!

( Mem.)
குருப்ல 86பேர் இருக்காங்க...
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டுறாங்க...

(Admn.)சிவாஜி :
எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp ... னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி...
யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு... இருக்கிறவங்கதான நம்ம பயக...
நீ சொல்லிக் கோடு ....
அவங்க மெதுவாதான் போடுவாங்க ....

(Mem.) கமல் :
மெதுவானா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள வாட்ஸ் அப் காணாம போயிரும் ....

(Admn. ) சிவாஜி:
போகட்டுமே...
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...
அது இல்லனா வேற ஒண்ணு...
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான....
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....

(Mem.) கமல்:
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...

:P :P

Relaxplzz

நூதன முறை மோசடிகள்: ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான...

Posted: 08 Apr 2015 09:00 AM PDT

நூதன முறை மோசடிகள்:

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

கல் எடை: கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

சேதார மோசடி: பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.

ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.

சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.

உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் ..

நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
பசை மோசடி: ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.

Jayam Sahara


வளர்த்துக்காக... பாசம் காட்டும் இந்த குட்டிகளின்... அன்புக்கு.... முன்... கால்...

Posted: 08 Apr 2015 08:50 AM PDT

வளர்த்துக்காக... பாசம் காட்டும்
இந்த குட்டிகளின்...
அன்புக்கு.... முன்...
கால் தூசு...!!!!
.
ஆனான்....!!!!
பெற்றோர்களை...
முதியோர் இல்லத்தில்....
விட்டவன்..


தடுக்கி விழுந்தால் மட்டும் #அ, #ஆ சிரிக்கும் போது மட்டும் #இ, #ஈ சூடு பட்டால் மட...

Posted: 08 Apr 2015 08:45 AM PDT

தடுக்கி விழுந்தால் மட்டும் #அ, #ஆ
சிரிக்கும் போது மட்டும் #இ, #ஈ
சூடு பட்டால் மட்டும் #உ. #ஊ
அதட்டும் போது மட்டும் #எ, #ஏ
சந்தோசத்தின் போது மட்டும் #ஐ
ஆச்சரியத்தின் போது மட்டும் #ஒ. #ஓ
வக்கனையின் போது மட்டும் #ஔ
விக்களின் போது மட்டும் #ஃ
என்று தமிழ் பேசி மற்ற நேரங்களில் வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் சொல்லுங்கள் உங்கள் மொழி #தமிழ் என்று...

#ருசித்தது

Relaxplzz

அழகிய தமிழச்சி :)

Posted: 08 Apr 2015 08:40 AM PDT

அழகிய தமிழச்சி :)


:) Relaxplzz

Posted: 08 Apr 2015 08:30 AM PDT

:) @relaxplz

Posted: 08 Apr 2015 08:20 AM PDT

:) @relaxplz


அன்பு மற்றும் பொறுமையின் மூலம் பெரும்பான்மையான காரியங்களை சாதித்துவிடலாம்........

Posted: 08 Apr 2015 08:10 AM PDT

அன்பு மற்றும் பொறுமையின் மூலம் பெரும்பான்மையான காரியங்களை சாதித்துவிடலாம்.....

என்னதான் பொறுமையை சோதித்தாலும்..எரிச்சல் எரிச்சலாக வந்தாலும்...நம்மை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றாலும்..

அதைதாண்டிய பொறுமையின் எல்லைக்கே நாம் சென்றுவிட வேண்டும்...

முடிந்தளவு...நகைச்சுவை உணர்வோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ள முயற்சிக்கவேண்டும்...

அதைதான் துன்பம் வரும்வேளையில் சிரிங்க..என்றுகூட சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்...

வந்த துன்பம்..சோதனை வந்தேவிட்டது..... கலங்குவதாலோ.. ஆத்திரபடுவதாலோ...பதற்றபடுவதாலோ ஆகவேண்டிய நற்செயல் ஒன்றுமே இல்லை... அது மேலும் துன்பத்தையே அதிகரிக்க செய்யும்

பொறுமையின் எல்லையையும்..அன்பின் உச்சத்தையும் நாம் கையகபடுத்தும்போது...எந்த சோதனைகளையும்... சிரமத்தையும் நாம் மிக எளிதாக கடந்துவந்துவிடலாம்....

அதோடு..பிறரது நன்மதிப்புக்கும்.. பாராட்டுக்கும்..அன்பிற்கும் உரியவராகிவிடுவோம்.....வாழும் ஆசைகூட பிறந்துவிடும்.. உற்சாகமாக உணர்வோம்...

என்னதான் சோதனை காலமாக இருந்தாலும்....என்னதான் தாங்கமுடியாத சூழ்நிலையாக இருந்தாலும்....என்னதான் கட்டுபடுத்தவே முடியாத கண்ணீராக இருந்தாலும்
என்னதான் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலை என்றாலும்..

என்னதான்..நமக்கு மட்டுமேதான் இத்தகையை வேதனைகள் என்றாலும்...

என்னதான் நம்மைவிட எல்லோருமே நிம்மதியாக தான் வாழ்கிறார்கள் என்றாலும்...என்னதான்..எப்பவுமே நமக்குதான் இப்படி என்றாலும்.. என்னதான் வாழவே பிடிக்கவில்லை என்றாலும்...

என்னதான் விரக்தியின் எல்லையில் நீங்கள் நின்றாலும்..

கடைசி முயற்சியாக கொஞ்சம் அன்பையும் பொறுமையையும் கடைபிடித்துதான் பாருங்களேன்..

- செல்வி......மனநல ஆலோசகர்

:) :)

Relaxplzz

இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்கள் இதயக்கோவிலின் இசைதெய்வம் நீயல்லவா...

Posted: 08 Apr 2015 08:00 AM PDT

இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.

ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!

அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.

ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!

நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.

ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?

இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.

எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!

எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.

எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?

மரத்தவச்சவன் தண்ணீயூத்துவான்..
என்றெழுதினாய்.

எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!

இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.

இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.

இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


'மழை சிக்னல்' கிடைக்க, 'மர டவர்கள்' வேண்டும்.. #பபி

Posted: 08 Apr 2015 07:50 AM PDT

'மழை சிக்னல்' கிடைக்க, 'மர டவர்கள்' வேண்டும்..

#பபி


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....

Posted: 08 Apr 2015 07:40 AM PDT

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....


:) Relaxplzz

Posted: 08 Apr 2015 07:30 AM PDT

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 07:13 AM PDT

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக...

Posted: 08 Apr 2015 07:10 AM PDT

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்...

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்

Relaxplzz

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 07:06 AM PDT

பேட்டரியில் இயங்கும் ஆட்டோ - திருச்சி பெண் கண்டுபிடிப்பு திருச்சி மாவட்டம் திரு...

Posted: 08 Apr 2015 06:41 AM PDT

பேட்டரியில் இயங்கும் ஆட்டோ - திருச்சி பெண் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் அமுதா. பட்டதாரியான இவர், பெண்களும் இயக்கக்கூடிய வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அமுதா கூறியதாவது: கணவருடன் அடிக்கடி டெல்லி சென்று வருவேன். அங்கு பேட்டரி ஆட்டோவில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியிலும் பேட்டரி ஆட்டோவை இயக்க வேண்டும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் இங்குள்ள சாலைக்கேற்ப மழைக்காலங்களில் பாதுகாத்து கொள்ளும் வடிவமைப்பில் பேட்டரி ஆட்டோவை தயாரித்தேன்.

பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியது அவசியம். ஆட்டோவை இயக்க 4 பேட்டரிகள் தேவை. ஒரு பேட்டரி விலை ரூ.6 ஆயிரம். 8 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 25 கிமீ வேகத்தில் 5 பயணிகளுடன் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.99 ஆயிரம். வழக்கமான ஆட்டோக்களை போன்று ரிவர்ஸ் கியர், பிரேக், இன்டிகேட்டர், நைட் லைட் என அனைத்து வசதிகளும் உள்ளது.

திருவெறும்பூரிலிருந்து வேங்கூர், கூத்தைப்பார் பகுதிகளுக்கு பயணி ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு இயக்க வேண்டும். இவ்வாறு அமுதா கூறினார்.

Relaxplzz


"புதிய முயற்சிகள் - கண்டுபிடிப்புகள்"

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:33 AM PDT

;-) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:29 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:22 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:14 AM PDT

அழகு குட்டிச்செல்லம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 08 Apr 2015 06:10 AM PDT

அழகு குட்டிச்செல்லம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


“கண்ணதாசன் கடைக்கு எதிர்க்கடை போடவந்தவன் நான். ஆகவே , அவரிடம் வேலைக்குச் சேர விர...

Posted: 08 Apr 2015 06:00 AM PDT

"கண்ணதாசன் கடைக்கு எதிர்க்கடை போடவந்தவன் நான். ஆகவே , அவரிடம் வேலைக்குச் சேர விரும்பவில்லை "

இப்படி சொல்லி கண்ணதாசனுக்கு எதிர்பாட்டு பாடி , திரை உலகில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர் வாலி....

ஆனால்..அவரது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் ... சரியான வாய்ப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்தாராம் வாலி....

அந்த சமயத்தில் , ஒரு அரிய வாய்ப்பு , வாலியின் வாசல் தேடி வந்ததாம்... அது ..கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்பு...!
அப்போதுதான் இப்படிச் சொல்லி மறுத்து விட்டாராம் வாலி ....

இப்படி கண்ணதாசனை விட்டு விலகிச் சென்ற வாலி , திரை உலகில் புகழ் பெற்று விளங்கி அருமையான பாடல்களைத் தந்தபோது , அவரை வீட்டுக்கே தேடிச் சென்று வாழ்த்தி மகிழ்ந்தாராம் கண்ணதாசன்...

இதைச் சொன்னவர் வாலி...சொன்னது கவிஞர் நா.முத்துக்குமாரிடம்...!

கவிஞர் நா.முத்துக்குமாரின் ஒரு பேட்டியிலிருந்து :
"நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், " முத்துக்குமார்...என்னைய்யா... இத்தனை அருமையா எழுதிட்டே! " என்று பாராட்டுவார் வாலி.

"என்ன சார் ...இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க?" என்று நான் கேட்பேன்.

" நான் போன்லதான்யா பாராட்றேன். ஆனா ...கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?" என்று என்னிடம் நெகிழ்வுடன் சொன்னார் வாலி.."

# நா.முத்துக்குமார் சொன்னதைக் கேட்டு நானும் கொஞ்சம் நெஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன்..!

# அதனால்தான் கண்ணதாசன் மறைந்தபோது ..இப்படிச் சொல்லி இரங்கற்பா பாடினார் வாலி...

"`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"

- John Durai Asir Chelliah

Relaxplzz


"சில நிகழ்வுகள்"

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:53 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:44 AM PDT

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 05:23 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:11 AM PDT

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இர...

Posted: 08 Apr 2015 05:00 AM PDT

உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள்அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்.

தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல்அந்த நிலங்களில் ஓரிடத்தில்ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார்.
அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின்அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள்.

புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

ஒருவேளைஅப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்துமூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள்.
அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில்இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள்.

மறுபடியும் ஏமாற்றமே!அப்பா மேல் வருத்தம் வந்தாலும்அவர்கள் சரி..

மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து.,

தோண்டியது வீணாக வேண்டாம்என்று எண்ணி.,அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா.,ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயன் தான் மிகப்பெரிய புதையல்

Relaxplzz


"நீதி கதை"

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 04:53 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 04:47 AM PDT

என்ன மீறி சைக்கில எடுங்க பாப்போம்.... ;-)

Posted: 08 Apr 2015 04:36 AM PDT

என்ன மீறி சைக்கில எடுங்க பாப்போம்.... ;-)


"அனிமல் ஸ்டோரி"

0 comments:

Post a Comment