இந்த டுபாகூர் ஹோட்டல் கதைய படிங்க...!!!!
வேண்டாம்.. வேண்டாம்.. போக வேண்டாம்... மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்று உயர் தர திருட்டு அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இரண்டு பேர் சாப்பிட சென்றோம். ஒரு சாப்பாடு 90 ரூபாய் என்று இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தோம். இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்தோம். இலையை விரித்தார்கள். சாதத்தை வைத்தார்கள். இரண்டு கூட்டு வைத்தார்கள். எங்களை கேட்காமலே இரண்டு கோலா உருண்டைகள் வைத்தார்கள். குழம்புக்காக காத்திருந்தோம்.
சர்வர் : என்ன குழம்பு வேண்டும் சார்?
நாங்க : என்ன குழம்பு இருக்கு?
சர்வர் : குடல், ஈரல், தலகரி, மட்டன் சுக்கா……
என்று பெரிய பட்டியலயே சொன்னார்.
நாங்க : அதெல்லாம் வேண்டாங்க நார்மலா நீங்க குடுக்குர குழம்ப குடுங்க.
சர்வர் : இல்லங்க குழம்பு தனியாதான் வாங்கனும்
எங்களுக்கு லேசான அதிர்ச்சி.
நாங்க : அப்போ 90ரூபாய் சாப்பாடு என்பது வெறும் வெள்ளை சாப்பாடுக்கு மட்டும்தானா?
சர்வர் : ஆமா சார்
நாங்க : குழம்பு எதுவுமே குடுக்க மாட்டீங்களா?
சர்வர் : அப்படி இல்ல சார் புலிக்குழம்பு குடுப்போம்.
நாங்க : அப்ப அதையாவது குடுங்க
சர்வர் : இல்ல சார் நீங்க தனியா எதாவது குழம்பு வங்குனாதான் அதுவும் குடுப்போம்.
குழம்பு வகைகள் எல்லாம் 100 150 க்கு மேல். எதை நீங்கள் வாங்குவீர்கள். கூட்டு பொறியலை வேர லைட்டாக நக்கி விட்டோம். இனி எழுந்து போனாலும் சரியாக இருக்காது. பல்லை கடித்துக்கொண்டு ஒரு குழம்பு ஆர்டெர் செய்தோம். அது 140 ரூபாய். வெரும் வெள்ளைச் சோரு 90 ரூபாய். குழம்பு 140 ரூபாய்.
சர்வர் : உங்களுக்கு என்ன சார் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நாங்க : இல்ல ஒரு குழம்ப நாங்க பிரிச்சுக்குறோம்.
சர்வர் : இல்ல சார் அது ஒருத்தருக்குதான் சரியா வரும். உங்களுக்கு பத்தாது என்றார்.
சற்று அமைதியாக இருந்து விட்டு வேறு வழியில்லாமல் இன்னொரு குழம்பை ஆர்டர் செய்தேன். வயித்தெறிச்சலோடு சாப்பிட்டு முடித்தோம். பிறகு சர்வர் பில்லை கொண்டு வந்தார். 480 ரூபாய் இரண்டு சாப்பாடு. 5Star Hotel-ல் கூட இப்படி இருக்குமா என்மது தெரியவில்லை. சர்வரிடம்,
மிரட்டுரீங்கலேங்க. இதெல்லாம் ஓனர்கிட்ட சொல்ல மாட்டீங்கலா என்றேன்.
அவர் சலித்துக்கொண்டே சொல்லியாச்சு சார் அதுக்கு மேல நாங்க என்ன சார் பன்ன முடியும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படித்தினார்..
ஓனரிடம் பில் கொடுக்க சென்றேன். அவரிடம் பில்லை கொடுத்துவிட்டு இதுவரைக்கும் எந்த ஓட்டல்லையும் இப்படி சோற குடுத்துட்டு குழம்பு தனியா வாங்கணும்னு கேள்விப்பட்டதே இல்ல என்றேன். கையை உயர்த்தியபடி இங்க இப்படித்தான் என்று திமிராகவே சொன்னார். பல பேர் சொல்லி இருப்பார்கள் போல. கோபமாகவே சொன்னார். வயிற்றெரிச்சலுடன் வெளியேரி விட்டேன். இன்னும் அடங்க வில்லை. இதை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லலாமா? அல்லது சாதாரண விசயத்தை நான் பெருசு படுத்துகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. சரி FaceBook மூலமாகவாவது ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொள்வோம் என்று இந்த பதிவை ஏற்றம் செய்கிறேன். யாராவது ஒருத்தர் Share செய்தால் கூட வயிற்றெரிச்சல் குறையும் என்று நினைக்கிறேன். இதை பொறுமையாக padithadharku நன்றி.

0 comments:
Post a Comment