Friday, 3 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


சச்சின் தேர்ந்தெடுத்த கிராமம் குட்டி சிங்கப்பூராக மாறியது! கிரிக்கெட் ஜாம்பவான்...

Posted: 03 Apr 2015 09:00 AM PDT

சச்சின் தேர்ந்தெடுத்த கிராமம் குட்டி சிங்கப்பூராக மாறியது!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தத்து எடுத்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிராமம் புட்டம்ராஜு கண்டிகா, சிங்கப்பூர் போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியான சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நோயாளி கிராமம் போல காட்சியளித்த புட்டம்ராஜு கண்டிகாவை அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற சச்சின் கனவு கண்டார்.

அதன்படி, இந்த கிராமத்தில் கான்கிரீட் சாலைகள், சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு கிராமத்தில் குட்டி மருத்துவமனை, குழந்தைகள் கல்வி கற்க பள்ளிகூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிராமம் முழுவதும் பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிராமத்தை மேம்படுத்தும் பணிக்காக சச்சின் தனது எம்.பி.நிதியில் இருந்து ரூ.2.75 கோடியும் மத்திய அரசு ரூ.3 கோடியும் வழங்கியது. அதேபோல் அடிக்கடி பணிகளை பார்வையிட்டு தேவைப்பட்ட மாற்றங்களையும் சச்சின் செய்து வந்தார். அழுக்கடைந்த கிராமத்தை குட்டி சிங்கப்பூர் போல மாற்றிய சச்சின் இது குறித்து கூறுகையில், பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு பாருங்கள், நான் திட்டமிட்டதை விட அற்புதமான கிராமமாக மாறியிருக்கும் என்று தெரிவித்தார்.

Thanks Dinakaran


:D Relaxplzz

Posted: 03 Apr 2015 08:10 AM PDT

ஏப்ரல் 3: புகழ்பெற்ற ராணுவ அதிகாரி 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்‌ஷா பிறந்த தினம்...

Posted: 03 Apr 2015 08:05 AM PDT

ஏப்ரல் 3: புகழ்பெற்ற ராணுவ அதிகாரி 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்‌ஷா பிறந்த தினம் இன்று

1971 இந்தியா - பாகிஸ்தான் போரின் போது 14 நாட்களில் பாகிஸ்தானை சரணடையச் செய்தவர். 1962 சீனப் போரில் இந்தியா பின்வாங்கிய போது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார். 1969 இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதியானார்.


பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த ரவுடிங்க, கள்ளச்சாராயம் காய்ச்சினவங்க, கஞ்சா...

Posted: 03 Apr 2015 07:50 AM PDT

பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த ரவுடிங்க, கள்ளச்சாராயம் காய்ச்சினவங்க, கஞ்சா வித்தவங்க எல்லாம், இப்ப ரியல் எஸ்டேட் அதிபராகவும், கல்வி நிறுவனத் தலைவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் மாறி விட்டனர்.

பாவம், இந்த விவசாய மக்கள்தான் இன்னமும் பிழைக்கத் தெரியாம இருக்காங்க..


இளையராஜா. ஏ.ஆர் ரஹ்மான்.தேவா இவர்களின் இசைக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா??...

Posted: 03 Apr 2015 07:45 AM PDT

இளையராஜா. ஏ.ஆர் ரஹ்மான்.தேவா
இவர்களின் இசைக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அம்மா அம்மான்னு பாடினா அது இளையராஜா
ஹம்மா ஹம்மான்னு பாடினா அது
ரஹ்மான்
யம்மா யம்மான்னு பாடினா அது
தேவா
அம்புட்டுதேன்

:P :P

Relaxplzz

(y) Relaxplzz

Posted: 03 Apr 2015 07:30 AM PDT

தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும்...

Posted: 03 Apr 2015 06:45 AM PDT

தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்புகள் பல உள்ளன.

* முகப்பரு வறண்ட சருமம் உள்ளவர்கள் நுங்கின் நீரை தடவினாலே போதும் விரைவில் பொலிவான சருமத்தை பெறலாம்.

* நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன.

* கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. (இதுக்கெல்லாம் மாத்திரை வாங்கி திங்காம நுங்கை தின்னுங்க)

* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஆனா நம்ம ஊர்ல தாய்லாந்த விட பனைமரங்கள் அதிகம் சும்மா அங்கயும் இங்கயும் மிக மலிவா கிடைக்குற நுங்கை இன்னும் நாம் ஏளனமாக தான் பார்க்கிறோம்.

* இந்த கோடைக்கு ஒரு முறையேனும் நுங்கை ருசித்து பாருங்க.

Relaxplzz


பரிட்சையின் கடைசி நிமிடங்களில் இப்படி எழுதிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க......

Posted: 03 Apr 2015 06:40 AM PDT

பரிட்சையின் கடைசி நிமிடங்களில் இப்படி எழுதிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 03 Apr 2015 06:27 AM PDT

அரிதான புகைப்படம்...

Posted: 03 Apr 2015 06:03 AM PDT

அரிதான புகைப்படம்...


"அரிய புகைப்படங்கள்"

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 05:21 AM PDT

பூனை வளர்த்தது போதும் யானை வளர்த்தால் என்ன ? யோசனை வந்தது. மகளிடம் சொன்னேன்....

Posted: 03 Apr 2015 04:57 AM PDT

பூனை வளர்த்தது போதும்
யானை வளர்த்தால் என்ன ?
யோசனை வந்தது.

மகளிடம் சொன்னேன்.
முதலில் மருண்டாள்.

ஐயோ அப்பா...
யானையை யார் தருவார் ?

கேரளம் சென்றால்
வாங்கி வரலாம்.

பூனை என்றால் கட்டிலடி போதும்
யானை எங்கே உறங்கும் ?

வெளியிடத்தில்
கொட்டடி அமைக்கலாம்.

பூனைக்குக் கொஞ்சம்
பால்போதும்
யானைக்கு உண்ண
என்ன தருவது ?

கரும்புக் கட்டுகள்
வாங்கிப் போடுவோம்.

பூனையை நானே
குளிப்பாட்டுவேன்...
யானையை எப்படிக் குளிப்பாட்டுவேன் ?

தண்ணீர் காட்டு
தானே குளிக்கும்.

பூனை குழிதோண்டிக் கழிக்கும்
யானைச் சாணத்தை என் செய்வது ?

யானைச் சாணத்தைத்
திங்குதிங்கென்று மிதிப்போம்
கால்நோவு தீரும்.

பூனையை நான் தூக்குவேன்
யானையை என்னால்
தூக்க முடியாதே...

யானை
உன்னைத் தூக்கி
தன் கழுத்தில் அமரவைக்கும்

ஐ... யானை... யானை...

பாப்பாவின் கனவில்
வீட்டு முற்றத்தில் யானை நிற்கிறது.

யானையின் முன்காலைக்
கட்டிக்கொள்கிகிறாள்.

யானை
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுகிறது !

- கவிஞர் மகுடேசுவரன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு போயிருந்தேன்.. புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய் ஒண...

Posted: 03 Apr 2015 04:45 AM PDT

என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..

புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய்
ஒண்ணு வாங்கியிருக்காங்க...

" என்னடா பேரு..? "

" பைரவ். "

" பைரவ்னா..?!! "

" பைரவ்னா.. நாய்னு அர்த்தம்.."

" அட ... அதுக்கு நீ அதை நாய்னே
கூப்பிடலாமே..!!!? "

" கிர்ர்ர்ர்ர்...!!! "

:O :O

- Venkat Gokulathil

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 04:42 AM PDT

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 04:29 AM PDT

#இந்தியர்கள் 1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள். 2...

Posted: 03 Apr 2015 04:18 AM PDT

#இந்தியர்கள்

1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள்.

2. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணமான நாசாவில் 36% சதவித வேலை செய்யும் பணியாளர்கள் இந்தியர்கள்.

3. அமெரிக்காவில் வசிக்கும் 12%அராய்ச்சியாளர்கள் இந்தியர்கள்.

4. உலக அளவில் பல கிளைகள் கொண்ட IBM நிறுவணத்தில் பணியாற்றும் 28% பேர் இந்தியர்கள்.

5. INTEL நிறுவணத்தில் வேலை செய்யும்17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் தலை சிறந்த நிறுவணமான மைக்ரோசாப்ட microsoft நிறுவணத்தில் 34% அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்.

7. உலக பணக்காரரும், இங்கிலேந்தில் நம்பர் ஒன் செல்வந்தரும், இரும்புகளின் ராஜா என் அழைக்கப்படும் லச்சுமி மிட்டல். ஒரு இந்தியர்.

8. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 3

வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா.. " வாங்க...

Posted: 03 Apr 2015 03:45 AM PDT

வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா..

" வாங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு
போகலாம்"னு சொல்லலாம்...

அதுவே துணி துவைச்சிட்டு இருக்கும் போது
வந்துட்டா..

" வாங்க.. வந்து ரெண்டு துணி துவைச்சி
குடுத்துட்டு போங்கன்னா " சொல்ல முடியும்..?!!

:O :O

- Venkat Gokulathil

#அப்பா என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தை...

Posted: 03 Apr 2015 03:29 AM PDT

#அப்பா

என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை

நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து

உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை

நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை

மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா!

பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
ஒன்று கடவுள் இல்லையென்பது
இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 03:21 AM PDT

அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை, அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்...

Posted: 03 Apr 2015 03:10 AM PDT

அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,

அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,

அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி

அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்

கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?

அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,

அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான்

இவன்.
-Jos

:P :P

Relaxplzz

:D Relaxplzz

Posted: 03 Apr 2015 03:04 AM PDT

குளிர்ந்த தண்ணீர் என் செல்லத்திற்கு சேராது....... எண்ணெய் பலகாரம் என் மகனுக்கு ச...

Posted: 03 Apr 2015 02:50 AM PDT

குளிர்ந்த தண்ணீர் என் செல்லத்திற்கு சேராது....... எண்ணெய் பலகாரம் என் மகனுக்கு சேராது.... கசப்பான வைத்தியம் நான் சாப்டுகிறேன் ...என் தங்கத்திற்கு நல்லது..... என் பவுனு இன்னும் தூங்கல .... எனக்கும் தூக்கம் வேண்டாம்.... இன்னும் என்னெல்லாம் சொல்ல உன் தியாகத்தை.....

By நெஞ்சோடு உன் நினைவு.


"தாய்மைக் கவிதைகள்"

எங்க வீதில ஒரு பொண்ணு "மம்மீ IRON MAN வந்துட்டாரு"ன்னு கத்திட்டு ஓடுச்சு. என்னட...

Posted: 03 Apr 2015 02:45 AM PDT

எங்க வீதில ஒரு பொண்ணு "மம்மீ IRON MAN வந்துட்டாரு"ன்னு கத்திட்டு ஓடுச்சு.

என்னடா ஹாலிவுட் சூப்பர் ஹீரோ நம்ம ஊருக்கு வராரான்னு ஆர்வமா பார்த்தா இஸ்திரி தள்ளுவண்டிக்காரர் வாராரு.

போமா உன் இங்கிலீஷ்ல தீய வைக்க.. :(

- Boopathy Murugesh

வேப்பம்பழம் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Apr 2015 02:42 AM PDT

வேப்பம்பழம் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஞாபகம், அனுபவம் இருக்கா..?

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 02:31 AM PDT

:D Relaxplzz

Posted: 03 Apr 2015 02:22 AM PDT

:P Relaxplzz

Posted: 03 Apr 2015 02:15 AM PDT

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 02:09 AM PDT

ஜப்பானிய கோட்பாடு : ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் நீயும் கூட அதைச் ச...

Posted: 03 Apr 2015 02:00 AM PDT

ஜப்பானிய கோட்பாடு :

ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
நீயும் கூட அதைச் செய்யலாம்.!!

யாருமே செய்ய முடியவில்லை என்றால்
நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்.!!

இந்தியக் கோட்பாடு:

ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
அவரே அந்த வேலையைச் செய்யட்டும்.!

யாராலும் செய்ய முடியவில்லை என்றால்
நான் மட்டும் எப்படி செய்ய முடியும் ?

# இதனால்தான் ஜப்பான் ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.!

- Ganapathy Subramanian

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

0 comments:

Post a Comment