Relax Please: FB page daily Posts |
- எனது முகநூல் நண்பர் Arun Kumar AK அவர்கள். சென்ற வருடம் ஜுலை மாதம் பஞ்சாப் சென்ற...
- மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை " 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' எ...
- விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்று...
- அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் ;- by ,தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர்...
- :) Relaxplzz
Posted: 11 Apr 2015 07:10 AM PDT எனது முகநூல் நண்பர் Arun Kumar AK அவர்கள். சென்ற வருடம் ஜுலை மாதம் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அவர் கண்ட காட்சி ஒன்று அவரை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. Arun குமார் Ak- பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த வங்கி, பணம் பட்டுவாடா மற்றும் காசோலைகள் சேகரிக்கும் அணைத்து இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அவர்களில் முதியவர்கள், வாலிபர்கள், அலுவலக வேலை செல்ல தாமதம் ஆகிக்கொண்டிருக்கும் மக்கள் என அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி அங்கு வந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை. ஊன்றுகோலின் துணையோடு வந்த அவர், வரிசையில் நிற்கும் வயதானவர்களிடம் சென்று அவர்கள் இடத்தில் தான் நிற்பதாகவும், அவர்களை சென்று சிறிது நேரம் அமரும்படியாகவும் கூறினார்.சம்பந்தப்பட்ட நபரின் turn வந்தவுடன் உரியவர்களை அழைத்து நிற்கவைத்து விட்டு, அடுத்த வயதான நபரை நோக்கி செல்கிறார். இந்த வேலையை அவர் செய்வதற்கு நபர் ஒருவரிடம் பத்து ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கிறார். சேவை பெற்றவர்களும் இவருக்கு இன்முகத்தோடு பணத்தை கொடுத்துவிட்டு நன்றியும் சொல்லிவிட்டு சென்றனர். சிலரிடம் இருந்து ஆசிர்வாதமும் கிடைத்தது. எனக்கு இந்தி மொழி சரளமாக பேச வரும் என்பதால் அவரிடம் சென்று பேச தொடங்கினேன். முதலில் தயங்கிய அவர், பின்னர் பேச ஆரம்பித்தார். இந்த வேலையை அவர் 3 வருடமாக செய்து வருகிறாராம். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் வேறு வேலைக்கு செல்ல முடியவில்லையாம். உடலில் ஊனம் வேறு. என்ன இருந்தாலும் சம்பாதித்து ஆகவேண்டும் என்ற குடும்ப கட்டாயம். அவரே யோசித்து மனதின் உறுதியோடு இந்த வேலையை செய்து வருகிறாராம். தனியார் வங்கி என்பதால் உரிய அனுமதி பெற்றே இதை செய்கிறாராம். ஒரு நாளைக்கு சுமார் 300 - 400 ரூபாய் வரை சம்பாதித்து செல்வதாக சொன்னார். தனித்துவம் மிக்க இந்த மனிதனிடம் அந்த கணத்தில், பேச கண்ணீரை தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை...........!!!!!!!! இன்னும் என் ஆச்சரியம் முடிந்துவிடவில்லை.....!!!! முழுமையாக நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.....!!!! இவர் தன்னை போன்ற மாற்று திறனாளிகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கும் இதே வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார். இவரிடம் சுமார் 80 மாற்று திறனாளிகள் மிகவும் பரபரப்பாக இயங்கும் 20 வங்கிகளில் வேலை செய்வதாக கூறியதை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போனேன்...!!! அவர்களுக்கு இவர் மாத சம்பளம் கொடுப்பதில்லையாம். பணியாட்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் மாதம் 1000 ரூபாய் மட்டும் இவர் அவர்களிடம் இருந்து பெற்று கொள்வாராம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு : முதலில் இவரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மன உறுதி மற்றும் பணம் ஈட்டுவதில் புதிய முயற்சி. இரண்டாவதாக தான் புதுமையாக முயற்சி செய்து வெற்றி பெற்ற பணம் ஈட்டும் முறையை தன்னை போன்ற மற்ற மாற்று திறனாளிகளுக்கும் கற்று கொடுத்து அவர்களின் வாழ்விலும் வெளிச்சம் காட்டியது. நெஞ்சை நிமிர்த்தி சர்தாருக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்துவிட்டு கிளம்பினேன்...!!! My Doubt- இந்த உலகில் எந்த சூழ்நிலையிலும் பிட்சை எடுக்காதவர்கள் சர்தாஜிகள், கதிரடிக்கும் நிலங்களை சதுரடிக்கு விலை பேசாதவர்கள் சர்தாஜிகள். இவர்கள் முட்டாளா? இல்லை இவர்களை முட்டாள்களாக கிண்டலடிக்கும் நாம் முட்டாள்களா.. ----------------------------------------------------------------------- முகத்தில் அறையும் உண்மை. என் 16 வயதிலிருந்து 24 வயது வரை என்னுடைய நெய்பராகவும் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் ஒரு சர்தார்ஜிதான் இருந்தார். பிச்சை எடுக்காதது மட்டுமல்ல அவர்களின் மேல் கிரிமினல் குற்றங்களும் போலீஸ் ரெக்கார்டில் இருக்காது. இவர்களைப் போல் நம்மூர் நரிக் குறவர்கள். அவர்கள் தங்களிடமிருக்கும் ஊசி பாசி விற்று வாழ்வார்களே தவிற திருடியோ பிக் பாக்கெட் அடித்தோ வாழ மாட்டார்கள். இவர்கள் மேலும் போலீஸ் கேசே இருக்காது. அரசியல்வாதிகளையும் அவர்களின் அல்லக் கைகளையும் இந்த மேன்மையாளர்களுடன் நினைத்து பார்க்கும் போது காரி உமிழத்தான் தோன்றுகிறது.. //Arun Bhaskar // via Page உன்னை அறிந்தால். Relaxplzz |
Posted: 10 Apr 2015 06:00 PM PDT மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை " 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள். கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது. மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்.. "நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?" "உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" .. அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.." நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!" Relaxplzz |
Posted: 10 Apr 2015 10:10 AM PDT விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான். 'ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!' ஒரு பயணி நின்றார். பாராசூட் என்ன விலை? ரெண்டாயிரம் ரூபாய் ஸார் சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….? "பணம் வாபஸ் ஸார்" // நீ பொழச்சிக்குவ டா பொழச்சிக்குவ // :P :P Relaxplzz |
Posted: 10 Apr 2015 10:00 AM PDT அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் ;- by ,தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் ) 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ... 2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ??? 3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் .. 4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் .. 5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.. 6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் .. 7) அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் .. 8) வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் .. 9) தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் .. 10) சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் .. இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலையும் கெட்டு விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ... இது தான் உண்மை! இது தான் உண்மை!! இது தான் உண்மை!!! - - பொறுப்பும் ! பொதுநலனும் ! Relaxplzz ![]() |
Posted: 10 Apr 2015 09:55 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment