Relax Please: FB page daily Posts |
- ஹா ஹா.. க்யூட் <3
- ஆப்பிளில் அழகிய வாத்து.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- எறும்பினை கொல்வது எப்படி? [ 12 மதிப்பெண்கள் ] 1. முதலில் சர்க்கரையுடன் மிளகாய்...
- "என் மகன் திறமையானவனாக இருந்தால் அவனுக்கான பணத்தை அவனே சம்பாதித்துக் கொள்வான். த...
- மிஸ்டுகால் கொடுத்தால் பாஜக உருப்பினர் ஆகலாம்னு சொல்றது உண்மையா சார்? - சிவ சிவா...
- பெற்றோர் திட்டியதால் கிணற்றில் குதித்த மாணவி - செய்தி அப்படி பார்த்தா நாங்கல்லா...
- இந்த மிட்டாயை விளையாடிய பின்பு கடித்து சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்...
- :) Relaxplzz
- :D Relaxplzz
- கல்யாணம் பண்ணிப்பார்... ;-) உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே...
- அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!! ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று செ...
- மனிதன் நிர்வாணமாய் இருந்த போது இயற்க்கை மானமுடன் இருந்தது, மனிதன் நாகரீகம் அடைந்...
- இப்படி ஒரு பதிவு போடணும்னு தான் ரொம்பநாள் ஆசை....இப்பதான் சரியான நேரம் வந்திருக்...
- நாங்க ரெண்டுபேரும் க்யூட் தானே... ;-)
- :) Relaxplzz
- குடி மக்களின் கவனத்திற்கு... :P
- சின்ன வயசில பள்ளிக்கூடம் படிக்கும் போது பக்கத்தில இருக்கிற நண்பர்கள் நான் வந்த உ...
- தானே ஒரு குழந்தையாக இருந்தாலும், தன் தம்பி பாப்பாவையோ... தங்கச்சி பாப்பாவையோ......
- :) Relaxplzz
- நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே ச...
- தன் சொத்து முழுவதையும் நன்கொடையாக அளித்தார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்
- :) Relaxplzz
- " ஐ லவ் யூ " சொல்லலாமா.? வேண்டாமானு ரொம்ப நாளா மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க...
- :) Relaxplzz
- நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..! #######################################...
- :) Relaxplzz
- குழந்தைகள் ஏப்ரல் ஃபூல்ன்னு சொல்லிட்டு கைக்கொட்டி சிரிக்கும் அழகிற்காகவேனும் இன்...
- எப்பா சென்ட்ரல் கவர்மெண்ட் நீங்க ரயில்வே ஜங்சன்ல இலவச WIFIலாம் வைக்க வேண்டாம் மு...
ஹா ஹா.. க்யூட் <3 Posted: 01 Apr 2015 09:40 AM PDT |
Posted: 01 Apr 2015 09:35 AM PDT |
Posted: 01 Apr 2015 09:30 AM PDT |
Posted: 01 Apr 2015 09:20 AM PDT |
Posted: 01 Apr 2015 09:10 AM PDT எறும்பினை கொல்வது எப்படி? [ 12 மதிப்பெண்கள் ] 1. முதலில் சர்க்கரையுடன் மிளகாய் பொடியை நன்றாக கலந்து, அதை எறும்பு புற்றின் அருகே வைக்கவும். 2. காரமான சர்க்கரையை சாப்பிட்டதால் நீர் அருந்த தண்ணீர் தொட்டியை தேடி எறும்பு வரும். அப்போது தெரியாமல் பின்னால் இருந்து தொட்டிக்குள் தள்ளி விடவும். 3. தண்ணீரில் மூச்சு திணறினாலும் சமாளித்து மேலே வரலாம். 4. அப்படி தப்பித்து வந்தால், உடல் நனைந்ததால், ஈரத்தை காய வைக்க அது நெருப்பை தேடி வரும். 5. அந்த நேரம் நெருப்பில் வெடிகுண்டை போடவும். 6. அந்த வெடிகுண்டு வெடித்ததில் எறும்புக்கு பலத்த காயம் ஏற்படலாம். 7. அப்போது அதை மருத்துவமனையில் சேர்க்கவும். 8. தீவிர சிகிக்சை பிரிவில் கண்காணிக்கவும். 9. ஒளிந்து நின்று யாருக்கும் தெரியாமல் எறும்புக்கு வைத்து இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விடவும். 10. இப்போது மூச்சு காற்றுக்கு திணறும் எறும்பு தானாகவே சாகலாம். 11. அப்படி சாகாவிடில், தலையணையை எடுத்து அதன் மேல் வைத்து அழுத்தினால் நிச்சயம் சாக வாய்ப்புண்டு. நீதி - 12 மார்க் வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் நாங்க கதை விடுவோம். :P :P Relaxplzz |
Posted: 01 Apr 2015 09:00 AM PDT "என் மகன் திறமையானவனாக இருந்தால் அவனுக்கான பணத்தை அவனே சம்பாதித்துக் கொள்வான். திறமை இல்லாதவனாக இருந்தால், என்னுடைய பணத்தை விரயம் பண்ணுவான்" நடிகர் ஜாக்கி சானை சிறந்த நடிகர் வரிசையை விடவும் சிறந்த சிந்தனையாளர்கள் வரிசையில்தான் வைக்கவேண்டும்.... குழந்தைகளை உடல்-மன-அறிவு நலத்துடன் வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அதற்கு மேலாக சொத்துரிமை என்ற பெயரில் வாரிசுகளுக்கு அளிக்கப்படும் பணம் யாவும் அடுத்த தலைமுறையைச் சீரழிக்க மட்டுமே பயன்படும். உழைப்பில்லாமல் கிடைக்கும் பணத்தின் அருமை மனிதனுக்கு ஒரு போதும் தெரியப்போவதில்லை. அதோடு இப்படி சலுகைகளுடன் வரும் இளைஞனை, நியாயமான உழைப்பில் வரும் இளைஞன் எதிர்கொள்ளும் போது எல்லா வகையிலும் அங்கு பாதிப்பு நேருவதைக் காண முடிகிறது. எனவே சொத்துக்களை வாரிசுக்களுக்கு கொடுப்பது எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு மன நோய் என்ற தெளிவு வரவேண்டும். via Ilangovan Balakrishnan. Relaxplzz ![]() |
Posted: 01 Apr 2015 08:50 AM PDT |
Posted: 01 Apr 2015 08:45 AM PDT பெற்றோர் திட்டியதால் கிணற்றில் குதித்த மாணவி - செய்தி அப்படி பார்த்தா நாங்கல்லாம் கடல்ல தான் குதிக்கணும்... - Boopathy Murugesh |
Posted: 01 Apr 2015 08:40 AM PDT |
Posted: 01 Apr 2015 08:30 AM PDT |
Posted: 01 Apr 2015 08:20 AM PDT |
Posted: 01 Apr 2015 08:10 AM PDT கல்யாணம் பண்ணிப்பார்... ;-) உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்... ராத்திரியின் நீளம் குறையும்... அதிகாலையின் கொடூரம் புரியும்.. உனக்கும் சமைக்க வரும்... சமையலறை உனதாகும்.. ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்.. பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்.. ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர், மிக்சி கண்டுபிடித்தவன் தெய்வமாவான். கையிரண்டும் வலிகொள்ளும்... கண்ணிரண்டும் பீதி கொள்ளும்... கல்யாணம் பண்ணிப்பார்... ;-) தினமும் துணி துவைப்பாய்... மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. . காத்திருந்தால். ...'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்... வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்.... வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது - ஆனால் வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய் வெளியே பீலா விடுவாய்... கார் வாங்கச்சொல்லி கட்டியவள் வயிற்றில் மிதிக்க, கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்க, வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய். .. இந்த மானம், இந்த வெக்கம் , இந்த சூடு, இந்த சொரணை, எல்லாம் கட்டிய நாளோடு கழட்டி வைத்து விடுவது தான் கொண்டவளை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்... கல்யாணம் பண்ணிப்பார்... ;-) இருதயம் அடிக்கடி எதிர்த்துப் பேசத் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் மட்டுமே உனது குரல் ஒலிக்கும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்... எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில் உனது கைகள் கிழிக்கும்... கழுத்து நரம்பு புடைக்கும்... குருதிக் கொதித்து எரிமலையாய் வெடிக்கக் காத்திருக்கும்... - ஆனால் உதடுகள் மட்டும் ஃபெவிகாலைவிட அழுத்தமாக ஒட்டியிருக்கும்... பிறகு.... "என்ன அங்க சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில் சப்த நாடியும் அடங்கிவிடும்... கல்யாணம் பண்ணிப்பார்... ;-) சப்பை பிகர் கூட செட்டாக விட்டாலும் , சாதி சனம் கூட சட்டை செய்யா விட்டாலும்.. உறவுகள் கூட உதவாக்கரை என்றாலும்.... செட்டான ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர் எழுதிவைத்து ஓடிப்போனாலும்.. . நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல விட்டுவிட்டு போனாலும விழித்து பார்க்கையில் சரக்கடித்த போதையில் தெருவில் கிடந்தாலும்... கல்யாணம் பண்ணிப்பார்... ;-) மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் இதில் ஏதேனும் ஒன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்... - Lathan GV @ Relaxplzz |
Posted: 01 Apr 2015 08:00 AM PDT அறிந்து கொள்ள வேண்டிய பஞ்சங்கள் !!! ஐந்து என்பது பாஞ்ச் என்று சொல்லப்படுகிறது. எனவே ஐந்து பொருட்கள் அடங்கியவற்றை பஞ்ச என்ற வார்த்தையுடன் இணைத்து அழைக்கிறோம். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தும் அடங்கியதுதான் பஞ்ச பூதங்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்தும் சேர்ந்தது பஞ்ச இந்திரியம் வாழைப்பழம், சர்க்கரை, தேன், நெய், பேரிச்சம் பழம் இவை ஐந்தும் சேர்ந்ததுதான் பஞ்சாமிர்தம். நாள், நிதி, யோகம், கரணம், நட்சத்திரம் என்ற ஐந்தையும் அறியக் கூடியதைத்தான் பஞ்சாங்கம் என்று குறிப்பிடுகிறோம். முத்து, வைரம், மரகதம், நீலம், பொன் ஆகிய ஐந்தும் சேர்ந்தால் பஞ்ச ரத்தினம். தர்மன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர். ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுக விளக்கு என்று அழைப்பர். ஜீலம், சீனாப், ரவி, சட்லஜ், பியாஸ் ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது. Relaxplzz ![]() |
Posted: 01 Apr 2015 07:50 AM PDT |
Posted: 01 Apr 2015 07:45 AM PDT இப்படி ஒரு பதிவு போடணும்னு தான் ரொம்பநாள் ஆசை....இப்பதான் சரியான நேரம் வந்திருக்கு... . . . . . . . . . . . . . . . #April_Fool :P :P |
Posted: 01 Apr 2015 07:40 AM PDT |
Posted: 01 Apr 2015 07:30 AM PDT |
Posted: 01 Apr 2015 07:20 AM PDT |
Posted: 01 Apr 2015 07:10 AM PDT சின்ன வயசில பள்ளிக்கூடம் படிக்கும் போது பக்கத்தில இருக்கிற நண்பர்கள் நான் வந்த உடனே ஏலே!! அந்த சுவத்தில பல்லி, உங்க அப்பா பள்ளிக்கூடம் வந்திருக்காருன்னு சொல்லி ஏப்ரல்ஃபூல் காப்பித்தூள்ன்னு ஏமாத்துவாங்க அப்ப தான் இன்னைக்கு ஏப்1ன்னு தெரியும் , அது போக ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டு இருக்கிற வெள்ள சட்டைல பேனா இங்க் மையால் முதுகில அடிப்போம் //இன்னைக்கு முட்டாள் தினம் இல்ல ,பள்ளி பருவத்த நினைத்து பார்த்தால் மகிழ்ச்சினான தினம் தான் - Rockét Märéés Relaxplzz |
Posted: 01 Apr 2015 07:00 AM PDT |
Posted: 01 Apr 2015 06:52 AM PDT |
Posted: 01 Apr 2015 06:52 AM PDT நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும். மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது. Relaxplzz ![]() "உணவே மருந்து" - 2 |
Posted: 01 Apr 2015 06:40 AM PDT |
Posted: 01 Apr 2015 06:37 AM PDT |
Posted: 01 Apr 2015 06:20 AM PDT " ஐ லவ் யூ " சொல்லலாமா.? வேண்டாமானு ரொம்ப நாளா மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கறவங்க... இன்னிக்கு போயி தாராளமா சொல்லிடுங்க... இதை கேட்டுட்டு அந்த புள்ள சந்தோஷப்பட்டா... சக்சஸ்...!!! ஒரு வேளை கோவப்பட்டா... " யேய்.. சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்பா " னு சமாளிச்சிக்கலாம்... எப்பூடி..?!! :D :D - Venkat Gokulathil Suriyan Relaxplzz |
Posted: 01 Apr 2015 06:12 AM PDT |
Posted: 01 Apr 2015 06:02 AM PDT நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..! ################################################# வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..! வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!! நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..! நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..! இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்..! மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது. இப்படி ஒன்றுதான் இது இவன் செய்யும் லுல்லுல்லாயிக்கெல்லாம் "சாமி கண்ணைக் குத்தும்" தரத்திலான விஞ்ஞானக் காரணம் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த மோசடி வேலைகளில் இறங்கும் நேரத்தில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைச் செய்து கொடுதாலாவது தேசம் உருப்படும். இப்பல்லாம் பொய்யை சொல்லுபவர்கள் கொஞ்சம் அறிவியலில் உள்ள பெயர்களை சேர்த்து சொல்லி உண்மைப்போல் பரப்புறார்கள் .உஷார் உஷார் . அறிவியல் உண்மை என்றால் மற்ற நாட்டில் இதை ஏன் பயன்படுத்த வில்லை. Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 01 Apr 2015 05:58 AM PDT |
Posted: 01 Apr 2015 05:50 AM PDT |
Posted: 01 Apr 2015 05:45 AM PDT எப்பா சென்ட்ரல் கவர்மெண்ட் நீங்க ரயில்வே ஜங்சன்ல இலவச WIFIலாம் வைக்க வேண்டாம் முதல்ல இலவச கொசுவர்த்தி வைங்கயா போதும் !! முதல் ப்ளாட்ஃபார்ம்ல இருந்து நாலாவது ப்ளாட்ஃபார்ம்க்கு தூக்கிட்டு போயிடும் போல இந்த கொசு - Guru Prabhakaran |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment