Friday, 24 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


நம்பினால் நம்புங்கள் ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் - இவை இரண்டுக்கும்ரியல் ரீதியாகவோ,...

Posted: 24 Apr 2015 09:03 AM PDT

நம்பினால் நம்புங்கள்

ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் - இவை இரண்டுக்கும்ரியல் ரீதியாகவோ, வயது காரணமாகவோ இறப்பில்லை. யாரேனும் கொன்றால்தான் சாகும்!

*சாக்லெட் சாப்பிடுகையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் அதிலுள்ள phenylethylamine எனும் ஹார்மோன். இதே ஹார்மோன்தான் காதல் வயப்படுகையிலும் சுரக்கிறது!

*தும்மல் ஏற்படும் அந்த நொடிப்பொழுதில், இதயம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளும் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன.

*முத்தமிடும்போது, மூளையில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே இருவருக்கான பந்தத்தை உறுதிப்படுத்தும் உணர்வை அளிக்கிறது.

*1904ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த உலகப் பொருட்காட்சியில்தான், கோன் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது.

*இறந்த பிறகும் தலைமுடியும் நகங்களும் வளரும் என்பது மாயையே. உடல் உலர்வதால்தான் இப்படித் தோன்றுகிறது.

*மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வெதுவெதுப்பான நிறங்களுக்குப் பசி தூண்டும் தன்மை உண்டு. அதனால்தான் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இந்த நிறங்கள் ஜொலிக்கின்றன.

*ஆத்ம நண்பர்களால் தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் டெலிபதி முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

*கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை லேசாகச் சுருங்கும். மீண்டும் பழைய அளவை அடைய 6 மாதங்கள் ஆகும்.

*துணிகளில் படிந்துள்ள ரத்தக்கறையை கோக கோலா கொண்டு நீக்க முடியும்!

*1933ல் 'மண்டா ரே' எனும் அரிய வகை மீன் பிடிக்கப்பட்டது. அதன் எடையோ 2,500 கிலோவுக்கும் அதிகம். அகலமோ 20 அடி!


நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்...

Posted: 24 Apr 2015 08:30 AM PDT

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு.

பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.

நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.


என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய் ஆல...

Posted: 24 Apr 2015 08:03 AM PDT

என்னை கவர்ந்த பதிவு.....
ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி....
விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு...
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு..
கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு...
திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது..
சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு...
அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது...
பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு...
விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு...
ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் ....
எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...

அப்பா வாங்கி கொடுத்த முதல் சைக்கிள் மறக்க முடியுமா ?

Posted: 24 Apr 2015 08:00 AM PDT

அப்பா வாங்கி கொடுத்த முதல் சைக்கிள்

மறக்க முடியுமா ?


Posted: 24 Apr 2015 07:17 AM PDT


Posted: 24 Apr 2015 07:16 AM PDT


திரிஷா கேரளாவில் போட்ட எண்ணெய் க் குளியல் கண்டு மகிழுங்கள்

Posted: 24 Apr 2015 07:11 AM PDT

திரிஷா கேரளாவில் போட்ட எண்ணெய் க் குளியல் கண்டு மகிழுங்கள்


திரிஷா கேரளாவில் போட்ட எண்ணெய் க் குளியல் கண்டு மகிழுங்கள்
www.indiasian.com
supper medicine Oil Massage in kerala

Posted: 24 Apr 2015 06:57 AM PDT


பிடிக்குமா ?

Posted: 24 Apr 2015 06:30 AM PDT

பிடிக்குமா ?


Posted: 24 Apr 2015 05:03 AM PDT


இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....? 1. யாரையாவது பிடிக்க போகும் போது வ...

Posted: 24 Apr 2015 05:03 AM PDT

இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....?
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா....?
2. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...?
3. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ன்னு எழுதுறோம்..? Numberல 'O'ங்கிற எழுத்தே இல்லையே..?
4. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே… நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா...?
5. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா...?

Posted: 24 Apr 2015 04:57 AM PDT


என் தங்கச்சி பாப்பாவை பிடிச்சிருக்கா ?

Posted: 24 Apr 2015 04:30 AM PDT

என் தங்கச்சி பாப்பாவை பிடிச்சிருக்கா ?


இந்த கார்ல இருக்கிற மாற்றத்தைப் பார்த்தால் ஷாக் ஆவிங்க வீடியோ இணைப்பு

Posted: 24 Apr 2015 04:11 AM PDT

இந்த கார்ல இருக்கிற மாற்றத்தைப் பார்த்தால் ஷாக் ஆவிங்க வீடியோ இணைப்பு


இந்த கார்ல இருக்கிற மாற்றத்தைப் பார்த்தால் ஷாக் ஆவிங்க வீடியோ இணைப்பு
www.indiasian.com
technology Unbelievable Color changing car Prank

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..! 1. கோடை காலத்தில் மதிய உண...

Posted: 24 Apr 2015 04:02 AM PDT

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!
1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்.

Posted: 24 Apr 2015 02:30 AM PDT


Posted: 24 Apr 2015 01:27 AM PDT


நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ

Posted: 24 Apr 2015 01:11 AM PDT

நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ


நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ
www.indiasian.com
how heroines behave in dressing room! funny video

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை த...

Posted: 24 Apr 2015 01:03 AM PDT

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.
"நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.
அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,
"அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?".
அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,
கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.
ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை".
அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.
குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

நான் கொஞ்சம் பிசி... அப்புறமா பேசுங்க...

Posted: 24 Apr 2015 12:30 AM PDT

நான் கொஞ்சம் பிசி... அப்புறமா பேசுங்க...


Posted: 24 Apr 2015 12:10 AM PDT


Posted: 24 Apr 2015 12:09 AM PDT


உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இ...

Posted: 24 Apr 2015 12:03 AM PDT

உண்மை வரிகள்.....
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் எனசொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ?
4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.
6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..
7. காதலித்து பார்… கழிவறையில் கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து பார்… அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்…!!
8. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..!
9. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல…..

கிராமத்து பெண்களின் தேசிய விளையாட்டு...

Posted: 23 Apr 2015 10:30 PM PDT

கிராமத்து பெண்களின் தேசிய விளையாட்டு...


இராணுவ யுத்த விமானங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள்

Posted: 23 Apr 2015 10:11 PM PDT

இராணுவ யுத்த விமானங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள்


இராணுவ யுத்த விமானங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள்
www.indiasian.com
american Military Aircraft Crashes Compilation

நம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு...

Posted: 23 Apr 2015 09:27 PM PDT

நம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு கூட நச்சத்திர அந்தஸ்து பெற்ற ஆஸ்பத்திரியில் வைத்து தான் போச்சி சொகமா வாழ்ந்து பழக்கப்பட்டவன் மேலோகத்திலும் அதே சுகம் கிடைக்குமுன்னு எதிர்பார்த்து காத்திருந்தான்
நம்ம ஊரு அரசாங்க ஆபிசா இருந்தா தள்ள வேண்டியத தள்ளி வாங்க வேண்டியத வாங்கிடலாம் எமலோகத்தில் அது நடக்குமா ஆசாமி கிங்கிதர்களிடம் தங்குறதுக்கு சின்ன ரூமா இருந்தா போதும் கண்டிப்பா ஏசி மாட்டுங்க ஒரு டிவி இருந்தா பொழுது போக்கா இருக்கும் சாப்பிட வேளைக்கு ஒன்னா விதவிதமா தாருங்க எல்லாத்துக்கும் பணத்த செட்டில்மென்ட் செய்யிறேன் என்று சொல்லி பார்த்தான் அவன் பேச்ச காதில் வாங்க அங்கு யாருமில்ல
வரவே மாட்டேன் என்று அடம்பிடிச்சவனை இழுத்துக்கொண்டு எமதர்மன் முன்பு விட்டாங்க ஆசாமிக்கு எமனை பார்த்தவுடன் நடுக்கம் வந்திருச்சு ஐயா எசமானரே நான் தெரியா தனமா தப்புதண்டா பண்ணியிருக்கலாம் ஆனா கொடுமையான தப்பு ஏதும் நான் பண்ணவே இல்ல ஏன்னா நான் அமைச்சரோ அதிகாரியோ இல்ல ஒரு ரூபா பொருள இரண்டு ரூபாவுக்கு வித்த சாதரண வியாபாரி என்று சொல்லி அழுதே விட்டான்
எமனுக்கு அவனை பார்த்ததும் பாவமா இருந்திச்சி ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடேசியில் மனுசனையே கடிச்ச எத்தனையோ பயல்கள் நான் செஞ்சது தப்பே இல்ல அத்தனையும் தர்மம்னு வாதாடுறான் இவன் பாவம் செய்த தப்ப ஒத்துகிட்டான் அதுக்காக இவனுக்கு எதாவது ஒரு சலுகை காட்டலாம் என்று சிந்திச்சான்
சிந்தனை செஞ்சி கடேசியா ஒரு முடிவுக்கு வந்த எமன் எண்டா மனுஷ பயலே எதோ தெரியாத்தனமா உண்மைய பேசிபுட்டே அதனால தண்டனையா குறைக்க ஒரு வாய்ப்பு தாரேன் என்று சொன்னான் நம்மாளுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு அப்பாடா இந்த எமன் பாக்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிறான் உண்மையிலே இவனுக்கு நிறைய இறக்க சுபாவம் இருக்கு அப்படின்னு மனசுல ஒரு கணக்கு போட்டு இன்னும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி எமனோட மனசுல இடம்பிடிச்சிடலாம் என்று ஆசைப்பட்டு நீங்க நல்லா இருக்கணும் எசமானே என்றான்
எமதர்மனும் தொண்டையை செருமி சரிபடுத்திக்கிட்டு நீ பூமில கொஞ்சமேனும் நிறைவா வாழ்ந்திருந்தால் நான் உனக்கு சலுகை காட்டுவேன் அப்படி நீ வாழ்ந்திய இல்லையா என்பததை தெரிஞ்சுக்க சில கேள்வி கேட்ப்பேன் என்றான் நம்மாளுக்கு பயம் ஜாஸ்தியா ஆயிடிச்சு பள்ளிக்கூடத்துல வாத்தியாருங்க கேள்வி கேட்கிறாங்க என்று அந்த பக்கமே போகாம இருந்த நாம இப்போ வகையா மாட்டிகிட்டோம் என்று திருதிருவென்று விழித்தான் எமனும் கேள்வி கேட்க ஆரம்பித்தான் நீ பூமில யார் மேலையாவது உண்மையான அன்பு வச்சிருந்தியா என்று கேட்டான் நம்ம ஊரு நீதிபதிங்க கேள்வி கேட்டா பொய்சொல்லி தப்பிக்கலாம் எமனிடம் அது நடக்குமா அதனால இவன் இல்லை சாமி அப்படின்னு உண்மைய சொன்னான்
சரி போனா போகுது உனக்கு நெருங்கிய நட்புன்னு யாரிடமாவது சந்தேகமே படாமல் பழகி இருக்கியா
மன்னிக்கவும் சுவாமி எங்க ஊருல சந்தேகப்படாம யார்கிட்டேயும் பழக முடியாது மீறி பழகினா தூங்கும் போது தலையில கல்லை தூக்கி போட்டுடுவாங்க
சரி மனுசங்ககிட்டதான் அன்பு வைக்கல தோழமையா பழகல எதாவது மிறுகங்கள் கிட்டையாவது அன்பு வச்சிருந்தியா
நாய் பூனகிட்ட பழகினா அலர்ஜி வந்திடும் எசமான்
ஓ! அப்படியா சங்கதி இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போயிடிச்சே நாளைக்கு முதல் வேலையா எறும மாட்டை வித்துவிடுகிறேன் என்று சொன்ன எமதர்மன் அடுத்த கேள்விக்கு போனான் எதாவது அழகான ஓவியம் இனிமையான பாடல் இப்படி எதாவது ஒன்றையாவது ரசிச்சி இருக்கியா என்று கேட்டான்
சும்மா பேப்பருல கிருக்குறதும் காட்டு கத்தலா கத்துறதும் எனக்கு சுத்தமா பிடிக்காது என்று இவன் பதில் சொன்னான்
உங்க பூமியில ஆறு குளம் அறுவி மலை பறவை என்று ஏராளமான அழகுகள் உண்டே அதையாவது பார்த்து ரசிக்கும் பழக்கம் உண்டா
டிவில காட்டினா பார்ப்பேன்
அடப்பாவி நீ செத்து எத்தனையோ நாளாகி விட்டதே இப்போதுதான் இங்கு வந்தாயா உனக்கு சலுகை காட்டினால் எமதர்மன் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கோபமாக எழுந்து போய்விட்டானாம் எமன்
நாமும் அந்த மனிதனை போலத்தான் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம் கண்ணுக்கு எதிரே அழகான ரோஜா தோட்டம் இருந்தாலும் அதை ரசிக்காமல் ரசிக்க புத்தி இல்லாமல் வானத்தில் இருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்க போவதாக கற்பனையில் ஆழ்ந்து எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்
வாழ்க்கை அன்பில் இருக்கிறது
வாழ்க்கை தோழமையில் இருக்கிறது
வாழ்க்கை இறக்கத்தில் இருக்கிறது
வாழ்க்கை ரசிப்பில் இருக்கிறது
வாழ்க்கை நம்பிக்கையில் இருக்கிறது
ஆனால் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரிகிறது.

Posted: 23 Apr 2015 09:15 PM PDT


உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ...

Posted: 23 Apr 2015 09:03 PM PDT

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

எனக்கெல்லாம் லைக் கெடையாதா ?

Posted: 23 Apr 2015 08:30 PM PDT

எனக்கெல்லாம் லைக் கெடையாதா ?


Posted: 23 Apr 2015 08:02 PM PDT


0 comments:

Post a Comment