Thursday, 23 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


முதல்வர் ஓபிஎஸ் காரின் முன்னால் படுத்து போராடவும் தயார்- குஷ்பு #ஜெ க்கும் உங்க...

Posted: 23 Apr 2015 09:19 AM PDT

முதல்வர் ஓபிஎஸ் காரின்
முன்னால் படுத்து
போராடவும் தயார்-
குஷ்பு

#ஜெ க்கும் உங்களுக்கும்
வித்தியாசம் தெரியாம
உங்க கால்ல
விழுந்துகிடப்பார் அவர்
பாத்து ஜாக்கிரதை...:P

@செந்தில்குமார்

Net Neutrality சட்டத்தை இந்தியாவில் இயற்ற வேண்டும் என்று கோஷம் வலுத்து வருகிறது...

Posted: 23 Apr 2015 08:54 AM PDT

Net Neutrality சட்டத்தை இந்தியாவில் இயற்ற வேண்டும் என்று கோஷம் வலுத்து வருகிறது .Net Neutrality என்றால் என்ன ? நீங்கள் இந்திய பிரஜை . சாலை வரி கட்டுகிறீர்கள் . மாருதி காரில் சாலையில் செல்லும் பொழுது போக்குவரத்து காவலர் ஆடி கார், பி எம் டபல்யூ, பென்ஸ் காருக்கு மட்டும் வழி விட்டு போக சொல்லி விட்டு உங்களை ஓரம்கட்டி நிப்பாட்டி வைத்து சாலையில் யாருமே இல்லாத பொழுது போக சொன்னால் உங்களுக்கு இனிப்பாக இருக்குமா ?? கோவம் வராது?

#TRAI என்ற மத்திய அரசின் அமைப்பு இன்டர்நெட் சம்மந்த பட்ட அனைத்து விஷயங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது . ISP யையும் TRAI தான் கட்டுப்படுத்துகிறது. Internet Service Providers கென்று வெளிநாட்டில் இருப்பது போல விரிவாகவும் தெளிவாகவும் , அவர்களை கட்டுப்படுத்தும் சட்டம் எதுவும் இதில் இல்லை. இந்திய தகவல் தொழில் நுட்பத்துக்கான சட்டமான The Information Technology Act, 2000 சட்டமும் இதற்கு கட்டுப்படுத்தும் விதிகள் விதிக்க வில்லை. அதனால் மற்ற நாடுகள் போலில்லாமல் சட்டம் ISP களுக்கு இலகுவாக இருப்பதால் இவர்கள் இங்கே அட்டகாசத்தை துவக்கி விட்டனர்.

பெரிய பெரிய இன்டெர்நெட் ஜாம்பவான் களுக்கு மட்டும் இந்த Internet Service Providers முதலில் ஆன்லைன் டிராபிக்கில் வழி ஏற்படுத்துக்கொடுக்கிறார்கள் . சமீபத்தில் FLIPKART போன்ற ஆன்லைன் வர்த்தக ஜான்பவான் இந்தியாவில் NET NEUTRALITY வேண்டி போராட்டம் வலுத்து வருவதை கண்டு ஏர்டெல் லிருந்து விலகிவிட்டது ஒரு உதாரணம். TRAI யும்.பொது மக்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டிருக்கிறது.

@D Latha Prabhu

இதுக்கு முன்னாடி ஆட்சியில இருந்தது `கை’புள்ள.. இப்போ இருக்கிறது செல்ஃபி புள்ள.....

Posted: 23 Apr 2015 08:53 AM PDT

இதுக்கு முன்னாடி
ஆட்சியில இருந்தது
`கை'புள்ள..

இப்போ இருக்கிறது
செல்ஃபி புள்ள..

இறுதி வரை நமக்கு
கிடைக்கப்போறது சாவு
தான் புள்ள..

@பாலா


10 வருஷம் முன்னாடி நான் திருவண்ணாமலையில வேலை செய்யும் போது, பக்கத்து மாவட்டமான த...

Posted: 23 Apr 2015 07:54 AM PDT

10 வருஷம் முன்னாடி நான் திருவண்ணாமலையில வேலை செய்யும் போது, பக்கத்து மாவட்டமான தருமபுரியின் காவேரிபட்டிணம்ல இருந்தும், வேலூரின் குடியாத்தம் பகுதியில் இருந்தும் மொத்தமாக #தீப்பெட்டிகள் வாங்கி சின்ன பெட்டி கடையில வியாபாரம் செய்வோம், அப்ப சிகரெட் விற்பனை பன்ற #ITC நிறுவனம் AIM அப்படினு தீப்பெட்டிய அறிமுகம் செய்தாங்க, எங்க ஊர் பக்கம் CATS மற்றும் COCK தீப்பெட்டிகள் தான் பிரபலம், அதனால AIM சரியா வரவேற்பு பெறல, அதனால ITC கம்பெனி என்ன பண்ணதுனா சிகெரட் வேணும்னா AIM தீப்பெட்டி வாங்கினா தான் அப்படினு கட்டுபாடு போட்டு தீப்பெட்டி விற்பனை செய்தாங்க, இதெல்லாம் இப்ப ஏன்னா

#மோடி தலைமையிலானா மத்திய அரசாங்கம் தீப்பெட்டிய சிறு, குறு தொழில் பட்டியல்ல இருந்து நீக்க போகுதாம். ஏற்கனவே பாதி அழியும் தருவாயில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் இனி கார்ப்பரேட் வசமானால் முழுவதும் அழிந்து போகும். இது கார்பரேட்க்கான அரசு என மீண்டும் நிறுபனம் ஆகியுள்ளது.

@ஆனந்தன் அருள்

விவசாயிகள் தற்கொலை ஒன்றும் புதிது கிடையாது - வெங்கையா நாயுடு நாளை உங்கள் மகன் க...

Posted: 23 Apr 2015 04:46 AM PDT

விவசாயிகள்
தற்கொலை ஒன்றும்
புதிது கிடையாது
- வெங்கையா
நாயுடு

நாளை உங்கள் மகன்
கொல்லப்பட்டால்
அரசியல் கொலைகள்
புதிது கிடையாது
என சொல்லமுடியுமா?
அல்லது உங்கள் மகள்
பலாத்காரம்
செய்யப்பட்டால்
இந்தியாவில் கற்பழிப்பு
புதிது கிடையாது
என பேட்டிக்கொடுக்க‌
முடியுமா..?

@ஆர்.தியாகு

அடப்பாவி அம்பானி... இவ்வளவு நாளா நீயும் மானியம் வாங்குனியா...

Posted: 23 Apr 2015 04:40 AM PDT

அடப்பாவி அம்பானி...
இவ்வளவு நாளா நீயும் மானியம் வாங்குனியா...


பச்சை பட்டனை அழுத்தி 'கால்' மட்டுமே பேசத்தெரிந்தவர்களை பார்க்கும்போது, மீதி பட்ட...

Posted: 23 Apr 2015 02:32 AM PDT

பச்சை பட்டனை அழுத்தி
'கால்' மட்டுமே
பேசத்தெரிந்தவர்களை
பார்க்கும்போது,
மீதி பட்டன்களில் நாம்
வாழ்க்கையை
தொலைத்திருக்கிறோம்
என்பது புரிகிறது!

@சம்பத் குமார்

தூங்குனேன் கனவுல எரும்மாடு மேய்கிற மாதிரி இருந்தது, எழுந்துறலாமானு யோசிச்சேன் சர...

Posted: 23 Apr 2015 02:26 AM PDT

தூங்குனேன் கனவுல
எரும்மாடு மேய்கிற
மாதிரி இருந்தது,
எழுந்துறலாமானு யோசிச்சேன் சரி
கனாவுலயாச்சும்
வேலை செய்வோம்னு
தூங்கிட்டேன்...

@Ntr Dhandapani

தெலுங்கர் ஆதிக்கம் தமிழ் நாட்டில் இருப்பதை பற்றி மூச்சு கூட விடாம, இந்துத்துவம்...

Posted: 23 Apr 2015 02:18 AM PDT

தெலுங்கர் ஆதிக்கம்
தமிழ் நாட்டில்
இருப்பதை பற்றி மூச்சு
கூட விடாம,
இந்துத்துவம் தான்
தமிழர்களுக்கு பிரதான
எதிரி என்று யார் யார்
எல்லாம்
பேசுறாங்களோ,
அவர்கள் அனைவருமே
தமிழருக்கு எதிரி என்று
அறிக.

#நீங்க_இரண்டு_பேருமே_அக்யூஸ்ட்_தான்

@ம.பொன்ராஜ்

கொஞ்சம் இந்த தாலி-மாடு-கோமியம்-சாணி-பூணூல் இதையெல்லாம் தள்ளிவச்சுட்டு,நாம இந்த ப...

Posted: 23 Apr 2015 02:00 AM PDT

கொஞ்சம் இந்த தாலி-மாடு-கோமியம்-சாணி-பூணூல் இதையெல்லாம் தள்ளிவச்சுட்டு,நாம இந்த பழமைவாதங்களில் மல்லுகட்டிக் கொண்டிருந்த நாட்களில் உலகத்தில் மற்றொரு மூலையில்,

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் Maglev Train என்ற பறக்கும் ரயில் ஜப்பானில் வெற்றிகரமாக சோதனையோட்டம் செய்யப்பட்டுருக்கு.

அது என்னங்க Maglev Train? அதெப்படி ரயில் பறக்கும்? அப்ப புவியீர்ப்பு விசைல்லாம் இதை ஒண்ணும் செய்யாதா? ரயில் பறக்குறப்போ அதே டெக்னாலஜீய பயன்படுத்தி பஸ்-கார் ல்லாம் பறக்காதா?

அதுக்கு முன்னாடி,இந்த மேக்னெட்டிக் லெவிட்டேஷன் ரயில் என்பது 1942 ல் இரண்டாம் உலகப்போரில் முழுவதும் சிதிலமடைந்த ஜப்பான்காரனின் இப்போதைய கண்டுபிடிப்பு.அதே 1942 ல் இதே மேக்னெட்டிக் லெவிட்டேஷனின் முன்னோடியான மின்சார மோட்டாரை அன்றைய இந்தியாவிலேயே-முதன் முறையாக-அதுவும் தமிழ்நாட்டில் வைத்து தயாரித்து வெற்றிகரமாக ஓட்டியும் காட்டினார் ஒருவர்.இன்றளவும் அந்த மோட்டார் எந்த தடையுமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது.அது யார் என்பது இப்பதிவின் இறுதியில்.

இப்ப லெவிட்டேஷனுக்கு வருவோம்.உயிரினங்களில் ஆண்-பெண் வேறுபாடு உள்ளது போல எந்தவொரு காந்தத்திற்கும் வட துருவம்-தென் துருவம் ன்னு இரண்டு துருவங்கள் உண்டு.அதுலயும் ஆண்--பெண்ணையும்,பெண்-ஆணையும் நோக்கி ஈர்க்கப்படுவது போன்றும்,ஆண்-ஆணையும்,பெண்-பெண்ணையும் விலக்குவது போன்றும்,

ஒரு காந்தத்தின் வட துருவம்-மற்றொரு காந்தத்தின் வட துருவத்தை விலக்கித் தள்ளும்.அதே சமயம் வடதுருவம்-தென் துருவத்தை ஈர்த்துக்கொள்ளும்.அது காந்தத்தின் இயற்கைப் பண்பு.இது தான் அந்த பறக்கும் ரயிலின் அடிப்படை.

தண்டவாளம் ஒரு காந்தம் ன்னு வைங்க.அந்த தண்டவாளம் முழுவதற்கும் வடதுருவம்-தென்துருவம் என்று மாறி மாறி இருக்கும்.தண்டவாளத்துக்கு மேலே ஒரு ரயிலை வைங்க.அந்த ரயில்ல சக்கரங்களுக்குப் பதிலாக காந்தங்கள் இருக்குன்னு வைங்க.இப்ப அந்த ரயிலை-அந்த காந்த தண்டவாளத்தின் மீது வச்சா என்ன நடக்கும்? தண்டவாள காந்தத்தின் வடதுருவம்,ரயில் காந்தத்தின் வடதுருவத்தை,போடா அங்கிட்டுன்னு விலக்கும்,அதே சமயம் பக்கத்துல இருக்கும் தென் துருவம் ரயில் காந்தத்தின் வட துருவத்தை வாடா இங்கிட்டுன்னு ஈர்க்கும்.இது மாறி மாறி நடக்கும் போது என்னவாகும்?ரயில் ஓட ஆரம்பிக்கும்.

தண்டவாளம் முழுமைக்கும் வட-தென் காந்த துருவங்கள் மாறி மாறி இருப்பதால்,அவை ரயில் காந்தத்தில் உள்ள துருவங்களை ஈர்க்கும்-விலக்கும்.இந்த ஈர்க்கும்-விலக்கும் செயல்கள் மிக அதிக வேகத்தில் மாறி மாறி நிகழும் போது ரயில் தண்டவாளத்தில் ஒட்டாமல் பறக்கும்.இதுக்கு பேரு தான் மேக்னெட்டிக் லெவிட்டேஷன்.பல ஆயிரம் கிமீ நீளத்திற்கு இப்படி இயற்கை காந்தத்தில் தண்டவாளம் போட முடியாது.அவ்வளவு பெரிய இயற்கை காந்தம் பூமியில் கிடையாது.ஆனால் செயற்கையாக உருவாக்கலாம்.அதுக்கு பேரு தான் மின்காந்தம்-எலக்ட்ரோ மேக்னெட்.தண்டாவளத்தில் மின்சாரம் மூலம் காந்தத்தன்மையை உண்டாக்குவது.இந்த மின்சாரத்தின் அளவை கட்டுப்படுத்தினால்-அதுக்கு ஏத்த மாதிரி தண்டவாளத்தின் காந்தத்தன்மை மாறும்.குவாட்டருக்கு ஒரு போதை,ஆஃப்புக்கு ஒரு போதை ங்கற மாதிரி.

இன்னும் புரியுற மாதிரி சிம்பிளா சொல்லனும்னா--வீட்டுல இருக்குதே மோட்டார்...அதை அப்படியே நேரா விரிச்சி வச்சா--அது தான் இந்த பறக்கும் ரயில்.இந்த மேக்னெடிக் லெவிட்டேஷன் டெக்னாலஜீயை பயன்படுத்தி உச்சகட்டமாக ஒரு மணிக்கு ஆறாயிரத்து சொச்சம் கிமீ வேகத்தில் பறக்கலாம்.

கொஞ்சம் மூச்சு விடுங்க...ஆக இந்த மேக்னெட்டிக் லெவிட்டேஷன் தத்துவத்தை 1940 களிலேயே தெரிந்திருந்தும்-அதை வைத்து உள்நாட்டிலேயே மோட்டாரைத் தயாரித்திருந்தும்--அன்றிலிருந்து இன்று வரை அதிலிருந்து ஒரு இஞ்ச் கூட முன்னேறாமல் போனதன் காரணம் முதல் வரியில் குறிப்பிட்ட சல்லிப் பைசாக்கு பெறாத பழமைவாத பிற்போக்குத்தனங்களைப் பிடித்து இன்னமும் தொங்கிக் கொண்டிருப்பது தான்.மாட்டுக்கு தந்த முக்கியத்துவத்தை மேக்னெட்டுக்கு தந்திருந்தால்,

என்றோ பறக்கும் ரயில் இந்தியாவில் பறந்திருக்கும்!!!!!

ரைட்டு...இப்ப அந்த விஞ்ஞானி யாருன்னு சொல்லனும்ல!!!!

அவர் தான் கொங்கு மண்டலம் தந்த விஞ்ஞானி கோவையின் ஜி.டி.நாயுடு.

@துரை மோகன்


ஓரளவு நம்மைநாமே புரிந்துகொண்டு 'நான் இப்படி தான்' என சொல்வதையும் தலைக்கனம் என்று...

Posted: 22 Apr 2015 10:17 PM PDT

ஓரளவு நம்மைநாமே
புரிந்துகொண்டு 'நான்
இப்படி தான்' என
சொல்வதையும்
தலைக்கனம் என்றுதான்
கருதுகிறது இந்த உலகம்.

@விவிகா சுரேஷ்

பெரும்பாலும் பிளான் பண்ணி சொல்ற பொய்யைவிட போகிற போக்கில் அள்ளிவிடுற பொய் அப்படிய...

Posted: 22 Apr 2015 10:16 PM PDT

பெரும்பாலும் பிளான்
பண்ணி சொல்ற
பொய்யைவிட போகிற
போக்கில் அள்ளிவிடுற
பொய் அப்படியே
நம்பப்படுகிறது.

@விவிகா சுரேஷ்

யாருடைய ஒரு முதல் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் அளியுங்கள்.. அடுத்தடுத்த கேள்...

Posted: 22 Apr 2015 09:48 PM PDT

யாருடைய ஒரு முதல்
கேள்விக்கும்
புன்னகையுடன் பதில்
அளியுங்கள்..

அடுத்தடுத்த
கேள்விகளில் அவர்
உங்கள் நண்பராய்
மாறியிருப்பார்.

@காளிமுத்து

சுவரின் கிறுக்கல்களில் தெரியும் அவ்வீட்டு குழந்தையின் உயரம். @காளிமுத்து

Posted: 22 Apr 2015 09:46 PM PDT

சுவரின் கிறுக்கல்களில்
தெரியும் அவ்வீட்டு
குழந்தையின் உயரம்.

@காளிமுத்து

நேத்து என் நண்பன்கிட்ட ஒரு உதவி கேட்டேன் இன்னைக்கு அவன் காலர் டுயுன் முழுசா கேட்...

Posted: 22 Apr 2015 09:45 PM PDT

நேத்து என் நண்பன்கிட்ட
ஒரு உதவி கேட்டேன்
இன்னைக்கு அவன் காலர்
டுயுன் முழுசா
கேட்கற பாக்கியம்
எனக்கு கிடச்சுது...

@காளிமுத்து

0 comments:

Post a Comment