Wednesday, 15 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா. மாணவன்: கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும்...

Posted: 15 Apr 2015 09:08 AM PDT

ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா.
மாணவன்: கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்…
மாணவன்: சார்..
" சிட்டிபஸ் "
" ஏர்பஸ் "
" டவுன்பஸ் "
" எக்ஸ்பிரஸ் பஸ் "
" பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் "
" டீலக்ஸ்பஸ் "
" ஏசிபஸ் "
" பெர்த் பஸ் "
" டாய்லெட் அட்டாச்டு பஸ் "....
இப்படி எல்லா பஸ்சும் இருக்கு சார்.
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல சார்!
பஸ் டெப்போ வுலேயே இல்லையாம் சாாார் ! !! !!!

கவலைகளை மறந்து சிரிப்பது பெண்கள் !!! கவலைகளை மறைத்து சிரிப்பது ஆண்கள் !!!

Posted: 15 Apr 2015 08:08 AM PDT

கவலைகளை மறந்து சிரிப்பது பெண்கள் !!!
கவலைகளை மறைத்து சிரிப்பது ஆண்கள் !!!


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா...

Posted: 15 Apr 2015 07:50 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இடம்பெற்ற டிஸ்கோ நடனம் பார்த்துமகிழுங்கள்... tongue emoticon

மேலும் சிறந்த காணொளிகளை காண எங்களோடு இணைந்திருங்கள்



Posted: 15 Apr 2015 07:08 AM PDT


கற்பு என்றால் என்ன? சென்னைப் பெண்களின் புரட்சிகரமான பதில்கள்! வீடியோ இணைப்பு

Posted: 15 Apr 2015 07:06 AM PDT

கற்பு என்றால் என்ன? சென்னைப் பெண்களின் புரட்சிகரமான பதில்கள்! வீடியோ இணைப்பு


கற்பு என்றால் என்ன? சென்னைப் பெண்களின் புரட்சிகரமான பதில்கள்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
tamilnadu College Girls Amazing Answers

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா...

Posted: 15 Apr 2015 06:51 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இடம்பெற்ற டிஸ்கோ நடனம் பார்த்துமகிழுங்கள். part - 2
மேலும் சிறந்த காணொளிகளை காண எங்களோடு இணைந்திருங்கள்



வெளிநாட்டு மக்களுக்கான தமிழ் பேசும் போட்டி ஒன்றை தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத...

Posted: 15 Apr 2015 06:23 AM PDT

வெளிநாட்டு மக்களுக்கான தமிழ் பேசும் போட்டி ஒன்றை தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத்தியது .இதில் வெளிநாட்டு மக்கள் பேசும் தமிழை கேளுங்கள் .
'I SPOKE TAMIL' Campaign!



Posted: 15 Apr 2015 06:08 AM PDT


யார் எல்லாம் பேய்ப்படம் பார்க்க வாரிங்க!

Posted: 15 Apr 2015 05:54 AM PDT

யார் எல்லாம் பேய்ப்படம் பார்க்க வாரிங்க!



Posted: 15 Apr 2015 05:04 AM PDT


உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்க...

Posted: 15 Apr 2015 04:41 AM PDT

உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...
அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..
சரி மேட்டர்க்கு வருவோம்...
கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...
என்னாது நிக்கோடினா..?!!
( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )
DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..
( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?
" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்... என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! — SHARE THIS

முத்தம் கொடுத்து முத்தமிழ் வளர்க்கும் புரட்சிப் பெண்..

Posted: 15 Apr 2015 04:32 AM PDT

முத்தம் கொடுத்து முத்தமிழ் வளர்க்கும் புரட்சிப் பெண்..



கலை மாமணி கல்பனா அக்காவின் இன்றைய புதிய வெளியீடு...

Posted: 15 Apr 2015 04:23 AM PDT

கலை மாமணி கல்பனா அக்காவின் இன்றைய புதிய வெளியீடு...



சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இன்றைய காலத்தில் பி...

Posted: 15 Apr 2015 04:08 AM PDT

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.
அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.
அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
எனர்ஜி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது
இரைப்பைக் குடல் அழற்சி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
புற்றுநோயைத் தடுக்கும் :-
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
மலச்சிக்கல் :-
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.


ராஜா ராணி திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் வீடியோ இணைப்பு

Posted: 15 Apr 2015 04:06 AM PDT

ராஜா ராணி திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் வீடியோ இணைப்பு


ராஜா ராணி திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
tamil movie Raja Rani Bloopers very funny

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முன...

Posted: 15 Apr 2015 02:56 AM PDT

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்"சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர்"தெரியலயேப்பா'ன்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.
ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன'ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் "இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு". உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், " இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன்,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

ஒரே ஒரு பாடலில் ராமாயணத்தின் இனிமையான கதை.... உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்!..

Posted: 15 Apr 2015 02:52 AM PDT

ஒரே ஒரு பாடலில் ராமாயணத்தின் இனிமையான கதை.... உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்!..



முகத்தில் ஒரே குத்தினால் ஆண்மகனை வீழ்த்திய அதிரடி மங்கை - பரபர காணொளி

Posted: 15 Apr 2015 01:06 AM PDT

முகத்தில் ஒரே குத்தினால் ஆண்மகனை வீழ்த்திய அதிரடி மங்கை - பரபர காணொளி


முகத்தில் ஒரே குத்தினால் ஆண்மகனை வீழ்த்திய அதிரடி மங்கை - பரபர காணொளி
www.indiasian.com
very strong young girl

இவர்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும் சூப்பர் டான்ஸ் வீடியோ

Posted: 14 Apr 2015 10:06 PM PDT

இவர்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும் சூப்பர் டான்ஸ் வீடியோ


இவர்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும் சூப்பர் டான்ஸ் வீடியோ
www.indiasian.com
chennai IT boys and girls doing amazing dance

சென்னையில் கையேந்தி பவனில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்கிறார்கள் என்று பாருங்கள் வீடியோ

Posted: 14 Apr 2015 07:06 PM PDT

சென்னையில் கையேந்தி பவனில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்கிறார்கள் என்று பாருங்கள் வீடியோ


சென்னையில் கையேந்தி பவனில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்கிறார்கள் என்று பாருங்கள் வீடியோ
www.indiasian.com
southindian Chicken fried rice preparation

திருட வந்த திருடிக்கு கிடைத்த அவமானத்தை பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 14 Apr 2015 04:08 PM PDT

திருட வந்த திருடிக்கு கிடைத்த அவமானத்தை பாருங்கள் வீடியோ இணைப்பு


திருட வந்த திருடிக்கு கிடைத்த அவமானத்தை பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
funny Robber caught funny thief

உன் பேரு என்ன..? தர்ஷினி உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இரு...

Posted: 14 Apr 2015 04:08 PM PDT

உன் பேரு என்ன..?

தர்ஷினி

உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?



தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க

மச்சி, நாம இப்போ எழுதுனது என்ன எக்ஸாம்.? கணக்கு பரீட்சைன்னு நினைக்கிறேன்..! எப...

Posted: 14 Apr 2015 03:47 PM PDT

மச்சி, நாம இப்போ எழுதுனது என்ன எக்ஸாம்.?

கணக்கு பரீட்சைன்னு நினைக்கிறேன்..!

எப்படிச் சொல்றே?

பக்கத்து சீட்ல இருந்த பொண்ணுகிட்டே, கால்குலேட்டர்

இருந்தது மச்சி...!

தமிழில் மெய் எழுத்துக்கள் எத்தனை?... இதற்கு நம்ம தமிழர்கள் வாங்குற பல்ப்பை பாருங்க

Posted: 14 Apr 2015 03:42 PM PDT

தமிழில் மெய் எழுத்துக்கள் எத்தனை?... இதற்கு நம்ம தமிழர்கள் வாங்குற பல்ப்பை பாருங்க



விபத்தில் நொறுங்கிய கார் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய நபர் வீடியோ இணைப்பு

Posted: 14 Apr 2015 02:59 PM PDT

விபத்தில் நொறுங்கிய கார் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய நபர் வீடியோ இணைப்பு


விபத்தில் நொறுங்கிய கார் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய நபர் வீடியோ இணைப்பு
www.indiasian.com
he is Very Lucky Guys in the world

“சோ“வ்வைத் தெரியுமா...? (நகைச்சுவை நிகழ்வு) நட்புறவுகளுக்கு வணக்கம். இது நடந்த...

Posted: 14 Apr 2015 10:56 AM PDT

"சோ"வ்வைத் தெரியுமா...? (நகைச்சுவை நிகழ்வு)

நட்புறவுகளுக்கு வணக்கம்.

இது நடந்த நிகழ்ச்சி. உங்களுடன் பகிர்கிறேன். இது நடந்து மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். இதை நகைச்சுவைக்காகப் பகிர்கிறேன். யாரும் இதைத் தவறாகக் கொள்ள வேண்டாம்.

ஒரு நாள் நான் தொலைக்காட்சியில் (வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாத்தால்) நடிகர் சோ அவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது என் தோழி ஒருத்தி என் வீட்டிற்கு வந்தாள். அடிக்கடி வருகிறவள் தான். அன்று அவள் வேலைக்குப் போகும் வழியில் அவள் வாங்கி வந்த மாம்பழத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அப்படியே வேலைக்குப் போகப் போவதாக சொன்னாள். நானும் அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திரும்பி தொலைக் காட்சியை ஏதேச்சையாகப் பார்த்தாள். பார்த்தவள் "சோவ் ப்ரோகிராமெல்லாம் பார்ப்பியா நீ...?" என்றாள் சற்றே முகத்தைச் சுறுக்கி.
நானும் "வேற எதுவும் இல்லை... அதனால தான் இதைப் பார்க்கிறேன்" என்றேன்.
அவள் "இந்தச் சோவ்வ பார்க்கிறதை விட சும்மா இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டாள்.
நானும் அத்துடன் மறந்துவிட்டேன்.

அன்றிரவு அவள் கொடுத்தப் பழத்தைப் பார்த்த போது அந்த யோசனை வந்தது. இவளுக்கு எப்படி நடிகர் சோவைத் தெரியும்...?
அந்தப் பெண் இந்தப் பிரான்சு தேசத்தில் பிறந்தவள். தமிழைப் படிக்கவில்லை என்றாலும் கொச்சையாகத்தான் பேச தெரியும். நடிகர் சோ அவர்களை நம்மூர்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாது.
ஒரு சமயம் பழையப் படங்களில் பார்த்திருப்பாள் என்றாலும் பழைய நடிகர் சோ... இப்பொழுது இருப்பது போல் இல்லாமல் தலையில் விக்கெல்லாம் வைத்துக்கொண்டு முண்ட முண்ட கண்களுடன் துறுதுறு என்று இருப்பார். இப்பொழுது முழுமையாக வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவிற்கும் பழைய நடிகராக இருக்கும் பொழுது இருந்த சொவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
அப்படியிருக்க இவளுக்கு எப்படி பார்த்த உடனே சோவை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது?
எனக்கு ஒரே குழப்பம். போன் செய்து கேட்டுவிடலாமா என்று நினைத்தால்... இந்நேரம் வேலைவிட்டு வந்தக் களைப்பில் தூங்கியிருப்பாள். சரி நாளை கேட்டுவிடுவது என்று மறுநாளுக்காக காத்திருந்தேன்.

மறுநாள் நேரே வேலைக்கே போன் பண்ணினேன். "என்ன அருணா?" என்றாள்.
"நேற்று நீ என் வீட்டிற்கு வந்த போது நான் ஒரு ப்ரோகிராம் பார்த்துக்கொண்டு இருந்தேன் இல்லையா...?" கேட்டேன்.
"ஆமாம்... சோவ் ப்ரோகிராம்.... அதுக்கென்ன இப்போ...?" என்றாள்.
அப்பாடா... அவளே வழிக்கு வந்துவிட்டளென்று நினைத்து... நானும்... "ஆமாம் ஆமாம்... அதே ப்ரோகிராம் தான். அந்தப் ப்ரோகிராமுல வந்தவர் "சோ"ன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றேன்.
"பெரிய அதிசயம் இது... அது தான் பார்த்ததும் நல்லா தெரியுதே..." என்றாள்.
என்னால் நம்பவே முடியலை. "நீ இதுக்கு முன்னால இவரைப் பார்த்திருக்கிறியா...?" கேட்டேன்.
"இல்லை... ஏன்..?" என்றாள்.
"அவர் நடித்தப் படமாவது பார்த்திருக்கிறீயா...?"
"அவர் ஒரு நடிகரா...? நான் பார்த்ததில்லை" என்றாள்.
"பிறகெப்படி உனக்கு அவரை "சோ"ன்னு தெரிஞ்சது...?"
"அருணா... நீ பார்க்கும் பொழுது உனக்கு அவர் சோவ்ன்னு தெரிஞ்சிதா...?" கேட்டாள்.
"ஆமாம் எனக்கு தெரிஞ்சிது நியாயம்... உனக்கு எப்படி தெரிஞ்சிது...? இது தான் என்னோட குழப்பமே" என்றேன்.
அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். "ஏன் உனக்குத் தெரியும் பொழுது எனக்குத் தெரியாதா...? என்ன கேள்வி இது? அருணா... இந்த மாதிரி வேலைக்கி டெலிபோன் பண்ணி விளையடாதே. எனக்கு நிறைய வேலை இருக்குது. வை போனை" என்றாள் கோபமாக.
நானும் குழப்பத்துடன் போனை வைத்துவிட்டேன். இருந்தாலும் என் குழப்பம் தீரவில்லை.
மாலை என் கணவர் வந்ததும் என் முகவாட்டத்தின் காரணத்தைக் கேட்டார். நானும் நேற்றிலிருந்து இன்று வரை நடந்ததைச் சொன்னேன்.
அனைத்தையும் கேட்டுவிட்டு சிரித்துவிட்டுச் சொன்னார். "அருணா நீ சொன்னதும் தப்பில்லை. அவள் சொன்னதும் தப்பில்லை. நீ அந்த மனிதரின் பெயரைச் சொன்னாய். அவள் அந்த மனிதரின் வழுக்கைத் தலையைச் சொன்னாள். பிரென்சு மொழியில் "சோவ்" என்றால் வழுக்கைத் தலை என்று பொருள் என்றார்.
புரிந்ததும் நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன்.

0 comments:

Post a Comment