Relax Please: FB page daily Posts |
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- (y) https://twitter.com/RelaxplzzTamil
- இப்போது என்பது மட்டுமே நிஜம் ! துறவி ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். ''இன்று...
- நிலக்கடலை நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் ச...
- காந்திஜி வந்தபோது வராத, காமராஜ் ஆண்டபோது வராத, ராஜாஜி இருந்தபோது இல்லாத, பாரதி ப...
- அக்கா பையன்கிட்ட "இந்தியாவின் பிரதமர் மோடி"னு சொன்னேன், "இந்தியாவோட பிரதமர் இந்...
- ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் எனக் கூறி அதை விளக்கின...
- " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங...
- மஞ்சள் பால்... இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் க...
- ;-) https://twitter.com/RelaxplzzTamil
- (y) https://twitter.com/RelaxplzzTamil
- “ அரும்பரும்பாய் துளிர்த்தப் புல்வெளி... “ ஆற்றோரத் தென்னைகள்.... “ மிதக்கும...
- ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. மு...
- சிலம்பாட்ட வழிமுறைகள்...
- சந்தோஷமான பட்டாம் பூச்சி... Looks like a Smiley ;-)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இன்றைய காலத்தில் ப...
- :D https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- கவலைகளை மறந்து சிரிப்பது பெண்கள் !!! கவலைகளை மறைத்து சிரிப்பது ஆண்கள் !!!
- ஒரு ஆசிரமத்தில் ஏழு சாதுக்கள் ஏழு பாயில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டு இருந்...
- அன்பு பாசம் என்றால் இது தான் :(
- ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா. மாணவன்: கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும்...
- அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்! பெண் என்னும் தேவதை! கருவில் அரும்பி உருவம்...
- கல்யாண் ஜுவல்லர்ஸ்க்கும் முத்துட் பைனான்சுக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை ! ;-)...
- எல்லாக் கணவர்களும் தன் மனைவி கிட்டேர்ந்து எதிர் பாக்குற மூன்று வார்த்தைகள் =...
- எம்.ஜி.ஆர். மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சிக்குப...
- நான் நடிகை என தெரிந்து விடாதபடி என் குழந்தைகளை வளர்த்தேன்...:- ஜோதிகா #அக்கா......
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 09:29 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 09:19 AM PDT |
(y) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 09:12 AM PDT |
Posted: 15 Apr 2015 09:10 AM PDT இப்போது என்பது மட்டுமே நிஜம் ! துறவி ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். ''இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்'' என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில்கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு? என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ''குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்? என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். ஒரு சீடர் குருவிடம், ''குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?'' என்றார். குரு சிரித்தபடி, ''என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!'' என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார். இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ''ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?'' என்று கேட்டார். குரு சிரித்தபடி, ''இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார். அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது என்பது மட்டுமே நிஜம்! Relaxplzz |
Posted: 15 Apr 2015 08:58 AM PDT நிலக்கடலை நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மன அழுத்தம் போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. கொழுப்பை குறைக்கும்: தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. நிறைந்துள்ள சத்துக்கள்: 100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட்- 21 மி.கி. நார்சத்து- 9 மி.கி. கரையும் கொழுப்பு – 40 மி.கி. புரதம்- 25 மி.கி. ட்ரிப்டோபான்- 0.24 கி. திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி. லூசின் – 1.625 மி.கி. லைசின் – 0.901 கி குலுட்டாமிக் ஆசிட்- 5 கி கிளைசின்- 1.512 கி விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. காப்பர் – 11.44 மி.கி. இரும்புச்சத்து – 4.58 மி.கி. மெக்னீசியம் – 168.00 மி.கி. மேங்கனீஸ் – 1.934 மி.கி. பாஸ்பரஸ் – 376.00 மி.கி. பொட்டாசியம் – 705.00 மி.கி. சோடியம் – 18.00 மி.கி. துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது. பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது: நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 15 Apr 2015 08:10 AM PDT காந்திஜி வந்தபோது வராத, காமராஜ் ஆண்டபோது வராத, ராஜாஜி இருந்தபோது இல்லாத, பாரதி பாடியபோது உருவாகாத, வ உ சி வாழ்ந்த போது வராத, பெரியார் போராடியபோது கிடைக்காத, ஜேகே உரையாற்றியபோது வராத, விவேகானந்தரின் வீர முழக்கம் தராத இன்னும் எத்தனையோ மகான்கள், தலைவர்கள், திறமையாளர்கள், வெற்றியாளர்கள், தொழிலதிபர்கள் வாழ்ந்த போது வழங்கிடாத, அதுதாங்க.... ......... ஆமாம் அதேதான்... ......... .......... நம்பிக்கை!!!!!!!!!!!! சென்னைக்கு வரும் 17ந்தேதி தான் வரப்போகிறதாம்! அப்புடித்தானே சொல்லிக்கிறாய்ங்க?! ஹிஹிஹி கல்யாண் ஜுவல்லர்ஸ்! - Haho Sirippananda :P :P Relaxplzz |
Posted: 15 Apr 2015 07:45 AM PDT அக்கா பையன்கிட்ட "இந்தியாவின் பிரதமர் மோடி"னு சொன்னேன், "இந்தியாவோட பிரதமர் இந்தியாலதானே இருப்பாரு நீ பொய் சொல்ர'ன்ங்குரான்! - Bhuvana |
Posted: 15 Apr 2015 07:10 AM PDT ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் எனக் கூறி அதை விளக்கினார்... ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன் .ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது. வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது. சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் அது உணர்ந்தது, இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே. இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது, 'நான்' தான் என்பதை உணர்ந்தேன். அந்த 'நான்' என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன். இப்ப எல்லாம் விலங்குகள் தான் நமக்கு நல்ல விஷயத்தை சொல்லி கொடுக்கின்றது. ஆனால் நாம் தான் பல நேரங்களில் விலங்குகளாக மாறி வருகிறோம் நீதி: 'நான்' என்ற அகந்தையை ஒழித்தால் நாமும் மனிதர்கள் ஆகலாம்.. :) Relaxplzz |
Posted: 15 Apr 2015 03:10 AM PDT " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்... அப்புறம் " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும் வாங்கினேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்... கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை... என்னாது நிக்கோடினா..?!! ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! ) DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research ) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் ) Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.. ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..? " என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! — SHARE THIS.. - Jayant Relaxplzz |
Posted: 15 Apr 2015 03:00 AM PDT மஞ்சள் பால்... இயற்கையை மீறி எதுவும் நடக்காது'; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்' -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது .*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும். Relaxplzz ![]() |
;-) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 02:52 AM PDT |
(y) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 02:32 AM PDT |
Posted: 15 Apr 2015 02:16 AM PDT " அரும்பரும்பாய் துளிர்த்தப் புல்வெளி... " ஆற்றோரத் தென்னைகள்.... " மிதக்கும் மேகக்கூட்டங்கள்... " மேகங்களை மறைக்கும் மலையரசி.... " இவை எல்லாம் அழகுதான்.... " ஆனாலும் இவைகளை விட.... " நீ புன்னகைக்கும் போது.... " அகன்று விரியும் கண்களும்.... " குழி விழும் கன்னங்களும் தான்.... " எனக்கு எப்போதும் பிடிக்கிறது! ♥ ♥ - கனி Relaxplzz ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 15 Apr 2015 01:52 AM PDT ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்"சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர்"தெரியலயேப்பா'ன்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க. கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன'ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் "இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு". உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு? ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், " இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன்,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி. நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம். நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன். Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 15 Apr 2015 01:30 AM PDT |
Posted: 15 Apr 2015 01:21 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 01:10 AM PDT |
Posted: 15 Apr 2015 12:55 AM PDT சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது. அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம். அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம். சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! எனர்ஜி :- சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது இரைப்பைக் குடல் அழற்சி :- சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள். உடல் வெப்பத்தைத் தணிக்கும் :- சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள். புற்றுநோயைத் தடுக்கும் :- வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம். மலச்சிக்கல் :- சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். கார்போஹைட்ரேட் :- சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :- சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி. Relaxplzz ![]() "உணவே மருந்து" - 2 |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 12:42 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 12:31 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 Apr 2015 12:22 AM PDT |
Posted: 15 Apr 2015 12:10 AM PDT |
Posted: 15 Apr 2015 12:10 AM PDT ஒரு ஆசிரமத்தில் ஏழு சாதுக்கள் ஏழு பாயில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தனர்...... அப்பொழுது ஒருவர் அங்கு வந்து சாதுக்களில் பெரியவராக இருப்பவரை பார்த்து கேட்டார்..... "சுவாமிஜி என் மனைவி நான் சொல்லுவதை மதிக்க மாட்டேன் என்கிறாள் ..ஏதாவது வழி சொல்லுங்களேன் ?" உடனே அந்த சுவாமிஜி பக்கத்தில் இருந்த சிறியவரான ஒரு சாதுவிடம் சொன்னார் ....... ... . . . . . . . . . . . . . "உனது பக்கத்தில் இன்னும் ஒரு பாயை போடு இந்த சகோதரனுக்கு " :P :P Relaxplzz |
Posted: 14 Apr 2015 11:50 PM PDT |
Posted: 14 Apr 2015 11:10 PM PDT ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா. மாணவன்: கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்… மாணவன்: சார்.. " சிட்டிபஸ் " " ஏர்பஸ் " " டவுன்பஸ் " " எக்ஸ்பிரஸ் பஸ் " " பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் " " டீலக்ஸ்பஸ் " " ஏசிபஸ் " " பெர்த் பஸ் " " டாய்லெட் அட்டாச்டு பஸ் ".... இப்படி எல்லா பஸ்சும் இருக்கு சார். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல சார்! பஸ் டெப்போ வுலேயே இல்லையாம் சாாார் ! !! !!! :P :P Relaxplzz |
Posted: 14 Apr 2015 11:00 PM PDT அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்! பெண் என்னும் தேவதை! கருவில் அரும்பி உருவம் தரித்து பருவம் அடையுமுன் பலப்பல பக்குவங்கள்... பதறாமல் பெறுபவள்...! அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி வலம் வருகின்ற வண்ணத் தேர்...! எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும் உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் உன்னத படைப்பு...! அகத்தில் அன்புடனும் புறத்தில் பண்புடனும் பெண்மைக்கு உண்மையுடனும் பிரமிக்கும் திறமையுடனும் பிரகாசிக்கும் சுடர்...! பொறுமைக்கு இலக்கணமாய் புனிதத்திற்கு பொருத்தமாய் அடக்கம் அறிந்தவளாய் அகங்காரம் தொலைத்தவளாய் அன்பிற்கு பணிபவள்...! ஆயிரம் அலுவல் செய்தும் அலுக்காத அன்னையுள்ளம்... அன்பாய் ஓர் வார்த்தைக்காய் அடை காக்கும் பெண்ணுள்ளம் பெண் என்னும் தேவதை! Relaxplzz ![]() |
Posted: 14 Apr 2015 10:20 PM PDT |
Posted: 14 Apr 2015 10:10 PM PDT எல்லாக் கணவர்களும் தன் மனைவி கிட்டேர்ந்து எதிர் பாக்குற மூன்று வார்த்தைகள் = = = = = = = = = = = = = = = = = "தப்பு என் மேலதாங்க..." :P :P |
Posted: 14 Apr 2015 10:00 PM PDT எம்.ஜி.ஆர். மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சிக்குப் பிறகு ஆண்களை மட்டும் களைந்து செல்லுமாறும், பெண்களிடம் தான் தனியாக பேச விரும்புவதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் களைந்து சென்றுவிட்டனர். பிறகு எம்.ஜி.ஆர். பெண்களைப் பார்த்து, ""கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவ்வாறு கூறினேன். தற்போது நீங்களும் செல்லலாம்" என்றார். கூட்டத்துக்கு வந்த பெண்கள் எப்படிப் போனால் என்ன என்று எண்ணாமல், அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும் அதே சமயம் சாமர்த்தியமாகவும் கையாண்ட விதத்தை மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். Relaxplzz ![]() |
Posted: 14 Apr 2015 09:45 PM PDT நான் நடிகை என தெரிந்து விடாதபடி என் குழந்தைகளை வளர்த்தேன்...:- ஜோதிகா #அக்கா... வீட்லயும் ஓவர் ஆக்டிங் தான் போல... :P - விவிகா சுரேஷ் |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment