Interesting Tamil Facebook posts |
- சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே
- முகநூல் நட்பூக்களே....நம்மள மாதிரி STATUS போடுற எல்லாருக்கும் இந்த வீடியோ சமர்ப்...
- "தகவல் துணுக்குகள்" * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரிய...
- Finland பெண்களின் தமிழ்ப்பாடல் - சொய்.. சொய்...!!
- யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு
- என்னமா இப்படி பண்ணுறிங்கள்
- காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு
- தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ? அரிக்க...
- அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி? கோடைக்காலம் என்ற...
- கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு
- கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ் வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடு...
- இது கல்பனா அக்காவோட அருமை தெரியாமல் கலாய்ப்பவர்களுக்காக.கட்டாயம் பாருங்கள்
- படித்ததில் பிடித்தது ... விழுந்து புரண்டு சிரித்தது நல்லாக் கேட்டுக்குங்க, முதல்...
- பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டு...
- தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனை புரட்டி எடுக்கும் பெண்ணின் ஆக்ரோஷம்
- என் மச்சானை,என் மச்சானை ! பாத்தீகளா மலைவாழைத் தோப்புக்குள்ளே ? அற்புதமான பாடல் ஒ...
- லைக் போடலனா அம்மாகிட்ட சொல்லிகொடுப்பேன்..
- :p
- :(
Posted: 14 Apr 2015 09:00 AM PDT சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே ![]() சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே www.indiasian.com it's from vettai serial but it's what happening in reality |
Posted: 14 Apr 2015 08:25 AM PDT |
Posted: 14 Apr 2015 03:43 AM PDT "தகவல் துணுக்குகள்" * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும். * மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்! * ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும். * திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும். * கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு! * ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை! * 126936598-நம்மில் பலர் இந்த வாக்கியத்தின் முதலில் உள்ள எண்களை முழுமையாகப் படிக்காமல் மற்ற வார்த்தைகளையே படிப்போம்! |
Posted: 14 Apr 2015 03:35 AM PDT |
Posted: 14 Apr 2015 02:12 AM PDT |
Posted: 14 Apr 2015 02:10 AM PDT யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு ![]() யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு www.indiasian.com sri lanka old man |
Posted: 14 Apr 2015 01:39 AM PDT |
Posted: 13 Apr 2015 11:11 PM PDT காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு ![]() காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு www.indiasian.com pretty Kajal Agarwal Very Workout In Gym |
Posted: 13 Apr 2015 08:10 PM PDT தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ? அரிக்கேன் விளக்கு எங்கே? பல்லாங்குழி எங்கே? பம்பரங்கள் எங்கே? கண்ணாமூச்சி எங்கே? திருடன் போலீஸ் எங்கே? கம்பர்கட் கல்கோனா மிட்டாய் எங்கே? பஞ்சு மிட்டாய், இஞ்சி மரப்பா எங்கே? பல் துலக்கிய ஆலங்குச்சி எங்கே? பனை ஓலை குடிசைகள் எங்கே? நடை பழகிய நடை வண்டி எங்கே? பொதி சுமந்த கழுதைகள் எங்கே? எலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே? பனம்பழம் எங்கே? பழைய சோறு எங்கே? மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே? பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே? அன்பு எங்கே? பண்பு எங்கே? பாசம் எங்கே? நேசம் எங்கே? நேர்மை எங்கே? வாய்மை எங்கே? கண்ணியம் எங்கே? கட்டுப்பாடு எங்கே? விவசாயம் எங்கே? விளை நிலம் எங்கே? ஏர்கலப்பை எங்கே? மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே? தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ? தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே? இடுப்பைச் சுற்றிய சுருக்குப்பை எங்கே? பெட்மாஸ் லைட் எங்கே? கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே? அம்மிக்கல் எங்கே? ஆட்டுரல் எங்கே? பிள்ளை சுமந்த அம்மாக்கள் எங்கே ? தாய்ப்பால் கொடுத்த தாய்மை எங்கே ? அனுபவம் பகிர்ந்த மூத்தோர் எங்கே? எல்லாவற்றையும் விட, நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே? சுத்தமான நீர் எங்கே ? மாசில்லா காற்று எங்கே ? நஞ்சில்லா காய்கறி எங்கே? நோயில்லா வாழ்க்கை எங்கே? நிம்மதியான தூக்கம் எங்கே? இதற்கு பாமரனாலும், பதில் சொல்ல முடியாது, படித்தவனாலும் பதில் சொல்ல முடியாது, விஞ்ஞானியாலும் பதில் சொல்ல முடியாது, எந்த கணினியாலும்கூட பதில்சொல்ல முடியாது. # படித்ததில் பிடித்தது # ![]() |
Posted: 13 Apr 2015 05:10 PM PDT |
Posted: 13 Apr 2015 04:05 PM PDT |
Posted: 13 Apr 2015 04:04 PM PDT கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி? கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில், சின்னம்மை மிகவும் அபாயகரமானது, உடல் முழுவதும் கொப்பளங்களை ஏற்படுத்திவிடுகிறது. சின்னம்மையை முதல் முதலில் அடையாளம் கண்டுபிடித்தவர் (1510-1580) மருத்துவர் Giovanni Filippo Ingrassia ஆவர். பரவும் விதம் varicella-zoster virus எனும் வைரசால் பரவும் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதால் அவர்களின் உமிழ்நீர், சளி மற்றவர்கள் மீது படுவதாலும் பரவுகிறது. மிக எளிதில் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு நன்கு குணமான பின்னரே வெளியில் செல்ல வேண்டும். அறிகுறிகள் சின்னமையால் பாதிக்கப்பட்டால் உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள், அரிப்பு ஏற்படும். கொப்பளங்கள் ஏற்பட்ட 2, 3 நாட்களுக்குள் அவை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பார்ப்பதற்கு தடிமனாக இருக்கும். நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் 102°F இருத்தல். இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் திணறுதல். அரிப்பு ஏற்படும் இடங்களில் சொரியும் போது மஞ்சள் நிறத்தில் சீல் வடிதல். வெளிச்சமான பகுதியை பார்ப்பதற்கு சிரமப்படுதல். நடப்பதற்கு சிரமப்படுதல், அதிகமாக வாந்தி எடுத்தல். அதிகமான தலைவலி, கழுத்து விறைப்பாக இருத்தல். சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் தீவரமடைந்துவிட்டால் நுரையீரல், எலும்புகள் போன்ற இடங்களை தாக்கும். சிகிச்சை முறைகள் சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் antibiotics மருந்தினை உட்கொள்ளலாம். ஏனெனில் ஆன்டிபயாடிக்ஸ் கொப்பளங்கள், அரிப்பு போன்றவற்றை குணமாக்கவல்லது, சின்னம்மையின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஆன்டிவைரல்(antiviral) மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அஸ்பிரின்(Aspirin) மருந்து பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் தீவிர நோயான Reye syndromeக்கு இது மருந்தாக பயன்படுகிறது. அதனால் இதனை பயன்படுத்தும்போது, கல்லீரல் பாதிப்பு ஏற்படும், மேலும் இறப்பிற்கும் வழிவகுக்கும். மேலும் உடலில் அரிப்பு ஏற்படும் போது நாம் அந்த இடத்தினை சொரிந்து விடுகிறோம். ஆகவே, இந்த இடங்களில் ஏற்படும் அரிப்பினை தடுப்பதற்கு Hydrocortisone என்ற க்ரீம்மினை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தடுக்கும்முறை மற்றும் உணவுகள் சின்னம்மை தடுப்பூசி 99% குழந்தைகளை இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. 12 முதல் 15 மாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இரண்டு தடவை போட வேண்டும், இந்த தடுப்பூசி 4 முதல் 6 வயது வரை குழந்தைகளை சின்னம்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கு நீங்கள் வெளியில் சென்று வந்தால் நன்கு கை கழுவிய பின்பு சாப்பிடுதல், நன்கு குளிப்பது போன்றவையை செய்தாலே போதும். நாம் பயன்படுத்தும் பொருட்கள், அணியும் ஆடைகள் என அனைத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும். வேப்பிலை, சின்ன வெங்காயம் சின்னம்மைகான சீரிய மருந்தாக கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதனை குணப்படுத்துவற்காக இளநீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழவகைகள் மோர், தயிர், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. ![]() |
Posted: 13 Apr 2015 02:48 PM PDT கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு ![]() கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு www.indiasian.com bollywood Akshara Hassan gets uncomfortable dress |
Posted: 13 Apr 2015 01:15 PM PDT |
Posted: 13 Apr 2015 01:04 PM PDT கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ் வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம். ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ, 1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது. 2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும். 3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும். 4. உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும். 5. எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்துவிடுங்கள். 6. உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 7. தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும். 8. இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். 9. உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்த்து சாப்பிடலாம். ![]() |
Posted: 13 Apr 2015 12:33 PM PDT |
Posted: 13 Apr 2015 12:19 PM PDT படித்ததில் பிடித்தது ... விழுந்து புரண்டு சிரித்தது நல்லாக் கேட்டுக்குங்க, முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! அப்புறம்? ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! சரி, அப்புறம்? ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! ஓ அப்புறம்? ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! அதுவும் சரிதான், அப்புறம்? பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்? மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க! ஓஓஓஓஓ அப்புறம்? மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க! ஐயையோ அப்புறம்? இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க! ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்? அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க, அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவி!, |
Posted: 13 Apr 2015 12:04 PM PDT பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது. ![]() |
Posted: 13 Apr 2015 11:52 AM PDT |
Posted: 13 Apr 2015 11:48 AM PDT |
Posted: 13 Apr 2015 11:27 AM PDT |
Posted: 13 Apr 2015 11:25 AM PDT |
Posted: 13 Apr 2015 11:23 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment