எதுக்கு நீதி மன்றம் ? . தப்பு செஞ்சவன் கண்ணுல பட்டான்னா, கைல துப்பாக்கி இருந்தா... Posted: 09 Apr 2015 03:18 AM PDT எதுக்கு நீதி மன்றம் ? . தப்பு செஞ்சவன் கண்ணுல பட்டான்னா, கைல துப்பாக்கி இருந்தா சுட்டு கொன்னுட்டு என்கவுண்டர்ன்னு சொல்லிடலாமே ? . அதே 'துப்பாக்கி சுதந்திரத்தை' பொது மக்களிடம் கொடுத்து பாருங்கள், ஒரு அரசியல்வாதி, போலீஸ்காரன் கூட உயிரோட இருக்க முடியாது. @சகலகலா ஜீன்ஸ் |
பேருந்தே இல்லாத கிராமங்களுக்குள் பயணிக்கையில் இது போன்ற அற்புதங்கள் காணக் கிடைக்... Posted: 09 Apr 2015 02:45 AM PDT பேருந்தே இல்லாத கிராமங்களுக்குள் பயணிக்கையில் இது போன்ற அற்புதங்கள் காணக் கிடைக்கின்றது. இந்த சிறு தெய்வ வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல, பல நூறு வருடங்களுக்கு முன்னால் இருந்தே கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் கால்நடைகளைக் காப்பாற்றவும், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும், தங்கள் இதயத்திற்கு நெருக்கமான, தங்களில் ஒருவராக தங்கள் ஊர்களில் இருந்த இது போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். புராணங்களில் வருவதைப் போல் வானத்தில் இருந்து வந்தவையல்ல இந்த தெய்வங்கள். சண்டைகளில் உயிர் நீத்த வீரர்களும், கணவரோடு உடன்கட்டை ஏறிய பெண்களும், கண்ணகியைப் போல் போராடிய பெண்களே சிறு தெய்வங்களாகினர். காலம் மாற சில குறிப்பிட்ட இனக்குழுக்களின் தெய்வங்களாக இருந்த இந்த சிறு தெய்வங்கில் சில பெருந் தெய்வங்களாகவும் உருவெடுத்தது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டே முருகன். கொற்றவை போன்ற தெய்வங்கள். இந்த சிறு தெய்வங்கள் குறித்து அப்பர் கூட தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரிய சிற்ப வேலைப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருப்பதை வைத்தே இது எவ்வளவு நூற்றாண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். அப்படிப்பட்ட இந்த தெய்வத்திற்கு பல நூறு வருடங்கள் கடந்தும் தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டிருக்கின்றது. இதுவே இந்த மண்ணின் ஆணிவேர். @சசிதரன்  |
சத்யம் நிறுவன முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும... Posted: 09 Apr 2015 12:41 AM PDT சத்யம் நிறுவன முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. - ஆந்திரா போலிஸ் எப்போது ராமலிங்கராஜூ வை சுடப்போகிறார்கள்? @பொன்னுசாமி |
0 comments:
Post a Comment