Thursday, 9 April 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரச...

Posted: 09 Apr 2015 04:35 AM PDT

நீங்கள் செல்போனிலோ
விடீயோ கேமராவிலோ
உங்களின் இரகசிய
தருணங்களைப் படம் பிடித்து
ரசிப்பவர்களா..?!
Very Sorry.. உங்களின் மானம்
இப்போது உலகம் முழுக்க
பரவிக்கொண்டிருக்கலாம்.
அது எப்படி… என் செல்போனில்
நான் என்னைப் படம் எடுப்பதால்
என்ன ஆபத்து வந்துவிடப்
போகிறது?" என்று
யோசிக்கிறீர்களா..?! அந்த
புதிருக்கான விடையின் பெயர்
'ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery
software) .
அண்ணாநகரில் செல்போன்
கடை வைத்திருக்கும் மூர்த்தி
விரிவாகச் சொல்கிறார்.
"செல்போன், கம்ப்யூட்டர்
பயன்படுத்தும் நம்மில் பலருக்கு
அதுகுறித்த முழுமையான
தகவல்கள் தெரிவதில்லை.
அதுவும் தங்கள் செல்போனில்
எடுக்கப்பட்ட ரகசிய
போட்டோக்கள், வீடியோக்கள்
Delete செய்யப்பட்டிருந்தாலும்
மீண்டும் அதைப் பார்க்க
முடியும் என்கிற விஷயமே
புதுசாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் தெரியாமல்தான்
பலர் ஆர்வக் கோளாறில்
தங்களின் படுக்கை அறைக்
காட்சிகளை செல்போனிலும்,
டிஜிட்டல் கேமராவிலும் பதிவு
செய்து ரசிக்கிறார்கள். பின்னர்
Delete செய்துவிடுகிறார்கள்.
ஆனால் எலெக்ட்ரானிக்
பொருட்கள் என்றாவது ஒருநாள்
பழுதடையும். அப்போது அதை
சரிபண்ண கடைகளில்
கொடுக்க வேண்டி வரும்.
அங்குதான் பிரச்னை
ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள்
சரிபண்ணி முடித்ததும், ஆர்வக்
கோளாறில் ஒவ்வொரு
போனிலும் என்னென்ன Delete
செய்யப்பட்டிருக்கிறது என்று
தேடிப்பார்ப்பார்கள். இதற்காக
அழிக்கப்பட்ட தகவல்களை
திரும்பப் பெறும் வசதி கொண்ட
பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்
இருக்கின்றன. இதன் மூலம்
திரும்பப் பெறப்படும் வீடியோ
மற்றும் போட்டோக்களில்
ஏதாவது ஆபாசப் படங்கள்
இருந்தால் போதும், உடனே
அதை இணையத்தில்
விற்றுவிடுவார்கள். இந்த
மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ்
வீடியோக்கள் எனப்படும்
சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும்
படங்களுக்கு
வெளிநாட்டவர்களிடம் ஏக
கிராக்கி என்பதால் இந்த
அயோக்கியத்தனத்தை பல
கடைக்காரர்கள் துணிந்து
செய்கிறார்கள் என்கிறார்.
இதைத் தவிர்க்க என்ன
செய்வது?
முக்கியமாக படுக்கை அறைக்கு
செல்போனையோ,
கேமராவையோ கொண்டு
செல்லாதீர்கள். காதலனோ,
கணவனோ, மாமனோ
மச்சானோ.. படம் எடுக்க
ஆண்கள் எவ்வளவு
வற்புறுத்தினாலும் பெண்கள்
சம்மதிக்கக் கூடாது என்பதில்
உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து
என்றால், இன்னொரு ஆபத்தும்
இதில் இருக்கிறது. அது இன்று
உயிருக்குயிராய் காதலிக்கும்
கணவன் மனைவியோ,
காதலர்களோ நாளை சூழ்நிலை
காரணமாக பிரிந்து
வேறொருவரைத் திருமணம்
செய்ய நேரிடலாம். ஆனால்…
ஏமாற்றப்பட்டதாக நினைக்கும்
ஆண்கள், பெண்களைப்
பழிவாங்க முடிவு செய்து,
முன்பு எடுத்த அந்தரங்கப்
படங்களை இண்டர்நெட்டில்
பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில்
வேலை பார்க்கும்
கணவர்களுடன் 'வெப்கேமில்
பேசும் பெண்களும், கணவர்
ஆசைப்படுகிறார் என்பதற்காக
கேமரா முன் தங்களின்
அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.
கம்ப்யூட்டரில் அது பதிவு
செய்யப்படலாம். அந்த
கம்ப்யூட்டர்கள் ஒருநாள்
பழுதடைந்து சரி செய்ய
அனுப்பும் போது அங்கிருந்து
அது இணையத்துக்கு
பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு
பெண்ணின் விடியோ
வெளியானால் போதும்… உலகம்
முழுக்க அது பரவி விடும்.
அப்புறம் அந்தப் பெண்கள்
வெளியே தலைகாட்ட முடியாது.
அசிங்கப்பட்டு தற்கொலை
செய்து கொண்டவர்களும்
உண்டு.
இப்போது செல்போன்
உள்ளிட்ட டிஜிட்டல்
கேமராக்களின் வரவால்
ஒவ்வொருவரும் கேமராமேனாகி
விட்டார்கள். பொது இடங்களில்
உங்களுக்குத் தெரியாமல்
ரகசியமாக கேமராக்கள் படம்
பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்க முடியாத
அளவுக்கு அவ்வளவு
நுண்ணிய கேமராக்கள் வந்து
விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங்
மால்கள், துணிக்கடைகளின்
ட்ரையல் ரூம்கள்
போன்றவற்றைப்
பயன்படுத்தும் முன் ஒருமுறை
சுற்றி நோட்டமிடுங்கள்…!
Please share #Aminu

Wellknown singer Nagoor Hanifa passedaway today. பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்...

Posted: 08 Apr 2015 10:55 AM PDT

Wellknown singer Nagoor Hanifa passedaway today.

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.

கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.


மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும் 10...

Posted: 08 Apr 2015 10:29 AM PDT

மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும்

10 மான்களை கொன்றிருந்தால் கொன்றவர்களுக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருக்கும்

5 யானைகளை கொன்றிருந்தால் வன்மையாக தண்டிக்கபடுவார்கள்

2 புலிகளை கொன்றிருந்தால் இரட்டை ஆயுள் கிடைத்திருக்கும்

ஆனால் கொல்லபட்டது பாவப்பட்ட மனிதன் அதுவம் கேட்கவே நாதியற்ற தமிழன்...

எவன் கேட்கபோகிறான் என்ற அதிகார திமிர் 20 உயிர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளது

விலங்குகளை கொடுமை படுத்தினாலே கொதித்து எழுகிற விலங்கியல் ஆர்வலர்கள் ,
சல்லிகட்டுக்கு தடை வாங்கிய மனிதநேய மாந்தர்கள் மாட்டு கறியை உண்ண கூடாது என பேசுகிற புனிதர்கள் மனித உயிர் பலிக்கு என்ன சொல்ல போகிறார்கள்...

150000 பேர் படுகொலையையே காக்க தவறியவர்கள் கொலைகாரனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த தேசமா
20 உயிருக்கு வருத்தபடபோகிறது?

via Chezhiyan

0 comments:

Post a Comment