Sunday, 12 April 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


படித்ததில் பிடித்தது என் பெயர் யாழினி. நான் 11ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு...

Posted: 12 Apr 2015 03:46 AM PDT

படித்ததில் பிடித்தது

என் பெயர் யாழினி.
நான் 11ம் வகுப்பு படிக்கிறேன்.
எனக்கு
மிதிவண்டி
மடி கணிணி
நோட்டு புத்தகங்கள்
சீருடைகள்
இன்னும் ஏராளம்
இலவசமாக
கொடுக்கப் பட்டுள்ளது.

என் குடும்பத்துக்கு
எரிவாயு அடுப்பு
தொலைக்காட்சி
மிக்சி , கிரைண்டர்
மின்விசிரி,அரிசி
இன்னும் ஏராளம்
இலவசமாக
கொடுக்கப் பட்டுள்ளது.

இவற்றுக்கு பதிலாக ..

என் தகப்பனுக்கு
அண்ணனுக்கு
அக்காள் கணவனுக்கு
இன்னும் ஏராளம்
உறவினருக்கு
மது ஊற்றிக்கொடுத்து
இலவசங்களுக்கான தொகை
பிடுங்கப் படுகிறது

Via Mathiyarasan

மாமன் மச்சானுக்கு சொந்த பந்தத்துக்கு அம்மா அப்பா தாத்தா பாட்டி நண்பர் தெரிந்தவ...

Posted: 11 Apr 2015 09:34 PM PDT

மாமன் மச்சானுக்கு
சொந்த பந்தத்துக்கு
அம்மா அப்பா தாத்தா பாட்டி
நண்பர் தெரிந்தவர் உற்றார் உறவினர்
உறவுகள் கூடி கூத்தடிக்கவில்லை
ஏனென்றால் இவளுக்கு பெருமை பிடிக்காது !

ஆடு மாடு கோழி
மீன் முட்டை நெத்தலி
வெட்டி கறி சமைக்கவில்லை
ஏனென்றால் இவளுக்கு உயிர்களை
கொல்லுவது பிடிக்காது !

வாழைமரம் பந்தல் தோரணம்
ஆரம்பர மண்டபம்
விலையுயர்ந்த கார்
கோட்டு சூட்டு
பட்டு பீதாம்பரம்
உடைகள் கிடையாது
ஏனென்றால் இவள் என்றும் சாதாரணம் !

சாக்லேட்
கீரீம்
வெனிலா விதவிதமாய் கேக்
இனிப்பு புளிப்பு துவர்ப்பு உரைப்பு உட்பட
அறுசுவை உணவு இல்லை
இவள் என்றும் ஏழ்மை !

குறைந்தபட்சம் நம் அம்மாவுக்கு
அல்லது ஒரு அனாதைக்கு
ஒரு முதியவருக்கு
உறுப்பு ஊனமுற்ற ஒருவருக்கு
ஏழை எளியவர்க்கு
இவர்களில் யாராவது ஒருவருக்கு
எங்கள் உழைப்பில் குறைந்தபட்சம்
ஒருநேர உணவு கொடுத்து
அந்த மகிழ்ச்சியை இவளுக்கு
பரிசாய் கொடுங்கள் !

இன்று எங்கள் செல்வி பிறந்தநாள் !

பெண்மையின் பரிசுத்தம் பிறந்தநாள் !

தாய்மையின் தூய்மை பிறந்தநாள் !

அன்பின் விருட்சம் பிறந்தநாள் !

எளிமையின் வாழ்வு பிறந்தநாள் !

இரக்கத்தின் சுரம் பிறந்தநாள் !

மொத்தத்தில் இன்று எங்கள் பெருமை
பிறந்தநாள் !
வாயார வாழ்த்துங்கள் !
மனதார வாழ்த்துங்கள் !!
உளமார வாழ்த்துங்கள் !!!
வாழ்த்தி பெருமைபடுங்கள்
மகராசி நலம் வாழ
எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுங்கள்

எங்கள் செல்லப்பிள்ளை #அமினுவுக்கு Aminah Niha இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !

#KGKG


0 comments:

Post a Comment