Friday, 20 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இரவு ஒளியில் மீனாட்சி அம்மன் கோவில்.

Posted: 20 Mar 2015 07:40 AM PDT

இரவு ஒளியில் மீனாட்சி அம்மன் கோவில்.


தமிழின் பெருமைகள். உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன்...

Posted: 20 Mar 2015 04:40 AM PDT

தமிழின் பெருமைகள்.
உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கை கோடு(horizontalline) , செங்குத்தான கோடு(vertical line), வளைவு(curve), வட்டம்(circle),அறை வட்டம்(half circle) என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.
ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் உள் அடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது. நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து என்பது உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாக தெரிகிறது.
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !
- இலவம்


ஞாபகம் வருகிறதா இந்த ஆரஞ்சு மிட்டாய் (வில்லை), (இப்போது கிடைப்பதில்லை * சிறு வய...

Posted: 20 Mar 2015 01:40 AM PDT

ஞாபகம் வருகிறதா இந்த ஆரஞ்சு மிட்டாய் (வில்லை),
(இப்போது கிடைப்பதில்லை

* சிறு வயதில் இதை வாங்கி சாப்பிடாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்.,

* 1 ரூபாய்க்கு 20 மிட்டாய்

* இந்த மிட்டாய் எப்போதும் டவுசர் பாக்கெட்ல இருந்துட்டே இருக்கும்.

* 1 மிட்டாயும் ஒரு நெல்லிக்காயும் சேர்த்து சாப்பிட்ட காலம்.,

என்ன ஒரு அழகான இனிமையான காலத்தை கடந்து வந்துள்ளோம்!!!


ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை: "தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அட...

Posted: 19 Mar 2015 10:40 PM PDT

ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது"

-Senthil.


விநாயகனே வினை தீர்ப்பவனே! -வி. ராஜமருதவேல்

Posted: 19 Mar 2015 09:27 PM PDT

விநாயகனே வினை தீர்ப்பவனே!

-வி. ராஜமருதவேல்


0 comments:

Post a Comment