சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!
1. நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம். இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும். இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்டை ஓரமா வச்சுடுறோம்.
2. திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.
3. அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது
பேசிக்கிட்டே இருப்போம். அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுறோம்.
4. அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம். இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுறோம்.
5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். "இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு" மிரட்டி வேற பாப்போம். இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கு.
6. ஏலேய்.... ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம். இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருக்கிறோம்.
7. அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கறத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கு.
8. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம். மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிக்கிறோம்.
நன்றி : மகேந்திரன்
பா விவேக்

0 comments:
Post a Comment