Wednesday, 18 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 18 Mar 2015 05:34 PM PDT


10 பைசா கொடுத்து, உங்களோட "பேனா"க்கு "இங்க்" ஊத்திய அனுபவம் உண்டா??

Posted: 18 Mar 2015 11:24 AM PDT

10 பைசா கொடுத்து,
உங்களோட "பேனா"க்கு
"இங்க்" ஊத்திய அனுபவம்
உண்டா??


பாம்பன் பாலம்!

Posted: 18 Mar 2015 08:01 AM PDT

பாம்பன் பாலம்!


அழகியல்! இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்

Posted: 18 Mar 2015 01:11 AM PDT

அழகியல்!

இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்


ஓட்டலில் இன்று மதியம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிளில் என் எதிரே வந்து அமர்...

Posted: 18 Mar 2015 12:44 AM PDT

ஓட்டலில் இன்று மதியம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிளில் என் எதிரே வந்து அமர்ந்தார் ஒருவர்.இலையை மறைக்கும் அளவு கையில் மோதிரம்,சைக்கிள் செயின் சைசில் கழுத்தில் தங்க செயின் என்று படாடோபமாக காட்சியளித்தார்.வந்ததும் வராததுமாக யாரையோ தன் செல்போனில் அழைத்தார்.

"ஏன்டா..எரும...என்ன சொல்லி போனவாரம் எங்கிட்ட பன்னென்டாயிரம் பணம் வாங்கிட்டு போன? ஒம்பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்,அடுத்த வாரம் கன்டிப்பா தாறேன்னுட்டுத் தானே வாங்கிட்டு போன?...இன்னிக்கு வரைக்கும் பணம் வரலை..கேக்கலாம் ன்னு போன் பண்ணுனா,போனை வேற சுச்சாப் பண்ணிருக்க?அப்படி பண்ணிட்டா ஒன்னய பிடிக்க முடியாதா...என்று துவங்கி ஏகவசனத்தில் அவன் குடும்பத்தையே ஓட்டலுக்கு இழுத்து-சந்தி சிரிக்க வைத்துவிட்டார்.இறுதியில் போனை வைக்கும் முன்னர்,

"நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள பணம் வந்தாகனும்..இல்ல...என்று மீண்டும் அர்ச்சனையோடு போனை வைத்தார்.

சாப்பிட்டு முடித்து நானும் வந்துவிட்டேன்.வாங்கிய கடனை அந்த ஆள் நாளைக்குள் தருவாரா?தராமல் போனால் இவர் என்ன செய்வார்..என்றெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது.

"ஆனால் தன் பன்னென்டாயிரம் ஸ்கூல் பீஸூக்காக தன் அப்பா பட்ட அவமானம்,கஷ்டம் எதுவும்,எப்போதும் அந்த மகனுக்கு மட்டும் தெரியவே போவதில்லை." என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

கொஞ்சம் அந்த மகனின் நிலையை கற்பனை செய்தேன்.பள்ளி விட்டு வீடு வந்ததும்-அந்த மகன் தன் அப்பாவிடம் சென்று பள்ளியில் நடந்த கதைகளை கன்டிப்பாக பேசுவான்...இந்த ஒன்று போதும் அந்த அப்பாவின் காயங்கள் எல்லாம் பறந்தோட....

குழந்தையை பத்து மாதம் சுமப்பவள் தாய்;தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தையோடு-தன் தாயையும் சேர்த்து சுமப்பவன் தகப்பன்.

@G Durai Mohanaraju


0 comments:

Post a Comment