Wednesday, 11 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது.... அப்பா மகனிடம் அதிகம் பேசாமாட்டார், ஆனால்...

Posted: 11 Mar 2015 02:32 AM PDT

பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது....

அப்பா மகனிடம் அதிகம் பேசாமாட்டார், ஆனால் மகளிடம் அன்பாக இருப்பார், மகனிடம் கறாராக இருப்பார்...

அம்மா மகளிடம் கடுமையாக நடந்துகொள்வாள், மகனுக்கு அதிக அன்பு செலுத்துவாள்.

இப்படித்தான் மேலோட்டமாக பார்க்கும்போது தெரியும்...

ஆனால் மகன் வெளியிடங்களில் வேலைக்குச் செல்லும்போதும், மற்றவர்களுடன் பழகும்போது தனது தந்தையின் சாயல் தன்னிடம் வருவதை உணர முடியும்...இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை செய்தாலும் அந்த துறைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும்.. இது மகனால் மட்டுமே உணர முடியும்...

அதேபோல், மகள் புகுந்தவீடு சென்ற பின்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக அம்மாதான், தன் கண்முன் நிப்பாள். தாயினை முதல் கதாநாயகியாக வைத்துதான் தனது அன்றாட வேலைகளைத் தொடங்குவாள் மகள்...

அப்பா தன் மகனிடம் சரியாக பேசவில்லை என்று மகன் அடிக்கடி நினைத்தாலும் தன் அப்பாவிற்கு தான் செய்யும் அனைத்தும் தெரியும் என்பது மகனின் நினைவில் என்றுமே இருக்கும். இது மகள் - அம்மா உறவுக்கும் பொருந்தும்.

இது உங்கள் வாழ்வில் புரிய வரும்போது தாய் - தந்தை இடம் உங்கள் மனதில் தொடுவதற்குக்கூட முடியாத உயரத்தில் இருக்கும்....இப்போது புரியவில்லை என்றாலும் எப்போதாவது புரியும்....

இதை உணர்ந்தவனாக....

பா விவேக்

திருக்குறள் பற்றிய பதிவில் கிடைத்த தகவல்.... பகிர்ந்தமைக்கு நன்றி : ரமணி ஷங்கர்...

Posted: 10 Mar 2015 07:21 PM PDT

திருக்குறள் பற்றிய பதிவில் கிடைத்த தகவல்....

பகிர்ந்தமைக்கு நன்றி : ரமணி ஷங்கர்

பா விவேக்


0 comments:

Post a Comment