Sunday, 1 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


டாலருக்கும் ரியாலுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .. இங்கு வந்திருப்பவர்களெல்...

Posted: 01 Mar 2015 07:55 AM PST

டாலருக்கும் ரியாலுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..

இங்கு வந்திருப்பவர்களெல்லாம் விரும்பி வரவில்லை

குடும்பத்தின் சுமையை குறைக்க வேதனையோடு வந்திருக்கிறார்கள் என்று...

#அயல்நாட்டு வாழ்க்கை...

@ Indupriya MP
...


சமையல் கூடமும், கலை கூடமாகும் அன்னையர்களின் கை வண்ணத்தில் ...........! நன்ற...

Posted: 01 Mar 2015 05:30 AM PST

சமையல் கூடமும்,

கலை கூடமாகும்

அன்னையர்களின்

கை வண்ணத்தில் ...........!

நன்றி : புதிய பாரதீ

பா விவேக்


நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம்பெருகப்போகிறது.ஏன் இப்படி ஓர்அறிவிப்பை செய்தீர்கள...

Posted: 01 Mar 2015 04:32 AM PST

நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம்பெருகப்போகிறது.ஏன் இப்படி ஓர்அறிவிப்பை செய்தீர்கள்" என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக்கொண்டார்.

சிவனே என்றிருந்தசிவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கங்கையில்குளித்தால் பாவம் போகும் என்று அறிவித்து விட்டீர்கள்.

இதனால் நாட்டில் பாவம் பெருகிவிடாதா? " என்றார். நியாயம்தானே. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்றதைரியத்தில் இனி பயமே இல்லாமல்பாவம் செய்வார்களே..
பரமசிவன் சிரித்துக்கொண்டே, "உன்கேள்விக்கு பதிலை கங்கைக்கரையில சொல்கிறேன்" என்று பார்வதியை அழைத்துக்கொண்டுகங்கைக்கரைக்கு வந்தார்.

இருவரும் மாறுவேடத்தில் இருந்தார்கள்.

இருவரும்பேசி வைத்தபடி சிவன் மயக்கம் வந்தமாதிரி நடித்து மயங்கி விழுந்தார்.

பார்வதி உதவி கேட்டு கூச்சலிட்டார். எல்லோரும் கூடிவிட்டனர்.

யாராவது ஒருவர் கங்கையிலிருந்து தண்ணீர்கொண்டுவந்து தெளித்தால் மயக்கம்தெளியும். உதவி செய்யுங்கள் என்றார் பார்வதி. எல்லோரும் ஓடினர்.

"ஒரு நிமிஷம். உங்களில் யார் பாவம்செய்யாதவரோ அவர்கள் தண்ணீர்கொண்டு வந்து தெளித்தால்தான்மயக்கம் தெளியும்" என்றார் பார்வதி எல்லோரும் சட்டென்று பிரேக்போட்டது போல நின்று விட்டார்கள்.

காரணம் எல்லோரும் பாவம்செய்திருக்கிறார்கள். பத்து நிமிடம்ஆயிற்று. இருபது நிமிடம் ஆயிற்று. ஒருவர் கூட அசையவில்லை. திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் ஓடிப்போய் கங்கையில் குதித்தான்.

முங்கிக் குளித்தான். தண்ணீர்அள்ளிக் கொண்டு வந்து சிவன்முகத்தில் தெளித்தான். சிவன் மயக்கம் தெளிந்ததுபோலஎழுந்திருக்க, கூட்டம் கலைந்தது. சிவன் சொன்னார், "கங்கையில்குளித்தால் பாவம் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒருவன் மட்டுமே நம்பினான். கங்கையில் குளித்தால் பாவம்போகும் என்று தெரிந்தவனுக்கு எல்லாம் பாவம் போகாது. கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று நம்பியவனுக்கு மட்டும்தான் போகும்" என்றார்.

நம்பிக்கையாய் இருந்தால் முடியும் என்பதே முதல் வெற்றி.

நன்றி : ரமேஷ் பால்ராஜ்

பா விவேக்

எல்லா வீடுகளிலும் அப்பாக்களின் செல்லமாக மகள்கள் இருந்துவிடலாம்.... ஆனால் ஒவ...

Posted: 01 Mar 2015 04:08 AM PST

எல்லா வீடுகளிலும்

அப்பாக்களின் செல்லமாக மகள்கள் இருந்துவிடலாம்....

ஆனால்

ஒவ்வொரு மகனின் நம்பிக்கைத் தூண் என்றுமே அப்பா தான்....

நன்றி : மீனா ராம்

பா விவேக்

0 comments:

Post a Comment