Tuesday, 3 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 03 Mar 2015 09:45 AM PST

பென்சில் துருவலில் அருமையான ஓவியம் :)

Posted: 03 Mar 2015 09:38 AM PST

பென்சில் துருவலில் அருமையான ஓவியம் :)


:) Relaxplzz

Posted: 03 Mar 2015 09:30 AM PST

இந்த பசுமையான சூழலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Mar 2015 09:20 AM PST

இந்த பசுமையான சூழலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


வைரமுத்துவின் ரீமிக்ஸ் கல்யாணம் பண்ணிப்பார்... உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்...

Posted: 03 Mar 2015 09:10 AM PST

வைரமுத்துவின் ரீமிக்ஸ்

கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்'
தோன்றும்...
அப்பவே கண்ணைக் கட்டும்
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...

ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையில் கொடூரம் புரியும்...
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்...

ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்...
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்...
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின்,
கிரைண்டர்,மிக்ஸி கண்டுபிடித்தவன் தெய்வமாவான்...
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...

கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்...
காத்திருந்தால்...
'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்...
'வந்திட்டியாடி செல்லம் போலாமா'
என்பாய்...

வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்கமாட்டாள் -ஆனால்,
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில் மிதிக்க, கடன்
கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையன்று உருளக்
காண்பாய்...

கல்யாணம் பண்ணிப்பார்...

இருதயம் அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதி் கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்...
ஆனால்உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...

பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒற்றை
சவுண்டில்
சப்த நாடியும்
அடங்கிவிடும்...

:D கல்யாணம் பண்ணிப்பார் :D

Relaxplzz

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன? // கண்டிப்பாக படித்து பிறர் பயன...

Posted: 03 Mar 2015 09:00 AM PST

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?

// கண்டிப்பாக படித்து பிறர் பயன்பெற பகிரவும் //

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை.

ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது. 2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் 'A' ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.

மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.

கடந்த காலங்களில் இந்நோய் வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..

இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.

நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.

ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.

ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....

இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.

தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.
கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.

இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்
உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.

இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும்.

ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.

நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.
குழந்தைகளாக இருப்பின்....

வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.

குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.

ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.

தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்

பெரியவர்களுக்கு.........

சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்

மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
தீடீர் மயக்கம்.

தடுமாற்றம்.

H1N1 வைரஸ் பொது அறிகுறிகள் மற்றும் தற்காப்பு செயல்பாடுகள்

H1N1 வைரஸ் உலக மக்கள் சமுதாயத்திடையே மிகுந்த பீதியை கிளப்பிவிட்டது. இந்த உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றன. கிழ்க்குறிப்பிட்டுள்ள சுலபமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்..

H1N1 காய்ச்சல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்

சாதாரண சளி காய்ச்சல் போல் அல்லாது அதிக அளவு காய்ச்சல் – சில நோயாளிகளிடம் இந்த அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.
வறட்டு இருமல்
மூக்கு அடைப்பு (அ) ஒழுகுதல்
தொண்டை புண்
உடல் வலி
குளிர் நடுக்கம்
வழக்கத்திற்கு மாறான அதிகளவு களைப்பு

குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு
முற்றிய பன்றிக்காய்ச்சலால் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழத்தல் ஏற்படலாம்.

H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உலகெங்கும் பரவிய உயிர்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் இந்திய மன்னில் வந்தடைந்து பல உயிர்களை குடித்திருக்கிறது. இந்த நோய் வருமுன் காப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுதல் போதுமானது. படி அளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மரக்கால் அளவிற்கு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பின்பற்றி பன்றிக் காய்ச்சல் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியிருப்பதாக உணர்ந்தால், கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களான பள்ளி மற்றும் அலுவலகம் செல்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி சோப்பு கொண்டு நன்றாக நுரைக்க சோப்பிட்டு (குறைந்தபட்சம் 15 நொடிகள்) ஓடும் தண்ணீரில் கழுவவும்.
இரவில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

தினமும் குறைந்தபட்சம் 8 அல்லது 10 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அது வறட்சி ஏற்படாமல் குழிவுகளில் எச்சில்/சளி ஊற செய்யும்.

இருமல் மற்றும் தும்மல் வரும்போது மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட காகிதத்தால் வாயை மூடிக்கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக் கிருமிகள் யாருக்கும் பரவாமல் தடுக்கலாம்.

கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளால் தொடுவதை தவிற்பதன் முலம் பரவுவதை தவிற்கலாம்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள (அ) பாதிக்கப்பட்ட நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு கவணித்தல் வேண்டும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் / உடலை வலிமையுடன் பேணவும் / முழுதானியங்கள், பல்வகை வண்ணக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை உண்ணவும்.

தெரிந்துக்கொள்க:

இத்தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்நோய்க்கு எதிரான வழிகாட்டிகள் அவ்வபோது பிரசுரிக்கப்படுகிறது. நோய் பற்றிய அவ்வபோது வெளிவரும் புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன்படி முறையாக செயல்படுதல் வேண்டும்.

// கண்டிப்பாக படித்து பிறர் பயன்பெற பகிரவும் //

Relaxplzz


:) Relaxplzz

Posted: 03 Mar 2015 08:55 AM PST

70 கோடி விவசாயிகளுக்கு விவசாயக் கடன் 25000 கோடி! வெறும் 70 corporate முதலாளிகளு...

Posted: 03 Mar 2015 08:50 AM PST

70
கோடி விவசாயிகளுக்கு விவசாயக்
கடன் 25000 கோடி!

வெறும் 70 corporate
முதலாளிகளுக்கு
5லட்சம் கோடி மானியம்!
ஏற்கனவே
வங்கியில்
125000 கோடி வராக் கடன்!

- கவிதா.

1st லைக் பண்ணுங்க அப்பறம் கமெண்ட்ல உங்க பேர டைப் பண்ணுங்க இப்ப கண்ண சுருக்கி ப...

Posted: 03 Mar 2015 08:45 AM PST

1st லைக் பண்ணுங்க அப்பறம்
கமெண்ட்ல உங்க பேர டைப் பண்ணுங்க
இப்ப கண்ண சுருக்கி போட்டோவ பாருங்க
உங்க முகம் தெரியும் ....


கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Mar 2015 08:40 AM PST

கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


இனிமே அம்மா எப்படி சாப்பாடு தர்றாங்கன்னு நானும் பாக்குறேன்... ;-) ;-)

Posted: 03 Mar 2015 08:35 AM PST

இனிமே அம்மா எப்படி சாப்பாடு தர்றாங்கன்னு நானும் பாக்குறேன்... ;-) ;-)


:) Relaxplzz

Posted: 03 Mar 2015 08:30 AM PST

அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 03 Mar 2015 08:22 AM PST

அழகு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


;-) ;-) உண்மைதான...

Posted: 03 Mar 2015 08:17 AM PST

;-) ;-) உண்மைதான...


பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன...

Posted: 03 Mar 2015 08:10 AM PST

பையன் தன் அப்பாவிடம் கேட்டான். "அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!"

அப்பா ஒருகணம் யோசித்தார். "மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…" என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

"இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…" என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

"ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…"
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். "சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…"
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

"அப்பா… இதுதான் கோபமா…?'. "இல்லை மகனே… கொஞ்சம் பொறு…" என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். "ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…"

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. "சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…"

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். "அப்பா… இதுதான் கோபமா…?'. "இல்லை மகனே… கொஞ்சம் பொறு…" என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். "ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…"

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. "ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…" போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

"மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…" என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். "ஹலோ… ராமசாமி இருக்காரா…?
அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…"

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. "டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ... நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!"

மகன் அப்பாவிடம் சொன்னான். "அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?"

"இப்பக் காட்டறேன்…" என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

"ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!"

:P :P

Relaxplzz

#கிரிக்கெட் தெரிந்த செய்தி தெரியாத உண்மைகள். உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனை...

Posted: 03 Mar 2015 08:00 AM PST

#கிரிக்கெட்

தெரிந்த செய்தி
தெரியாத உண்மைகள்.

உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டின் அள்ள
அரசாங்கத்தின் விளையாட்டு துறையின்
சார்பில் வீரர்களை தேர்வு செய்வார்கள்.

இந்தியாவை தவிர

இந்திய கிரிக்கெட் வாரியம்
என்ற தனியார் அமைப்பு தான் இந்திய வீரர்களை தேர்வு செய்யும்.

இதில் இந்திய அரசாங்கத்தின் பிரதமர்
அல்லது குடியரசுத் தலைவர் கூட தலையிட முடியாது. காரணம் அந்த
தனியார் அமைப்பின் விதி
அப்படி!

கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்து ம்
அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல.

மாறாக உலக கோப்பை
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றால் மக்களின்
வரிப்பணத்தில் இருந்து
அரசாங்கம் கோடி கோடியாக வீரர்களுக்கு பரிசாக கொட்டி கொடுப்பார்.

ஒரு அரசாங்க ஊழியர். இன்னொரு அரசு துறை யிலே அல்லது வேறு தனியார் நிறுவனத்திலே பணி செய்ய இயலாது.

ஆனால் இந்திய கிரிக்கெட்
வீரர் அனைவருக்கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள். மற்றும் பல தனியார் நிறுவனத்தில்
கௌரவத் தலைவராக இருந்த கொண்டு தனி ஊதியம் பெறுவார்கள்.

இவற்றுக்கு மேலாக
ஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு விளம்பரங்களில் நடித்து
கோடி கோடியாக சம்பாதிப்பார்கள்

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன்
இம்ரான்கான் மற்றும்
அப்ரிடி அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு
அவர் அவர் சொந்த ஊரில்
ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண்டு மருத்துவமனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக
கட்டி உள்ளார்கள்.

முறையான வருமான வரி
செலுத்துபவர் என்று மார் தட்டி கொள்ளும் தெண்டுல்கரும், உலகின் முதல் நிலை பணக்கார
விளையாட்டு வீரர் தோனி யும்.

இந்திய மக்களுக்கு செய்த
கைமாறு என்ன?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்கள்
கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களுக்கு தொலைக்காட்சி யில்
கை தட்டி ரசிப்பது?

நாங்கள் கை தட்டி ரசிப்பது
உங்களை அல்ல.
உங்கள் பனியன் மீது
இருக்கும்
எங்கள் தேசத்தின்
பெயருக்காக!!

நட்புடன்
Kamal Dhasan.

Relaxplzz


முட்டையில் இருந்து தான் கோழி வந்தது'னு இப்பவாவது நம்பறீங்களா ப்ரெண்ட்ஸ்....????!...

Posted: 03 Mar 2015 07:50 AM PST

முட்டையில் இருந்து தான் கோழி வந்தது'னு இப்பவாவது நம்பறீங்களா ப்ரெண்ட்ஸ்....????!!!!! Super Creativity..!!!


இந்தியன் டீமே இடைவேளைல குளுகோஸ் தண்ணி, வாழைப்பழம், கொய்யாகாய் தான் எனார்ஜிக்காக...

Posted: 03 Mar 2015 07:45 AM PST

இந்தியன்
டீமே இடைவேளைல
குளுகோஸ் தண்ணி,
வாழைப்பழம்,
கொய்யாகாய் தான்
எனார்ஜிக்காக திங்கறத
காட்ரானுக.

ஆனா,
தெருவுல விளையாடற
வாண்டுக பெப்சி, கோக்
குடிக்குது.

#விளம்பரவினை

- டிமிட்ரி @ Relaxplzz

பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Mar 2015 07:40 AM PST

பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 03 Mar 2015 07:30 AM PST

(y) (y) Relaxplzz

Posted: 03 Mar 2015 07:20 AM PST

(y) (y) Relaxplzz


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமை...

Posted: 03 Mar 2015 07:10 AM PST

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

"நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?"

"ஆம் மன்னா!"

"அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு" என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, "சரி மன்னா" என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், "அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??"

"இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"தொடரும்" என்றார் மன்னர்.

"மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்."' என்றார் அமைச்சர்.

"சரி அடுத்து"

"இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்"

"களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?"

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்."

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் "அடுத்தது" என்றார்.

""நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது" என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

"உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்" என ஒத்துக் கொண்டார் மன்னர்.

"சரி எங்கே முதலாவது முட்டாள்?"

அமைச்சர் சொன்னார்."மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு Facebook thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!"

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே! :P :P

Relaxplzz

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை ! உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில்...

Posted: 03 Mar 2015 07:00 AM PST

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.

அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ்
பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார். அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -
இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !

Relaxplzz


அம்மா ரொம்ப சோகமான மன நிலையில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தாள் குழந்தை வரு...

Posted: 03 Mar 2015 06:50 AM PST

அம்மா ரொம்ப சோகமான மன நிலையில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தாள் குழந்தை வருவதை கூட பார்க்காமல்...

குழந்தை சொன்னது அம்மா நீ தான் இந்த உலகத்திலயே 2nd beautiful women...

அப்ப 1st beautiful women யாருடா செல்லம்..

அதுவும் நீ தான்... ஆனால் நீ சிரிக்கும் போது மட்டுமே ரொம்ப அழகாய் இருக்கிறாய்....

Relaxplzz


ஒருவன்: சார்...சார்...என் நாய் தொலைஞ்சி போச்சி சார்.. நீங்க தான் கண்டுபிடிச்சி த...

Posted: 03 Mar 2015 06:45 AM PST

ஒருவன்: சார்...சார்...என் நாய் தொலைஞ்சி போச்சி சார்..
நீங்க தான் கண்டுபிடிச்சி தரணும்..

போலிஸ்:சரி...நாய்க்கு போன் பன்னி பாத்தியா....?

ஒருவன்:....சா....ர் நாய் எப்படி போன் வச்சிருக்கும்....?

போலிஸ்: ஏய்யா....கண்ட கண்ட நாய்யெல்லாம் போன் வச்சிருக்கும் போது நாய் போன் வச்சிருக்க கூடாத......?

:O :O

- Honey Xman @ Relaxplzz

வெயிலும் வந்தாச்சு.., மண்பானையும் வந்தாச்சு... மண் பானை தண்ணீர் குடிக்க பிடித்த...

Posted: 03 Mar 2015 06:40 AM PST

வெயிலும் வந்தாச்சு.., மண்பானையும் வந்தாச்சு...

மண் பானை தண்ணீர் குடிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P Relaxplzz

Posted: 03 Mar 2015 06:20 AM PST

‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கி...

Posted: 03 Mar 2015 06:10 AM PST

''மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்'' னு நண்பன் சொன்னா......

# நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.

''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன் னா......

# அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக்
கிளம்பலன்னு அர்த்தம்.

''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா.....

# ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.

''பங்காளி, வாடா சரக்கடிப்போம்'' னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா....

# அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.

''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம
போன வாங்குனா....

# நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.

''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா....

# அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.

''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா...

# அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான ்னு அர்த்தம்.

''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா...

# அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன்
ஆளு இருக்குன்னு அர்த்தம்.

''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப
நண்பன் சொன்னா....

# இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம்.

:) :)

Relaxplzz

மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடு...

Posted: 03 Mar 2015 05:54 AM PST

மனித உறவுகள் மேம்பட.....!!!

1. தானே பெரியவன்,தானே சிறந்தவன்
என்ற அகந்தையை விடுங்கள். (Ego)

2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். (Loose Talks)

3. எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)

4. விட்டுகொடுங்கள். (Compromise)

5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate)

6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments)

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex)

10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

11. எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility)

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Miss understanding)

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி
வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative)

20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்...

Relaxplzz


வாழ்வியல்

நான் பெற்ற மகனை விட, நான் வாங்கிய மண் தான் இன்று எனக்கு சோறு போடுகிறது.... #வி...

Posted: 03 Mar 2015 05:50 AM PST

நான் பெற்ற மகனை விட, நான் வாங்கிய மண் தான் இன்று எனக்கு சோறு போடுகிறது....

#விவசாயி


0 comments:

Post a Comment