Relax Please: FB page daily Posts |
- தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு...
- கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? கியாரண்ட்டி’ என்றால் ‘உத...
- தொப்பையை தவிர்க்க , குறைக்க வேண்டிய முறைகள் :- 1 .முதலில் கொலஸ்ட்ரால் முழு சோதன...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- #அவசர_உதவிக்கு 9952740740(Must Share) பணிக்குச்செல்லும் பெண்களும் பள்ளிக்குச்செல...
- Saturdayல Schoolனாலே கஷ்டம்.. இதுல Annual exam வேற... இதெல்லாம் தட்டி கேட்க ஒரு...
- பூரி சாம்பார் கம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீ...
- மன உறுதி !!! ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்த...
- :) Relaxplzz
- (ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)" அடிமையாகாதே! ! ! போதைக்கு அடிமையாகாத...
- ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்க...
- :) Relaxplzz
- சந்தோஷம் நாம பார்க்கிற கேட்கிற அனுபவிக்கிற எல்லாத்துலயும் இருக்கு... வாழ்ந்து பா...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
Posted: 28 Mar 2015 06:10 AM PDT தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து "நீ படித்த வரி என்ன?" என்று கேட்டார். "உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு" என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர். :) :) #கோபம்_தவிர் Relaxplzz |
Posted: 28 Mar 2015 04:10 AM PDT கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? கியாரண்ட்டி' என்றால் 'உத்திரவாதம்' என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 'வாரண்ட்டி' என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் 'கியாரண்டி' என்றால் 'பொருளை மாற்றிக் கொடுப்பது,' வாரண்டி என்றால் 'சர்வீஸை'க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் 'லாப்_டாப்' தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு 'சயன்டிஸ்ட்' தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், 'லாப்டாப்' மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, 'லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்' அவர்கள் கூலாக, 'நீங்கள் 'லாப்_டாப்பை' சரியாக 'பிளக்கில்' செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது' என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, 'கியாரண்ட்டி' கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் 'கார்டு' கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்' என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், 'லாப்_டாப்' உபயோகமில்லாமல் போய்விட்டது. 'கியாரண்ட்டி_வாரண்ட்டியை' வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்! பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க 'இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்' கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை. மேலே சொன்ன 'லாப்_டாப்' விஷயம் போல் 'மைக்ரோவேவ் அவன்' பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான 'மைக்ரோ வேவ் அவன்'கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், 'அவன் வேலை செய்யவில்லையென்று' பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, 'மைக்ரோ_வேவ் அவனை' ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த 'கியாரண்ட்டி_வாரண்ட்டி' வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். '15 ஆம்ஸ் சுவிட்ச்' இல்லாதவர்கள், ஒரு 'சுவிட்ச் கன்வெர்டர்' வாங்கி பிளக்கில் செருகினால், 'அவன்' வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை. நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, 'டிமாண்ட் டிராஃப்ட்' சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!' யார் நுகர்வோர்? தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது. Relaxplzz |
Posted: 28 Mar 2015 03:00 AM PDT தொப்பையை தவிர்க்க , குறைக்க வேண்டிய முறைகள் :- 1 .முதலில் கொலஸ்ட்ரால் முழு சோதனையும் ,சர்க்கரை அளவு சோதனையும் எடுக்கவேண்டும் . 2 . இயற்கை உணவுப்பொருள்களை பயன்படுத்த வேண்டும் , கிழங்கு வகைகளை கொஞ்சம் குறைக்க வேண்டும். 3 . அசைவ உணவினை அதிக அளவில் தவிர்க்க வேண்டும். 4 . செயற்கை குளிர்பானம் , ஆல்கஹால் மது அருந்துதல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 5 . வீட்டினில் சாப்பிட முடியாதவர்கள் நல்ல உணவகங்களில் மட்டும் சாப்பிட வேண்டும், இல்லாவிட்டால் உடம்பிற்கு ஒத்து வராத பொருளை சேர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் கட்டளை இடுங்கள் . 6 . பழங்களை பயன்படுத்துங்கள் , பப்பாளி பழம் நான்கு துண்டுகள் தினமும் சாப்பிடலாம் .இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் சிறந்த மலம் உக்கியாகவும் பயன்படுகிறது . 7 . அதிக தொப்பை பெற்றிருப்பவர்கள் வாழைத்தண்டை வதக்கி கூட்டு செய்து வாரம் இரு முறையும் , மற்றவர்கள் வாரம் ஒரு முறையும் பயன்படுத்தலாம் . 8 . சாப்பாட்டில் கொத்தமல்லி , கருவேப்பில்லை , பொதினா மற்றும் கீரை வகைகள் பயன்படுத்தி வரவும் . இவைதான் இயற்கை முறை ... 9 . முடிந்தால் கொஞ்சம் நடை பயிற்சி அல்லது கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம் ... Relaxplzz ![]() |
Posted: 27 Mar 2015 11:30 PM PDT |
Posted: 27 Mar 2015 10:30 PM PDT |
Posted: 27 Mar 2015 09:30 PM PDT |
Posted: 27 Mar 2015 09:00 PM PDT #அவசர_உதவிக்கு 9952740740(Must Share) பணிக்குச்செல்லும் பெண்களும் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். #ஹலோ_போலீஸ்_அசத்தும்_நெல்லை_போலிஸ் 9952740740 என்ற எண்ணுக்குப் போன் செய்து 'ஹலோ போலீஸில்' புகார் தரலாம்.. நெல்லையில்! நெல்லை: நெல்லை மாவட்ட பொதுமக்களின அவசர கால உதவிக்காக ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. அதிரடியாக துவங்கி வைத்தார். இது முதல் நாளே நல்ல பலனை தருவதால் போலீசார் புத்துணர்ச்சியில் உள்ளனர். நெல்லையில் கடந்த ஓராண்டாக பழிக்கு பழி, நிலத் தகராறு, சாதி பிரச்சனை என வெவ்வேறு காரணங்களால் 100க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எஸ்.பி. அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய எஸ்.பி.யாக விக்ரமன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். 9952740740 என்ற எண்ணுக்குப் போன் செய்து 'ஹலோ போலீஸில்' புகார் தரலாம்.. நெல்லையில்! இந்த நிலையில் விக்ரமன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசர கால உதவிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியாக ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் 9952740740 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு தங்களுககு தெரிந்த புகார்கள் மற்றும் குற்ற செயல்கள் குறித்து தெரிவிக்கலாம். மேலும் இந்த நம்பருக்கு வாட்ஸ் ஆப், மெசேஜும் அனுப்பலாம். தகவல் அளிப்பவர்களுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் நானும், எனக்கு கீழ் உள்ள 3 அதிகாரிகளும் தகவல்களை பெறறு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இது போன்ற திட்டத்தை விழுப்புரத்தி்ல் முதன் முறையாக துவங்கி வைத்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த நம்பரில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் உள்பட யார் வேண்டுமானாலும் தகவல்களை அனுப்பி வைக்கலாம். மேலும் நெல்லை மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு விரைவில் அமைதி கூட்டம் நடத்தப்படும். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். "மேலும் ஜாதி போஸ்டர்கள், ஜாதி பாடல்களை போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது" tongue emoticon மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றார். ஹலோ போலீஸ் திட்டம் துவங்கி வைத்த முதல் நாளே கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் அதிரடியாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - சரவணக்குமார் Relaxplzz ![]() |
Posted: 27 Mar 2015 08:50 PM PDT |
Posted: 27 Mar 2015 08:40 PM PDT |
Posted: 27 Mar 2015 08:30 PM PDT |
Posted: 27 Mar 2015 08:15 PM PDT அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்! உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். ௧. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. ௨. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை. ௩. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. ௪. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ௫. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ௬. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. ௭. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா' என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். ௮. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்' என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. ௯. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை. பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்' என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு., ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல! மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது! பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்… -சே.க. அருண் குமார் Relaxplzz |
Posted: 27 Mar 2015 08:15 PM PDT மன உறுதி !!! ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.. மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, "நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்" என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார். இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் , அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, "நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது. மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான். அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்" என்றான். குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்.... இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். Relaxplzz |
Posted: 27 Mar 2015 07:30 PM PDT |
Posted: 27 Mar 2015 07:10 PM PDT (ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)" அடிமையாகாதே! ! ! போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்! மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்! சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்! பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்! புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை இழந்திடுவாய்! தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்! புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்! கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்! உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்! அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!! Relaxplzz |
Posted: 27 Mar 2015 06:45 PM PDT ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. // Plzz Share// . ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால்குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடுவாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள்.இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். . குழந்தைகளுக்கானதாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. . இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் (Mineral Oil) சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். . இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. . இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களைதயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். . பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்!நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்! Relaxplzz ![]() |
Posted: 27 Mar 2015 06:30 PM PDT |
Posted: 27 Mar 2015 10:30 AM PDT |
Posted: 27 Mar 2015 10:00 AM PDT ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான் உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான் கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் .. உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர் உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல் (y) (y) Relaxplzz ![]() |
Posted: 27 Mar 2015 09:55 AM PDT |
Posted: 27 Mar 2015 09:45 AM PDT |
Posted: 27 Mar 2015 09:38 AM PDT |
Posted: 27 Mar 2015 09:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment