Friday, 27 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 27 Mar 2015 09:17 AM PDT

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் ச...

Posted: 27 Mar 2015 08:50 AM PDT

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன..

#பபி


வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் ச...

Posted: 27 Mar 2015 08:50 AM PDT

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன..

#பபி

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றபோது இந்த...

Posted: 27 Mar 2015 08:10 AM PDT

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றபோது இந்திய அணியின் தலைவராயிருந்த கபில் தேவ்வை கோப்பையை வழங்கும் மேடைக்கு அழைத்தார்கள்.

இந்திய அணியினரின் வெற்றி குறித்து அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர்.

கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டமையால்
கபில்தேவால் சரியாக பதில் சொல்லவியலவில்லை.
திக்கித்தடுமாறி பேசினார்.

அடுத்தநாள்,
இவருடைய குறைவான ஆங்கிலமொழிப்புலமையை அங்குள்ள நாளேடுகள் கிண்டலடித்து எழுதியிருந்தன.

இந்த செய்தி கபிலின் காதுகளுக்குப்போனது.

சிலநாட்களுக்குப்பின்னர்
வெற்றிக்கோப்பையுடன் தாயகத்திற்குத்திரும்ப
விமானநிலையம் வந்த அவரை
தங்களது காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள்
மீண்டும் பிடித்துக்கொண்டு,
உங்களது ஆங்கிலம் ஏன் படுமோசமாயுள்ளதென்று கேட்டார்கள்.

அதற்கு கபில்தேவின் பதில்:

பாருங்கள்..
நாங்கள் இங்கே ஆங்கிலம் பேசுவதற்காக வரவில்லை.
கிரிக்கெட் விளையாட வந்தோம்.
இதோ கோப்பையுடன் செல்கிறோம்.
ஆங்கிலம் தெரியாததற்காக நான் வெட்கப்படவில்லை.

உங்களது நாட்டின் தேசிய விளையாட்டான
கிரிக்கெட்டின் உலகக்கோப்பையை
நாங்கள் எடுத்துச்செல்கிறோம்.
இதற்காக நீங்கள்தான் வெட்கப்படவேண்டும்.

எப்புடி...?
இதுல என்ன கொடுமைனா,
இங்கிலாந்து இதுவரைக்கும் ஒருமுறைகூட
"ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை" வெல்லவில்லை.

- ஃபீனிக்ஸ் பாலா @ Relaxplzz

ஊரில் இருபுறமும் வயல்வெளிகள் சூழ்ந்த மேடு பள்ளமான சாலையில் கிடைத்த பயண அனுபவங்கள...

Posted: 27 Mar 2015 07:50 AM PDT

ஊரில் இருபுறமும் வயல்வெளிகள் சூழ்ந்த மேடு பள்ளமான சாலையில் கிடைத்த பயண அனுபவங்கள், நகரத்தில் இருக்கும் ஒருவழிப்பாதைகளில் கிடைப்பதில்லை..


:) Relaxplzz

Posted: 27 Mar 2015 07:30 AM PDT

கடலை டிப்ஸ்... ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு...

Posted: 27 Mar 2015 07:10 AM PDT

கடலை டிப்ஸ்...

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடையாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற ரொம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )

;-) ;-)

Relaxplzz

இந்திய ரூபாய் நோட்டுகள் சொல்லும் வரலாறு ****************************************...

Posted: 27 Mar 2015 07:00 AM PDT

இந்திய ரூபாய் நோட்டுகள் சொல்லும் வரலாறு
**********************************************************************
இந்திய ரூபாய் நோட்டுக்களில் 1, 2, 5, 10, 20, 50, 100, 500 & 1000 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.

ரூபாய் 1 & 1000 - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.

ரூபாய் 2 - விண்வெளியில் சாதனை

ரூபாய் 5 - விவசாயத்தின் பெருமை

ரூபாய் 10 - விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 - கடற்கரை அழகு (கோவளம்)

ரூபாய் 50 - அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)

ரூபாய் 100 - இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 - சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)

Relaxplzz


குழந்தைகள் தவறு செய்தால் கத்தாதீர்கள், கற்றுக் கொடுங்கள்.!

Posted: 27 Mar 2015 06:50 AM PDT

குழந்தைகள் தவறு செய்தால் கத்தாதீர்கள், கற்றுக் கொடுங்கள்.!


ரிஸ்க்கான சண்டை காட்சிகள்ல ஹீரோவுக்கு பதிலா நடிகிறவங்கள ஏன் டூப்ன்னு சொல்லணும் ....

Posted: 27 Mar 2015 06:45 AM PDT

ரிஸ்க்கான சண்டை காட்சிகள்ல ஹீரோவுக்கு பதிலா நடிகிறவங்கள ஏன் டூப்ன்னு சொல்லணும் . நியாப்படி பார்த்த அவருதானே ஒரிஜினல் ..?

- களவாணி பய

:) Relaxplzz

Posted: 27 Mar 2015 06:30 AM PDT

நமக்கு பிரியமான ஒருவர் வெற்றி பெரும் போது அவரைப் பார்த்து "எங்க தல இருக்கார்னு"...

Posted: 27 Mar 2015 06:00 AM PDT

நமக்கு பிரியமான ஒருவர் வெற்றி பெரும் போது அவரைப் பார்த்து "எங்க தல இருக்கார்னு" ந்னு கொண்டாடுபவர்களை விட ...

அவர் தோல்வி அடையும் போது "நாங்க இருக்கோம் தல" ந்னு அவருக்கு ஆதரவுதருபவர்கள் தான் உண்மையிலேயே அவர் அபிமானிகள்..!!

எங்க தல தோனி ..DON நீ தான்..!!. (y)

https://www.youtube.com/watch?v=5C0jkBfor6Q

- Chelli Sreenivasan


உங்களை வளப்படுத்திக் கொள்ள நேரம் செலவழியுங்கள்...மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்...

Posted: 27 Mar 2015 05:50 AM PDT

உங்களை வளப்படுத்திக் கொள்ள நேரம் செலவழியுங்கள்...மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்.


:) Relaxplzz

Posted: 27 Mar 2015 05:30 AM PDT

:) Relaxplzz

Posted: 27 Mar 2015 04:30 AM PDT

நம்மாளுங்க செய்திகளை முந்தி தருவாங்க ..சொன்னா நம்பனும்... ஃபேஸ்புக் ராக்ஸ் ;-)...

Posted: 27 Mar 2015 04:00 AM PDT

நம்மாளுங்க செய்திகளை முந்தி தருவாங்க ..சொன்னா நம்பனும்...

ஃபேஸ்புக் ராக்ஸ் ;-)

நன்றி .Anand Siddhan Kumar


:) Relaxplzz

Posted: 27 Mar 2015 01:29 AM PDT

ஆண்களிடம் வருமானத்தைக் கேட்காதீர்கள். - - - - - - - - ஏனெனில், அதை அவர்கள் அவர்...

Posted: 27 Mar 2015 12:50 AM PDT

ஆண்களிடம் வருமானத்தைக் கேட்காதீர்கள்.
-
-
-
-
-
-
-
-
ஏனெனில், அதை அவர்கள் அவர்களுக்கென்று வைத்துக் கொண்டதே கிடையாது.

- பரிமேலழகன் பரி


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

#வாழ்த்துக்கள்_இந்திய_அணி மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய...

Posted: 27 Mar 2015 12:30 AM PDT

#வாழ்த்துக்கள்_இந்திய_அணி

மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி.
இதை கட்டாயம் வாழ்த்த வேண்டும். (y)

நண்பர்களுக்கு இதை பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

- Revathykandiappan Kandiappan @ Relaxplzz


இந்த விளையாட்டு மட்டும் ஏன் பிடித்தது ? இதற்கு அப்படியென்ன ஆற்றல் ? ஏன் நம...

Posted: 27 Mar 2015 12:02 AM PDT

இந்த விளையாட்டு மட்டும்
ஏன் பிடித்தது ?

இதற்கு
அப்படியென்ன ஆற்றல் ?

ஏன் நம்மை
ஆட்டிப்படைக்கிறது இது ?

இளமையில் நாம்
இதையே விளையாடினோம்.

விளையாட்டுக்கு ஆள்கூப்பிட
இதன் நிமித்தமே
நண்பன் வீட்டுக்குச் சென்றோம்.

இதற்கு முன்
உண்டிராத இனிப்பையும் தேநீரையும்
சுவைத்தோம்.
நண்பனின் தாயார்க்கு
நம்மையும் மகனாக்கியது இவ்விளையாட்டு.

இதற்குத்தான்
ஆள்கணக்கு தேவையில்லை
இருவராகவும் விளையாடினோம்
பதின்மராகவும் விளையாடினோம்.

இதற்குத்தான் களம்
வேண்டியதில்லை
முள்காட்டில்
முச்சந்தியில்
மொட்டைமாடியில்
வீதியில் வெளியில்
வயல்வரப்பில் என
எங்கும் விளையாடினோம்.

இதற்குத்தான் கால வரம்பில்லை.
ஐந்து வீச்சலகும்
பதினைந்து வீச்சலகும் நம் தேர்வுதான்.

இதற்குத்தான்
எதுவும் ஆடுகருவி ஆயிற்று
தேர்வு அட்டை மட்டையானது
காகிதச்சுருட்டு பந்தானது
முக்கோடு முக்குச்சியானது.

மட்டை வாங்கித்தாவென்று
தந்தையிடம் மன்றாடியது
இதற்குத்தான்.

பந்தைத் தொலைத்ததற்குப்
பயந்ததும் இதற்கே.

இவ்விளையாட்டைத்தான்
விருப்பப்படி விதி வைத்து
விளையாடினோம்.

'எப்பப் பாரு... கிரிக்கெட்டு...' என்று
உள்ளே பெருமிதத்தோடும்
உதட்டில் கண்டிப்போடும்
தாய் காட்டிய பொய்ச்சினம் உணர்ந்தோம்.

கைக்கு மட்டை வந்ததும்
தோன்றிய பேருணர்ச்சியை
மறக்க முடியுமா ?

நம்மைச் சுற்றி
பத்துப்பேர்
வியூகம் அமைத்து நிற்பது
அத்தனை எளிய தருணமா ?

நாமடித்த பந்து
நான்குக்கும் ஆறுக்கும் போனபோது
பெற்றதுதானே
நமது முதல் தன்னம்பிக்கை ?

ஏன் பிடிக்காது
இவ்விளையாட்டு ?

ஏன் இது
நம்மை ஆட்டிப்படைக்காது ?

- கவிஞர் மகுடேசுவரன்


(y) Relaxplzz

Posted: 26 Mar 2015 11:49 PM PDT

Posted: 26 Mar 2015 11:34 PM PDT


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த காரணத்துக்காக அணி மீதோ அணி வீரர்கள் மீ...

Posted: 26 Mar 2015 11:31 PM PDT

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த காரணத்துக்காக அணி மீதோ அணி வீரர்கள் மீதோ ஆத்திரத்தை வெளிப்படுத்தாமல், தோல்வியை ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ததே தோனிக்கு கிடைத்த வெற்றி..

- Ambuja Simi @ Relaxplzz


வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். ஒரு வாண்டு கதவை திறந்து எ...

Posted: 26 Mar 2015 10:10 PM PDT

வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.

ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.

" அப்பா இருக்காரா...?"

"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."

" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"

"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."

"அண்ணனையாவது கூப்பிடு..."

" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."

"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."

" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."

வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...?
நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...!!!"

Relaxplzz

ஒரு பிரிட்டிஷ் செல்வந்தர், தன்குடும்பத்தோடு ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார்....

Posted: 26 Mar 2015 09:10 PM PDT

ஒரு பிரிட்டிஷ் செல்வந்தர், தன்குடும்பத்தோடு ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கே, ஒரு தோட்டத்தில் விளையாடப் போன அவருடைய ஏழு வயது மகன் ஏரியில் தவறி விழ, தொலைவிலிருந்து ஓடிவந்த ஓர் ஏழைச் சிறுவன், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பணக்காரப் பையனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

மறுநாள் அந்தச் சிறுவனைச் சந்தித்து நன்றி தெரிவிக்கப்போன அந்தச் செல்வந்தர், அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்தப் பையனின் எதிர்காலம் பற்றிக் கேட்க… என் அப்பாவைப் போல நானும் விவசாயி யாக வேண்டியதுதான் அய்யா! என்றான் அவன்.

படிக்க ஆசையில்லையா..? என்று இவர் கேட்க, ஆசைதான்! டாக்டராக வேண்டும் என்று ஆசை. வசதியில்லை! என்றான் சிறுவன். ஏன் டாக்டராக முடியாது..? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார் பணக்காரர். அதிலிருந்து, அவனுடைய கல்விச் செலவு அத்தனையும் ஏற்றுக்கொண்டார்.
வருடங்கள் கழிந்தன…

1943-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். வடஆப்பிரிக்காவில் தங்கியிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் (பிரிட்டிஷ் பிரதமர்) திடீரென நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பிழைப்பது அரிது என்றார்கள். பென்சிலின் என்று புது மருந்து ஒன்றை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். அது ஒன்றுதான் காப்பாற்றும் என்று யாரோ தகவல் சொல்ல, ஃப்ளெமிங்குக்கு அவசர அழைப்புபோனது. உடனே ஒரு சிறப்பு விமானத்தில் பறந்து வந்த ஃப்ளெமிங், பிரிட்டிஷ் பிரதமருக்கு சிகிச்சை தர…

உயிர்பிழைத்த சர்ச்சில், ஃப்ளெமிங்கைப் பார்த்து நன்றியுடன், இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்! என்று புன்னகைத்தார்.

சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல… புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..?

மற்றவர்களுக்கு உதவுவது என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம்.

(படித்துச் சுவைத்தது)

Relaxplzz

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது...

Posted: 26 Mar 2015 10:00 AM PDT

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்
இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்
சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்
காசு கேட்பதில்லை. பணத்துக்குப்
பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா? விசாரித்தபோதுதான்
மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது. 'முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு' (100 பேர்
வரை), 'பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்', 'வாரம் 100
மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்', '1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்
மாலை வரை பாதி விலையில் உணவு' இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால்,
"பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்" பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்
அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்
பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.
மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்
அவர்கள் ஜோலார்பேட்டையில
ேயே சுற்றித்திரிகின்றனர்.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. "பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூட
உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது"
என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாத
நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான
உணவை அவர்களது குடும்பத்தினர்
வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின்
மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில்
இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
"இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை. வழக்க
மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக
சமைக்கிறேன். 5
கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்
மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்
இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்
தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாக
இருக்கிறது" என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
'வாடி நிற்கும்' நாகராஜ்.

Relaxplzz


0 comments:

Post a Comment