Thursday, 26 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நட - - - அதிர்வின்றி, பேசு - - - பணிவாக, உண்ணு - - - அளவாக, சுவாசி - - - ஆழமா...

Posted: 26 Mar 2015 09:10 AM PDT

நட - - - அதிர்வின்றி,

பேசு - - - பணிவாக,

உண்ணு - - - அளவாக,

சுவாசி - - - ஆழமாக,

துங்கு - - - அமைதியாக,

உடுத்து - - - அழகாக,

செயல்படு --அச்சமின்றி,

உழை - - - உண்மையாக,

சிந்தி - - - சுயமாக,

நம்பு - - - சரியாக,

பழகு - - - நாகரிகமாக,

திட்டமிடு - - முன்னதாக,

ஈட்டு - - - நேர்மையாக,

சேமி - - - சிறிதாவது,

செலவிடு - - -யோசித்து,

படி - - - முடிவின்றி...

(y) (y)

Relaxplzz

சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆப் செய்துவிடும் தலைமுறையை கடைசி வரை நம்பிக்கையுடன்...

Posted: 26 Mar 2015 08:17 AM PDT

சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆப் செய்துவிடும் தலைமுறையை கடைசி வரை நம்பிக்கையுடன் போட்டியை பார்க்க வைத்தவர் தோனி.

We love Dhoni ♥

- Boopathy Murugesh


"வீரட் கோலி போராட்ட குணம் உடையவர்"ன்னு ஒருத்தர் ஸ்டேடஸ் போட்ருக்கார். ஆமா ப்ளைட...

Posted: 26 Mar 2015 07:50 AM PDT

"வீரட் கோலி போராட்ட குணம் உடையவர்"ன்னு ஒருத்தர் ஸ்டேடஸ் போட்ருக்கார்.

ஆமா ப்ளைட்ல ஜன்னல் சீட்டுக்கு சண்டை போட்டுட்டு இருக்காராம்..

- Boopathy Murugesh

காட்டில் வேலை செய்பவனை கேவலமாகவும், கணிணியில் வேலை செய்பவனை கௌரவமாகவும் நினைப்பவ...

Posted: 26 Mar 2015 06:50 AM PDT

காட்டில்
வேலை செய்பவனை கேவலமாகவும்,
கணிணியில்
வேலை செய்பவனை கௌரவமாகவும்
நினைப்பவர்களுக் குத்
தெரிவதில்லை;
"அரிசியை" இன்டர்நெட்டில்
டவுன்லோட் செய்ய
முடியாது என்று...


நாம மட்டும் இல்லேனா இங்க ஒன்னும் உருப்படியா நடக்காது" என்பது அலுவலக மூட நம்பிக்க...

Posted: 26 Mar 2015 06:45 AM PDT

நாம மட்டும் இல்லேனா இங்க ஒன்னும் உருப்படியா நடக்காது" என்பது அலுவலக மூட நம்பிக்கைகளில் ஒன்று

- களவாணி பய

அன்று விடுமுறை நாள். விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவப்போது செல்ல சண்டைகள் நட...

Posted: 26 Mar 2015 06:10 AM PDT

அன்று விடுமுறை நாள்.

விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் இருந்தால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த
செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே.

யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே நடந்தது.

நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய்.

நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள்.

என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய்.

என்னை தன் நெஞ்சில் போட்டு தாங்கியவர் என்றாள் மகள்.

செல்ல சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.

என் தந்தை தான் பாசக்காரர் என்னை அடிக்கவே மாட்டார் என்றாள் தாய்.

இல்லை இல்லை... என் தந்தை தான் பாசக்காரர் மற்றவர்கள் என்னை அதட்டக் கூட விடமாட்டார். என் தந்தை உங்களை அடிப்பது தெரிந்து மௌனமாக இருக்கிறாரே என் தாத்தா..

அப்போ என் தந்தை தானே பாசக்காரர் என்றாள் மகள் விளையாட்டாக.

இதை கேட்டுக்கொண்டிருந்த தந்தைக்கு தூக்கிவாரிப் போட்டது.

தான் தன் மகளை நேசிப்பது போல் தானே தன் மனைவியையும் அவரின் தந்தை நேசித்திருப்பார் என்று உணர்ந்தார்.

மகளின் செல்ல சண்டை தந்தைக்கு பாடம் புகட்டியது.

#நந்தமீனாள் @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 26 Mar 2015 06:01 AM PDT

:) Relaxplzz

Posted: 26 Mar 2015 02:36 AM PDT

இந்த நாலு விதிய பாலோ பண்ணினா ஐ.டி ல வேலை பாக்குறது ஒரு அருமையான விஷயம். 1. மேனே...

Posted: 26 Mar 2015 02:10 AM PDT

இந்த நாலு விதிய பாலோ பண்ணினா ஐ.டி ல வேலை பாக்குறது ஒரு அருமையான விஷயம்.

1. மேனேஜர் ஆகக்கூடாது. ஏன்னா
மேல போகப்போக நமக்குத்தான் ரிஸ்க் அதிகம். So No power house.

2.பேப்பர் போடுவேன்னு மிரட்டக்கூடாது. ஏன்னா மேனேஜர்ஸ் காலங்காலமா இந்த மிரட்டல பாத்து தெளிவா இருக்காங்க. நீங்க மிரட்டுனீங்கன்னா அவங்க வேற ரிசோர்ஸ் கொண்டு வருவாங்க .உங்களுக்குத்தான் தேவை இல்லாத ரிஸ்க்.

3.இந்த டெக்னாலஜியில தான் வொர்க் பண்ணுவேன்னு அடம்பிடிக்கக்கூடாது. ஏன்னா ஒரே டெக்னாலாஜில இருக்கவனுக்கு அதே டெக்னாலாஜியால தான் சாவுன்னு ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்லுது.

4.ஒரு வேல வொர்க்ல சொதப்பிட்டோம்ன்னா கூச்சமே படாம அப்பாலஜீஸ் கேட்டுடனும் .
ரோஷம் அறவே கூடாது.

- Arunkumar Kaliyamoorthi

Relaxplzz

:) Relaxplzz

Posted: 26 Mar 2015 01:36 AM PDT

மாணவன்; சார் யானைக்கு ஆங்கிலத்தில எந்த பதில் சரியா இருக்கும் சார்? சார்; யானைக்...

Posted: 26 Mar 2015 01:15 AM PDT

மாணவன்; சார் யானைக்கு ஆங்கிலத்தில எந்த பதில் சரியா இருக்கும் சார்?

சார்; யானைக்கு எலிபேண்ட் தான் கரெக்டா இருக்கும்

மாணவன்; போங்க சார் காமெடி பண்ணாதிங்க யானைக்கு எப்பிடி சார் எலியோட பேண்ட் கரெக்டா இருக்கும்

:O :O

- bhagya

அடுத்தவன் மொழி பேசி அவன் போல் கை கால் வீசி நடப்பதுதான் நாகரீகம் என்றால், இருந்து...

Posted: 26 Mar 2015 01:00 AM PDT

அடுத்தவன்
மொழி பேசி அவன் போல்
கை கால் வீசி நடப்பதுதான்
நாகரீகம் என்றால்,
இருந்து விட்டு போவோம்
தமிழ் மொழி மட்டும்
பேசும்
காட்டுமிராண்டியாய்!!!


விட்றா விட்றா.. எங்ககிட்டயும் பேட்ஸ்மேன் இருக்காய்ங்க.. அப்புறம் ஏன் பாஸ் கண்ணு...

Posted: 26 Mar 2015 12:45 AM PDT

விட்றா விட்றா.. எங்ககிட்டயும் பேட்ஸ்மேன் இருக்காய்ங்க..

அப்புறம் ஏன் பாஸ் கண்ணு கலங்குது?

அது பீதி, வேற டிபார்ட்மெண்ட்..


:D Relaxplzz

Posted: 26 Mar 2015 12:30 AM PDT

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...! முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப்...

Posted: 26 Mar 2015 12:10 AM PDT

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...!

முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ..

ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு பிலிப்பினிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட ஷாப்பிங். சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.

மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் பணத்தை புடிங்கிருவான். குடிக்கற தண்ணிக்கும் காசு தான். கார் பார்க்கிங்குக்கும் பணம்.. இதுக்கே மாசம் 20 ஆயிரம் அழணும்.

நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான்.

ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. லெபனான்காரன் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக் குடுத்துருவான். அந்த சீனாக்காரன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா..

ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன்.

ஏழாவது வாரம்- திரும்பிப் போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை.

எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. கசாப்க்கடை காதர் பாய் கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான்."

திருப்தி அடையாத மனதிற்கு, எப்போதுமே இக்கரைக்கு, அக்கரை பச்சை தான்…

Relaxplzz

:) Relaxplzz

Posted: 25 Mar 2015 11:59 PM PDT

(y) Relaxplzz

Posted: 25 Mar 2015 11:44 PM PDT

யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது! யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்! யார...

Posted: 25 Mar 2015 11:10 PM PDT

யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது!

யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்!

யாரோ விளைய வைத்த உணவுப் பொருட்கள் வயிறு முட்டத் தின்கிறாய்!

யாரோ அணியப் படுத்திய ஆடைகள் அணிந்து கொள்கிறாய்!

பிறகு
பருத்த உனது தொப்பையைத் தடவிக் கொண்டு சொல்கிறாய்
"எவனையும் நம்பி நான் இல்லை" என்று!

Relaxplzz

Posted: 25 Mar 2015 10:39 PM PDT

:) Relaxplzz

Posted: 25 Mar 2015 10:25 PM PDT

ரயில் பிரயாணி ஒருவர் பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டு போனவனைக் கூப்பிட்டு டீ வ...

Posted: 25 Mar 2015 10:10 PM PDT

ரயில் பிரயாணி ஒருவர் பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டு போனவனைக் கூப்பிட்டு டீ வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே காசு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.

ரயில் அதற்குள் பறப்பட்டுவிட்டது. டீ விற்கும் பையனுக்குக் காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் டீ தம்ளரும் நஷ்டம்.பக்கத்திலிருந்த அவனது நண்பன் அவனைச் சமாதானம் செய்தான்.

"கவலைப்படாதே..! கடவுள் அந்த ஆளைக் கவனித்துக் கொள்வார்..!"

டீ விற்ற பையன் சொன்னான்.

"கடவுளுக்கு எதற்கு சிரமம். என் 'டீ'யே கவனித்துக் கொள்ளும்…!

Relaxplzz

கிராமமும் நகரமும் .... வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகரத்...

Posted: 25 Mar 2015 09:53 PM PDT

கிராமமும் நகரமும் ....

வெற்றிலை_பாக்கு போட்டால்
கிராமத்தான்
பீடா போட்டால் நகரத்தான்

பச்சை குத்தினால் கிராமத்தான்
டாட்டூ போட்டு கொண்டால்
நகரத்தான்

மருதாணி வைத்துக் கொண்டால்
கிராமம்
மெஹந்தி என்றால் நகரம்

மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்
Chemical பொடி தூவினால் நகரம்

90களில் மஞ்ச பச்சை சட்டை
போட்டா அவன் கிராமம்
2015ல் மஞ்சள் பச்சை சட்டை
போட்டால் நகரம்

மங்களமான மஞ்சப்பை என்றால்
கிராமம்
மண்ணை மலடாக்கும் பாலித்தீன்
என்றால் நகரம்

தன் மனைவியை நண்பர்களுக்கு
அறிமுகம் செய்தால் கிராமம்
மனைவி அவள் நண்பா்களை
அறிமுகம் செய்தால் நகரம்

கிழிந்த ஆடை போட்டால் கிராமம்
நல்ல ஆடையை கிழித்து போட்டால்
நகரம்
உதவிக்கு மிதிவண்டி இருந்தால்
கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி
இருந்தால் நகரம்
கோடு போட்ட அண்டர் வேர்
தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட்
அணிந்தால் அவன் நகரம்..

எது நாகரீகம்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

;-) Relaxplzz

Posted: 25 Mar 2015 09:41 PM PDT

:) Relaxplzz

Posted: 25 Mar 2015 09:32 PM PDT

காலையில் மூன்று வகையான உணவுகள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி....

Posted: 25 Mar 2015 09:18 PM PDT

காலையில் மூன்று வகையான உணவுகள்

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் அபாரமாக இருக்குமாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சத்துணவு நிபுணர்கள் 18 வயதுக்கு உட்பட்ட 800 மாணவ, மாணவிகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தனர். மூளை சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பாடங்களில் உள்ள பெரிய பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வேண்டும். கல்வி கற்பதில் எரிச்சல் வந்துவிடக்கூடாது. இதற்கு எளிய வழி காலையில் முழுத்தானியம் + பழம் அல்லது காய்கறி + பால் சம்பந்தப்பட்ட உணவு என இந்த மூன்றும் இடம் பெற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் மூளை ஆற்றலுடன் நாள் முழுவதும் செயல்படுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, பரிசோதித்தும் வெற்றியும் பெற்றனர், ஆஸ்திரேலிய சத்துணவு நிபுணர்கள்.

சரி, உணவுகள்?

1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது

2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது

3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள்

என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏனென்றால், வைட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் வைட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

பழத்துண்டுகளைக் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது என்றால் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது.

காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.

பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.

சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

:) Relaxplzz

Posted: 25 Mar 2015 09:02 PM PDT

:) Relaxplzz

Posted: 25 Mar 2015 08:32 PM PDT

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும்...

Posted: 25 Mar 2015 08:15 PM PDT

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.

சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல.

மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப்பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!

சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…

சீ...! போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அதுல அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, "குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…," சொல்லி கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.அதில் கண்ணைப் பறிக்கும் தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும் இருந்தது.

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. 'அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே'ன்னு பதறிட்டான்.

கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். "என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…" என்று திருப்பிக் கொடுத்தார். சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடியது.

இப்போது அந்த துறவி கேட்டார்… "என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!" என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

Relaxplzz

முதன்முதலாய் அம்மாவுக்கு ....வைரமுத்துக்கவிதை ஆயிரம்தான் கவி சொன்னேன் அழகழகாய்...

Posted: 25 Mar 2015 07:51 PM PDT

முதன்முதலாய் அம்மாவுக்கு ....வைரமுத்துக்கவிதை

ஆயிரம்தான் கவி சொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ ?
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோட
கருப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னன்னா நினைச்சுருப்ப ?
கத்தி எடுப்பவனோ ?
களவாடப் பிறந்தவனோ ?
தரணியாள வந்திருக்கும் ?
தாசில்தார் இவன்தானோ ?
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்த உன்னை
நினச்சா அழுகைவரும்
கதகதண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ணெய்
கலந்து தருவாயே
தொண்டையில அதுயிறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சிக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிருமிளகும்
சேர்த்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
குழகுழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுதத்தெரு மணமணக்கும்
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டேச் சமைச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்ம்புமேல
குட்டிக்குட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊரும்
வருமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செரிஞ்சேன் !
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே !
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே !
கல்யாணம் நான்செஞ்சு
கதியத்து நிக்கயிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசைமுகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே !
பாசம் கண்ணீரு
பழையக்கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே !
வைகயில ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேற பிள்ளை உண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா ?

-வைரமுத்து

Relaxplzz


எழுத்தாளர் வரிகள் சில

விளையாடுறவனை விட வேடிக்கை பார்ப்பவனுக்கு டென்ஷன் அதிகம்னு சொல்லுது ஒரு ஆய்வு.....

Posted: 25 Mar 2015 07:45 PM PDT

விளையாடுறவனை விட வேடிக்கை பார்ப்பவனுக்கு டென்ஷன் அதிகம்னு சொல்லுது ஒரு ஆய்வு..

- விவிகா சுரேஷ்

0 comments:

Post a Comment