Thursday, 12 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


"நீதி கதை" ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடு...

Posted: 12 Mar 2015 09:10 AM PDT

"நீதி கதை"

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்"

"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால், மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

நீதி:- இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்குத் துணையாக இருப்பவர்களுக்குத் தான் சோதனை அதிகம். இவ்வாறாக, தன்னை இழந்து மற்றவர்களை வாழ வைக்கும் தியாகச் செம்மல்கள் உள்ளவரை இந்தப் பூமியிலுள்ள உயிர்களனைத்தும் வாழும். சிறிய மண்புழு இல்லாவிடில் விவசாய நிலங்கள் வளமாகா. நிலங்கள் வளமாகாவிட்டால் நமக்குத் தரமான உணவில்லை. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றிலொன்று தங்கியுள்ளன. ஆதலால், அனைவற்றிற்கும் நன்றியுடன் இருப்போம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நன்றி.

Relaxplzz

எச்சரிக்கை நண்பர்களே.. //பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்// ஏர்போர்ட், ரயில்நில...

Posted: 12 Mar 2015 09:00 AM PDT

எச்சரிக்கை நண்பர்களே.. //பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்//

ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில்
keychain-- விற்றுக்கொண்டு சிரிமினல்கள் உலாவுதாகவும் அழகான keychain-களை தங்கள் விளம்பரத்திற்காக ப்ரீயாக தருகிறார்கள்,

அதில் track seyum சிப்புகள் பொறுத்த பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும் எனவே இந்த ப்ரீ கீ சைன்களை வாங்க வேண்டாம் என விமானநிலைய கட்டுப்பாட்டு மையம்
பொது மக்களை எச்சரிதுள்ளது

Tks & regards
AIRPORT OPERATIONS CONTROL CENTRE
International Airport (Chennai and Mumbai)
Terminal 1b
Office 91 22 26256832

Relaxplzz


எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால்...

Posted: 12 Mar 2015 08:50 AM PDT

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் வேலுநாச்சியார் ஒருவர்தான்.. (y) (y)

- மகாகவி தாசன்


வாத்தியார்: நிலா தூரமா, அமெரிக்கா தூரமா? மாணவன்:அமெரிக்கா சார்! வாத்தியார்:எப்ப...

Posted: 12 Mar 2015 08:45 AM PDT

வாத்தியார்: நிலா தூரமா, அமெரிக்கா தூரமா?
மாணவன்:அமெரிக்கா சார்!

வாத்தியார்:எப்படிடா?

மாணவன்: நைட்டுல இங்கிருந்து பார்த்தா நிலா தெரியுது, அமெரிக்கா தெரியமாட்டேங்குது சார்!

:D :D

முட்டை பரோட்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Mar 2015 08:40 AM PDT

முட்டை பரோட்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 12 Mar 2015 08:30 AM PDT

செம்ம (y)

Posted: 12 Mar 2015 08:25 AM PDT

செம்ம (y)


;-) Relaxplzz

Posted: 12 Mar 2015 08:20 AM PDT

ரொம்ப கஷ்டமப்பா... :O :O * முட்டை போடாத பறவை எது..? ** ஆண் பறவை. --------------...

Posted: 12 Mar 2015 08:10 AM PDT

ரொம்ப கஷ்டமப்பா... :O :O

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
-------------------------------------------------------------
* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால
அதை பார்க்க முடியலை..
------------------------------------------------------------------
* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
-----------------------------------------------------------------
* வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
---------------------------------------------------------------------
* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** நரேந்திர மோடி ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )
------------------------------------------------------------------
* இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என்ன
வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும் ஆனா
இலங்கை Mapல இந்தியா இருக்காது..
-------------------------------------------------------------------
* ஒரு வேளை நீங்க Germany - ல பிறந்து இருந்தா
என்ன
பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க உங்களுக்கு
தான் German பாஷை சுத்தமா தெரியாதே.

:P :P

Relaxplzz

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்! வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காய...

Posted: 12 Mar 2015 07:57 AM PDT

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.
மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

Relaxplzz


"உணவே மருந்து" - 2

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை... http://goo.gl/mRetZo

Posted: 12 Mar 2015 07:50 AM PDT

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை...

http://goo.gl/mRetZo


நிலத்தை ஆங்கிலேயன் கையகப்படுத்தினால் காலனி ஆதிக்கம் , அரசே கைப்பற்றி ஆங்கிலேயன...

Posted: 12 Mar 2015 07:45 AM PDT

நிலத்தை
ஆங்கிலேயன் கையகப்படுத்தினால்
காலனி ஆதிக்கம் ,
அரசே கைப்பற்றி ஆங்கிலேயனுக்கு கொடுத்தால அதுதான் வளர்ச்சி
வளர்ச்சி ?

- மன்னை முத்துக்குமார் @ Raja guru.

இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Mar 2015 07:40 AM PDT

இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 12 Mar 2015 07:30 AM PDT

வாவ்.. What a Confidence..!! ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு...

Posted: 12 Mar 2015 07:20 AM PDT

வாவ்.. What a Confidence..!!

ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு அரேஞ்ஜ் பண்ணியிருந்தது.. நிறைய Professor-களுக்கு அது முதல் விமான பயணம். So., பல கற்பனைகளோட அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருக்க..

" Welcome to All..! "

( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! ) " உங்களுக்கெல்லாம் இந்த Trip ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "
( அப்படியா..?!! )

" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..
அது என்னான்னா? இந்த Plane, முழுக்க முழுக்க உங்க Students தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!! அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க.

இவ்ளோ களோபரத்துலயும் ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சமும் அலட்டிக்கல.. தன் சீட்டை விட்டும் நகரல,,
அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "
" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "
" உங்க Students தயாரிச்ச Plane-ல பறக்க உங்களுக்கு பயமா
இல்லையா சார்..? "
" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல அவ்ளோ Confident-ஆ சார்..?! "
" மண்ணாங்கட்டி..!! எங்க Students தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே ஆகாதே..!! "
" ??!! "
Wow..
What a Principal..!!

:O :O

Relaxplzz

:( Relaxplzz

Posted: 12 Mar 2015 07:13 AM PDT

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவ...

Posted: 12 Mar 2015 07:05 AM PDT

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் "இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்."


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்."இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது" என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்."ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்" என்றாள் அந்த சிறுமி.

'சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!' என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

நீதி : நேர்மைக்கும் நிதானத்துக்கும் என்றுமே பலன் உண்டு... (y) (y)

Relaxplzz


"நீதி கதை"

:) Relaxplzz

Posted: 12 Mar 2015 06:57 AM PDT

மனிதனை மகாத்மா ஆக்குவதே இந்த மனிதநேயம் தான் . .

Posted: 12 Mar 2015 06:50 AM PDT

மனிதனை மகாத்மா ஆக்குவதே

இந்த மனிதநேயம் தான் . .


நண்பர் 1 : உங்க மனைவி கிணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்...

Posted: 12 Mar 2015 06:45 AM PDT

நண்பர் 1 : உங்க மனைவி கிணத்துல
விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன்
காப்பாத்தல ?

நண்பர் 2 : நீங்க உணர்ச்சி வசப்
படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..

நண்பர் 1 : ????? :O :O

ஆப்பிளில் செய்த அழகிய யானை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Mar 2015 06:40 AM PDT

ஆப்பிளில் செய்த அழகிய யானை...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 12 Mar 2015 06:34 AM PDT

:) Relaxplzz

Posted: 12 Mar 2015 06:24 AM PDT

கொஞ்சம் சிரிங்க பாஸ் ! :P :P 1 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக...

Posted: 12 Mar 2015 06:15 AM PDT

கொஞ்சம் சிரிங்க பாஸ் ! :P :P

1 ஆசிரியர்: எவன் ஒருவனால்
ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய
வைக்க முடியவில்லையோ அவன்
ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...

2 போலீஸ்: பஸ் எப்படி விபத்தில்
சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும்
புரியல சார்... நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.

3 மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப்
பொண்ணோட கம்பேர்
பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப
பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2
படிக்கிரடா

4 மனைவி கணவனுக்கு இலக்கணம்
சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு...
இது என்ன காலம்?

கணவன்: அது ஒரு இறந்த காலம்....

5. நாட்டாமை: என்ரா...
பசுபதி...எக்ஸாம்'க்கு பெவிகால்
எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின்
பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா..
சிங்கம்டா..... சிங்கம்டா..

6 .நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில்
படகில் போய்க
கொண்டிருக்கிறார்...
அப்போது தூரத்தில்
ஒரு போர்டு உள்ளதைப்
பார்த்து அதில் என்ன
எழுதி இருக்கிறது என்று படிக்க
முயல்கிறார். ஆனால் அவரால்
படிக்க முடியவில்லை...
எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
"இங்கு முதலை உள்ளது...யாரும்
இங்கே நீந்த வேண்டாம்."

7. நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர்
என்ஜினியராக ஒரு படத்தில்
நடித்தால் பன்ச் டயலாக்
எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான்
கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ்
சிங்கில்'லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++...
எனக்கு அப்புறம் NO++

8. நபர் – 1: ஹோடேலில்
சாப்பிட்டுவிட்டுப்
பார்க்கிறேன், கையில்
காசு இல்லை…..

நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன
பண்ணுனீங்க?..

நபர் – 1: அப்புறம் பாக்கெட்'ல
இருந்து எடுத்துக்
கொடுத்துட்டேன்….

9. இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக்
கூடத்திற்கு வந்திருந்தனர் மு தலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்
என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில்
ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம்
எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற
நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த
பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

10. நெப்போலியன் :- என்னுடைய
அகராதியில் முடியாது என்கின்ற
வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன
பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணு ம்

11. நெஞ்சில் பண்ணவேண்டிய
ஆபரேஷனை வயித்துல
பண்ணிட்டீங்களே டாக்டர்"

"உங்களை யார்
ஓரடி மேலே தள்ளிப்படுக்கச்
சொன்னாங்க?

12. எதுக்கு சார், லஞ்சம்
வாங்கும்போது உங்க
கை இப்படி நடுங்குது?

ரெண்டு மாசமா லீவ்ல
இருந்ததுனால டச்
விட்டுப்போச்சுய்யா.

13. ஆசையே துன்பத்துக்குக்
காரணம்னு இப்பதான் நான்
தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?

என் மனைவியை நான்
ஆசைப்பட்டுத் தானே கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்

14. என்னோட மாமியார் அவங்க
பணக்காரப் புத்தியைக்
காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த
சண்டையை உள்ளூர் கேபிள்ல
ஒளிபரப்ப
ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்

15. கோபால் : செய்யாத
தப்புக்கு நீங்க
தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?

கோபால் : நான் home work
செய்யலை சார்

:P :P

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

;-) Relaxplzz

Posted: 12 Mar 2015 06:09 AM PDT

:) Relaxplzz

Posted: 12 Mar 2015 06:00 AM PDT

ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் : " ஒருவருக்கு மிகச் சிறந்த மர...

Posted: 12 Mar 2015 05:49 AM PDT

ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் :

" ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்து அவர் மீது பிறர் வைக்கும் அன்பும், நேசமும்தான்."

அப்போது ஒருவர் கூறினார் "அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றால் ?

அந்த மருத்துவர் மிக அழகாக பதில் கூறினார்.
" மருந்தின் அளவை அதிகப்ப படுத்துங்கள் !!

♥ ♥

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

சிறு வயதில் இது மாதிரி மணல் வீடு கட்டி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்...

Posted: 12 Mar 2015 05:40 AM PDT

சிறு வயதில் இது மாதிரி மணல் வீடு கட்டி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 12 Mar 2015 05:30 AM PDT

(அப்பா தன் மகனிடம் ) "இங்க வா , இந்த கவர கொண்டு போய் , போடில இருக்க நம்ம ஆடிட்...

Posted: 12 Mar 2015 05:20 AM PDT

(அப்பா தன் மகனிடம் )

"இங்க வா , இந்த கவர கொண்டு போய் , போடில இருக்க நம்ம ஆடிட்டர் கிட்ட குடுத்திட்டு வா"

"சரிப்பா"

"அவரு வீடு தெரியும்ல ?"

"அட்ரஸ் குடுங்கப்பா போயிடுவேன் "

"நான் ஒரு வாட்டி சொல்றேன் கேட்டுக்க "

"(எனக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? அவரு அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ஆஹா .....) "

"நேரா பஸ்டாண்டு போ , அங்க போடி பஸ் இருக்கான்னு பாரு , இல்லை பாளையம் , கம்பம் பஸ் இருக்கான்னு பாரு"

"சரி "

" வழி சின்னமன்னூர் அப்படின்னு போட்டு இருக்கும்............

"இம் .............."

அதுல ஏறிராத, வழி போடி போட்ருக்கும் , அதுல ஏறு "
"(ஆஹா இதுதான் சோதனையின் ஆரம்பமா ) "அப்பா எனக்கு தெரியும்ப்பா "

"அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா ?போடிக்கு போனவுடனே பஸ்ட்டு பார்க் ஸ்டாப் நிக்கும்.... இறங்கிராத, அடுத்து அரண்மனை ஸ்டாப் நிக்கும்.... அதுலஇறங்கிராத , அடுத்தது பெருமாள் கோவில் ஸ்டாப் நிக்கும்.... அதிலையும் இறங்கிராத "

"(அவ்வ்வ்வ்வ்வ்...............................என்னங்கடா.....அடிச்சு கூட கேப்பாக , அப்பவும் சொல்லிராதிக கதையா இருக்கே? )

"நேரா பஸ்டாண்டுல போய் இறங்கு "

"( பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல? )"

"பஸ்டாண்ட விட்டு வெளியவந்த உடனே லெப்ட்ல பாத்தா ஒரு சந்து போகும்ல ?"

"ஆமா"

"அதுல போயிராத "

"(உஸ்.................முடியல , வேணாம்........... அழுதிடுவேன் )"

"அதுக்கு அடுத்த சந்துல போனேன்னா , இடது கை பக்கம் பஸ்ட்டு புளுகலர் கேட் போட்ட வீடு இருக்கும்"

"சரி"

"அந்த வீடு இல்லை , அதுக்கு அடுத்த கிரீன் கலர்ல கேட் போட்டு போட்ட வீடு இருக்கும் "

"இம் .................(எவ்ளோ நேரந்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது)"

"அந்த வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் ஆடிட்டர் வீடு , வெளில கூட போர்டு போட்டு இருக்கும் "

"("போடி பஸ்டாண்டுக்கு வெளிய செகண்டு லெப்டுல ரைட் சைடு ரெண்டாவது வீடுன்னு சொல்லவேண்டியதுதானே? , ஏன் இந்த கொல வெறி? )"

"அந்த வீட்டுல போய் காலிங் பெல் அடிச்சேன்னா?தலையல்லாம் நரச்சுபோன வயசான ஒருத்தர் முண்டா பனியன் போட்டுக்கிட்டு வந்து கதவ திறப்பார் "

"அவர்கிட்ட குடுத்துடவா ?"

"அட அவரு ஆடிட்டர் இல்லைப்பா , அவரு மகன் தான் ஆடிட்டர் , அவரு மகன் கிட்ட குடுக்க சொல்லி இந்த கவர அவர் கிட்ட குடுத்திட்டு வா "

"ஹா, ஹா, ஹா...............ஹா, ஹா, ஹா ..............."

"ஏன்டா சிரிக்கிற? "

"இல்ல உங்க ஆபீசுல உங்களுக்கு கீழ வேலை செய்றவங்க நிலமைய யோசிச்சு பாத்தேன்........ ஹா, ஹா, ஹா...............ஹா, ஹா, ஹா ..............."

:P :P

- Madhan kumar.

Relaxplzz

0 comments:

Post a Comment