Monday, 30 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 30 Mar 2015 03:35 PM PDT


Honest Truth - லீ குவான் யூ - இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க - புகழ்ந்த...

Posted: 30 Mar 2015 09:14 AM PDT

Honest Truth - லீ குவான் யூ -
இவரை பத்தி பலரும் பல
மாதிரி பேசிட்டாங்க -
புகழ்ந்தாங்க - ஆனா
உலகத்தில் அத்தனை
பேரும் தெரிஞ்சுக்க
வேண்டிய ஒன்று -
உலகத்தின் மவுன்ட்
எலிசபத் போன்ற முக்கிய
சிறப்பு மருத்துவமனை
இருந்தும் அந்த நாட்டின்
தந்தை கடைசி வரை
இருந்து உயிர் பிரிந்தது
அந்த நாட்டின் அரசாங்க
மருத்துவமனையான ஜி
ஹெச்சில் என்பது
எத்தனை பேருக்கும்
தெரியும். இங்க ஒன்னு
அப்போலோ இல்லைனா
சிங்கப்பூர் தனியார்
ஆஸ்ப்த்ரினு ஓடுறோம்
ஆனா அங்க இருந்த ஒரு
மாபெரும் தலைவர்
அரசாங்க மருத்துவமனை
இந்த ஒண்ணு போதும்
இவரின் பெருமையை
அறிவிக்க

ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந் தா...

Posted: 30 Mar 2015 08:48 AM PDT

ஒரு பெண் உங்களை
தொட்டுப் பேசினாலோ,
நெருங்கி நின்றாலோ,
அருகில் உட்கார்ந்திருந்
தாலோ, அதை காதல்
என்றோ காமம் என்றோ
எண்ணி விடாதீர்கள்.. அது
உங்கள் மேல் இருக்கும்
நம்பிக்கை..

@Ambuja simi


ரூ.5-க்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு 10 ரூபாய் பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சம...

Posted: 30 Mar 2015 08:39 AM PDT

ரூ.5-க்கு பயணச் சீட்டு
எடுத்துவிட்டு 10
ரூபாய் பிளாட்பார
டிக்கெட் எடுக்காமல்
சமாளிக்கலாம்.

பயண டிக்கெட்
விலையை விட
பிளாட்பார டிக்கெட்
விலை அதிகமா
இருக்கு...

எளிதாக பணம் சம்பாதிக்க மிக மிக எளிய வழிகள் இரண்டு: வழி 1: கடந்த இரண்டு மூன்று...

Posted: 30 Mar 2015 08:17 AM PDT

எளிதாக பணம் சம்பாதிக்க மிக மிக எளிய வழிகள் இரண்டு:

வழி 1:

கடந்த இரண்டு மூன்று நாட்களாக,புதுமனை புகுவிழா,திருமணம்,சடங்கு,காது குத்தல் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரது வீட்டு சுப நிகழ்வுகளில் பங்கு கொள்ள நேரிட்டது.இந்த சுப நிகழ்வுகள் எல்லாம் பெயரில் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் ஒன்றுபட்டன.

அந்த ஒரு விசயம் "ஹோமம்"

அனைத்து நிகழ்வுகளிலும் "அய்யர்" என ஒருவர் அதிகாலையிலேயே வந்தார்.வாட்டசாட்டமாக கம்பீரமாக இருந்தார்.எந்தக் கவலையுமில்லாத முகத்தில் அவ்வளவு தெளிவு.அய்யர் வந்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாகினர்.வாங்க சாமி-உட்காருங்க சாமி-காபி,டீ சாமி என்று ஏக கவனிப்புகள்.அனைத்தையும் மறுத்த அய்யர்,தான் கொண்டு வந்திருந்த மினரல் ஜலத்தினை குடித்தார்.தன் அதி நவீன ஐபோன் சிக்ஸை எடுத்து டைம் செட் பண்ணிவிட்டு,கணபதி ஹோமம் என்ற பெயரில் ஏதேதோ மந்திரங்களை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகச் சொல்லி யாகங்களைச் செய்தார்.யாகத்தின் முடிவில் அனைவருக்கும் ஆசிர்வாதங்களை அள்ளி வழங்கி-மறக்காமல் "தட்சனையும்" பெற்றுச் சென்றார்.தட்சனை என்றால் நூறோ-இருநூறோ அல்ல பத்தாயிரம் ரூபாய்கள்.இரண்டு மணிநேரத்தில் சுளையாக பத்தாயிரம் ரூபாய்கள்.அதோடு நான்கைந்து கிலோ ஆப்பிள்,ஆரஞ்சு பழங்கள்.

அய்யரிடம் மெதுவாக விசாரித்தேன்.இது போல இன்னும் பல வீடுகள் இருப்பதாகவும்,"சுப முகூர்த்த மாதங்களில் குறைந்தது நூற்றுக்கு மிகாமல் ஆபர்கள் வரும்"எனவும் சொன்னார்.அன்று மட்டும் ஹைப்பர்டென்ஷன் மெதுவாக நமக்கு எட்டிப் பார்த்தது.

வழி 2:

இதற்கு கொஞ்சம் நடிப்புத் திறன் மாத்திரம் போதும்.

நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில்-புகழ் பெற்ற ஒரு "மருத்துவ நிலையத்திற்கு" சென்றிருந்தேன்.உள்ளே நுழையும் போதே,"இதோ இப்பொழுதே உங்களைப் பீடித்த பிஸ்ஸாசு விழகுவதாக..." என்ற வாசகம் எங்களை வரவேற்றது.

அரைக் கண்களை மூடிக்கொண்டு நேரடியாக கர்த்தரிடம் பேசி சகட்டுமேனியாக எல்லா நோய்களையும் குணப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த போதகர்.இதில் பேய்-பிசாசு-பில்லி சூனியங்கள் வேறு அடக்கம்.

இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.தன்னிடம் வரும் கஸ்டமர்களிடம் கட்டனம் வசூலிப்பதில்லை.மாறாக இந்தச் சேவையைச் செய்யச் சொல்லி ஆன்-சைட்டிலிருந்து டரில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டுகிறார்கள்.வாங்கி வைத்துக் கொண்டு சேவைகளைச் செய்கிறார்.உள்நாட்டில் சாலை மார்க்கமாக பிரயானம் செய்ய இரண்டு மூன்று BMW கார்கள் என எளிமையாக வாழ்கிறார்.மாதத்திற்கு பலமுறை பிஸினஸ் கிளாஸில் பல்வேறு நாடுகளுக்கு வேறு பறக்கின்றார்.இவரது வருமானத்தைப் பற்றி மெல்லியதாக விசாரித்தேன்.பாதி தகவல்களைக் கேட்ட போதே-வயிற்றில் அடர் கந்தக அமிலம் சுரந்தது.

நோகாமல் எளிதாக மிகக் குறுகிய காலத்தில் பல கோடிகளை அள்ள வைக்கும்,இந்த இரண்டு வழிகள் இருக்க,எதற்காக மண்டையை உடைத்து இன்ஜினியரிங் படித்து-அது போதாமல் ஏதேதோ பல சாப்ட்வேர்களையும் படித்து,கணிப்பொறியோடும்-கார்களோடும் மல்லுக்கட்டி-போராடி.....ச்சை...என்னை கொஞ்சம் அதிகமாகவே சிந்திக்க வைத்தது.

ஸ்கூல்ருந்தே நல்லா படி,அப்பத்தான் நல்ல காலேஜ்ல சேர முடியும்.நல்லா காலேஜ்ல சேர்ந்து,நல்லா படிச்சாத்தான் கேம்பஸ் இன்டர்வீயூல செலக்ட் ஆகி நல்ல வேலைக்குப் போக முடியும்.அப்பத்தான் வீடு,கார்ன்னு வசதியா வாழலாம்...என்று ஆரம்பத்திலிருந்தே பல சப்ஜெக்ட்டுகளில்-போடும் முயற்சியை கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன?பணம் சம்பாதிப்பதற்காக பிறப்பால் இந்துவான என்னால் மதம் மாற முடியாது.நடிக்க முடியாது,வரவும் வராது.ஆனால் என் இந்து மதம் சொல்லும் வேதம் படிக்க முடியும்.ரியல் டைம் ஆப்பரேடிங் சிஸ்டம்,மைக்ரோ கன்ட்ரோலர் புரோக்கிராமிங்,ஃபுரியர் சீரியஸ்,லேப்லாஸ்,லெக்ராஞ்சி,காஸ்ஸியன் தியரங்களை விட என் இந்து மத வேத மந்திரங்கள் கன்டிப்பாக கடினமாக இருக்காது.அதைச் சமாளித்துக் கொள்ளலாம்.

என்ன செய்யலாம்? அய்யர்கள் மட்டுந்தான் யாகம் செய்ய முடியுமா? என்னை மாதரி லோயர்கள் கூடாதா?

பின் குறிப்பு:

மேற்குறிப்பிட்ட தொழில்களுக்கு ஒரு நையா பைசா கூட வருமான வரி கட்டத் தேவையில்லை.மரியாதை வேறு மிக அதிகமாகக் கிடைக்கும்.இதையெல்லாம் நேரில் பார்த்து-அடடா என்று மனுஉளைச்சலில் தவிக்கும் என் போன்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து-அரசே இன்ஜினியரிங்,மெடிசின்,லா படிப்புகளைப் போல இந்த "பல்வேறு யாக,ஹோம,மந்திரங்கள் உள்ளடக்கிய வேத மந்திர ஜெப கோர்ஸூகளை" நான்காண்டு படிப்பாக நடத்தலாம்.நான்காண்டு படிப்பின் முடிவில் டிஸ்டிங்கஷனில் தேறுவோருக்கு "வேத விற்பனர்" பட்டம் கூட தரலாம்.தெருவேயில்லாத ஊர் கூட இருக்கும்.ஆனால் கோவில் இல்லா தெருவோ-அய்யர் இல்லாத சுபகாரியங்கள் இருக்கவே இருக்காது.நடக்கவே நடக்காது.எனவே வேலையில்லாத் திண்டாட்டமும் பெறுமளவில் குறையும்.கடவுள் நம்பிக்கையும் கூடும்.இது சர்சுகளுக்கும் பொருந்தும்.

@துரை மோகன்

பகலில் தூங்க நேரம் கிடைக்கபெற்ற பெண்களும், இரவில் படுத்தவுடன் கவலைகளின்றி தூங்கு...

Posted: 29 Mar 2015 10:49 PM PDT

பகலில் தூங்க நேரம்
கிடைக்கபெற்ற
பெண்களும், இரவில்
படுத்தவுடன்
கவலைகளின்றி
தூங்கும் வரம் பெற்ற
ஆண்களும்
பாக்கியசாலிகள்.!

@காளிமுத்து

Posted: 29 Mar 2015 10:45 PM PDT


செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேற...

Posted: 29 Mar 2015 10:43 PM PDT

செருப்பு தைப்பவரிடம்
கிழிந்த நோட்டை
கொடுத்துவிட்டு வருவதை விட
கேவலமான விஷயம்
வேறெதுவும் இருக்க
முடியாது!!

@காளிமுத்து


இது அம்மை நோய் சீசன், அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் மலட்டுதன்மையையும் உருவாக்க கூ...

Posted: 29 Mar 2015 10:36 PM PDT

இது அம்மை நோய் சீசன்,
அம்மை நோயை
உண்டாக்கும் வைரஸ்
மலட்டுதன்மையையும்
உருவாக்க கூடியது,
முக்கியமா ஆண்
குழந்தைகளுக்கு.
அதனால மந்த்திரிச்சிட்
டிருக்காம உடனே
அருகில் இருக்கும்
மருத்துவரை பாருங்க.
சின்னம்மை, மணல்வாரி
அம்மை, அம்மை கட்டு
இப்படி பல மாதிரி
வரும், காய்ச்சலோடு
கூடிய சிறு
கொப்புளங்கள் முதல்
அறிகுறி. ஒருவருக்கு
வந்துவிட்டால்
பெரும்பாலும்
குடும்பத்தில் இருக்கும்
அனைவருக்கும் வர
வாய்ப்பு அதிகம்.
அம்மை நோய் வருவதை
தடுக்க 'Variolinum 200' என்ற
ஹோமியோபதி
மருந்து உகந்தது. எந்த
வயதினரும்
பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment