ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லி...
- ஈரோடு மஞ்சள்!! மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்...
- 'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என்று மக்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை,...
- அழகு ஓவியம்!
- என்றாவது என் செல்போன் விலையோ, சட்டை விலையோ அப்பாவிற்கு தெரிந்தால் ஒருரூவாய் மிச்...
- திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்கு...
- The Department of Archaeology has recovered artefacts of Megalithic (iron-age) b...
- தமிழீழ மக்களுக்கு நலத்திட்டங்களை இந்திய அரசு செய்வதாக பெருமிதம் கொள்கிறார்கள் ,...
- :P
Posted: 16 Mar 2015 08:44 AM PDT ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? ■ ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?. ■ பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா? ■ மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா? ■ இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா? ■ சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா? ■ வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா? ■ சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? ■ வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா? ■ உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா? ■ இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?. ■ உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா? ■ இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா? ■ கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? ■ ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா? இப்படியாக….......... மேலும் படிக்க: http://eelavidiyal.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE…/ ![]() |
Posted: 16 Mar 2015 05:47 AM PDT ஈரோடு மஞ்சள்!! மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம். ஈரோட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சள் மார்கெட் நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட் மூலமே விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் மற்றும் இதர விவசாய பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஈரோடு நுழையும் முன்னரே மஞ்சள் செடி வயல்கள் உங்களை வரவேற்க ஆரம்பித்து விடும். ஈரோட்டில் கீழ்பவானி பாசனம் பாயக்கூடிய கோபிசெட்டிபாளையம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பெரும் மஞ்சள் பயிர்களுக்கு இடையில் சென்று நிற்கும்போதே அங்கு மஞ்சள் வாடை அடிக்கிறது. சிறிது தூரத்தில் மஞ்சள் செடிகளுக்கு பாத்தி கட்டி கொண்டு இருந்ததை பார்த்து அவரின் அருகினில் சென்று பேசும்போதுதான் குளிக்கும் மஞ்சள் என்பது சம்பா மஞ்சள் என்றும், பெரும்பாலான மஞ்சள் மருந்து தயாரிக்கும் கம்பெனிக்கும், பெயிண்ட் தயாரிக்கும் கம்பெனிக்கும் செல்வது. முகத்தில் தேய்த்து குளிக்கும் மஞ்சள் செடி என்பது இரண்டு அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருக்குமாம். பொதுவாக மஞ்சளில் மூன்று வகை உண்டு முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் அல்லது சம்பா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனால் இதனை சருமத்தில் பூசினால் நிறத்தைத் தராது. ஆனால் நல்ல மருத்துவ குணம் கொண்டது. மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். இதைத்தான் நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். ![]() |
Posted: 16 Mar 2015 04:45 AM PDT 'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என்று மக்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை, எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டுமென்று நினைக்கும் 'அதே' அரசாங்கம், மூடிட்டு அதை தடை செய்யலாமே?? |
அழகு ஓவியம்! Posted: 16 Mar 2015 04:12 AM PDT |
Posted: 16 Mar 2015 03:41 AM PDT என்றாவது என் செல்போன் விலையோ, சட்டை விலையோ அப்பாவிற்கு தெரிந்தால் ஒருரூவாய் மிச்சம் செய்து அவர் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் வந்துப்போகும்! @Settusays |
Posted: 16 Mar 2015 12:44 AM PDT திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம். 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும் 6. கல்யாணம்5 முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, "இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது.." ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் "எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க" ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், "வாங்க வாங்க.. சாப்டு போங்க" ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்பிளையோட மச்சான்.. ![]() |
The Department of Archaeology has recovered artefacts of Megalithic (iron-age) b... Posted: 15 Mar 2015 10:11 PM PDT The Department of Archaeology has recovered artefacts of Megalithic (iron-age) burial site, datable to circa 1000 BC, at Sengamadai village near RS Mangalam in Ramanathapuram district. Curator of Ramalinga Vilasam Palace K. Sakthivel, and convenor of Tiruppullani Heritage Club V. Rajaguru recovered the artefacts from the deposit site of the temple tank at the village while undertaking a field survey. Displaying the artefacts – red ware, black ware, red and black ware, parts of burial urns, decorated red ware, potsherds, remnants of ring stand and iron ore – to reporters here recently, Mr. Sakthivel said the recovery revealed that a King of Ramanathapuram had built a fort at the burial site about 300 years ago. He said the villagers had desilted the tank about three years ago and the artefacts were found scattered on the bank of the tank. "Burial urns are also found inside the tank and this is the first time that parts of burial urns are recovered in the district," he said. During the iron-age also, there were separate residential and burial sites and the residential site could be located if the Archaeological Survey of India (ASI) conducted an excavation, he said. An excavation at Sengamadai was worth it as it appeared to belong to the Megalithic or Iron-age period, he added. http://www.thehindu.com/news/national/tamil-nadu/burial-urns-found-in-village-near-ramanathapuram/article6980360.ece மாவட்டத்தில் முதல்முறையாக 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு பெருங்கற்காலத்தை சேர்ந்தவை: தொல்லியல் வல்லுநர்கள் கணிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்தவை என தொல்லியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை கி.பி 1711-25களில் ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 2 கோட்டைகளை கட்டினார். இதில் கமுதிக் கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொரு கோட்டை ராமநாதபுரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ளது. இக்கோட்டையின் நடுவில் முனீஸ்வரர், கருப்பசாமி கோயிலும் ஒரு குளமும் உள்ளன. இந்த குளத்தில் ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலைப் பள்ளி தொன் மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர் ராஜகுரு ஆகி யோர், ஆய்வு செய்தனர். அப்போது கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளைத் தாங்கிகள், இரும்பின் மூலப்பொருள் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். மேலும் குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இவை சங்க காலத்திற்கு முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை சார்ந்தவை என தொல்லியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தடயங்கள் மூலம் செங்கமடை கோட்டை பகுதியானது சுடுகாடாக இருந்தது தெரியவருகிறது. ராமலிங்க விலாசம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் ராஜகுரு கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுமக்கள் தாழி கிடைப்பது இதுவே முதல்முறை. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்தவை. தொல்லியல் துறையினர் முழு அகழாய்வு மேற்கொண்டால் இதன் முழு வரலாறும் தெரியவரும் என்றனர். http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=434281 http://www.dinamalar.com/news_detail.asp?id=1200037&Print=1 ![]() |
Posted: 15 Mar 2015 09:36 PM PDT தமிழீழ மக்களுக்கு நலத்திட்டங்களை இந்திய அரசு செய்வதாக பெருமிதம் கொள்கிறார்கள் , தமிழீழ மக்களுக்கு குடியிருக்க தரமான வீடுகள் கட்டித் தருவது அவசியமானதுதான் ஆனால் இவர்கள் வீடு கட்டித் தருவதற்கு முன்பு தமிழீழ மக்கள் காடுகளிலா வாழ்ந்தார்கள் , நாகரீகமான தன்னிறைவு அடைந்த தமிழீழ மக்களின் நாட்டை, அவர்களின் வாழ்வாதாரத்தை குடியிருப்புகளை அழித்த அயோக்கியர்கள் யார், அழிக்க ஆயுதங்களை கொடுத்த குற்றவாளிகள் யார் யார் என்று விசாரணை நடத்தி அயோக்கியர்களை குற்றவாளிகளை தண்டிப்பதை நோக்கமாக கொண்டவர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதுதான் நேர்மையானது... வீட்டை இடிச்சவனும் ஆயுதம் கொடுத்தவனும் தங்கள் குற்றத்தை மறைத்து நல்லவன் வேடம் போடுறதும் அதையும் சிலர் நம்புவதும் தமிழர் விடயத்தில் மட்டும்தான் நடக்கும்... @பிரபு போசு |
Posted: 15 Mar 2015 09:33 PM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment