எலி...கரப்பான் பூச்சி...பின்னே ரயில்வே பட்ஜெட்டும்
****************************************************************
ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
பெருத்த ஏமாற்றம்..
இரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சிகளை எங்குமே
காணமுடியாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பயணிகளின் கால்களைக் கடிக்கும் எலிகள், பெருச்சாளிகள் ஒழிக்கப்படுவதற்கு எந்தத் திட்டமும் இல்லை.
நடுவழியில் கழிப்பறையில் தண்ணீர் இல்லாவிட்டால்
அவசரத்திற்குப் பயணிகள் என்ன
செய்யவேண்டும் என்பதற்கும் விளக்கம் இல்லை.
இரயில் பெட்டிக்குள் நுழைந்தவுடனேயே
குடலைப் புரட்டும் நாற்றத்தைப் போக்குவதற்குரிய
வழிகளும் சொல்லப்படவில்லை.
நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும்கூட
நமது ரெயில்வே துறைக்கு இரயில் பெட்டிகளைப்
பராமரிக்கும் வழிகள் கூட தெரியவில்லை.
இதில் லட்சம்கோடி என்றெல்லாம்
பட்ஜெட் போட்டு என்ன பயன்?
Thanks: SirajulHasan

0 comments:
Post a Comment