Monday, 9 February 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அமெரிக்கா அதிபர் ஒவ்வொரு நாட்டுக்கு போகும்போதும் போடுற சீன் இது தான். #இந்தியாவ...

Posted: 08 Feb 2015 11:20 PM PST

அமெரிக்கா அதிபர் ஒவ்வொரு நாட்டுக்கு போகும்போதும் போடுற சீன் இது தான்.

#இந்தியாவுக்கு வரும் போது பணக்கார விருந்தாளி போல வெறும் கையோட வருவாங்க.நல்ல தின்னுட்டு பரிசுப் பொருளையும் வாங்கிட்டு. ஒரு குறை சொல்லிட்டு தான் கிளம்புவாய்ங்க!

#ரஷ்யாவுக்கு பங்காளி வீட்டுக்கு போறப்பல உள்ளுக்குள்ள கோவத்தோட பொவாய்ங்க.ஜாடைய குத்திட்டு காட்டி பேசிட்டு வருவாய்ங்க..

#பிரிட்டனுக்கு பொத்துனாப்புல போய்ட்டு வந்துருவாங்க.தாய் வீடுன்ற நெனப்பு.

#சவுதிஅரேபியாக்கு கடவுள் போல போவாய்ங்க .அவிங்களும் பக்திபரவசத்தோட குளிப்பாட்டி, அபிஷேகம் பண்ணி ,பூஜை போட்டு அனுப்புவாங்க. அமெரிக்கா அதிபர் வரம் கொடுத்துட்டு போவாரு.

#பாகிஸ்தானுக்கு வட்டிக்காரன் மாதிரி போவாங்க..போனதும் கொஞ்சமா காசு கொடுத்துட்டு..பல இடத்துல பட்டா போட்டுட்டு அமேரிக்கா ராணுவத்தை இறக்கிட்டு போய்ருவாங்க

#சீனா,பங்களா,இலங்கை .ச்சீச்சீய்.
அங்கெல்லாம் போறதே கேவலம்னு போகவே மாட்டாய்ங்க...

- V.RAJAMARUTHAVEL


நண்பர் நித்தி ஆனந்தத்தின் வேண்டுகளுக்கு இணங்க பதியப்பட்ட பதிவு.... நாம் அடிக்கட...

Posted: 08 Feb 2015 08:25 PM PST

நண்பர் நித்தி ஆனந்தத்தின் வேண்டுகளுக்கு இணங்க பதியப்பட்ட பதிவு....

நாம் அடிக்கடி உண்ணும் உணவுப்பொருட்களின் தமிழ் பெயர்கள்...

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

பா விவேக்


அன்புக்கு எதுவுமே தெரியாது..... பா விவேக்

Posted: 08 Feb 2015 06:05 PM PST

அன்புக்கு எதுவுமே தெரியாது.....

பா விவேக்


0 comments:

Post a Comment