Relax Please: FB page daily Posts |
- கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்த...
- யாராவது உங்களை தொடும்போது அது உங்களுக்கு தெரியாம போனா அது அறியாமை. யாராவது தொடு...
- நம்மால் இது சாத்தியமா? இல்லையே... ஆகவே, விவசாயிகளை மதிப்போம்..!! ஒரு ஏக்கர் நி...
- :) Relaxplzz
- படித்ததில் சுட்டது அட பாவிங்களா மாசம் மொபைல்க்கு இம்புட்டு செலவாகுது...... 1.ம...
- நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால...
- அடுத்த ஆட்சியில் மீண்டுமொரு வாய்ப்பு தாருங்கள் இவற்றை தமிழ்நாட்டின் தேசிய சின்ன...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- காந்தி சொசைடியின் (இலக்கிய சங்கத்தின்) சில நூலகள் வாங்க... 5 நூல்களின் விலை ரூ...
- அடேய் ஓடாதடா! நில்லுடா...! வேற நல்ல படத்திற்கு கூட்டிட்டு போறேன்.... ;-)
- என்னை அறிந்தால்.... தல படம் ரிலீஸ் ஆயிடுச்சு.... அதுல ஒரு famous dialogue.... ஒ...
- “எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...'' காலையில 4 மணிக்கு எந்திரிப்பே...
- வாழ்த்துவோம் வாருங்கள்... (y) கராத்தே போட்டியில் இந்திய அளவில் முதலிடம் சென்ற ம...
- ஆளு இருக்கவன்களுக்கு Valentine's day ஆளு இல்லாதவர்களுக்கு world cup day - கப்...
- பட்டை தீட்டாத வைரங்கள்
- முட்டை பரோட்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்...
- :) Relaxplzz
- ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டி...
- :) Relaxplzz
- சன் தொலைக்காட்சி அலுவலகம் செல்லும் போதெல்லாம் அங்கு எதிர் புறத்தில் உள்ள ஒரு ஆட்...
- விலை மதிப்பில்லாத டயரை ஓட்டும் போது இருந்த மகிழ்ச்சி... விலை மதிப்புள்ள கார், பை...
- அருமையான கிளிக். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- நம்ம ஊர்ல தான் இதுக்கு பேர் பஸ் ;-) ;-)
- மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்...
- உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம் - இயற்கை வைத்தியம் நம் முன்னோர்கள் ‘உணவே மரு...
- கிணற்றில் நீச்சல் கற்ற கூலித் தொழிலாளியின் மகள், மாநில அளவிலான நீச்சல் போட்டியில...
- மாட்ட ஆடா மாற்ற முடியுமா??? முடியும் எப்படி தெரியுமா??? . . . . . . . . . வாங்க...
Posted: 09 Feb 2015 09:10 AM PST கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப்பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த் தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: "நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழு ந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்." நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். Relaxplzz |
Posted: 09 Feb 2015 09:07 AM PST |
Posted: 09 Feb 2015 09:00 AM PST நம்மால் இது சாத்தியமா? இல்லையே... ஆகவே, விவசாயிகளை மதிப்போம்..!! ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.. 01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/ 02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/- 03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/ 04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/- 05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/- 06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/- 07) களை எடுக்க.ரூ.600/- 08) அறுவடை ரூ.3000/- 09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/- மொத்தம் : ரூ. 19,750/- மொத்த உற்பத்தி.. ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ) அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/- லாபம் : ஏக்கருக்கு ரூ. 5750/- மழை, வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான். ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம், மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" என்றார் திருவள்ளுவர். யாரும் யாரையும் தொழ வேண்டாம். உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள். மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும். சோறு இல்லையெனில் ?உலகுக்கே சோறு போடும் விவசாயியைக் காப்பாற்ற வேண்டும். Relaxplzz ![]() |
Posted: 09 Feb 2015 08:55 AM PST |
Posted: 09 Feb 2015 08:50 AM PST படித்ததில் சுட்டது அட பாவிங்களா மாசம் மொபைல்க்கு இம்புட்டு செலவாகுது...... 1.மாசம் பேசரத்துக்கு 100 (காதலி இல்லாதவனுக்கு மட்டும்) 2.காலர் டியூன் மாசம் 30 (இதுல டவுண்லோட் சார்ஜ் 15) 3.மெசஜ் பூஸ்டர் 37 4. நெட் கார்ட் 197.... 3ஜி ( எம்பி காலி ஆகிடிச்சினா இன்னொறுதபா 197 போடனும்) மொபைல்கு இவ்ளோ மாசம் செலவான இந்தியா எப்படி வல்லரசு ஆகும்..... எர்டெல் ஓனரு தான் பனக்காரன் ஆவான்..... இது தனி மனிதனின் கதரல் இல்லா போனு வச்சி இருக்குர ஒவ்வோரு மனிதனின் குமறல்...... #பேசாம_போன_வித்துடாலாம..... ;-) ;-) Relaxplzz |
Posted: 09 Feb 2015 08:43 AM PST நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும் Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 09 Feb 2015 08:40 AM PST |
Posted: 09 Feb 2015 08:35 AM PST |
Posted: 09 Feb 2015 08:30 AM PST |
Posted: 09 Feb 2015 08:25 AM PST காந்தி சொசைடியின் (இலக்கிய சங்கத்தின்) சில நூலகள் வாங்க... 5 நூல்களின் விலை ரூ.70 மட்டுமே(+ரூ.20 VPP மூலம் பெற விரும்புவர்களுக்கு) கிடைக்குமிடம் :: காந்திய இலக்கியச் சங்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை 0452 2533957 அன்புசிவன் - 9444058898 ராமதாஸ்- 9942518183 வேலை நேரம் - காலை 10.00 முதல் மாலை 6.00 வரை Gandhian Literature Society Bank : Indian Bank Branch : Tallakulam,Madurai SB a/c no : 495852643 Ifs Code : IDIB000T003 Gandian Literature Society Gandhi Museum Campus, Madurai - 625 020. Contact No. 0452 2533957 Payment Mode : Internet Banking / Cheque / DD / Money Order /VPP ![]() செலவில்லா வேளாண்மை - நூல்கள் 5 நூல்களின் விலை ரூ.70 மட்டுமே(+ரூ.20 VPP மூலம் பெற விரும்புவர்களுக்கு)கிடைக்குமிடம் ::காந்திய இலக்கியச் சங்கம்,காந்தி நினைவு அருங்காட்சியகம்,மதுரை 0452 2533957அன்புசிவன் - 9444058898ராமதாஸ்- 9942518183வேலை நேரம் - காலை 10.00 முதல் மாலை 6.00 வரை Gandhian Literature Society Bank : Indian Bank Branch : Tallakulam,Madurai SB a/c no : 495852643 Ifs Code : IDIB000T003Gandian Literature Society Gandhi Museum Campus, Madurai - 625 020. Contact No. 0452 2533957Payment Mode : Internet Banking / Cheque / DD / Money Order /VPP |
Posted: 09 Feb 2015 08:20 AM PST |
Posted: 09 Feb 2015 08:10 AM PST என்னை அறிந்தால்.... தல படம் ரிலீஸ் ஆயிடுச்சு.... அதுல ஒரு famous dialogue.... ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் ரொம்ப நல்லவன் கோட்டுக்கு இந்த பக்கம் நான்ரொம்ப கெட்டவன் இதே வசனத்தை நம்ம பிரபலங்கள் பேசினா எப்படி பேசுவாங்கனு பார்ப்போம். 1. கலைஞர் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் ஸ்டாலின் கோட்டுக்கு இந்த பக்கம் அழகிரி 2. புரட்சித் தலைவி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் பார்ப்பண அக்ரஹாரா கோட்டுக்கு இந்த பக்கம் கொடநாடு 3. திராவிடர் கழகம் வீரமணி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் சிலைகளை கும்பிடறது மூட நம்பிக்கை கோட்டுக்கு இந்த பக்கம் பெரியாருக்கு சிலை வைக்கறது 4. அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் என்ன பண்றதுனு மக்கள்கிட்ட கேப்பேன் கோட்டுக்கு இந்த பக்கம் நானே வாபஸ் வாங்குவேன் 5. இளைய தளபதி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் தெலுங்கு பட CD கோட்டுக்கு இந்த பக்கம் ஹிந்தி பட CD 6. கேப்டன் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் bace bookல ஓட்டறாங்க கோட்டுக்கு இந்த பக்கம் வாட்டப்ஸ்ல ஓட்டறாங்க.... ஆங்..... எல்லாரும் வந்தாச்சு இல்ல..... அச்சச்சோ முக்கியமான ஒருத்தரை மறந்துட்டனே... கீழ வாங்க...... . . . . . . . .. . தற்போதைய தமிழக முதல்வர் (????!!!!!) என்ன வசனத்தையே காணோம்.... சார் என்ன சார் நீங்க..... வசனத்தை பேசச் சொன்னா நீங்களே மெல்லிசான கோடு மாதிரி படுத்து இருக்கீங்க..... சரி பரவாயில்லை விடுங்க சார்....எழுந்திருங்க.... நீங்க வசனம் எதுவும் பேச வேண்டாம்.. ;-) ;-) Relaxplzz |
Posted: 09 Feb 2015 08:00 AM PST "எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...'' காலையில 4 மணிக்கு எந்திரிப்பேன். ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற டீக்கடைக்கு நடந்து போய் டீ குடிச்சுட்டு வந்து, ஆறு மணிக்கெல்லாம் முதல் ஆளா வயல்ல இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிருவேன். சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம். வீட்டுக்கு வந்ததும், உஸ்ஸுனு படுக்கிறதெல்லாம் கிடையாது. கீத்து (கீற்று) பின்னி விற்பேன். முள்வேலி செஞ்சு தருவேன். வயல் வேலை இல்லாத நாட்கள்ல, முழு நேரமும் கீத்து பின்னுவேன். சாப்பாட்டைப் பொறுத்தவரைக்கும், ஒரு பங்கு சாதம், ரெண்டு பங்கு காய்னு சாப்பிடுவேன். உடம்புல எந்தக் குறையும் இல்ல. காது மட்டும் கொஞ்சம் மந்தமான மாதிரி தெரியுது. ஆனாலும் ஆஸ்பத்திரிக்குப் போற பழக்கமெல்லாம் கிடையாது! Relaxplzz ![]() |
Posted: 09 Feb 2015 07:50 AM PST |
Posted: 09 Feb 2015 07:45 AM PST ஆளு இருக்கவன்களுக்கு Valentine's day ஆளு இல்லாதவர்களுக்கு world cup day - கப்பல் வியாபாரி |
Posted: 09 Feb 2015 07:40 AM PST |
Posted: 09 Feb 2015 07:39 AM PST |
Posted: 09 Feb 2015 07:29 AM PST ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்... ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்... "சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன... இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன... வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன... எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்... நிறைய யோசிக்க வைத்தது. :) - Ilangovan Balakrishnan. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 09 Feb 2015 07:22 AM PST |
Posted: 09 Feb 2015 07:06 AM PST ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல! அம்மா ஆசையா போட்ட செயினும் மாமா முறையா போட்ட மோதிரமும் Fees கட்ட முடியாத நண்பனுக்காக அடகு கடை படியேற அழுததில்ல... சட்டைய மாத்தி போட்டுக்குவோம் சாதி சமயம் பாத்ததில்ல, மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும் முகவரி என்னன்னு கேட்டதில்ல! படிச்சாலும் படிக்கலன்னாலும் பிரிச்சி வச்சி பாத்ததில்ல... அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும் அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல! வேல தேடி அலையுறப்போ வேதனைய பாத்துப்புட்டோம் 'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே மாறி மாறி சிரிச்சிகிட்டோம்! ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்... பக்குவமா இத கண்டும் காணாம நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ 'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு சமாளிச்சி எழுந்து போவோம்... நாட்கள் நகர, வருஷங்கள் ஓடுது, எப்போதாவது மட்டுந்தான் இ- மெயிலும் வருகுது "Hi da machan... how are you?" வுன்னு... தங்கச்சி கல்யாணம், தம்பி காலேஜி, அக்காவோட சீமந்தம், அம்மாவோட ஆஸ்த்துமா, Personal loan interest, Housing loan EMI, Share market சருக்கல், Appraisal டென்ஷன், இந்த கொடுமையெல்லாம் பத்தாம 'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா, நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா! இ-மெயில் இருந்தாலும் இண்டர்னெட் இருந்தாலும் கம்பெனியில ஓசி phone இருந்தாலும் நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல நண்பனோட குரல கேக்க நெனச்சாலும் முடியறதில்ல பழையபடி வாழ்ந்து பாக்க! அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும் Orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும் 'Available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும் 'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல... இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல! கல்யாணத்துக்கு கூப்பிட்டு வரமுடியாமா போனாலும், அம்மா தவறின சேதி கேட்டதும் கூட்டமா வந்தெறங்கி, தோள் குடுத்து தூக்கி நிறுத்தி பால் எடுத்தவரை கூட இருந்து சொல்லாம போக வேண்டிய இடத்துல செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள் தேசம் கடந்து போனாலும் பாசம் மறந்து போகாது! பேசக் கூட மறந்தாலும் வாசம் மாறி போகாது! வருஷம் பல கழிஞ்சாலும் வரவேற்பு குறையாது! வசதி வாய்ப்பு வந்தாலும் 'மாமா' 'மச்சான்' மாறாது.. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 09 Feb 2015 06:43 AM PST |
Posted: 09 Feb 2015 06:28 AM PST சன் தொலைக்காட்சி அலுவலகம் செல்லும் போதெல்லாம் அங்கு எதிர் புறத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ ,போவோர் வருவோர் கவனத்தை ஈர்க்கும்.! மக்கள் தோழன் என்று எழுதப்பட்டு இருக்கும் அந்த ஆட்டோவின் பின்புறத்தில் கரும்பலகை ஒன்று மாட்டப்பட்டு இருக்கும்! அழகான கையெழுத்தில் மக்கள் நலனில் மாநகரச் செய்தி துளிகள் என்ற தலைப்பில் தினமும் ஒரு செய்தி எழுதப்பட்டு இருக்கும்.! பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் இது போல ஆட்டோக்களில் ரியல் எஸ்டேட், துணிக்கடை, நகைக்கடை போன்ற கடைகளின் விளம்பர போர்டுகள் மாட்டப்பட்டு இருக்கும்.. அதற்கு மாத வாடகையும் கிடைக்கும். அந்த வருமானத்தை எல்லாம் பாராமல் விழிப்புணர்வோடு மக்களுக்குப் பயனுள்ள நல்ல செய்திகளை எழுதி ,அதைப் பலர் பார்வையில் படச்செய்து வரும் இந்த முயற்சியும் சமூக அக்கறை மிகுந்த செயல் தானே.! அந்த ஆட்டோ ஓட்டுனரை கூப்பிட்டு விசாரித்தேன்.. இதை நாள் தவறாமல் 10 வருடங்களாகச் செய்து வருகிறார்.. மழைக்காலத்தில் மட்டும் அவர் சாக்பீசில் எழுதுவது அழிந்துவிடும் இருந்தாலும் அழியும் வரை இருக்கட்டும் என்று எழுதிவிடுவாராம்..! நியாயமான கட்டணம் வாங்குகிறார்.. இதுவரை 2 முறை பயணத்தில் தவறவிட்ட உடைமைகளை உரியவரிடம் சேர்த்து காவல்துறையின் பாராட்டினைப் பெற்றுள்ளார்.. சென்னைக்கு புதியவர்களாக வரும் பலர் இவரது ஆட்டோவில் ஏறி இவரிடம் பழகி.. அடுத்த முறை வரும் போது தொலைபேசியில் முன்கூட்டியே இவரை அழைத்து தங்கள் பணிகளுக்கான பயணத்தை இவரிடமே தொடர்வார்களாம். இது தான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு குடியேறிய நான் சம்பாதித்த சொத்து என்கிறார்... சொந்த ஊர் எதுண்ணே ..? மதுரைங்க தம்பி.. அட.. !!!! அண்ணன் பேரு? விவேகானந்தன் தம்பி... ஆஹா....\!!!! உண்மையில் நீங்களும் ஞானிதான்ணே..!!! -இந்த நல்ல மனிதரை நீங்களும் பாராட்டலாமே...! சென்னைப் பயணத்தின் போது அவரை அழைத்து அவர் ஆட்டோவில் பயணிப்பதின் மூலம் அவருக்கு உதவலாமே!! இவரது எண் - விவேகாநந்தன் -87 54 58 41 79 இவண் -வெங்கடேஷ் ஆறுமுகம் Relaxplzz ![]() "உயர்ந்த மனிதர்கள் - நல்ல உள்ளங்கள்" |
Posted: 09 Feb 2015 03:50 AM PST |
Posted: 09 Feb 2015 03:40 AM PST |
Posted: 09 Feb 2015 03:30 AM PST |
Posted: 09 Feb 2015 03:20 AM PST |
Posted: 09 Feb 2015 03:10 AM PST மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். 2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. 4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள். 5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். 6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது 7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!! 8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். 10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும் 12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் 13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். 14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! 16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! 17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! 18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! 19. பறக்க விரும்புபவனால் படர முடியாது. 20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. 21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் மனதைத் தொட்ட வரிகள் Relaxplzz |
Posted: 09 Feb 2015 03:00 AM PST உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம் - இயற்கை வைத்தியம் நம் முன்னோர்கள் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது. வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் குளிர்ச்சிக்கு: நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்னை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும். Relaxplzz ![]() |
Posted: 09 Feb 2015 02:50 AM PST |
Posted: 09 Feb 2015 02:45 AM PST மாட்ட ஆடா மாற்ற முடியுமா??? முடியும் எப்படி தெரியுமா??? . . . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒரு பேப்பரில். MAAduன்னு எழுதிட்டு அதில் உள்ள Mவார்த்தை அழித்து விட்டால் அது AAduஆகிடும் தட்ஸ் ஆல் !!! |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment