Sunday, 8 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பூ பூவாய் பூத்திருக்கு குதிரையிலே அழகாய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 Feb 2015 09:20 AM PST

பூ பூவாய் பூத்திருக்கு குதிரையிலே அழகாய்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அழகிய புலிக்குட்டி

Posted: 08 Feb 2015 09:15 AM PST

அழகிய புலிக்குட்டி


18+ . . . . ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண...

Posted: 08 Feb 2015 09:10 AM PST

18+

.
.
.
.

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டடுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் என்றார். அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

:P :P

18+ அப்படீன்னு போட்ட உடனே படிக்குறது, ஆசைய பாரு.. ஓடு ஓடு போய் தூங்கு நல்ல புள்ளையா ;-) ;-)

Relaxplzz

வீடுகளும் குழந்தைகளும் : ( அர்த்தமற்ற விசயங்கள்) சிந்திக்க வேண்டிய தருணம் இது!...

Posted: 08 Feb 2015 08:59 AM PST

வீடுகளும் குழந்தைகளும் : ( அர்த்தமற்ற விசயங்கள்) சிந்திக்க வேண்டிய தருணம் இது!

பாட்டிகளின் நிலைபாடு :

நம் பாட்டிமார்களுக்கு இப்படி காலங்காலமாக ஆழ் மனதில் பதிய வைத்த சில காரியங்களைச் செய்து முடித்தால்தான் தங்களின் மனம் நிறைவுபெரும் என்ற ஒரு போலியான நம்பிக்கை. இதனாலேயே பல செயல்பாடுகளை நியாயப்படுத்தி நிறைவேற்றி விடுகின்றனர். இவர்கள் மனம் கோணாமளிருக்க இவர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களை அங்கிகரிக்கும் நிலைமை வேறு ஏற்படுகிறது.

ஆனால் விளக்கம் கேட்டால் சொல்லவும் தெரியாமல், தாங்களும் அறியாமல், குழம்பி, குழப்பி விடுகின்றனர். இதன் விளைவு? நம் சமுதாயத்தில், பிறந்த குழந்தைகளுக்கு அதே மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல தேர்ச்சி எடுக்க கையில் பல வண்ண கயிறுகளைக் கட்டிக் கொள்கின்றனர்; சில பரிகாரங்கள் செய்தால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்; இருட்டில் வெளியே சென்றால் பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்று அஞ்சுகிறார்கள்.

மூடநம்பிக்கையின் பயத்தை தினிப்பது :

எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம் ஏற்படும் என்று சொன்னால், இதை கேட்கும் அந்த பிள்ளைக்கு வாழ்வில் எப்படி வரும் தைரியம்? இப்படி இல்லாத ஒன்றையும், சான்றில்லாத நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்கமுடியுமா? இதனால் குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் பயம், மனபாதிப்பு, அடிமைத்தனம், தைரியமின்மை போன்ற தாக்கங்களையே விதைக்க நேரிடுகிறது.

பகுத்தறிவு சிந்தனை வளரும் இந்த காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்கு முறைகளையும் இன்னும் புகுத்திக் கொண்டிருக்கப் போகிறோமா? நம் பிள்ளைகளை குருகிய சிந்தனை வட்டத்தில் வைத்து, நமது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் தினிக்காமல், அவர்களின் கற்பனை, சிந்தனை திறன்களுக்கு எல்லை வகுக்காமல் இருக்க முடியுமா நம்மால்?

குழந்தைகளின் கேள்விகளுக்கு இயன்றவரையில் சான்றுள்ள, ஏற்புடைய விளக்கங்களை அளிக்க முயல்வோம். பூச்சாண்டி பிடித்துக்கொள்ளும் என்பதை விடுத்து, உண்மையான காரணங்களைக் கூறி விளக்குவோம். இந்த காலத்தில், பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திக்குமுக்காடும் நிலையில் நம்மில் பலர் உள்ளோம். "வானவில்லில் ஏன் கருப்பு நிறம் இல்லை?", "நம்ம வீட்டு நாய்குட்டியால் ஏன் பேச முடியவில்லை?", "தாத்தாவின் தோல் ஏன் சுறுங்கி விட்டது?"

மாறும் தருணம் இதுவே :

இப்படி, ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் எழும் கேள்விகளை உதரித்தள்ளாமல், ஊதாசினப்படுத்தாமல், அவர்களுக்கு முடிந்தவரை தகுந்த விடைகளை அளிக்க முயற்சி செய்வோம். முடிந்தால், புத்தகங்களைப் புரட்டி, அவர்களோடு இணைந்து விடைகளைத் தேடுவோம். இன்றைய அம்மாக்களுக்கு கை கொடுக்கத்தான் இணையதளம் உள்ளதே! எளிய முறையில் வலைப்பக்கங்களில் விடைகளைத் தேடி கொடுப்போம். படங்களோடு விளக்குவோம்.

இதைவிடுத்து, இன்னுமும் மூடத்தனமான விளக்கங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து நம் பிள்ளைகளின் வாயை மட்டும் அல்ல, அவர்களின் மூளை, சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்ந்தாற்போல் ஒரு விலங்கை மாட்டி விடுவது நாம் இழைக்கும் துரோகமாகவே உருவாகும்.

- Naga Strom.

Original Link: https://www.facebook.com/photo.php?fbid=757503294320476&set=a.370466409690835.79158.100001824363540&type=1


"சமுக கட்டுரைகள்" -2

:) Relaxplzz

Posted: 08 Feb 2015 08:55 AM PST

என் மனைவிக்கு தீவிர பக்தி, வாரத்திலே எல்லா நாளும் கோயிலுக்கு போயிடுவா. எப்படி ?...

Posted: 08 Feb 2015 08:50 AM PST

என் மனைவிக்கு தீவிர பக்தி, வாரத்திலே எல்லா நாளும் கோயிலுக்கு போயிடுவா.

எப்படி ?

திங்கள் சிவன் , செவ்வாய், வெள்ளி அம்மன் இல்ல துர்க்கை, வியாழன் அனுமன், தக்ஷினாமூர்த்தி, சனி பெருமாள், புதன் நவக்ரகம்.

சரி, ஞாயிற்றுக்கிழமையை விட்டுடுட்டேயே ?

அன்னைக்கு அவளே சக்தியா மாறி உக்ரமா ஆயிடுவா. பூசை, புனஸ்காரம், அபிசேக ஆராதனை, ஆரத்தி எல்லாம் எனக்கு தான். நிவேத்யம் மட்டும் இல்ல.

#சிரிக்காதேடா.

:O :O

- Balasubramanian Sundaram

எனக்கும் பள்ளி செல்ல ஆசைதான்... ஆனால் என் அம்மா பசித்திருப்பாள் வீட்டில்....!!!!...

Posted: 08 Feb 2015 08:45 AM PST

எனக்கும் பள்ளி செல்ல ஆசைதான்... ஆனால் என் அம்மா பசித்திருப்பாள் வீட்டில்....!!!! (y)


ஏன்மா அவ்வளவு பெரிய கடையில ஒரு Stool இல்லையா! :O

Posted: 08 Feb 2015 08:40 AM PST

ஏன்மா அவ்வளவு பெரிய கடையில ஒரு Stool இல்லையா! :O


Posted: 08 Feb 2015 08:37 AM PST


அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 Feb 2015 08:35 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 08 Feb 2015 08:30 AM PST

அருமை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 Feb 2015 08:20 AM PST

அருமை

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஒரு கல்லூரியில் பொருளாதாரம் சம்பந்தமாக பாடம் நடந்துகொண்டிருந்தது.அப்போது ஒரு மாண...

Posted: 08 Feb 2015 08:10 AM PST

ஒரு கல்லூரியில் பொருளாதாரம் சம்பந்தமாக பாடம் நடந்துகொண்டிருந்தது.அப்போது ஒரு மாணவனை எழுப்பி கேள்வி கேட்கிறார் புரொபஸர்.

PROFESSOR : அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்(patrol) லிட்டருக்கு எத்தனை டாலர் கொடுத்து வாங்கபடுகிறது?

STUDENT : தெரியல சார்...

PROFESSOR : வெளிநாட்டு வியாபாரம் தெரியாம எதுக்குடா நீயெல்லாம் காலேஜ்க்கு வர்றே.!

STUDENT : சார் உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கவா?

PROFESSOR : என்ன,கேளு..

STUDENT : ஒயின்ஷாப்ல கூலிங் இல்லாத "கிங் பிஷர்" பீர் எவ்வளவுக்கு விற்கப்படுகிறது?

PROFESSOR : எனக்கு தெரியாது.!

STUDENT : உள்நாட்டு வியாபாரம் தெரியாம எதுக்கு சார் நீங்க காலேஜ் வர்றீங்க.

(மரண மாஸ் ஆப்பு)

:P :P

Relaxplzz

பேரன்புமிக்க அஜித் குமார் ரசிகர்களுக்கு, உங்கள் கொண்டாட்டங்களிளுக்கு மத்தியில்...

Posted: 08 Feb 2015 08:00 AM PST

பேரன்புமிக்க அஜித் குமார் ரசிகர்களுக்கு,

உங்கள் கொண்டாட்டங்களிளுக்கு மத்தியில் உங்களை இடையூறு செய்தமைக்கு பெரிதும் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் விருப்பமான நாயகரின் படத்தை முதல் நாள் பார்த்து கொண்டாடுங்கள், 60 அடி கட்டவுட்டுக்கு பால் ஊற்றி கை கால்களை உடைத்துக்கு கொள்ளுங்கள், உங்கள் அம்மா, அப்பாக்கள் (அல்லது நீங்களோ) ரத்தம் சிந்தி சேர்த்த பணத்தில் பட்டாசு கொளுத்துங்கள், உயிர் நாடி போக கத்துங்கள்.. எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. நடிகர்களை கடவுளாய் வழிப்படும் சாபம் தமிழர்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பட்ட பெரும் தவம், அதனால் அதை பற்றி பேச என்னிடம் ஏதும் இல்லை.

ஆனால் உங்கள் கொண்டாட்டத்தினால் காசி திரையரங்கத்துக்கு அருகில் உண்டான போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆம்புலன்சில் இருந்த உயிரின் கடைசி மூச்சை நீங்கள் அறியாமல் போனதை நான் உங்களிடம் சொல்ல தான் வேண்டும். ஏதோ ஒரு அவசரத்தில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் படபடப்பை நீங்கள் அறியாமல் போனதை சொல்ல தான் வேண்டும். 5 நிமிடம் வேலைக்கு தாமதமாய் போனால் அன்றைய கூலி கிடைக்காது அப்படி கிடைக்காமல் போனால் கட்ட வேண்டிய கடனையோ, கொடுக்க வேண்டிய வீட்டு வாடகையில் விழும் துண்டையையோ எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று வெதும்பிய மணங்களை உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் நண்பர்களே. அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி கொண்டாடும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் யாருக்காக?

---இது சினிமாக்காரர்களை கடவுளாய் கொண்டாடும் எல்லா ரசிக (ரஜினி, கமல், விஜய், விஷால், சிவ கார்த்திகேயன், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன்) பெருமக்களுக்கும் பொருந்தும்---

//குறிப்பு: இதை படித்துவிட்டு தல யாரு தெரியுமா என்று காமெடி வசனங்களை பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்களிடம் நான் சொல்ல விரும்புவது "உங்க தல திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் தான்"//

- இளவேனில்

Relaxplzz


எங்க ஊர்ல நேரா கட்டினாலே நிக்கமாட்டேன்றது இது எப்பிடி நிக்குது ;-)

Posted: 08 Feb 2015 07:50 AM PST

எங்க ஊர்ல நேரா கட்டினாலே நிக்கமாட்டேன்றது இது எப்பிடி நிக்குது ;-)


காதலர் தினத்தில் ஜோடியாக திரிபவர்களுக்குதிருமணம் செய்து வைக்கப்படும் - இந்து முன...

Posted: 08 Feb 2015 07:45 AM PST

காதலர் தினத்தில் ஜோடியாக
திரிபவர்களுக்குதிருமணம்
செய்து வைக்கப்படும் - இந்து முன்னணி

# பேசாம அன்னிக்கு எதாவது அழகான
பொண்ணு பக்கத்துல போய்
நின்னுடலாம்னு இருக்கேன்...

- Saran.

<3 Relaxplzz

Posted: 08 Feb 2015 07:40 AM PST

:) Relaxplzz

Posted: 08 Feb 2015 07:35 AM PST

ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம் முன்பெ...

Posted: 08 Feb 2015 07:29 AM PST

ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம்

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?

கார்டு தொலைந்தால்..?

சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்

ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்!

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது.

வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை 'பாதுகாப்புக்காக' விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

பின் நம்பர் பத்திரம்!

முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.

ஸ்கேனிங் திருட்டு!

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம்.

ஆன்லைன் திருட்டு!

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்
விழிப்புணர்வு அவசியம்!

திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

Relaxplzz


"விழிப்புணர்வு"

சாதரண ஒரு ஓட்டை போட்டாலே நீர் வெளியேறிவிடும்.. ஆனால் அந்த துவாரத்தையும் இப்படி அ...

Posted: 08 Feb 2015 07:21 AM PST

சாதரண ஒரு ஓட்டை போட்டாலே நீர் வெளியேறிவிடும்.. ஆனால் அந்த துவாரத்தையும் இப்படி அழகாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர்கள் நம் முன்னோர்...அந்த வேடிக்கையான முகத்தின் வாயில் நீர் ஊற்றினால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்..

எசாலம்- விழுப்புரம் மாவட்டம்.
ராஜேந்தர சோழன்.
கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த வருடம் : 1027 A.D.


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

எதிர்காலத்தில் மரம் என்றால் இப்படிதான் இருக்கும் என காட்ட வேண்டியிருக்கும்.. மன...

Posted: 08 Feb 2015 07:17 AM PST

எதிர்காலத்தில் மரம் என்றால் இப்படிதான் இருக்கும் என காட்ட வேண்டியிருக்கும்..

மனிதன் மரமாய்..


திறமைகள்..

:) Relaxplzz

Posted: 08 Feb 2015 07:13 AM PST

(y) Relaxplzz

Posted: 08 Feb 2015 07:07 AM PST

சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...

Posted: 08 Feb 2015 07:00 AM PST

சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம்,

ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே சுமக்கும் ஆண்களை மறந்துவிடுகிறது.. .


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உண...

Posted: 08 Feb 2015 06:50 AM PST

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்

3. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்

4. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்

5. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

Relaxplzz


"தமிழ் - தமிழர் பெருமை" - 2

நீரில் செதுக்கிய சிற்பம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 Feb 2015 06:48 AM PST

நீரில் செதுக்கிய சிற்பம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


சும்மா... சும்மா... 1

ஒரு கணக்கு ஒரு விடை வரலாம் ஆனா மூணு விடை வர்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா? , , ,...

Posted: 08 Feb 2015 06:40 AM PST

ஒரு கணக்கு ஒரு விடை வரலாம் ஆனா மூணு விடை வர்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா?
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
வாங்க சொல்லறேன்
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
2+1=3 எப்பூடி

:P :P

No violence plzz

இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... <3 1) உங்களை சந...

Posted: 08 Feb 2015 06:30 AM PST

இப்படி ஒரு காதலி கிடைத்தால்,
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... ♥

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்.

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்.

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

♥ ♥

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

இதான் வாழ்க்கை..

Posted: 08 Feb 2015 06:21 AM PST

இதான் வாழ்க்கை..


சும்மா... சும்மா... 5

கேன்சர் பேஷன்ட்களுக்கு விக் தயார் செய்ய தலைமுடி சிறிது தானம் கேட்ட போது மொட்டை ப...

Posted: 08 Feb 2015 06:14 AM PST

கேன்சர் பேஷன்ட்களுக்கு விக் தயார் செய்ய தலைமுடி சிறிது தானம் கேட்ட போது மொட்டை போட்டு தன் கூந்தல் முழுவதும் குடுத்த இவர்கள் பேரழகிகள்..


0 comments:

Post a Comment