Relax Please: FB page daily Posts |
- உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில...
- வாழ்க்கை இன்பமும் துன்பமும் இரு சக்கரம் சமமாய் சுழன்றால் பயணம் இனிதாய் வெற்றிய...
- :) Relaxplzz
- பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்! 1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு...
Posted: 06 Feb 2015 07:15 AM PST உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை 4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது 5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்.... 6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்..... 7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது (அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது (ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது 8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்.... 9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்.... 10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை : 1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது 2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் 3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள் 4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்...... 5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர் 6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே... Relaxplzz |
Posted: 05 Feb 2015 06:15 PM PST வாழ்க்கை இன்பமும் துன்பமும் இரு சக்கரம் சமமாய் சுழன்றால் பயணம் இனிதாய் வெற்றியும் தோல்வியும் சேர்ந்தே ரசித்தால் போட்டி எளிதாய் நட்பாய் எதிரியாய் அன்பாய் எதிர் கொண்டால் அழகிய உறவாய் சுடும் சூரியனா குளிர் நிலவா ரசிக்க பழகினால் வாழ்கை அழகிய கவியாய் நிமிர்ந்து நடை போடு வானம் உன் வசம் நில்லாமலே ஓடு பூமி உயரம் தாண்டு முயன்றால் முடியாததில்லை முயன்று கொண்டே இரு உன்னால் முடிந்ததை தவிர வேறொன்றுமே இல்லை ஏன் என்ற கேள்வி தோல்வி தரும் எப்படி என்று கேட்டுப்பார் வெற்றி தரும் தொட்டு விடும் தூரம் மரணம் உண்டென்றால் எட்டி தொடும் தூரம் தான் வாழ்கையும் உண்டு வாழ்ந்து கொண்டே மரிப்பவனை விட மரித்தாலும் வாழ்பவனே உலகம் நினைவில் வைக்கும் நினைத்து நடக்கவில்லையென்பதை விட நடந்ததை நான் நினைக்கவில்லை என்றால் உன் மனம் உன் வசம். Relaxplzz |
Posted: 05 Feb 2015 09:30 AM PST |
Posted: 05 Feb 2015 09:15 AM PST பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்! 1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது. 2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. 3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒருமுதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம்கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர். 4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது. 5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பத தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to 'more noise' என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது. 6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது. 7. யாஹூ (YAHOO): தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David's Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.!!! Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment